நரேந்திர மோடியை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகளுடைய போதாமை, செக்குமாடுகள் ஒரே இடத்தைச் சுற்றிச்சுற்றி வருகிற மாதிரியே இருப்பதில் ஊர்போய்ச் சேர முடியுமா? அதேபோலத்தான் சிலபல பிரபலங்களும்,முந்தைய 5 ஆண்டுகளில் ஆகிவந்த பழைய பல்லவிகளையே மீண்டும் பாட ஆரம்பித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம் போல!
Intolerence சகிப்புத்தன்மையத்துப்போச்சு கூக்குரலை நடிகை ஷபனா ஆஸ்மி மறுபடியும் ஆரம்பித்து வைத்திருப்பது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இது நரேந்திர மோடிக்கு எதிரானது இல்லை, RSSக்குச் சொன்னதாகவும் கூடச் சொல்கிறார்கள்.மாறுபட்ட கருத்தைச் சொன்னால் தேச விரோதிகள் என்று சொல்கிறார்களாம்!
முயல் ஆமை இரண்டுக்கும் ஓட்டப்பந்தயம், அதில் நிதானமாக இடைவிடாமல் நடந்தே ஆமை ஜெயித்ததாகச் சின்னவயதில் கதை ஓன்றை எல்லோருமே படித்திருப்போம். இங்கே சதீஷ் அதே கதையைக் காங்கிரசோடு பொருத்திப் பார்த்து முயலாமை, இயலாமை ஆகிவிட்ட பரிதாபத்தை கார்டூனில் சொல்கிறார். காங்கிரசுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்,மிலிந்த் தியோரா, ஜோதிராதித்ய சிந்தியா குதலானவர்களும் தோல்விக்குப் பொறுப்பேற்று ராஜினாமா, கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசு கலகலத்துக் கொண்டிருக்கிறது,மும்பையில் கடும் மழை ஜனங்களுடைய சிரமங்கள் எதையுமே பொருட்படுத்தாமல், ஆட்களைத் திரட்டி வந்து அதிருப்தி காங்கிரஸ் ஜேடிஎஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிற Sofitel ஹோட்டலுக்கு முன் ஆர்ப்பாட்டம் என்று பலவிதமான கூத்துகளும் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ராகுல் காண்டி எங்கே என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தது மிகப்பெரிய வேடிக்கை, தமாஷா!
தேர்தலுக்குத் தேர்தல் ஓட்டுக்கு கேட்கிற தருணங்களில் மட்டுமே தொகுதிக்கு வந்துபோகிற ராகுல் காண்டி ஜூலை 10 அன்று அதிசயமாக அமேதி தொகுதிக்கு விஜயம் செய்கிறார் என்று சொல்கிறார்கள். ஏன் தோற்றோம் என்று ஆராய்ச்சி செய்யப் போகிறாராம்!
வேலை, மூளை இரண்டுமே இல்லாத காங்கிரஸ்காரன் என்ன செய்வான் என்பதற்கு சரியான உதாரணமாக: சத்தீஸ்கரில் ராகுல் காண்டி கோக்கைய்ன் பயன்படுத்துகிறார் என்று சுப்ரமணியன் சுவாமி சொன்னதாக, அதனால் காங்கிரஸ் தலைவருடைய புகழுக்கு களங்கமும் கட்சிக்குள் குழப்பத்தையும் ஏற்படுத்துகிற மாதிரி இருக்கிறது என்று FIR பதிவு செய்திருக்கிறார்கள். சுவாமி வெளுத்துக் கட்டி இருக்கிறார். அதிகபட்சம் மானநட்ட வழக்குப் போடவேண்டிய ஒரு விஷயம், காங்கிரஸ் புத்தி சாலிகளால் இன்னமும் அசிங்கத்தை அவர்கள் தலீவர் மீது வரி வீசுவது போல இருப்பது காங்கிரஸ் கட்சியைப் பீடித்திருக்கிற சாபக்கேடு!
புதைகுழிக்குள் போனதைத் தோண்டியெடுத்து ஒப்பாரி வைப்பது கழகங்களுக்கு கைவந்த கலை. நீட் விவகாரத்தில் மக்களவையில் இன்று வெளிநடப்புச் செய்ததாம் திமுக. வெளிநடப்புச் செய்வதற்காகவே சபைக்குப் போகிற கட்சி திமுக என்பது மாநிலம்தாண்டி அகில இந்திய அளவில் புகழ் சேர்க்கிற விஷயம்! இதற்குமேல் வேறென்ன சொல்வது?
மீண்டும் சந்திப்போம்.
வாசித்தேன்.
ReplyDelete