சண்டேன்னா மூணு! நிலவுக்குப் போவோம்! நம்பிக்கை! NDTV!

நிலவுக்குப் போகவேண்டும் என்பது மனிதனின் ஆதி காலத்துக் கனவுகளில் ஒன்று. அறிவியல் வளர வளர மனிதனுடைய கனவுகளும் ஒவ்வொன்றாக மெய்ப்பட ஆரம்பித்தன. நிலவுக்குப் போவது என்ற கனவை இந்திய விஞ்ஞானிகளும் மெய்ப்பிக்க முயற்சிப்பதில் நாளை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருக்கும் சந்திராயன் II கவுன்ட் டௌன் துவங்கி விட்டது. 

 

நிலாவைக் கையில் பிடிக்க எல்லோருக்கும்தான் ஆசை! ஆனாலும் அதற்கான தொழில்நுட்பமும், தொடரும் ஆராய்ச்சிகளும் எல்லா நாடுகளிலும் இருந்துவிடுவதில்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை  டாக்டர் விக்ரம் அம்பாலால் சாராபாயின் முதல் முயற்சியான ஆரியபட்டா விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி பல விதமான தடங்கல்களை மீறி, இன்றைக்கு நிலவில் இறங்குகிற  விண்கலம் ஒன்றை  இரண்டாவது முறையாக ஏவும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. நம்முடைய விஞ்ஞானிகளை மனதார வாழ்த்துவோம்!


வருகிற ஐந்தாண்டுகளில் இந்தியப்பொருளாதாரம் 5லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு உயரவேண்டும் என்று நரேந்திர மோடி சொன்னதை, நையாண்டி செய்கிற ஒரு வீடியோ. இவைகளுக்கெல்லாம் பெரிதாக அர்த்தம் தேடப் போகவேண்டியதே இல்லை. நம்பிக்கையோடு ஒருதரப்பு செயல்பட முனைகிறபோது, அவநம்பிக்கையோடு ஒரு கூட்டம் அங்கும் இங்குமாக அலைபாய்ந்து கொண்டேதான் இருக்கும்!  இப்படிப்பேசுகிறவர்கள் வேறுமாதிரியும் பேசுவார்கள்!


என்ன சொல்கிறோம் என்பதைப்  புரிந்துகொள்ளாமல் வெறுமனே காவி ஜால்ரா பட்டம் கட்டினால்  சிரித்துவிட்டுப்  போய்க்கொண்டே இருக்கவேண்டியது தான்! 


இங்கே சேகர் குப்தா கூடத்தான் மோடியின் 5 ட்ரில்லியன் $ பொருளாதாரம் என்பதை அவ்வளவாக நம்பாத மாதிரிப் பேசுகிறார்! ஒரு கருத்தில் நமக்கு           உடன்பாடு இல்லையென்பதற்காக அதை அப்படியே புறக்கணித்து விட வேண்டும் என்பதில்லை. என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அப்புறமாக அதை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பதை அதற்கான காரணங்களுடன் முடிவு செய்யலாம் என்பது நான் கடைப்பிடிக்கிற முறை.  


இந்த நாலரை நிமிட NDTV வீடியோ  செய்தியில் சொல்கிற மாதிரி, நேற்று வெளியான அறிவிப்பில் காங்கிரஸ் தலைவர் ஒப்புதலோடு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவராக  பாலாசாஹெப் தோரட் நியமிக்கப் படுவதாக....! யார் அந்த காங்கிரஸ் தலைவர்?  தெரிகிறதா? 

கையெழுத்துப்போட்ட கேசி வேணுகோபாலுக்குத்தான் வெளிச்சம் என்கிற மாதிரியான பதில்கள் நிராகரிக்கப்படும்! 

மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!