சண்டேன்னா மூணு! #அரசியல் நாடகம் பலவிதம்!

அதிசயம் அதிகமா?  ஆச்சரியம் அதிகமா?    தந்தி டிவி கர்நாடக சபாநாயகரை  நேற்றைய கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் நேர்காணல் நடத்தியிருக்கிறது. தந்தி டிவிக்கு திடீரென தேசியப்பார்வை வந்துவிட்டதோ என்றெல்லாம் அனாவசியமாக சந்தேகப்பட வேண்டாம்! அவர்களுக்கு வேண்டியது சதக்! சதக்! ரகப்பரபரப்பே அன்றி நடுநிலையான செய்திகளோ தர்மநியாயங்களோ அல்ல! அவர்கள் ஆசைப்பட்ட பரபரப்பை ரமேஷ்குமார் கொடுத்துவிட்டார். இந்த வீடியோ 40 நிமிடம்! தான் செய்தது சரியா தவறா என்று நீதிமன்றம் முடிவுசெய்யட்டுமே என்கிறார்.   
   

கர்நாடக சபாநாயகர்  KR ரமேஷ்குமார்  இன்று ஞாயிறு காலை 14 அதிருப்தி MLAக்களைத் தகுதிநீக்கம் செய்திருக்கிறார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்! ஆச்சரியமோ அதிர்ச்சியோ இதில் எதுவுமில்லை. நாளை திங்கட்கிழமை எடியூரப்பா கோர இருக்கும் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு இது எந்த விதத்திலும் தடையாக இருக்கப் போவதில்லை என்றாலும் இதே சபாநாயகரை வைத்துக் கொண்டு சட்டசபையை இனிவரும் நாட்களிலும் நடத்தப்போகிறார்களா என்ற கேள்வி இப்போது முன்னுக்கு வந்து நிற்பதைக் கவனிக்கிறீர்களா?  ஹரிஹரன் கொஞ்சம் நல்ல கேள்விகளைக் கேட்டிருக்கிறார், ஆனால் ரமேஷ்குமார் நேர்மையான பதிலைத்தான் சொல்லியிருக்கிறாரா?  


தன்மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவந்தால் அதைப் பற்றிக் கவலையில்லை. ஜூலை 23 அன்றே ராஜினாமா செய்யத் தயாராகத்தான் இருந்தேன் என்கிறார் ரமேஷ்குமார்.தானாக ராஜினாமா செய்யப்போவதில்லை என்கிற மாதிரித் தெரிகிறதோ? தேவே கவுடா கட்சி MLAக்கள் பலரும் எடியூரப்பா அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரலாம் என்று தெரிவித்த யோசனைக்கு குமாரசாமி அதைப்பற்றி யோசிக்க கொஞ்சம் அவகாசம் வேண்டுமென்று சொல்லி இருக்கிறார் என்பதில் அந்த MLAக்கள்  அரசைக் கவிழ்ப்பதை விட பதவியில் நீடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள், தேர்தலைச் சந்திக்க விரும்பவில்லை என்பது தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. 


அதென்னவோ ஜூனியர் விகடனுக்கு அடிக்கடி திமுக பாசம் பொத்துக் கொண்டு வருகிற மாதிரியே அவ்வப்போது எதிர்ப்பு ஊடல்களும் வந்துவிடும். ஏற்கெனெவே இசுடாலின் 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோடீஸ் அனுப்பி அது அமுங்கிப் போன நிலையில்.........


துர்கா இசுடாலினும் இந்த அட்டைப்படம், செய்திக்காக சும்மா 10 கோடி ரூபாய் மானநஷ்டமாக இழப்பீடு கேட்டு   வக்கீல் நோட்டீஸ்  அனுப்பியிருக்கிறாராம்! அடுத்து உதயநிதி, அடுத்த வாரிசு இன்பநிதி பெயரிலும் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்புவது தொடருமோ?😆😍😏  

 மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!