பந்தியில் உட்காராதே எழுந்து வெளியே போ என்று ஒருவனை விரட்டினார்களாம்! அவனோ நிதானமாக இலை கிழிசலாக இருக்கிறது, நீ விருந்தே படைத்தாலும் சாப்பிடமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போனானாம்! அந்தக் கதையாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா வானமே இடிந்து தலைமீது விழுந்தாலும் அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்று அதிருப்தி MLAக்களை பார்த்துச் சொன்ன விஷயம் சிரிப்பாய்ச் சிரிக்கிறதே! அந்த நேரு குல்லா மாதிரியே!
கர்நாடக அரசு கவிழ்ந்துவிடும் என்பது எல்லோருக்குமே தெரிந்த ரகசியமாக இருந்ததாலோ என்னவோ இங்கே வரும் நண்பர்கள் அதில் இருந்த, இன்னும் தொடர்கிற சூப்பர் காமெடிகளைத் தவற விட்டுவிட்டார்களோ என்கிற சந்தேகம் எனக்கு நிறையவே இருக்கிறது. அதுவும் குமாரசாமிக்கு எதிராக தன்னுடைய ஆதரவு MLA க்களைத் தூண்டிவிட்டு ராஜினாமா நாடகம் நடத்தக் காரணமாக இருந்தவரென்று சொல்லப் படும் சித்தராமையா, ஆரம்பித்து வைத்த ஓட்டை பெரிதாகி, நிலைமை கையை மீறிப்போன பிறகு பேசிய வசனங்கள் இருக்கிறதே! கொஞ்சம் பார்க்கலாமா?
You said Modi will never become PM again & BSY will never become CM again, any comments now ?
இந்த ஒரு ட்வீட்டுக்கு வந்திருக்கிற எதிர்க்கீச்சுக்கள் வஜனம் காங்கிரஸ் மாதிரியே கிழித்துத் தொங்கவிடப் பட்டிருப்பதை, ஒரு சின்ன சாம்பிளாக! அதைவிவிட, தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிற திராணி இல்லாமல், ஜனநாயகம் தோற்றது நாணயம் தோற்றது கர்நாடக ஜனங்கள் தோற்றார்கள் என்று அலங்காரமாக சப்பைக்கட்டுக் கட்டிய ராகுல் காண்டிக்கு ஒருத்தர் பதில் சொல்லியிருப்பதையும் பார்க்கலாமா?
11:03 AM · Jul 24, 2019 from Bengaluru South, India ·
ராகுல் காண்டியின் ஜனநாயக அறிவு, அயலுறவு பற்றிய அறிவு எவ்வளவு என்பதைப்பற்றிய சிறு அறிமுகத்தோடு அர்னாப் கோஸ்வாமி, கர்நாடக அரசு கவிழ்ந்தது பற்றி ஒரு விவாதத்தை முன்னெடுக்கிறார்.
இந்த ஒரு ட்வீட்டுக்கு வந்திருக்கிற எதிர்க்கீச்சுக்கள் வஜனம் காங்கிரஸ் மாதிரியே கிழித்துத் தொங்கவிடப் பட்டிருப்பதை, ஒரு சின்ன சாம்பிளாக! அதைவிவிட, தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிற திராணி இல்லாமல், ஜனநாயகம் தோற்றது நாணயம் தோற்றது கர்நாடக ஜனங்கள் தோற்றார்கள் என்று அலங்காரமாக சப்பைக்கட்டுக் கட்டிய ராகுல் காண்டிக்கு ஒருத்தர் பதில் சொல்லியிருப்பதையும் பார்க்கலாமா?
ராகுல் காண்டியின் ஜனநாயக அறிவு, அயலுறவு பற்றிய அறிவு எவ்வளவு என்பதைப்பற்றிய சிறு அறிமுகத்தோடு அர்னாப் கோஸ்வாமி, கர்நாடக அரசு கவிழ்ந்தது பற்றி ஒரு விவாதத்தை முன்னெடுக்கிறார்.
விவாதம் 52 நிமிடங்கள் தான்! காங்கிரசை இன்னமும் ஒரிஜினல் காந்தி காலத்துக் காங்கிரசாக இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் எவரும் பார்க்க வேண்டாம்!
மீண்டும் சந்திப்போம்.
கவர்னர், உச்ச நீதிமன்றம், பாஜகவுக்கு ஆதரவு நிலை எடுத்ததுபோலத் தெரிந்தாலும், சீத்தாராமையாவின் ஆரம்ப எதிர்பார்ப்பு, குமாரசாமி விலகி தான் அந்தப் பதவியில் உட்காரும் நிலை வரும் என்பதுதான். இடையில் சிவகுமார் புகுந்து, தானும் முதல்வர் ரேசில் இருப்பதாகச் சொன்னார் (பரமேஸ்வரனுடன்). எய்த அம்பு அவரையே தாக்குவதுபோல மொத்த அரசையும் தாக்கிவிட்டது.
ReplyDeleteநியாயமா, அந்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து, உடனடியாக தேர்தல் அறிவித்து, பிறகு மெஜாரிட்டி யாருக்கு என்றுதான் பார்க்கணும் (அதாவது அந்த 20 சீட்கள் மட்டும் தேர்தல்). அதில்லாமல் 105 உள்ள பாஜகவை ஆட்சி செய்ய அழைப்பது, இந்த எம்.எல்.ஏக்கள் விஷயத்தில் பாஜக கை இருப்பதைத்தான் காட்டும்.
அதாவது காங்கிரசுக்கோ மற்ற கட்சிகளுக்கோ பொருத்திப் பார்க்க முடியாத நியாயத்தை பிஜேபி மட்டுமே சுமந்தாக வேண்டும் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா நெல்லைத்தமிழன் சார்? ;-)))
Deleteஇங்கே தான் பிஜேபிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு நான் உள்ளாகிறேன்!
இது கடந்த பல மாதங்களாக நடந்து வருவது. பாஜக முதலில் சம்மந்தப்பட்ட சமஉ களைத் தொடர்பு கொண்ட போது மறுத்துள்ளார்கள். அதன் பிறகு ஆள் அம்பு சேனை பணம் பதவி என்று ஆசை காட்சி சில பேரை மட்டும் வளைத்துள்ளார்கள். அதன் பிறகு படிப்படியாக எண்ணிக்கை அதிகரித்து இன்று பாஜக சமஉ போலவே மாறி உள்ளனர். பாஜக சொல்வதைக் கேட்கும் நிலையில் இருக்கின்றனர். டி சிவகுமார் சொன்னார். அவர்கள் சட்டமன்றத்திற்குள் உள்ளே வந்த போது ஒரு அறையில் என்னை பூட்டி வைத்திருக்க முடியும். ஆனால் நாங்கள் அது போன்ற காரியங்களைச் செய்ய முடியவில்லை என்றார். ஆனால் பாஜக அசரவில்லை என்பதனை விட சமஉ யாருமே வளைந்து கொடுக்கத் தயாராக இல்லை என்பது தான் உண்மை. காரணம் தேவகௌடா குடும்பம் என்பது அப்பேற்பட்ட பின்புலம் கொண்டது. தான் தனக்கு தன்னுடைய என்ற மூன்று கொள்கை தான் அவர்களுக்கு முக்கியம். இப்போது பாஜக நிச்சயம் இந்த அசிங்கத்தை மேற்கொண்டு செய்து ஆட்சியில் அமரக்கூடாது. காங்கு விடாது துரத்தும் கருப்பு போலவே செயல்படுவார்கள். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். மக்களை கவனிக்க முடியாது. அவர்கள் அயோக்கியர்கள் என்று சுட்டிக்காட்டுவது எந்த அளவுக்கு சரியோ நாம் யோக்கியன் என்று நிரூபிப்பது மிக முக்கியமானது. புதிய தேர்தல் மூலம் பாஜக ஆட்சிக்கு வருவது தான் சரி. அது அவர்களுக்கு வாய்ப்புள்ளது என்று நம்புகிறேன்.
Deleteஜோதிஜி! பலமாதங்களாக இல்லை, முப்பது நாற்பது வருடங்களுக்கும் மேலாக தேவே கவுடா, ராமகிருஷ்ண ஹெக்டே, SR பொம்மை அரசுகளுக்குக் குடைச்சல் கொடுத்துக்கவிழ்த்து பின்னால் தான் முதல்வராவாடிக்கையான ன கதையிலிருந்து மட்டுமல்ல, இதே எடியூரப்பாவைக் கவிழ்க்க DK சிவகுமார் குமாரசாமி கூட்டணி அமைத்து ரிசார்ட் பாலிடிக்ஸ் நடத்தின கதை எல்லாவற்றையும் அறிந்தே வைத்திருக்கிறேன். அப்போது இந்தக் கூட்டணி செய்த அதே வேலையை BJP இன்று செய்திருக்கிறது.DK சிவகுமார் குமாரசாமி கூட்டணிக்குள் புதிய வில்லனாக சித்தராமையா இப்போது சேர்ந்திருக்கிறார் என்பது காங்கிரசுக்கு கர்மா தியரியாக, தொடர்ந்து எதிராகத்திரும்பும் ஆப்பு!
Deleteஅடுத்து முந்தியநாட்களைப் போல எடியூரப்பா தன்னிச்சையாகச் செயல்பட முடியாதபடி, மத்தியில் உறுதியான கட்சித்தலைமை இருப்பதைக் கவனிக்கிறீர்களா? எடியூரப்பா அவசரப்படாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது எதனால் என்று நினைக்கிறீர்கள்? இப்போதுள்ளகுப்பைகளை வைத்தே அரசமைப்பதா அல்லது ஜனாதிபதி ஆட்சியா என்பது இன்னமும் தெரியவில்லையே!
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் அல்லது வலுவான நிலையில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு சில காரணங்கள் உண்டு. 1. கேரளா கொஞ்சம் வசப்பட்டு விட்டது. அடுத்த பத்தாண்டுகளில் தமிழகம் கைக்கு வர வேண்டும் என்றால் இப்போதே இங்கிருந்து தொடங்க வேண்டும். ஆந்திரா என்பது ஒய்எஸ்ஆர் மகனை பாஜக கட்சி போலவே மாற்றியாகி விட்டது. ஒன்று மசோதா தாக்கல் செய்யும் போது ஆதரவு அல்லது தானே அந்த மாநிலத்தை பிடிப்பது. இந்த இரண்டு கொள்கைக்குள் பாஜக தன் கரங்களை விரிக்கின்றது. கர்மா தியரி உண்மையென்றால் இத்தாலி மாபியா இன்னமும் இருக்கின்றாரே? செய்த பாவம் கொஞ்சமா? நஞ்சமா?
Deleteநரேந்திர மோடி அமித் ஷா இருவருடைய முழுமையான கட்டுப்பாட்டில் பிஜேபி இருப்பதும், தலைமைப்பண்பு சிறிதுமில்லாத சோனியாG குடும்பத்தையே இன்னமும் காங்கிரஸ்கட்சி பிடித்துத் தொங்கி கொண்டிருப்பதும் தான் இப்போதைய அரசியல் விளையாட்டுக்களில் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம், ஜோதிஜி!
Deleteமுந்தைய நாட்களில் சுஷ்மா ஸ்வராஜைப் பிடித்துக் கொண்டு தன்னிஷ்டம் போல எடியூரப்பா செயல்பட்ட மாதிரி இப்போது செய்ய முடியாது என்பதை ஏன் யாருமே கவனிக்க மாட்டேனென்கிறீர்கள்? சபாநாயகர் அதிருப்தி MLAக்கள் ராஜினாமா மீது தகுதிநீக்கம் செய்யப்போவதான சூசகத்தை நேற்றைக்கே தந்திடிவி பேட்டியில் கோடி காட்டிவிட்டார். உச்சநீதிமன்றத்தின் முடிவு, மேல்முறையீடு இருக்குமா இல்லையா என்பது மட்டும்தான் இப்போது முக்கியமான விஷயம்.