நேரு, மற்றும் வாரிசுகளுடைய திமிரையும் முட்டாள்தனமான முடிவுகளையும் நினைவுபடுத்திக் கொள்கிற மாதிரி வீடியோ ஒன்றை இன்று காலை பார்க்க நேர்ந்தது. பார்த்த விஷயம் IAS உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகளை மாற்றுவதைப் பற்றி என்றாலும் தேவையே இல்லாமல் 32 வருடங்களுக்கு முன்னால் ராஜீவ் காண்டி காலத்தில் நடந்த ஒரு விஷயத்தோடு எந்த ஒரு சம்பந்தமுமில்லாமல் முடிச்சுப் போட்டுப் பேசியதால் கொஞ்சம் பழைய நிகழ்வுகளைத் தேடிப் படித்து நினைவு படுத்திக் கொள்ள வேண்டி வந்தது.
இந்த வீடியோவில் சேகர் குப்தா, சுபாஷ் கார்க் என்கிற IAS அதிகாரி நிதித்துறை செயலாளராக இருந்து, வேறொரு துறைக்கு மாற்றப்பட்ட அதிருப்தியில் வாலண்டரி ரிடையர்மண்ட் கோரியிருக்கிற விஷயத்தோடு , 1987 ஜனவரியில் ராஜீவ் காண்டி தன்னுடைய வெளியுறவுத்துறை செயலாளரைப் பொதுவெளியில் அவமானப் படுத்தியதில் அவர் உடனடியாக ராஜினாமா செய்ததை முடிச்சுப் போட்டுப் பேசியதன் உள்நோக்கம் என்னவென்பது உங்களுக்காவது புரிகிறதா பாருங்கள்!
ஆயிலம் பஞ்சாபகேசன் வெங்கடேஸ்வரன்! 36 வருடங்கள் வெளியுறவுத்துறையில் அயல்நாடுகளில் தூதராகவும் பல்வேறு பொறுப்புக்களிலும் பதவிவகித்து வெளியுறவுத்துறை செயலாளராக ராஜீவ் காண்டி காலத்தில் பணியாற்றியவர். தன்னுடைய திறமை, நேர்மையால் சக அதிகாரிகளாலும் ஊடகங்களாலும் மிகவும் மதிக்கப் பட்டவர். ND திவாரி மாதிரி கிழடுதட்டிப் போன, வெளியுறவு விவகாரங்கள் என்றால் என்னவென்றே தெரியாத காங்கிரஸ்காரர் தான் அன்றைக்கு வெளியுறவு அமைச்சர்! என்ன நடந்தது என்று கொஞ்சம் பார்க்கலாமா?
In December 1986, Venkateswaran had gone to Islamabad, and stated that as Chairman of SAARC, Prime Minister Rajiv Gandhi would visit different SAARC capitals including Islamabad. However, on January 21, 1987, Gandhi told a Pakistani journalist that he had no plans to visit Islamabad in near future. When the journalist referred to Venkateswaran’s earlier statement, Rajiv Gandhi said:
“You will be talking to a new foreign secretary soon.”
சர்வதேச நிருபர்கள் உள்ளிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்த நிகழ்வில் AP வெங்கடேஸ்வரனும் இருந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். ராஜீவ் காண்டி இப்படிப் பேசியதைக் கேட்டவுடன், உடனடியாகத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினார். உடனடியாக IFS அதிகாரிகள் சங்கம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது ஒரு அதிசயம் என்றால் ஒரு திறமையான அதிகாரியை அவமானப்படுத்தியதை ஊடகங்கள் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவித்தது மிக அபூர்வமான விஷயமாக இருந்தது. முந்தின டிசம்பரில் வெங்கட் என்று நண்பர்களால் மரியாதையோடு அழைக்கப்பட்ட AP வெங்கடேஸ்வரன் இஸ்லாமாபாதில், சார்க் அமைப்பின் சேர்மன் என்ற முறையில் ராஜீவ் காண்டி இஸ்லாமாபாத் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைநகர்களுக்கு வருகைதருவார் என்று சொன்னது பிரதமருடன் கலந்துபேசாமல் இருந்திருக்க முடியாது.
பாகிஸ்தான் போகப்போவதில்லை என்கிற தனது மனமாற்றத்தை வெளியுறவுத்துறைக்குத் தெரிவிக்காமல் இருந்துவிட்டு நிருபர்கள் கூட்டத்தில் நீங்கள் புதிய வெளியுறவுச் செயலாளருடன் பேசுவீர்கள் என்று சொன்னது ராஜீவ் காண்டியின் அரைவேக்காட்டுத்தனம், திமிர் என்று மட்டுமே பார்க்க முடியுமா? பின்னணியில் ராஜீவ் காண்டியைச் சுற்றி இருந்த அதிகாரத்தரகர்கள், வெங்கடேஸ்வரனை மாற்றிவிட்டு அந்த இடத்துக்கு வரவிரும்பியவர்கள், தேவையில்லாமல் வெளியுறவுத்துறைக்குள் மூக்கை நுழைத்துக் கொண்டிருந்தவர்கள் என்றொரு பெரிய கும்பலே இருந்தது, என்பது இந்திரா, வாரிசுகள் ஆட்சி செய்த காலத்தைய அவலங்கள்!.The truth behind the ouster is that Venkateswaran eventually became a tragic victim of the power-brokers around the prime minister. They took advantage of the fact that the foreign secretary would not sit back and accept the increasing sidelining of the foreign office (and the Policy Planning Committee headed by G. Parthasarathy) on foreign policy issues and tolerate interference by outsiders like Bhandari, Natwar Singh (then in the Ministry of Fertilisers) and officials in the Prime Minister's Secretariat என்று முடித்துவிடக் கூடிய விஷயமா?
வேறொருவரைத்தான் ராஜீவ் காண்டி முதலில், வெங்கட்டை ஒதுக்கிவிட்டு வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்க முடிவெடுத்திருந்தார். வெங்கடேஸ்வரன் ராஜீவை நேரில் சந்தித்து, தான் கெஞ்சுவதற்காகவோ அந்தப் பதவிக்காகவோ ஏங்கி வரவில்லை, ஆனால் நடைமுறை என்னவென்பதை எடுத்துச் சொல்லவே வந்தேன் என்று தெரிவித்தபிறகு அடுத்த இரண்டு நாட்களில் வேண்டாவெறுப்பாக வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது காங்கிரஸ் ஆட்சி இஷ்டைல் தெரிகிறதா? ஆனால் ராஜீவ் காண்டி ஆட்சிக் காலத்தில் வெளியுறவுகளில் ஏற்பட்ட சில முன்னேற்றங்களின் பின்னணியில் வெங்கடேஸ்வரனுடைய உழைப்பு இருந்தது என்பது எத்தனைபேருக்கு நினைவு இருக்குமென்று நினைக்கிறீர்கள்?
இஸ்லாமாபாத்துக்குப் போவதா இல்லையா என்ற தடுமாற்றம் மட்டுமே ராஜீவ் காண்டியை இந்த முட்டாள்தனத்தைச் செய்ய வைக்கவில்லை. என்னென்ன காரணிகள் இருந்தன என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இங்கே க்ளிக் செய்து படித்துப் பார்க்கலாம்
நேரு, மற்றும் வாரிசுகளுக்குத் தாங்கள் ஆளப்பிறந்தவர்கள் என்ற மமதை இருந்ததே தவிர, சரியான நபர்களைத் துணைக் கொள்வதென்பது இருந்ததே கிடையாது. காங்கிரஸ் இன்றைக்கு இவ்வளவு கேவலமாகத் தோற்றுக்கொண்டே வருவதற்கான காரணங்கள், அவர்களுடைய மரபணுவிலேயே இருக்கின்றன. ராமச்சந்திர குகா மாதிரி யாரோ ஒரு அரேபிய இபின் கால்தூனைத் தேடிப் பிடித்துக் காரணங்கள் தேடவே வேண்டாம்!
மீண்டும் சந்திப்போம்.
ராஜீவின் பல முட்டாள் தனங்களில் இதுவும் ஒன்று. ஷா பானு விவகாரம், IPKF போன்ற பல ஞாபகத்துக்கு வருகிறது. அவர் ஒரு Banana Prime Minister ! எதற்கெடுத்தாலும், ரோடு பனானா ஹை, கார்பொரேஷன் பனானா ஹை, infrastructure பனானா ஹை என்று சொல்லிக்கொண்டே இருந்ததால் அவரை பனானா prime minister என்று பத்திரிக்கைகள் கிண்டலடித்து ஞாபகம் இருக்கிறதா?
ReplyDeleteவாருங்கள் பந்து! AP வெங்கடேஸ்வரனை அவமானப்படுத்தய காரணங்களை பழைய இந்தியா டுடே செய்தி அடுக்கியிருப்பதை லிங்க் கொடுத்துச் சொல்லயிருந்தேனே! பனானாவா இல்லையா என்று நிசமாகவே தெரியாது! ஆனால் சரியான மாங்காய் ம...ன்! என்று தெரியும்! :- )))
Delete