Showing posts with label நெஞ்சுக்கு நீதி. Show all posts
Showing posts with label நெஞ்சுக்கு நீதி. Show all posts

இட்லி வடை பொங்கல்! #27 இதுதானய்யா அரசியல்!

போகாதே போகாதே என்கணவா என்றொரு பிலாக்கணப் பாட்டு கட்டபொம்மன் படத்தில் பிரசித்தம்! அதையும் தாண்டி காங்கிரஸ் கட்சியில் சோனியா வாரிசுகள் ராஜினாமா செய்ய முன்வருகிற மாதிரி ஒரு நாடகமும் காங்கிரஸ் காரியகமிட்டி உறுப்பினர்கள் எல்லாம் கூடி ஒரு ஒப்பாரி வைத்து அதை நிராகரிப்பதுமான நாடகம் இன்று காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டத்தில் நடந்து முடிந்திருக்கிறது  என்பதில் முக்கியமான விஷயம் சோனியா குடும்பத்திடம் குவிந்து கிடக்கிற ஊழல் பண பலம் என்பது எத்தனைபேருக்கு இங்கே தெரிந்திருக்கும் என்பது எனக்கு நிஜமாகவே தெரியவில்லை. காரணமே இல்லாமல் ஒரு கும்பல், அங்கே அடிமைகளாகவும் பல்லக்குத் தூக்குபவர்களாகவும் இருக்குமா? ஆக சோனியா வாரிசுகளின் மீது எத்தனை விசுவாசம் என்பது அவரவருக்கு வரும்படியைப் பொறுத்தது மட்டுமே  என்பது நிஜம்.


அடடே! மதி வரைந்த பொருள்நிறைந்த கார்டூன் ஒன்றை நேற்றே பார்த்தேன். ஆனால்  பதிவில் சேர்க்க முடியவில்லை என்பது மனதில்  உறுத்திக் கொண்டே இருந்தது.
தமிழகம், கேரளாவில் இன்னமும் குப்பைகள் அகற்றப் படவில்லை என்பது வருத்தம் தரக்  கூடியதுதான்! ஆனால் காங்கிரசில் கண்துடைப்புக்காக நடந்த மாதிரிக் கூட இங்கே தமிழக பிஜேபி நிர்வாகிகள் எவரும் தோல்விக்காகப் பொறுப்பேற்கவோ ராஜினாமா செய்ய முன்வரவோ இல்லை என்பது இன்னும் அதிக உறுத்தலாக!  

  
இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத்தாண்டி வேறுசில முக்கியமான மாற்றங்களும் நடக்கவிருக்கிறது. 2020 நவம்பரை ஒட்டி  ராஜ்ய சபாவில் 75 இடங்களுக்கான தேர்தல் நடக்கவிருப்பதில் பிஜேபி தலைமையிலான NDA 19+ இடங்களைப் பெற்று சபையில் மெஜாரிடியைப் பெறுகிறது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அவைகளிலும் தனிப்பெரும்பான்மை பெறுவதன் விளைவாக கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரசும் கூட்டாளிகளும் ராஜ்யசபாவில் போட்ட ஆட்டங்கள் இனிமேல் நடக்காது.

இங்கே தமிழகத்தில் என்ன நிலைமை?

திமுகவின் கனிமொழி, அதிமுக தயவில் CPI கட்சியின் D ராஜா அதிமுகவின் மைத்ரேயன் மூவருடைய பதவிக்காலமும் முடிவடைவதில் இப்போது கனிமொழி மக்களவைக்குத் தேர்வாகி விட்டார். சட்டசபை உறுப்பினர்களுடைய எண்ணிக்கை அடிப்படையில் திமுக,  அதிமுக இரு கட்சிகளுக்கும் தலா 3 பேரை மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய முடியும் என்ற நிலை. ஏற்கெனெவே திமுக ஒப்புக் கொண்டபடி மதிமுகவின் வைகோவுக்கு ஒரு இடம், காங்கிரஸ் கோரிக்கை ஏற்கப்பட்டால் மன்மோகன் சிங் இந்த முறை தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போகலாம்! வலது கம்யூனிஸ்ட் கட்சியின் D ராஜா இதுவரை திமுக, அதிமுக என்று இரு கழகங்களின் தோள்மீதேறி அனுபவித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஒரு முடிவு வருகிறது.

அதிமுக தரப்பில் பாமகவுக்கு, ஒப்புக்கொண்டபடி 7+1 என்பதில் தர்மபுரியில் தோற்ற அன்புமணிக்கு வாய்ப்பு தரப்படுமா அல்லது தட்டிக்கழிக்கப்படுமா என்பது இனிமேல்தான் தெரியவரும். பாமகவுடன் கூட்டணி வைத்ததில் அதிமுகவுக்கு கிடைத்தது பூஜ்யம் என்கிற நிலையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.  
  


இது எந்தக் கேரளப்பத்திரிகையில் வந்ததோ தெரியாது! இடதுசாரிகள் இனிமேல்  ஜோசப் ஸ்டாலின் படத்தைக் கழற்றிவைத்துவிட்டு முக ஸ்டாலின் படம் வைத்து வாழ்த்து கோஷம் போடுகிற மாதிரி!

அப்படியே மார்க்ஸ் ஏங்கல்ஸ் என்று பிதற்றித் திரிவதை விட்டுவிட்டு  கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி காவியத்தைப் பாராயணம் செய்யவேண்டும் என்று சொல்லாமல் விட்டார்களே!  

மீண்டும் சந்திப்போம்.

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! சவ்வ்வ்வ்வு மிட்டாய் வோணுமா?



இது இல்லாத தமிழ் சீரியல் உண்டா..?


வெள்ளிக்கிழமை வில்லங்கம்..

பொதுவாகவே ஒவ்வொருநாள் எபிசோட் முடிவிலும் ஒரு சின்ன கிளைமாக்ஸ் இருக்கும். வெள்ளிக்கிழமைன்னா கேட்கவே வேண்டாம்..  அடுத்த சனி, ஞாயிறு ரெண்டு நாளும் சீரியல் கிடையாது. திங்கட்கிழமை வரை மக்கள் இதைப்பத்தியே பேசிட்டு இருக்கணும்ங்கற மூட நம்பிக்கையிலேயோ, எதிர்பார்ப்பிலேயோ ஒரு பெரிய கிளைமாக்ஸ் வைப்பாங்க.. 

முன்னே சொன்னேனே
. 2 கேரக்டர் சந்திக்கிறதுன்னு.. அப்படி பாவ்லா காட்ட ஆரம்பிக்கறதெல்லாம் பெரும்பாலும் இந்த வெள்ளிக்கிழமைகளில் தான் இருக்கும்..!
 
ரெண்டு பேரும் எதிர் எதிரே ஸ்லோ மோஷன்ல வருவாங்க.. பின்னணி இசை தூள் கெளப்பும்..!

ரெண்டுபேர் மூக்கும் முட்டிக்கற மாதிரி வர்றப்ப தொடரும் போட்டுருவாய்ங்க
..

திங்கக் கிழமை புருஷன் புள்ளகுட்டிக்கு சோறுகூட போடாம தாய்க்குலம் சந்திப்பை எதிர்பார்த்து குந்திப் பார்க்கும்
.. அன்னிக்கு காலையில் இதப்பத்தி அக்கம்பக்கத்துல டிஸ்கஷன்கூட நடந்திருக்கும்.
ஆனா என்ன ஆகும்
..?

ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு ஏரோப்ளேன் புகுந்து சந்திக்க விடாம செஞ்சிரும்
..!

இது இப்படி திரும்பிப் போகும்
.. அது அப்படித் திரும்பிப்போகும்..!

அப்படி இல்லேன்னு வையுங்க
..

ஒருத்தரை எவனாவது தடுத்து நிறுத்தி அட்ரசோ
, டைமோ கேட்பான்.. இன்னொரு பார்ட்டி பொறத்தால நழுவிப் போயிரும்..!

இல்லாங்காட்டி
..

ஒருத்தர் பேண்ட்டிலிருந்து எதாவது கீழே விழுந்துரும்
.. அதைக் குனிஞ்சு எடுக்குறப்போ இன்னொருத்தர் மிஸ் ஆயிடுவாரு..!

ஒரு நண்பர் இப்படித்தன் ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தது  அதை நான் இந்தப்பக்கங்களில்  பகிர்ந்துகொண்டது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால்! இப்போதோ இனிவருவது,  வரவிருப்பது அடுத்த பதினைந்து நாட்களுக்குப் பின் ஒளிபரப்பவிருப்பதன் முன்னோட்டத்தையும் சேர்த்தே போட்டு சவ்வ்வு மிட்டாய் மாதிரி  இழுக்கிறார்கள்.மெகா சீரியல்கள் என்றுமட்டுமல்ல, சூப்பர் சிங்கர், செஃ ப், டாக்  ஷோ என்று எல்லாவற்றிற்கும் தான்! இப்படி வெள்ளிக் கிழமை சவ்வ்வ்வு மிட்டாயாக, வில்லங்கமாக இழுத்துக்கொண்டே போகும் விஷயங்களாகக் கொஞ்சம் ............

******

பதினோராவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் கருணாநிதி என்று சொல்லும் செய்தியில் ஒரே ஒரு விஷயம் புதிதாக!  திமுக மகளிரணித் தலைவர் பொறுப்பு கனிமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆற்காடு வீராசாமி செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் வகித்த முதன்மைச் செயலாளர் பொறுப்புக்கு துரைமுருகன் தேர்வு செய்யப் பட்டுள்ளார் என்பது மட்டும் தான்  இன்று கூடிய திமுக பொதுக்குழு 
ஒரு சாதாரணப்  பொதுக்கூட்டம் மாதிரித்தான் நடந்தது என்கிறது செய்தி  

முக அழகிரிக்கு இதயத்திலாவது இடம் கிடைத்ததா இல்லையா என்பது மெகாசீரியல் மாதிரித் தொடரும் சஸ்பென்ஸ். இதற்கான முன்னோட்டம் நேற்றைய  செய்திகளில் மு.க.அழகிரி கோபாலபுரம் வீட்டின் பின்வாசல் வழியாக வந்து தாயைச் சந்தித்தார், பின்வாசல் வழியாகவே வெளியேறினார் என்று வெளியானதில் தொடர்கிறது.

****** 

ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி நாத்திகர்கள் இப்படிச்சொன்னால் மட்டும் ஏற்றுக் கொண்டுவிடுவோமா என்றரீதியில்   மணிசங்கர அய்யர் மாதிரி  சிக்குலர் வியாதிகள் சொல்வது இப்படியாகவாம்! சிக்குலரிசமும் சவ்வ்வ்வு மிட்டாய் மாதிரித்தான் என்கிறீர்களா? அதுவும் சரிதான்!  .


******

கண்டிக்கிறோம் ஆனால் கண்டிப்பவர்கள் பின் அணிதிரளவில்லை என்பதைச் சொல்வதற்காக மட்டும் என்ற ரீதியில் கம்மூனிசச்சவ்வ்வ்வு ஒன்று இங்கே  


சவ்வ்வ்வு போதுமா? இன்னும் கொஞ்சம் இழுக்கட்டுமா?

வாய்விட்டுச் சிரிக்கத்தான் வேண்டும்! அதற்காக சவ்வாக இழுத்துக்கொண்டே போனால் எந்த டிராமாவும், அல்லது எதுவுமே ட்ராஜெடியாகத்தான் இருக்கும்! 

வர்ட்டா? !!

     


. .

சண்டேன்னா மூணு!பெட்டி!போட்டி! பொட்டி!


திமுகவில் உட்கட்சித்தேர்தல்கள் தமாஷா உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 2004 க்குப் பிறகு நடக்கும் தேர்தல் இது. இலவுகாத்த கிளியாக அறுபதைத்தாண்டியும் இருக்க வேண்டியிருக்கிறதே என்று விசனப்பட்டு மு க ஸ்டாலின் தரப்பு கொஞ்சம் ஊக்கமாகவே இறங்கி வேலை செய்ய ஆரம்பிப்பதும் கடைசியில் ஒன்றுமில்லாமல் புஸ்வாணமாகிப் போவதும் சமீப காலமாக நடந்து கொண்டிருப்பதுதான். 



தி.மு.க., உட்கட்சி தேர்தல், சமீபத்தில் மாவட்டம் தோறும் நடந்தது. சட்டை கிழிப்பு, சேர் உடைப்பு, ஆள் கடத்தல் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறின. மாவட்ட செயலாளர் பதவிக்கு மட்டுமின்றி, கிளை செயலாளர், பகுதி, ஒன்றியம், பேரூராட்சி மற்றும் நகர செயலாளர் பதவிகளை கைப்பற்ற, பல லட்சங்களை செலவிட்டு, கட்சி பதவியை கைப்பற்றியுள்ளனர். சென்னை அறிவாலயத்தில், பேச்சுவார்த்தை நடத்தியே, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பும் வெளியானது.


முக அழகிரி, கனிமொழி இருவரையும் ஓரம் கட்டி விட்டு ஸ்டாலின் அணி மொத்தக் கட்சியையும் கைப்பற்றி விட்ட மாதிரியே மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்படுகிற வரைக்கும் ஒரு பிம்பம் உருவாக்கப் பட்டுக்கொண்டே வந்தது. இன்றைய தலைப்புச்செய்திகளாக ஸ்டாலின் ராஜினாமா என்றும் அதை மறுத்து கழகத்தின் எதிரிகள்  கிளப்பிவிட்ட வதந்தி நம்பவேண்டாம் என்று ஸ்டாலின் அறிக்கை விட்டதுமாக ஆனது ஒன்றுதான் ஸ்டாலின் அணி கண்ட பலன்!  


பேராசரியர் வழிவிட்டு ஒதுங்குகிறார், ஸ்டாலின் பொதுச்செயலாளர் ஆகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருந்தபோது எந்தவிதமான மறுப்பும் அறிக்கையும் விடாதவர் தரப்பில் திடீரென்று ராஜினாமா, மறுப்பு என்றாகிக் கொண்டிருப்பதன் பின்னணி என்னவோ எப்போதும் கழகத்தில் நடக்கிற சொந்தக்கதை சோகக்கதைதான். தினமலர் நாளிதழில் முக அழகிரி சொன்னது இப்படி "தி.மு.க.,வை பொறுத்தவரை, கட்சிக்குள் ஏதாவது மாற்றம் வரும் முன்பாக, குழப்பத்தை ஏற்படுத்துவது வழக்கம். அரசியல் ராஜதந்திரம் தெரிந்தவர் கருணாநிதி. கட்சி பொறுப்புகளை ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக வெளியான தகவல்களும், தற்போது, அந்த தகவலை மறுப்பதும் அவர்களாக ஏற்படுத்தும் குழப்பம் தான். இதை அறிந்தே, 'எல்லாம் நாடகம்  "

"குழப்பத்தை பயன்படுத்தி, பொது!ச்செயலாளர் பதவிக்கு பெட்டி வைத்து தேர்தல் நடத்தி, ஸ்டாலினை பதவிக்கு கொண்டு வருவார். அல்லது, கட்சிக்குள் யாராவது ஒருவரை பலிகடா செய்து, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பார். குட்டையை குழப்பி மீன் பிடிக்க தெரிந்தவர் கருணாநிதி. தி.மு.க.,வில் என்ன நடக்கிறது என்பது, அறிவாலயத்தில் 7ம் தேதி நடக்கும் மனுத்தாக்கல் நிகழ்ச்சியில் தெரிந்து விடும். எந்த முடிவாக !இருந்தாலும், 9ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தான் தெரியும்." என்று தினமலர் செய்தி மேலும் விரிகிறது 

ஆக,மூணில் முதலாவது பெட்டி! 
******


பெட்டிக்குப் போட்டி! வேறு யார் ? நம்ம  அஞ்சாநெஞ்சன் முக அழகிரிதான் !


M. K. Alagiri


சென்னை:
 தி.மு.க.வினர் திருந்தினால் அக்கட்சியில் சேருவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.இங்கே 

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தி.மு.க.வில் தகுதியற்றவர்கள் பலர் உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு கட்சியை நடத்துகின்றனர்.எனவே தி.மு.க.வினர் திருந்த வேண்டும். தி.மு.க.வினர் திருந்தினால் அக்கட்சியில் சேருவேன்'' என்றார்.


மு.க.ஸ்டாலின் தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான செய்தி குறித்து கேட்டதற்கு, ''ஸ்டாலின் ராஜினாமா குறித்த தகவல் எல்லாம் எனக்கு தெரியாது, முகவரி இல்லாத ஸ்டாலினை பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை'' என்றார். 


சபாஷ்! சரியான போட்டி!  

******
டிசிஎஸ் நிறுவனத்தில் பொட்டி தட்டுகிறவர்களுக்காக வினவு தளத்தில் சங்கம் அமைப்போம் என்று சொன்ன பிறகு விழித்துக் கொண்டவர்களில் முதலாவது மார்க்சிஸ்ட் கட்சி. அடுத்து தமிழ்க்குடிதாங்கி மருத்துவரும் குரல் கொடுத்திருக்கிறார். விவரம் இங்கே  

Currently, Information Technology companies are not covered by the Industrial Employment Act.

Currently, Information Technology companies are not covered by the Industrial Employment Act. என்கிற கசப்பான உண்மை எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை 

As part of its decision to lay off 25,000 employees, TCS has been issuing pink slips to its employees since the last few days. This is an entirely unethical exercise aimed at cost-cutting and maximising profits. Already over 1,000 employees have contacted us. They are associate software consultants or associate software technologists, with an experience ranging from seven to 14 years. Almost none of them are under-performers as they have got performance grading of A, B or C. If the management says these people are underperformers, it should show the proof,” Vinod, a co-ordinator of Chennai-based Forum for IT Employees (FITE), told this newspaper.

பொட்டி தட்டும் தொழிலில் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டுத்துவக்கமே சரியாக இல்லை போல இருக்கிறது.ஆனால் இதே மாதிரி இன்ஃபோசிஸ் உள்ளிட்டு பிற ஐடி நிறுவனங்களில் வாடிக்கையாக நடந்து கொண்டிருந்த போது இவர்களில் எவரும் அதிகமாக அலட்டிக் கொண்டதில்லை. இங்கே எண்ணிக்கை அதிகம் என்பதால் சத்தமும் பெரிதாக இருக்கிறதா அல்லது கார்பரேட் நிறுவனங்களில் இதெல்லாம் சகஜமப்பா என்றிருப்பதா?

பொட்டிதட்டுகிறவர்களே! உங்கள் துறையில் என்ன நடக்கிறது என்பதைப் பின்னூட்டங்களாக இங்கே தட்டிவிடுங்களேன்! இந்த நாட்டில் நெஞ்சுக்கு நீதி கிடைககிறதா என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். "

மூணில் முதலாவதான பெட்டிச் செய்திக்கு அப்டேட் இங்கே 

'கட்சியின் பொதுச் செயலர் பதவியை பெறுவதற்காக, தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய ராஜினாமா நாடகம், கருணாநிதியின் உறுதியான முடிவால், எடுபடாமல் போய்விட்டது'   

என்று சோகக்கதையைப் போட்டுடைக்கிறது இந்தச்செய்தி!

கனிமொழி கைது! வரும் ஆனால் வராது தானா?!


"நான் அவ்வளவு ஈஸியான டார்கெட் இல்லை!
 
அப்படி எவரும் நினைத்துவிடக் கூடாது!
 
சிபிஐ கைதுசெய்ய நினைக்குமானால் அதை சட்டப்படி எதிர் கொள்ளுவோம்!
 
முன்ஜாமீன் கேட்கப் போவதில்லை!"

இதெல்லாம் சற்று  நேரத்திற்கு முன்னால்  கனிமொழி சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொன்னது! 
New Delhi:  Kanimozhi, the daughter of the Tamil Nadu Chief Minister, expects to be sent to jail tomorrow at the request of the CBI which is investigating her role in the 2G scam. Speaking to NDTV, she said today, "I am prepared to face the worst." Adding that she does not expect to be granted bail, she said, "I do not expect leniency because I am a woman."

இது என்டிடீவீ  பிற்பகல் (இரண்டுமணி முப்பத்தெட்டு நிமிடம்) வெளியிட்ட செய்தியில் இருப்பது. இரண்டு பேட்டிகளும் ஒன்றுக்கொன்று முரணாக  இருக்கிறது.

இந்த செய்திப்படி, மோசமான சூழலையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக, ஜாமீன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு  இல்லாததாக, பெண் என்பதால் கொஞ்சம் தாட்சணியத்தை எதிர்பார்க்கவில்லை என்பதாக இந்த செய்தி சொல்கிறது! கவிஞராக மட்டுமே அறியப்பட்ட கனிமொழி சங்கமம் நடத்திய அனுபவத்தில், தந்தையையும் மிஞ்சிய தேர்ந்த அரசியல் வாதியாகி விடுவார் என்றே தோன்றுகிறது! 

இந்த சானலில் கனிமொழி சொல்வதையும் கொஞ்சம் பார்த்துவிடுங்கள்! விசாரிக்கப்பட வேண்டியவர்கள் எவரெவரோ இருக்க  என்னை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள் என்றும் கேட்கிறார்!

எதிர்பார்த்தது போலவே, காங்கிரசுடனான கூட்டணி தர்மம் கொஞ்சம் விட்டுக் கொடுத்தது போலத்தான் தற்போதைய தகவல்கள் இருக்கின்றன. ஆனாலும், உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண் காணிப்பின் கீழ் இருக்கும்  2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில், தன்னுடைய கையைச் சுட்டுக் கொள்ளாமல் காங்கிரஸ் அவ்வளவு  உதவிகரமாக இருக்கமுடியாது என்ற நிலையும் இருக்கிறது. கே ஜி பாலகிருஷ்ணன் போன்ற கறைபடிந்த தலைமைநீதிபதி போல ஒருவர் இப்போதும் இருந்திருந்தால், ஒருவேளை அது சாத்தியமாகியிருக்கலாம். இப்போது அப்படி இல்லை என்பதுதான் ஆறுதலான செய்தி!


முதலில் கனிமொழியுடன் கருணாநிதியும் கூடவே செல்வார் என்றுதகவல்கள் வந்தன. இப்போது அதற்கு அவசியமில்லை என்றாகிவிட்டது போலும்! ராசாத்தி, தமிழக அமைச்சர் பூங்கோதையுடன் நேற்றே டில்லிக்குப் போய்விட்டார். திமுகவின் பதினெட்டு எம்பிக்களும், கனிமொழி நாளை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகும் போது கூடவே இருப்பார்கள் என்றும், பிஜேபியின் ராம்ஜேத் மலானி கனிமொழிக்காக ஆஜராகக் கூடும் என்று செய்திகள் வந்தன. சில சலுகைகளுக்காகவும் காசுக்காகவும்  கூவுகிற ஒரு கூட்டம்  இந்த பத்துநாட்களாக ஓவர்டைம் வேலை செய்தது செய்தித்தாட்களில் பெயர்களோடு கசிந்தன.

இதுஒருபுறமிருக்க, சோ போன்ற சட்டஞானமும் அரசியல் நடப்புக்களை அலசத் தெரிந்தவர்களும் கூட, கனிமொழி மாது சிபிஐ அடுக்கியிருக்கிற குற்றச்சாட்டுக்கள் அவ்வளவு  வலுவானதாக இல்லை என்று சொல்வதையும் கொஞ்சம் கவலையோடு கவனிக்க வேண்டியிருக்கிறது. கைப்புண்ணுக்குக் கூட, நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிற விதத்தில் நிரூபணம் வேண்டியிருக்கிறது. நாவரசு கொலை வழக்கில், ஜான்டேவிடுகள் தப்பித்த மாதிரி,  சரியான ஆதாரங்கள், கவனம் இல்லாமல் குற்றவாளிகளை அவ்வளவு எளிதாக தண்டித்து விட முடியாத படிதான் நம்முடைய அமைப்புக்களில் உள்ள கோளாறுகள் இருக்கின்றன.


1,76,000,00,00,000 ரூபாய்கள்! 
நூற்றெழுபத்தாறுக்குப் பின்னல் பத்து சைபர்கள்! ஒரு கோடி என்பது ஒன்றுக்குப் பின்னால் ஏழு சைபர்கள்! எண்ணுவது எவ்வளவு சிரமம் என்பதை ஒன்று முதல் பத்தாயிரம் வரை வாய் விட்டு சொல்லிப் பாருங்கள்! இந்த சைபர்கள் எவ்வளவு பெரிய மலைகளாக இருக்கின்றன என்பது ஓரளவுக்குப் புரியும்.

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் வருமானவரித்துறை விசாரணை எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதை விசாரிக்க நடந்த இன்றைய அமர்வில் இத்தனை சைபர்களை எங்கள் வாழ்நாளிலேயே கண்டதில்லை என்று தன்னுடைய அதிர்ச்சியைத் தெரிவித்திருக்கிற உச்ச நீதிமன்றம் பொதுநல வழக்குத் தொடர்ந்திருக்கிற வாதிகளுக்கு ஒரு உத்தரவாதத்தையும் சேர்த்தே சொல்லியிருக்கிறது! 
 

The court also assured the petitioners, CPIL and others, that all the persons involved in the scam will be brought to justice irrespective of their wealth, position and power.



"You (petitioner) rest assured that no person, irrespective of their chair and wealth, could get immunity in any way," the bench said, adding "investigation in the case has made some progress which would not not have been possible in normal circumstances."

யாராக இருந்தாலும் சரி, பணம் அல்லது பதவியை வைத்துத்  தப்பிவிட முடியாது என்ற உத்தரவாதத்தைத்தருகிறோம்!இது உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி திரு ஜி எஸ் சிங்வி, ஏ கே கங்குலி இருவர் கொண்ட பெஞ்ச் சொன்னது!

""நெஞ்சுக்கு......... நீதி"!  

விரைவிலேயே கிடைத்துவிடும் என்று நம்பிக்கையளிக்கிற சில வெளிச்சக் கோடுகளும் இந்த தேசத்தில் இன்னமும் இருப்பது ஒன்றுதான் ஜனங்களுக்கு விடிவுகாலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கையைத்தந்து கொண்டிருக்கிறது.

இது கொஞ்சம் ஆறிப்போன ஒன்று தான்! ஆனாலும், திரைமறைவில் நடந்ததென்ன என்பதற்கு இங்கேயே ஒரு க்ளூ இருக்கிறது போலத் தெரிகிறதே!

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்பி கனிமொழி தவிர, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் புரமோட்டர் கரீம் மொரானி ஆகியோரும் நாளை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.இந் நிலையில் கரீம் மொரானி முன்ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தன்னை சிபிஐ கைது செய்ய வாய்ப்பிருப்பதாக மொரானி கூறி்யுள்ளார்.

இந்த ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நாங்கள் மொரானியை கைது செய்வோம் என்று கூறுவது தவறான கருத்து ('misconceived') என்றார்.  இதனால் அவரை சிபிஐ கைது செய்ய வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி தரப்பட்டது தொடர்பான பண பரிவர்த்தனை வழக்கில் தான் மொரானியும், கனிமொழியும் சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்படுள்ளனர். இதில் மொரானியை சிபிஐ கைது செய்யும் திட்டத்தில் இல்லாவிட்டால், அதே அடிப்படையில் கனிமொழியும் கைதாக வாய்ப்பில்லை என்ற சிறிய தைரியத்தில் திமுக உள்ளது.

அமலாக்கப் பிரிவிடம் கனிமொழி ஆஜர் எப்போது?:

இதே வழக்கில் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிர்வாகி உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act-PMLA) கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.மேலும் பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துகள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.

2ஜி  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்த டி.பி.ரியால்டி நிறுவனம், தனது குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனம் மற்றும் சினியுக் நிறுவனம் ஆகிய துணை நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி நிதியுதவி அளித்தது.இது தொடர்பாக கலைஞர் டி.வியில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், சிபிஐ நீதிமன்றத்தில் நாளை ஆஜராக வேண்டிய நிலையில் உள்ள கனிமொழி இன்று அமலாக்கப் பிரிவினரிடம் ஆஜராக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.