உலக அமைதியைக் கெடுக்க! டொனால்ட் ட்ரம்ப் ஒருவரே போதும்!

அனேகமாக டொனால்ட் ட்ரம்ப் அளவுக்கு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி எல்லோரையும் கதற விட்டவர்கள் உலகத்தலைவர்களில் வேறு எவருமில்லை என்றே சொல்கிற அளவுக்கு வாய் என்றால் அப்படி ஒரு வாய்! வாய்தான் அப்படி என்றால், ராஜீய உறவுகளில் இப்படித்தான் என்று கணிக்க முடியாதபடி அப்படி ஒரு முரண். 2020 இல் பதவிக்காலம் முடிகிற வரை சகித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்பு ஈரானுக்கு அறிவுரை சொன்னதுண்டு. சீனாவும் கூட, ட்ரம்ப் பதவிக் காலம் முடிகிற வரை முட்டல் மோதல்களை வளர்த்துக் கொள்ளாமலும், அதே நேரம் ரஷ்யா உள்ளிட்ட எல்லா நாடுகளுடன் ஒரு சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதிலும் அதிக அக்கறை காட்டுவதில் அர்த்தம் இல்லாமல் இல்லை,  


அமெரிக்காவோடு அதிகம் ஒட்டி இழைந்துகொண்டிருக்கும் ஒரே நாடு என்றால் அது பிரிட்டன் தான்!  கடந்த புதனன்று USA வுக்கான பிரிட்டிஷ் தூதர் சர் கிம் டர்ரக் ராஜினாமா செய்து இருப்பது இப்போது சர்வதேச அளவில் வெளியுறவு விவகாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் செய்தி! என்ன நடந்ததாம்? போன ஞாயிற்றுக் கிழமை, பிரிட்டிஷ் தூதர் தனது அரசுக்கு அனுப்பிய தகவல்கள் (பிரிட்டிஷார் இதை தந்தி / telegram என்கிறார்கள் அமெரிக்காவில் இதையே Cable என்று சொன்னாலும் இன்றைய சூழலில் இவை நமக்குப் பரிச்சயமான   மின்னஞ்சல்கள் தான்)  வெளியே கசியவிடப்பட்டதில், டர்ரக் அமெரிக்க அதிபரைப்பற்றிய தன்னுடைய அனுமானங்களைச் சொல்லியிருந்தது, இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது 

*******
இது இன்றைக்கு அக்கம் பக்கம், ராஜீய உறவுகளும் சிக்கல்களும், வெளியுறவுக் கொள்கை, செய்திகள், விமரிசனங்கள் என்று எழுதுவதற்காகவே தொடங்கப்பட்ட வலைப்பதிவுக்காக எழுதியதன் தொடக்கப் பகுதி  முழுப்பதிவையும் கீழேகாணும் சுட்டியில் படிக்கலாம். 

https://akkampakkamennasethi.blogspot.com/  இந்த வலைப்பதிவை ஜனவரி மாதமே தமிழ்மணம் திரட்டியில் இணைப்பதற்காக சமர்ப்பித்து இருந்தாலும் இன்னமும் இந்தப்பக்கங்களை இணைக்க முடியவில்லை. நண்பர்கள் எவராவது இதை இணைக்க உதவினால் நன்றாக இருக்கும்.  அதுவரை பதிவைப் படிக்கும் நண்பர்கள் இந்தப்பக்கத்தை bookmark செய்துகொண்டோ follow / email ஆப்ஷன்களிலோ  இந்தப்பக்கத்தை ஆதரிக்க வேண்டுகிறேன்.

நன்றி. மீண்டும் சந்திப்போம்.


2 comments:

  1. ஏழரை சீக்கிரமாக இடத்தை காலி செய்யட்டும்..

    ReplyDelete
    Replies
    1. அதற்கு 2020 வரை காத்திருக்கவேண்டுமே துரை செல்வராஜூ சார்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!