தமிழ்நாடு அரசியல் கலக்கல்! கலகலத்துப்போன கர்நாடகா!

நாம் தமிழர் கட்சியின் துரை முருகன் ரொம்பக் குசும்பு பிடித்த ஆசாமியாக இருப்பார் போல! சாட்டை என்கிற யூட்யூப் சேனலில் அவரும் டீமும் ஐந்துபத்து நிமிட வீடியோக்களில்  திராவிட இயக்கத்தை  நையாண்டி செய்தே போட்டுத் தாக்குகிறார். இந்த நாலரை நிமிட வீடியோவில் எவ்வளவு சுருக்கமாக  திமுகவின் மூன்று தலைமுறை ப்ளஸ் வைகோ என்று போட்டுத் தள்ளுகிறார் பாருங்கள்!

ஒருமணி நேரத்துக்கும் குறையாமல் நாடிநரம்புகள் முறுக்கேறக்  கத்திவிட்டு தன்னுடைய ஜோக்குக்குத் தானே ஹெஹே  ஹெஹே  என்று சிரித்துக் கொள்ளும் சீமான் மட்டுமல்ல ரொம்ப நீளமாக அரசியல் பதிவுகள் எழுதும் நானும்  கூட இந்தத் துரைமுருகனிடம் சுருங்கச் சொல்லிச் சிரிக்க வைக்கிற கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் போல!  
 

இணையத்தில் குறிப்பாக முகநூலில் அரசியல்  பேசுகிற பலருக்கும் ரொம்பப் பரிச்சயமான பெயர்களில் டான் அசோக் (திமுக) மற்றும் கிஷோர் K சுவாமி (அதிமுக சார்பானவர் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, அரசியல் விமரிசகர் என்று இங்கே அறிமுகம் செய்கிறார்கள்!) இரண்டும் பிரபலம். திமுக மடமா? கட்சியா என்று விவாதத்துக்குத் தலைப்பு வைத்திருப்பது தான்  கொஞ்சம் உறுத்துகிறது. கட்சியோ மடமோ இல்லை, நேற்றைய நாட்களில் கலீஞர் & உறவுகள் என்றிருந்த லோக்கல் நிறுவனம், இன்று இசுடாலின்& வாரிசுகள் என்றாகியிருக்கிறது அவ்வளவுதான்! 


ஆரம்பத்தில் அரசியல் மட்டுமே முழுநேரத் தொழிலாக இருந்தது மாறி பல தொழில் செய்வதோடு அரசியலும் பார்ட் டைமாக என்று  ஆகி இருப்பது தெரியாதவர்கள்தான் மடமா கட்சியா என்று புரியாமல் குழம்புவார்கள்!


கர்நாடக அரசியல்குழப்பத்தை திங்கள்கிழமை வரை தள்ளிப் போட முயற்சிக்கிறார்கள்! ஆனால் கிழிந்துகொண்டிருக்கும் துணியை எத்தனைதரம் தான் ஒட்டுப்போட முடியும்? ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி அசிங்கப்படாமல் முதல்வர் குமாரசாமி தானாகவே பதவி விலகி விடுவார் என்கிற மாதிரித் தான்  தற்போதைய செய்தி சொல்கிறது  காங்கிரஸ் கட்சியோ வழக்கம்போல பிஜேபி பழியைப் போடுகிறது. என்ன பிரயோசனம்? கர்நாடகத்தின் பெரும் பணக்கார காங். அமைச்சர் DK சிவகுமார் ராஜினாமா செய்ய வந்த அதிருப்தி MLA க்களுடன் நடத்திய சமரசம், பேரங்கள் தோல்வி அடைந்து விட்டது என்பதற்கும் கூட பிஜேபி தான் பழிசுமக்க வேண்டுமா என்ன?  

மீண்டும் சந்திப்போம்.

                                                                       
    

5 comments:

 1. தேவகவுடா குமாரசாமி அவர்கள் வாழ்நாளுக்குள் அனுபவிக்க வேண்டிய சிலவற்றை அனுபவிக்காமல் சுகமாக சென்று சேர்ந்து விடுவார்களோ? என்ற எண்ணம் இப்போது நடக்கும் சம்பவங்கள் மூலம் மாறிக் கொண்டு இருப்பதை உணர முடிகின்றது.

  ReplyDelete
  Replies
  1. இப்போதெல்லாம் பத்து தலைமுறைக்குச் சொத்துச் சேர்த்தால் போதாது இன்னும் இன்னும் என்கிற பேராசை அரசியல்வாதிகளை உந்தித்தள்ளிக் கொண்டிருக்கிறது ஜோதிஜி! அதுவும் கர்நாடகாவில் கேட்கவேண்டுமா?

   Delete
 2. 2018 கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்து, காங்கிரஸ் -> ம ஜ த வை முதுகில் சுமக்க ஆரம்பித்தபோதே நான் (ஃபேஸ்புக் பதிவில்) சொல்லியிருந்தேன், இந்தக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தல் வரை அதிக பட்சம் நீடிக்கும். அதற்குப் பின் சில நாட்களில் கவிழும் என்று. கர்நாடகாவின் நகர்ப்புறங்களில் பா ஜ க ஆதரவு அதிகம். விவசாயிகள் வாழும் பகுதிகளிலும், மற்ற மதத்தினர் பெரும் அளவில் வாழும் பகுதிகளிலும் ம ஜ த அல்லது காங்கிரஸ் ஆதரவு அதிகம். காங்கிரஸ் ஆதரவாளர்களில் கிருத்துவ மக்களும் அதிகம். காங்கிரஸ் + ம ஜ த கூட்டணியை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ம ஜ த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் காங்கிரசை எதிர்த்துத்தான் பிரச்சாரம் செய்தனர். கூட்டணி (தேர்தலுக்குப் பிந்தைய ) அரசு அமைக்கும்போது, காங்கிரஸ், ம ஜ த வை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்ததினால், முதல்வர் பதவியைக் கேட்டிருந்தால், அப்போதே கூட்டணி கவிழ்ந்திருக்கும். பா ஜ க வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், பல்லக்கில் குமாரசாமியை ஏற்றி உட்கார வைத்து தூக்கிச் செல்ல காங்கிரசின் புத்திசாலித்தனமான (!) திட்டத்தை ம ஜ த ஏற்றுக்கொண்டது, ஓடும் வரை இது ஓடட்டும் என்று. காங்கிரசில் உள்குத்துகள், ம ஜ த வில் குடும்ப குடுமிப்பிடி சச்சரவுகளோடு இவ்வளவு காலம் இந்த அரசு நீடித்ததே அதிசயம்தான். பார்ப்போம் இன்னும் என்னென்ன நடக்கிறது என்று!

  ReplyDelete
  Replies
  1. முக்கிய மான ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டீர்களே கௌதமன் சார்! காங்கிரஸ்காரனுக்குத் தேவை நாற்காலி, அதிகாரம், சம்பாத்தியம்! இவை கிடைக்கும்போது முதல்வர் நாற்காலியைப் பெயரளவுக்கு குமாரசாமிக்கு வீட்டுக் கொடுத்ததால் என்ன குறைந்து விட்டது? மந்திரிகள் எண்ணிக்கை இலாகாக்கள் எல்லாம் காங்கிரஸ் விரும்பியபடிதானே!

   மாநிலக்கட்சிகள் காங்கிரஸ் மீது சவாரி செய்ததும், காங்கிரஸ்கட்சி வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் மாநிலக்கட்சிகளைப் பிரித்து மேய்ந்ததுமான சதுரங்கவேட்டைக்கு இப்போது முற்றுப்புள்ளி வந்துவிட்டது. ஒருகாலத்தில் பிஜேபிக்கு குத்தப்பட்ட தீண்டத்தகாத கட்சி முத்திரையை சுமக்கவேண்டியது இப்போது காங்கிரஸ் கட்சியின் முறை!

   Delete
  2. ஆம். சரிதான்.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!