சமகால வரலாறு என்பதில் 50 ஆண்டுகள் கொஞ்சம் அதிகம் தான்! நேற்றைய நாட்களில் நடந்ததைத் தெரிந்து வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்று எதிர்க் கேள்வி எழுப்புகிற நிறைய இளைஞர்களை அறிந்திருக்கிறேன். வரலாற்றின் பழையசுவடுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டபிறகு வேண்டுமானால் வரலாற்றை மறந்துவிடலாம்! பாடம் கற்றுக்கொள்கிற வரை, அரியர்ஸ் வைத்திருக்கிற மாணவனைப் போல வரலாறு நம்மை சும்மா விடுவதில்லை.
நேற்று முதல் தவணையாக 14 வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப் பட்டதான அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட 50 வது ஆண்டு என்பதும், வங்கி ஊழியர்கள் மத்தியில் கூட இதைப் பற்றி எந்தவொரு பரபரப்போ கொண்டாட்டமோ இல்லாததை பார்த்தபோது, கொஞ்சம் வியப்பாகக் கூட இருந்தது. AIBEA என்கிற வலதுகம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கூட இதை பெரிய நிகழ்வாக நடத்த மறந்து விட்டதோ? செய்திகளில் தேடினால் கடைசியாக பட்ஜெட்டை விமரிசித்தது தான் வருகிறது.
நேற்று முதல் தவணையாக 14 வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப் பட்டதான அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட 50 வது ஆண்டு என்பதும், வங்கி ஊழியர்கள் மத்தியில் கூட இதைப் பற்றி எந்தவொரு பரபரப்போ கொண்டாட்டமோ இல்லாததை பார்த்தபோது, கொஞ்சம் வியப்பாகக் கூட இருந்தது. AIBEA என்கிற வலதுகம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கூட இதை பெரிய நிகழ்வாக நடத்த மறந்து விட்டதோ? செய்திகளில் தேடினால் கடைசியாக பட்ஜெட்டை விமரிசித்தது தான் வருகிறது.
வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறும் இந்த சமயத்தில், The Print தளத்தின் சேகர் குப்தா, இந்திரா காண்டியின் இந்த முடிவு வரமா? அல்லது சாபமா? என்பதை இந்த 11 நிமிட வீடியோவில் தன் கருத்தாக கொஞ்சம் சொல்கிறார்.
வலதுசாரி கம்யூனிஸ்டுகளால், அவர்களுடைய தொழிற்சங்க அமைப்பான AIBEA முதலானவைகளால் மிகவும் புரட்சிகர நடவடிக்கையாகத் தம்பட்டம் அடிக்கப்பட்ட இந்த முடிவு உண்மையிலேயே புரட்சிகரமானதுதானா?
65 வயதான ஜெய்ராம் ரமேஷ்! இப்படி ஒரு காங்கிரஸ் ஆசாமி முந்தைய நாட்களில் செய்திகளில் அடிபடுகிற, அறிமுகமானவராக இருந்தவர் என்பதோடு ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாகவும் இருந்த ஒருமுன்னாள் மத்திய அமைச்சர். பொருளாதாரம் படித்தவர். பொருளாதாரப்புலி பானாசீனாவுக்கு ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். 2016 இல் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார் இந்திரா காலத்தைய விஷயங்கள் குறித்து நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப் பட்டதன் மூளையாக செயல்பட்ட PN ஹக்சர் வாழ்க்கையைப் பற்றி சென்ற ஆண்டு ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.
Intertwined Lives: P.N. Haksar and Indira Gandhi by Jairam Ramesh, Simon & Schuster, 560 பக்கங்கள் விலை ₹799.
As late as 9 July 1969, [PN] Haksar was not entirely convinced that banks had to be nationalised right away. Then three days later came the assault on Indira Gandhi’s authority with the announcement of Sanjiva Reddy as the Congress’s presidential candidate. Subsequently, Morarji Desai’s resignation was secured after four days.My guess is that between 12 July 1969 and 15 July 1969, Haksar and Indira Gandhi must have confabulated and decided to shed their caution on bank nationalisation. On 16 July 1969, she asked PNH to meet with KN Raj, one of India’s most distinguished economists and find out his views on bank nationalisation.
But just three days later, on 19 July 1969, 14 banks were indeed nationalised, making one of Indira Gandhi’s “stray thoughts” an immediate reality. This account is from the memoirs of DN Ghosh, who was then the official concerned in the banking division of the Ministry of Finance and who was to later become the chairman of the State Bank of India (SBI). It was the night of 17 July 1969 and Ghosh recalls being summoned to Haksar’s residence
Ghosh also remembers that some four years after bank nationalisation, he and Haksar were travelling by train to Calcutta and he asked him whether he believed the decision taken in July 1969 with such great speed and secrecy was the right one. PNH replied promptly: “Of course, I have always believed so. We would have in any case taken that step, sooner or later. Timing was dictated by political necessity.”
இது ஜெய்ராம் ரமேஷ் புத்தகத்தில் இருந்து ஒரு சிறுபகுதி.
ஜூலை 9 ஆம் தேதிக்கும் 19ஆம் தேதிக்கும் இடையில் அப்படித் தலைபோகிற மாதிரி என்ன நடந்துவிட்டது? இந்திரா காண்டியின் அரசியலைக் கவனித்து வந்தவர்களுக்கு, அம்மையாருக்கு எல்லாமே அவசரம் தான், அரசியல் ரீதியாகத் தனது சொந்தக் கட்சிக்காரர்களையே கவிழ்ப்பதற்கான தந்திரம் மட்டுமேதான் என்பது தனியாகச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீலம் சஞ்சீவ ரெட்டியை கட்சித்தலைமை தேர்ந்தெடுத்ததும், கட்சியை உடைப்பதற்கான ஆயுதமாக அம்மையார் தேர்ந்தெடுத்த ஆயுதம் வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட அவசரச்சட்டம். ஆழ்ந்து பரிசீலித்து ஒரு முறையான மசோதாவைத் தயார் செய்ய ஆறுமாதங்களாவது ஆகலாம் என்று சொன்ன போதும் அதைச் சட்டை செய்யாமல் அவசரச்சட்ட வழியைத் தேர்ந்தெடுத்ததும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டி வேட்பாளராக விவி கிரியை அறிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம் என்று அறிவித்து காங்கிரஸ் கட்சியை இண்டிகேட் சிண்டிகேட் என்று உடைத்ததும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. போராடிக் களைத்து இருந்து எப்போதடா ஒட்டிக் கொள்ளலாம் என்று காத்திருந்த வலது கம்யூனிஸ்டுகள் இந்திரா காண்டியுடன் சேர்ந்து கொண்டது அடுத்து நடந்தது . இதெல்லாம் ஜெய்ராம் ரமேஷ் புத்தகத்தில் சொல்லவில்லை. வரலாறு என்பது ஒருவர் பார்வையில் இருந்து மட்டுமே எழுதப்படுவதில்லை என்பது எவ்வளவு நல்ல விஷயம்!
இந்தப்புத்தகத்தைப் பற்றி ஜெய்ராம் ரமேஷுடன் ஒரு குழுவாக உரையாடுகிற இந்த வீடியோ 90 நிமிடங்கள் தான்! PN ஹக்சரைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள முடியுமா என்றால் முடியும்! அவருடைய கடைசி நாட்களைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்பதில் ஒரு irony இருக்கிறது.
கொஞ்சம் இரண்டு தரப்பையும் சீர் தூக்கிப் பார்த்துவிட்டு, ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ள உதவியாக இருக்கும். தவிர இந்தப் பதிவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது வரமா சாபமா என்பது குறித்து என்னுடைய சொந்தக் கருத்தை முதலிலேயே சொல்லிவிடுவதைத் தவிர்க்கிறேன்!
மீண்டும் சந்திப்போம்.
தனியார் திட்டங்கள் வெளிநாட்டுக்கு மிகவும் பொருத்தமானது. அங்கே சட்டம் என்பது வேறு. அரசியல் என்பது வேறு. ஏதும் மக்களுக்கு பிரச்சனை என்றால் உடனே தீர்வு கிடைக்கும். இங்கே அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. பசி மாதிரி ஆட்களுக்கு மட்டும் நடுராத்திரி ஜாமீன் கிடைக்கும். நமக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
ReplyDeleteவெளிநாடு,உள்நாடு என்று பிரித்துப் பார்ப்பதற்கு முன்னால் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கிற ஒரு சமூகமாக நாம் இருக்கிறோமா என்ற கேள்விக்குப் பதிலளித்த தேடியாக வேண்டும் ஜோதிஜி! இங்கே இந்திரா காண்டி, வங்கிகளைத் தேசியமயமாக்கியது, முழுக்க முழுக்க ஒரு அரசியல் முடிவு. சில நல்ல விஷயங்களும் நடந்தன என்பதால் ஒட்டுமொத்தமாக நல்லது என்றே சொல்லிவிடலாமா? பொதுத்துறையில் தொழிற்சங்கத்தில் இருந்து கிடைத்த அனுபவங்களில் இந்த தேசத்தைக் காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு சீரழித்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
Deleteஇருந்தாலும் பொதுவெளியில் என்ன கருத்தைச் சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்.