சண்டேன்னா மூணு! அரசியல்! கட்டமைக்கப்படும் பிம்பங்கள்! ஏமாறும் ஜனங்கள்!

மம்தா பானெர்ஜியின் சிரித்தமுகத்தை ஒருவழியாகப் பார்த்து விட்ட சந்தோஷத்தில், எப்போது எடுத்ததோ தெரியாது, அதை சுவாசிக்கப்போறேங்க தளத்தில் இன்றைக்குப் பகிர்ந்தது தீதிக்கே பொறுக்கவில்லை. இன்றைக்கு கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருக்கிற தியாகிகள் தினப் பேரணி குறித்து மாநில பிஜேபி தலைவர் திலீப் கோஷ் பேசியிருப்பது மம்தா பானெர்ஜியின் கோபத்தை கிளறி விட்டிருக்கிறது. போதாக்குறைக்கு மனிதர், ஜனங்களிடம் இருந்து வசூலித்த cut money ஐத் (லஞ்சம்) திருப்பிக் கொடுக்காவிட்டால்    பேரணிக்கு வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பஸ்களில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடுவோம் என்று பேசினாராம்! மிரட்டல் புகார் மீது திலீப் கோஷ் மீது FIR பதிவாகி இருப்பதில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் ஆனபிறகும் கூட மம்தா பானெர்ஜிக்கு பிஜேபி மீதான பயம் இன்னமும் குறையவில்லை என்பதைக் காட்டுவதாக மட்டுமே இருக்கிறது. 


இது நேற்று, தியாகிகள் தினப் பேரணி ஏற்பாடுகளைப் 
பார்வையிட வந்தபோது! சிரிப்பு எங்கே?

IPAC என்ற நிறுவனம் பிரசாந்த் கிஷோர் நடத்திவருகிற ஒரு தேர்தல் உத்திகளைக் காசுக்காகக் கட்சிகளுக்கு வகுத்துத் தருகிற நிறுவனம். இப்போது மம்தா பானெர்ஜிக்காக மேற்கு வங்கத்தில் களம் இறங்கியிருக்கிறது. 2021 சட்டசபைத் தேர்தல்களுக்காக மம்தா பானெர்ஜி,  இவர்கள் வகுத்துத் தருகிற உத்திகளைக் கையாளத் தயாராகி வருவதில் இந்தத் தியாகிகள் தினப்பேரணி முதலாவது,  ஒரு சாக்கு, அவ்வளவு தான்! 


தன்னை ஒரு வங்கப்புலியாக பாவித்துக் கொண்டு இயல்பான சிரிப்பைக் கூட மறந்துபோன மம்தா பானெர்ஜிக்கு image makeover என்று என்னதான் வெளியிலிருந்து நல்ல உத்திகள் வகுத்துக் கொடுத்தாலும் எந்த அளவுக்குப் பிரயோசனப்படும் என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இங்கே தமிழகத்தில் திமுக தலீவர் இசுடாலினுக்கு OMG என்ற இதே மாதிரி ஒரு நிறுவனம் உத்திகளை வகுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதிலும் கூடத்  தலீவர் இன்னமும் துண்டுச்சீட்டைப் பார்த்துப் படித்துத்   தப்பும் தவறுமாகத்தானே பேசிக்    கொண்டிருக்கிறார் என்ற நினைப்பும் வந்து போகிறது. 


வங்காளம், வங்காளிகள், வங்கமொழி என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்தே பிஜேபியை சமாளித்துவிடலாம் என்று முடிவு செய்து விட்ட மாதிரியே இந்த வீடியோவைப் பார்க்கும் போது தோன்றுகிறது. ஷீலா தீட்சித் பற்றிய செய்திகளே ஆங்கில சேனல்களில் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் மம்தா பானெர்ஜி நடத்தும் பேரணி பற்றி இதைவிடத் தெளிவான வீடியோ கிடைக்கவில்லை. 

Martyrs Day is observed annually by TMC on July 21 to commemorate the killings of 13 people in police firing in 1993, when Banerjee, then a Youth Congress leader, had launched a march to the secretariat, demanding that voters’ card be made the only document to allow people to exercise their franchise. The Left Front was in power in the state at that time  என்றொரு குறிப்புடன், இந்த நிகழ்வில் வழக்கமாக, எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கட்சியினருக்கு அறிவிப்பதும்  உண்டு என்பதால் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களுக்கு முன்னோட்டமாக சில அறிவிப்புகளும் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுவதாகச் செய்திகள் சொல்கின்றன. வங்காளிகள் மனோநிலையை நேரடியாகப் பார்த்துப் புரிந்து கொள்வதற்கு பிரசாந்த் கிஷோரும் இந்தப் பேரணியில் கலந்து கொள்வாராம் 


  • West Bengal Chief Minister, Mamata Banerjee: I will request the Election Commission to conduct Panchayat and Municipal elections through ballot paper.
    Quote Tweet
    ·
    West Bengal Chief Minister, Mamata Banerjee: In Lok Sabha elections they won by cheating- by using EVMs, CRPF and Central Police & Election Commission They just got 18 seats, by getting few seats they are trying to capture our party offices and beating our people.
    1:11 PM · Jul 21, 2019 · Twitter Web App   

    மம்தா பானெர்ஜி மாதிரி அரசியல்வாதிகளை நம்பினால் கற்காலத்துக்கே  போய்ச்  சேர  வேண்டியதுதான்! எத்தனை பிரசாந்த் கிஷோர்கள் வந்தாலும் இவர்களை போன்ற அரசியல்வாதிகளுடைய  உண்மையான முகத்தை மாற்றி அமைத்துவிட முடியாது.


    எடியூரப்பா விதான் சௌதாவுக்குள்ளேயே படுத்து உறங்கியது, பிரியங்கா நடு  வீதியில் அமர்ந்து தர்ணா செய்தது என்று photo op அரசியல் செய்வதிலும்,  பேரணிகள் நடத்தி ஆவேசமாகப் பேசுவதிலும், ஜனங்களாகிய நாம் இன்னமும் எத்தனை நாளைக்குத்தான் ஏமாந்து கொண்டே இருக்கப்போகிறோம்?

    ஆளைப்பார்த்து மயங்காதே! ஊதுகாமாலை! என்று சொல்வதைக் கேட்டதுண்டா? இங்கே புனிதபிம்பங்களாகக் கட்டமைக்கப்படும் அரசியல்வாதிகளுடைய யோக்கியதையும் அதுதான்! அவ்வளவுதான்!      
        
    மீண்டும் சந்திப்போம்.  
       

    No comments:

    Post a Comment

    ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!