Showing posts with label கருத்தும் கணிப்பும். Show all posts
Showing posts with label கருத்தும் கணிப்பும். Show all posts

கொஞ்சம் கொசுறு செய்திகளில் #அரசியல்இன்று

ஊரடங்கில் சற்று தளர்வு கொடுக்கபடுமா? : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை என்ன தளர்வோ தெரியாது, ஆனால் நிலமை கட்டுக்குள் வராமல் செய்யப் படும் ஊரடங்கு தளர்வு என்பது பின்னால் வரபோகும் மிகபெரிய கொரொனா அலைக்கும் அதனையொட்டி வரும் ஊரடங்குக்கான திறவுகோல் என்பது பல நாடுகளில் உணரப் பட்ட உண்மை என்று முகநூலில் ஸ்டேன்லி ராஜன் அலுத்துக்கொண்ட மாதிரியே தமிழக அரசு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.


மருத்துவ நிபுணர்கள் அரசியல் கட்சிகள் ஆலோசனைப் படி ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்தது. 14 வகையான மளிகைப் பொருட்களைக் குடும்ப அட்டைகள் வாயிலாகப் பொதுமக்களுக்கு அளிக்கும் முடிவுடன் ஊரடங்கை அதே கட்டுப் பாடுகளுடன் ஜூன் 7 வரை ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் என்கிறது இந்து தமிழ்திசை தந்தி செய்தியும் இந்து செய்தியும் கொஞ்சம் முரண்படுகிற மாதிரித் தெரிகிறதா? அவர்களைக் குறைசொல்லிப் பயனில்லை. அரசை நிர்வகிக்கிறவர்களே தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறுவதில் ஆலோசனை சொல்கிற அதிகாரிகளோ செய்திவெளியிடுகிற  ஊடகங்களோ கூடவே சேர்ந்து ஊசலாடாமல் இருக்க முடியுமா?   

*******

நேற்றைக்கு கோபாலபுரம் வீட்டில் மு க அழகிரி தனது தந்தை படத்துக்கு அஞ்சலி செலுத்தினார், தாயார் தயாளுவை நலம் விசாரித்தார் ஆசி பெற்றார் என்ற செய்திகள் ஒரு ஓரமாக வந்ததே தவிர அண்ணன் தம்பி இருவரும் சந்தித்துக் கொண்டதாக செய்தி எதுவும் வரவில்லை. ஆனாலும் மு க அழகிரி அசாத்தியப் பொறுமையோடு அமைதி காக்கிறார். எல்லாம் அவர் நேரம் என்பதற்குமேல் என்ன சொல்ல?

இப்படி பவனி வந்ததெல்லாம் அந்தக்காலம்! 

அழகிரி மகன் துரை தயாநிதிக்கு இரண்டாவது வரவாக மகன் பிறந்திருப்பதை ஒட்டி சென்னைக்கு வந்திருக்கும் சமயத்தில் குடும்பத்தினர் சந்தித்துக்கொள்ள இன்னமும் ஒரு வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். நம்பிக்கை தானே எல்லாம்.😌😢

எல்லாச் செய்திகளுமே கொசுறு என்றால் செய்திக்கான முக்கியத்துவமே இல்லாமல் போய்விடும் என்பதாவ் சில  பயனுள்ள தகவல்களுடன் கூடிய வீடியோ: 

சிலகாலமாகவே நான் தமிழக சேனல் விவாதங்களைப் பார்ப்பதில்லை. முன்கூட்டிய முடிவுகளுடன், ஒருபக்கச் சார்பாகவே நிகழ்ச்சிகளை cook up செய்கிறவர்களைக் கவனித்து ஒன்றுமே ஆகப்போவதில்லை. அதேநேரம் கொஞ்சம் விவஸ்தையோடு செய்திகளை அலசி அதன் மீது விமரிசனமாகச் செய்பவர்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விவாதங்கள் என்ற பெயரில் ஜனங்களை முட்டாளடிக்கிற வெட்டி அக்கப்போர்களை தவிர்ப்பது நம் மனநலத்துக்கு மிகவும் ஆரோக்கியமானது தான், இல்லையா?

இந்த 39 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீநிவாஸ் ABP ஆனந்த பஜார் பத்ரிகா நிறுவனம் C Voter என்கிற கருத்துக் கணிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நாடெங்கும் 543 மக்களவைத் தொகுதிகளிலும் (சில  leading questions ரகத்திலானவை, ஜனங்களிடமிருந்து என்னபதில் வர  வேண்டுமென்பதற்காக கொக்கிபோட்டுக் கேட்கப்படுபவை)மக்களுடைய அபிப்பிராயத்தில் நரேந்திர மோடி என்ன இடம் வகிக்கிறார் என்பதான கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறார்கள். ABP மோடி மீது அத்தனை  நம்பிக்கை கொண்ட ஊடகமல்ல என்பதை இங்கே  குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.

ABP-C Voter கருத்துக்கணிப்பில் தெரியவந்த விவரங்கள் என்னென்ன என்பதை கோலாகல ஸ்ரீநிவாஸ் எளிதாகப் புரிந்துகொள்கிற விதத்தில் விளக்குகிறார் என்பது கூடுதல் விசேஷம். கொஞ்சம் கவனித்துப்பாருங்கள் என்று வேண்டுகிறேன்.    

மீண்டும் சந்திப்போம்.

#தமிழகஅரசியல் தேர்தல்களம் எப்படி இருக்கிறதாம்?

இந்திரா சௌந்தரராஜன்! திகம் விரும்பி வாசிக்கப்படும் தமிழ் எழுத்தாளர். அதில் சந்தேகமே இல்லை! ஒரு தேர்ந்த அரசியல் விமரிசகராகவும், வருகிற தேர்தல்களத்தைப் பற்றிய கணிப்பைச் செய்கிறவராகவும் இந்த 21 நிமிட வீடியோவில் காட்சி அளிக்கிறார்.


பெரிய தலைகள் எதுவும் இல்லை. ஆதரவு அலை என்று இல்லாத தேர்தல் இது. அதனால் வெற்றி இன்னாருக்கு என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை என்று சொன்னதாலோ என்னவோ, நான் பார்க்கிற தருணம் வரை வெறும் 430 பார்வைகள் மட்டுமே காண்பித்தது.

ரங்கராஜ் பாண்டே ஒருவழியாகத் தனது தளத்தில் ஒரு கருத்துக் கணிப்பை இன்று நடத்தி முடித்துவிட்டார்! அதிமுக கூட்டணிக்கு 97 இடங்கள் திமுக கூட்டணிக்கு 111 இடங்கள் மீதம் 26 தொகுதிகளில் இழுபறி என்பதாக முடித்திருக்கிறார். ரங்கராஜ் பாண்டே மாதிரி அனுபவம் மிகுந்த ஊடகக்காரர்கள் சொல்வதைக் கவனிப்பதோடு சரி! அதற்குமேல் முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு ஒத்துவராத, உடன்பாடில்லாத விஷயம். 

புதிதாக யாராவது சொல்லும்போது அது இயல்பாகவே கவனத்தை ஈர்க்கிறது என்பதாலேயே இந்திரா சௌந்தர ராஜன் சொன்னதையும் காதில் வாங்கி கொண்டேன்! அவ்வளவுதான்!

கருத்துக் கணிப்பும் கருத்துத் திணிப்பும் என்ற தலைப்பில் இன்றைய தினமணி நாளிதழில் வ மு முரளி என்பவர் ஒரு விரிவான, விவரமான செய்திக் கட்டுரையை எழுதி இருக்கிறார். நண்பர்களுக்கு அதைப் பரிந்துரை செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.        

இட்லி வடை பொங்கல்! #75 IPAC பிரசாந்த் கிஷோர்! சவுக்கு சங்கர்! கோட்டைவாய் #நாசா !

தமிழகத் தேர்தல்களம் ஏன் இப்படி டல்லடித்துக் கிடக்கிறது? "வேற லெவல்".. ஒரேடியாக எகிறிய இமேஜ்! ஃபார்முக்கு வந்த ராகுல்.. அண்ணனாக, மகனாக.. பொங்கும் பாசம்! என்று ஒன் இந்தியா தமிழில் உருகுகிறார்கள் என்றால் H ராஜாவும் கோலாகல ஸ்ரீனிவாசும் இந்த 44 நிமிட நேர்காணலில் காங். தலைமையில் 3வது அணி’: ஹெச். ராஜா பகீர்! என்று செம காமெடி செய்கிறார்கள்!  இதனால் மட்டும்  தமிழகத் தேர்தல் களம் சூடான பதத்துக்கு வந்து விட்டதாகச் சொல்ல முடியாதே! 


மேலே வீடியோ 33 நிமிடம் ரெட்பிக்ஸ் தளத்தின் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் , சவுக்கு சங்கர் இருவரையும்  தரமான, நம்பகமான ஊடகக்காரர்களாக நான் எப்போதுமே நினைத்ததில்லை, ஆனாலும் தேர்தல் நேரம் எப்போதும்  காமெடி நேரமாகவே இருப்பதால் எல்லாக் கோமாளிகளையும் வேடிக்கை பார்த்துவிடுவது எனக்கு வாடிக்கை இந்த வீடியோவில் சவுக்கு சங்கர் பிரசாந்த் கிஷோர் பற்றியும் psephology, data schience என்ற பெயரில் இங்கே சில இந்திய நிறுவனங்கள் பற்றியும் மேலோட்டமாகப் பேசுவதை, வேறு எவரும் தொடாத சப்ஜெக்ட் என்பதால் இங்கே இந்தப்பதிவிலும்! திமுகவுக்கும் நடக்கும் அதிகாரப் போட்டி நிழல் யுத்தமாகத் தொடர்வதைப்பற்றி வேறு யாராவது பேசியிருக்கிறார்களா என்ன?         

திமுக நிர்வாகிகளுக்கும் IPAC நிறுவனத்துக்கும் மோதலா?  இப்படித் தலைப்பிட்டு BBC தமிழ் செய்தித் தளத்தில் ஜூனியர் விகடன் ரேஞ்சுக்கு நன்றாகக் கதைத்திருக்கிறார்கள்! மோதல் இருப்பதென்னவோ உண்மைதான்! ஆனால் 2021 இல் எப்படியாவது CM ஆகியே தீருவது என்று றெக்க கட்டிப்பறக்காத குறையாக இசுடாலின் பிரசாந்த் கிஷோரை முழுமையாக நம்பிக் களத்தில் இறங்கிக் கொண்டிருக்கும் போது கட்சிக் காரர்கள் பொருமலையெல்லாம் சட்டை செய்வாரா என்ன? ஆக, பிரசாந்த் கிஷோரை நம்பிக்கெட்டவர்கள் லிஸ்டில் இசுடாயினும், இலவுகாத்தகிளியாக சேரப் போகிறார் என்பதைத் தாண்டி வேறென்ன சொல்ல? நண்பர் நெல்லைத்தமிழன் முரளி இந்த அனுமானத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்தான்! அதனால் சொல்லாமல் விட்டு விட முடியுமா?😃😄 


வருகிற திங்கட்கிழமை கோட்டைவாய் நாசாவுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கப்போகிறது! இந்த 5 நிமிட வீடியோவில் மத்திய அமைச்சராக இருந்த சமயம் அமைதியாக இருந்த நாராயணசாமி என்று சொல்கிறார்களே! இந்தக் கொடுமையை, தலை சுற்றலோடு  எந்த விதமான காமெடியில் சேர்ப்பது என்று புரியாமல் பதிவை முடிக்கிறேன்!  

மீண்டும் சந்திப்போம். 

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் தேசம் என்ன நினைக்கிறதாம்?

இந்தியா டுடே இதழ் வருடத்துக்கொருமுறையோ என்னவோ Mood of The Nation தேசம் என்ன நினைக்கிறது என்ற மாதிரி ஒரு சர்வே எடுத்துப் போடுவதுண்டு! இந்த ஜனவரி 23 அன்று அப்படி ஒரு சர்வே நடத்தி முனகி இருப்பதன் சாரம் இங்கே.  சர்வே முடிவாக Economy and CAA protests hurt, but Narendra Modi's chest size almost intact: Mood of the Nation 2020 என்று இருந்தால் ராஜதீப் சர்தேசாய் முகத்தில் ஈயாடாதா பின்னே? !! 
  

சேகர் குப்தா கூட காங்கிரசுக்கு ஆதரவாகக் கூவும் ஊடகக்காரர் தான்! அவரையே இந்த தேசம் என்ன நினைக்கிறதாம் சர்வே முடிவுகளை விளக்குகிற மாதிரி ஒரு 12 நிமிட வீடியோவில் பார்த்து விடலாம்! என்ன சொல்கிறார் என்பதற்கு நான் விளக்கவுரை தனியாக எழுதப்போவதில்லை! காங்கிரசுக்கு நல்ல சேதி எதுவும் இந்த சர்வே முடிவுகளில் இல்லை! இன்றே தேர்தல் நடந்தால் பிஜேபி+ (NDA) வுக்கு 303 சீட்டுகள். சிவசேனா கழன்று கொண்டதால் மேற்குப்  பகுதியில் 50 இடங்கள் குறையலாம் என்றதற்குப் பின்னாலும் 303 சீட்டுகள்! காங்கிரசின் ஐமுகூ (UPA) வுக்கு அதிகபட்சம் 108 சீட் என்றால், சுவாரசியம் என்ன இருக்குமாம்? 



வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அஸ்ஸாமில் அமைதியை ஏற்படுத்துகிற விதத்தில் போடோ இனத் தீவீரவாதக்குழுக்களுடன் அசாம் அரசு, மத்திய அரசு சார்பில் அமித்ஷா என ஒரு முத்தரப்பு உடன்பாடு  கையெழுத்திடப் பட்டிருப்பதில்  ஜனவரி 30 ஆம் தேதி அன்று சுமார் 1550 போடோ தீவீரவாதிகள் தங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்து சரணடைவார்கள் என்பது ஒரு நல்ல செய்தி. கொஞ்சம் விரிவாகப் படிக்க இங்கே   

Earlier this month, The Amit Shah led Home Ministry also inked an agreement to end the 22-year-old Bru refugee crisis by facilitating their resettlement in Tripura. The refugees numbering over 34,000 belong to 5,300 families. They were forced to migrate from Mizoram following tribal unrest, back in 1997. ஒரே இந்தியா நியூஸ் தளத்தில் நண்பர் LK என்று நண்பர்கள் வட்டாரத்தில் அழைக்கப்படும் கார்த்திக் லட்சுமிநரசிம்மன், 22 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ப்ரு அகதிகள் பிரச்சினை பற்றி எழுத ஆரம்பித்தார். அவர்களுக்கும் ஒரு விடிவுகாலம் ஜனவரி 16 ஒப்பந்தப் படி பிறந்திருக்கிறது. ஒப்பந்தம், பிரச்சினை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள மேலே சிவப்பெழுத்தில் இருக்கும் சுட்டிகளில் க்ளிக் செய்து வாசிக்கலாம். ஒரு பக்கம் அரசுக்கு எதிராக போராட்டங்கள், வன்முறை எனப் போய்க்கொண்டிருந்தாலும் மத்திய அரசு, நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்ணிருப்போர் பார்க்கட்டும்!   


பானாசீனாவை வழிமொழியவில்லை என்கிற சோகம் சதிஷ் ஆசார்யாவுக்கு! அதற்காக The Wire தளம் மாதிரி, பிஜேபி பக்கம் சாய்கிற மாதிரி சொல்லப் பட்டதற்கே MNS தனிக்கடை நடத்தும் ராஜ் தாக்ரேவுக்கு பிடி சாபமா விட முடியும்? அசோக் சவான் வேறு இன்றைக்கு, உத்தவ் தாக்கரேவிடம் எழுதி வாங்கிக் கொண்ட பிறகுதான் அரசு அமைக்கவே சம்மதித்தார் என்று ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கிறார். சதீஷ் ஆசார்யா என்னதான் செய்வார்?


ஹிந்துவில் சுரேந்திரா டாம் அண்ட் ஜெரி கார்டூன் மாதிரி ஆம் ஆத்மி கட்சி கோட்டையாக டில்லி இருப்பதாக வரைந்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.
டில்லியின் மிடில் கிளாஸ் வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியைக் கைகழுவுகிற  அடையாளம் எதுவும் தென் படவில்லை என்பதென்னவோ நிஜம்!


இங்கே கழகங்களை பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று குறைப்பட்டுக் கொள்ளக் கூடாது இல்லையா? !!
     
   
அமேசான் எழுத்தார்களைப் பற்றிச் சொல்லாவிட்டாலும் கூட சாமிகுத்தம் ஆயிடுமோ? 😎😎 

மீண்டும் சந்திப்போம்.  

இந்திய அரசியல் அரங்கம் இன்று! அஞ்சறைப்பெட்டி

காங்கிரஸ்காரன் நிலைமை மாவு விற்கப்போனால் சூறாவளி வீசுகிறது உப்பு விற்கப்போனால் கனமழை கொட்டித் தீர்க்கிறது என்ற வழக்கைவிடப் பரிதாபமாக இருப்பதுதான் இந்தத் தேர்தலின், எக்சிட் கணிப்புகளின் விளைவாக இருக்கிறது. தேர்தல் கமிஷன் மீது பழியைப் போட்டு, தோல்விக்கான சப்பைக்கட்டு கட்டலாம் என்று பார்த்தால் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்று சர்டிபிகேட் கொடுத்து காங்கிரசின் அற்பதிருப்தியையும் கெடுத்திருக்கிறார்.  


நேற்று டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பிரணாப், “இந்தியாவில் நிறுவனங்களை வலுப்படுத்த விரும்பினால், இந்த நாட்டில் நிறுவனங்கள் நல்ல முறையில் செயல்படுகின்றன என்பதை நினைவில்கொள்ள வேண்டும். அதேபோல, இத்தனை ஆண்டுகளாக நம் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது என்றால், அதற்குத் தேர்தல் ஆணையம் சிறந்த முறையில் செயல்பட்டிருக்கிறது. 
பிரணாப் முகர்ஜி
தொடக்கத்தில் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுகுமார் சென் முதல் தற்போது தேர்தல் ஆணையராக இருப்பவர்கள் வரை அனைவரும் சிறந்த முறையில் தங்களின் பணிகளைச் செய்துள்ளனர். தேர்தல் ஆணையர்களை நீங்கள் விமர்சிக்காதீர்கள்; அவர்கள் சரியாகவே செயல்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார். இவரின் கருத்து, காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Congress spokesperson PL Punia, however, has said that he did not think that the former president was "aware" of the incidents of the poll panel giving a clean chit to Prime Minister Narendra Modi for every alleged violation. "The Election Commissions, over time, have always done a good job...but this Election Commission has given a clean chit to the prime minister on almost every violation...Today 21 parties will be meeting the Election Commission and we hope that they take cognizance of the matter... I don't think former president Pranab Mukherjee is aware of most of the incidents," he told News18. பிரணாப் குமார் முகர்ஜியைப் பற்றித் தெரிந்தவர்கள் எவரும் அவருடைய அரசியல் நிலவரத்தை கிரகித்துக் கொள்ளும் திறனைச் சந்தேகப் பட மாட்டார்கள்.   


ஹிந்துநாளிதழில் சுரேந்திரா இன்று வரைந்த கார்டூன் இது. இரு நாட்களுக்கு முன்னால் கேலி செய்தவர்கள் கூட இன்று வரிசையில் நிற்கிறார்களாம்! தூரிகையின் கற்பனை வலிமை மிகுந்ததுதான்! தூரிகைக்கும் கூட அரசியல் கள யதார்த்தம் புரிகிறதென்று எனக்குப் படுகிறது.  


திமுகவின் கோரிக்கைகளைக் கருணையோடு சென்னை உயர்நீதி மன்றம் கேட்கிற மாதிரி, உச்ச நீதிமன்றமும் செய்யுமா என்ன?

கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இன்று கலந்து கொள்ளவில்லை. தேவே கவுடாவின் JD(S),   பிஜு ஜனதா தளம்  இரண்டும் பிஜேபிக்கு தூதுவிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.


நேற்றைக்கு பிஜேபியின் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் முதலானோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையத்திடம் மேற்கு வங்கத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட விவரங்களை மனுவாகக் கொடுத்து, வன்முறை நடந்த பகுதிகளில் மறுவாக்குப்பதிவுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறது.

தேர்தல் ஆணையம் எப்படி முடிவெடுக்கப் போகிறதோ? எப்படியாகினும் மம்தா பானெர்ஜி தலைக்குமேல் கத்தி தொங்குவது நிஜம்.

நேற்றே வந்திருக்கவேண்டிய #அஞ்சறைப்பெட்டி ஒருநாள் தாமதமாக. மீண்டும் சந்திப்போம்.


இந்தத் தேர்தல் போனால் என்ன? 2024 இல் பார்த்துக் கொள்வோம் !

இந்தத்தேர்தலில் அதிகம் இழக்கப் போகிறவர்கள்....! என்று சிலநாட்களுக்கு முன் Quora தளத்தில் ராஜகோபாலன் கே சூரியநாராயணன் சொல்லியிருந்த அனுமானங்கள் அனேகமாக அப்படியே பலித்திருப்பதை நேற்றைய exit polls அவை மீதான poll of polls இரண்டும் மெய்ப்பித்திருக்கின்றன. இங்கே தமிழ்நாட்டில் மட்டும் திமுக ஒரு கண்ணியமான வெற்றியைப் பெறவிருப்பதாக வரும் செய்திகள் இந்தத் தேர்தலின் ஏழு அதிசயங்களில் ஒன்று என்கிறது Quint தளம்.


   
எதிர்பார்த்தபடி ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேசரிவாலும் மண்ணைக் கவ்வியிருக்கிறார்கள். அடுத்து NTR மருமகன் சந்திரபாபு நாயுடுவும் பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறார். மாநில ஆட்சியையும் அனேகமாக ஜெகன் மோகன் ரெட்டியிடம்  இழந்துவிடுவாரென்றுதான் தோன்றுகிறது. அடுத்து மூன்றாவதாக மம்தா பானர்ஜியின் மமதையும் மண்ணைக் கவ்வியிருக்கிறது.

நான்காவதாக, மிக முக்கியமாக காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு அவமானகரமான தோல்வியைத் தழுவியிருக்கிறது. போன தேர்தலில் ஜெயித்த 44 சீட்டுகளை விடக்  கொஞ்சம்  கூடுதலாக ஜெயிக்க வாய்ப்பிருந்தாலும், ஒரு கட்சியாக, காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குரியதாக ஆகியிருக்கிறது. நரேந்திர மோடி versus Who என்ற கேள்விக்கு விடையை எதிர்க்கட்சிகளால் சொல்ல முடியவில்லை என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

 
கொஞ்சம் கவனித்துக் கேட்க வேண்டிய விவாதம் இது. எக்சிட் கருத்துக் கணிப்புகள் எங்கே என்னென்ன அதிர்வலைகளைத் தோற்றுவித்திருக்கிறதாம்? ஒரு சாம்பிள் பார்ப்போமா?  

. Actually they CAN all be wrong, as Australia (a much smaller and less diverse country than India) showed us last weekend. But you're right that we are all better off waiting for the 23rd than wasting our time in empty debate about these imaginary numbers.


  • 2014ல் மோடியின் பக்கம் நிற்காத மேற்கு வங்கம் இம்முறையில் நிற்கும். சரி. ஆனால், கடந்தமுறை மோடியை ஏற்காத தமிழகம் மட்டும் இம்முறையும் மோடியை ஏற்காது என்கிறார்கள். இதெப்படி? மே 23. #நகைச்சுவை #வம்பு

    இந்திய சூழ்நிலை என்பது முற்றிலும் வேறானது என்கிற அடிப்படையில் ..கருத்து கணிப்புகளை எப்போதும் ஒரு வித எச்சரிக்கையுடன் நிதானமாக பொறுமையுடன் அணுகவேண்டும் என்பதே ...கருத்து கணிப்புகள் குறித்த என்னுடைய நிரந்தர நிலை.
    அரசியல் களத்தில் ..இது ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் என்ன ?
    இன்று சோனியாவை டெல்லியில் மாயாவதி சந்திப்பதாக இருந்த நிலையில்.. இன்றைக்கு மாயாவதிக்கு டெல்லியில் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று அக் கட்சியின் அறிவிப்பு கூறி இருக்கிறது.
    மஹாகட்பந்தன் அதற்குள் பந்தத்தை கட் செய்ய பார்க்கிறது

       
    எக்சிட் கருத்துக் கணிப்புகள் அப்படியே ரிசல்ட்டாக வெளிப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் வாக்காளர் மனநிலை என்னவாக இருந்தது, ஒட்டுமொத்தமாக என்னதிசையில் தேர்தல்முடிவுகள் போகும் என்பதைக் கணிக்க முடிவது  exit polls சொல்லுகிற விஷயம். 

    மீண்டும் சந்திப்போம்.