இட்லி வடை பொங்கல்! #36 அரசியல் நிலவரம்!

சிறிதுநாட்களாக அடுத்தவீடு ஆந்திரா, கர்நாடகா என்று எட்டிப் பார்த்து அரசியலைக் கவனித்துக் கொண்டிருந்ததில் தமிழக அரசியல் களத்தை அடியோடு மறந்துவிட்டேனா என்று நண்பர்கள் சிலருக்கு சந்தேகம் வந்திருக்கக் கூடும். மறந்து போகவில்லை, தமிழக அரசியல் ஏனிப்படி திராவிடங்களால் செக்குமாடுகள் மாதிரி ஒரேமாதிரியான ஊடகப் பொய்களிலேயே சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருக்கிறது என்ற வெறுப்பில் கொஞ்சம் கவனத்தை அடுத்த வீட்டுப் பக்கம்  திருப்பியிருந்தேன். அவ்வளவுதான்!



இங்கே நடக்கும் செக்குமாட்டுத்தனங்களைப் பற்றி என்ன எழுதுவது என்றிருந்தவனை, காவேரி நியூஸ் சேனலில் இந்த விவாத வீடியோ கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்ததென்றால் பொய்யில்லை. இந்த நேர்காணலை எடுத்த மதன் ஏற்கெனெவே சுபவீ செட்டியாரை தடுமாற வைத்ததை இந்தப்பக்கங்களிலேயே பகிர்ந்திருக்கிறேன். இன்று  H ராஜாவை கேள்விகள் கேட்கிறார். எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச்  சொல்லுங்களேன்!  வீடியோ 39 நிமிடம்.


அரசியல்வாதிகள் எல்லோரையும் பொய்யர்கள் ரகத்தில் சேர்த்துவிடலாம் தான்!  ஆனால் டொனால்ட் ட்ரம்ப் பொய்யர்களின் உச்சத்திலும் உச்சம் என்பதை இந்த 17 நிமிட செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். இம்ரான் கானுடன் பேசும் போது, நரேந்திர மோடி தன்னிடம் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் படி கேட்டார் என்று சொன்னதை வைத்து இங்கே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வாலாக்கள் செய்த  ரகளை இருக்கிறதே, முட்டாள்தனத்தின் உச்சமென்பதா, ட்ரம்ப்புக்கு போட்டியாகப் பொய்யர்களின் உச்சம் என்பதா? டொனால்ட் ட்ரம்ப் சொன்னது பொய்தான்! ஆனால் அவரது பொய்களுக்குப் பின்னால் ஒரு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை முற்றிலுமாக விலக்கிக்கொள்வேன் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதி அப்படியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. தாலிபான் தீரவாதிகளைக் கட்டுப் படுத்த பாகிஸ்தானிய ராணுவம் ஒன்றால்தான் முடியும் (?) என்கிற நிலையில் இம்ரான் கானுடன் பாகிஸ்தான் ராணுவத்தளபதியும் சேர்ந்தே அமெரிக்கா போனார்கள். IMF இடமிருந்து 6 பில்லியன் டாலர் குறுகியகாலக்கடன் என்ற carrot காட்டியது ஒருபுறம், F 16  விமானங்கள் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடுகளில்  பாகிஸ்தானிய ராணுவத்துக்கு relief என்று பலவிஷயங்கள் இருக்கின்றன. ஆக ட்ரம்ப் கிறுக்கன்தான், ஆனால் காரியக் கிறுக்கன்! ஆனால், நீண்டகாலம் ஆட்சியில் இருந்த நம்மூர் காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களுக்கு என்ன வந்தது? ஏற்கெனெவே ட்ரம்ப் தனது உள்ளூர் அரசியலுக்காக ஒவ்வொரு நாட்டுடனும் உறவுகளைச் சிக்கலாக்கிக் கொண்டு வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் பிரச்சினையை உள்ளூர் அரசியலுக்குப் பயன்படுத்த முயன்றதே தவிர, தேசம் பெரிது என்ற நினைப்பு இருந்த மாதிரி வெளிப்படவில்லை.

இந்த விவகாரத்தையும் பாகிஸ்தானிய பொருளாதாரம்  அதல பாதாளத்தில் விழுந்துகிடப்பதில் IMF அளிக்கவிருக்கிற 6 பில்லியன் டாலர் குறுக்கியகாலக் கடனுடைய பக்கவிளைவுகள் பற்றியும்  அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்தில் விரிவாக எழுத நினைத்திருந்தேன்.பொதுவெளியில் ஒரு கருத்துப் பரிமாற்றத்துக்காகத்தான் பதிவுகள் எழுதுகிறோம். ஆனால் சரியான கவனிப்பையோ பார்வைகளையோ பெறுவதில் திரட்டிகளையே இன்னமும் நம்பியிருக்க வேண்டிய அவலம் தான் தமிழ் இணையச் சூழலில் தொடர்கிறது. தமிழ்மணம் திரட்டியில் அந்த வலைப்பூவை பதிவுசெய்து  ஆறு மாதங்களாகியும் திரட்டக்  கொடுக்க முடியவில்லை  என்று பார்த்தால்  இரண்டு நாட்களாக இந்தப்பக்கமும், சுவாசிக்கப்போறேங்க தளப் பதிவுகளையும் இணைப்பதற்கு முயன்றால் fatal error என்ற செய்தியோடு, பதிவை  இணைக்க முடியவில்லை.

நானே எழுதி நானே படிப்பதற்காகவா வலைப்பூ? இணையம்? வேறு திரட்டிகள், மாற்றுவழிகள் இருக்கிறதா?

மீண்டும் சந்திப்போம்.
         

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!