இட்லி வடை பொங்கல்! #75 IPAC பிரசாந்த் கிஷோர்! சவுக்கு சங்கர்! கோட்டைவாய் #நாசா !

தமிழகத் தேர்தல்களம் ஏன் இப்படி டல்லடித்துக் கிடக்கிறது? "வேற லெவல்".. ஒரேடியாக எகிறிய இமேஜ்! ஃபார்முக்கு வந்த ராகுல்.. அண்ணனாக, மகனாக.. பொங்கும் பாசம்! என்று ஒன் இந்தியா தமிழில் உருகுகிறார்கள் என்றால் H ராஜாவும் கோலாகல ஸ்ரீனிவாசும் இந்த 44 நிமிட நேர்காணலில் காங். தலைமையில் 3வது அணி’: ஹெச். ராஜா பகீர்! என்று செம காமெடி செய்கிறார்கள்!  இதனால் மட்டும்  தமிழகத் தேர்தல் களம் சூடான பதத்துக்கு வந்து விட்டதாகச் சொல்ல முடியாதே! 


மேலே வீடியோ 33 நிமிடம் ரெட்பிக்ஸ் தளத்தின் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் , சவுக்கு சங்கர் இருவரையும்  தரமான, நம்பகமான ஊடகக்காரர்களாக நான் எப்போதுமே நினைத்ததில்லை, ஆனாலும் தேர்தல் நேரம் எப்போதும்  காமெடி நேரமாகவே இருப்பதால் எல்லாக் கோமாளிகளையும் வேடிக்கை பார்த்துவிடுவது எனக்கு வாடிக்கை இந்த வீடியோவில் சவுக்கு சங்கர் பிரசாந்த் கிஷோர் பற்றியும் psephology, data schience என்ற பெயரில் இங்கே சில இந்திய நிறுவனங்கள் பற்றியும் மேலோட்டமாகப் பேசுவதை, வேறு எவரும் தொடாத சப்ஜெக்ட் என்பதால் இங்கே இந்தப்பதிவிலும்! திமுகவுக்கும் நடக்கும் அதிகாரப் போட்டி நிழல் யுத்தமாகத் தொடர்வதைப்பற்றி வேறு யாராவது பேசியிருக்கிறார்களா என்ன?         

திமுக நிர்வாகிகளுக்கும் IPAC நிறுவனத்துக்கும் மோதலா?  இப்படித் தலைப்பிட்டு BBC தமிழ் செய்தித் தளத்தில் ஜூனியர் விகடன் ரேஞ்சுக்கு நன்றாகக் கதைத்திருக்கிறார்கள்! மோதல் இருப்பதென்னவோ உண்மைதான்! ஆனால் 2021 இல் எப்படியாவது CM ஆகியே தீருவது என்று றெக்க கட்டிப்பறக்காத குறையாக இசுடாலின் பிரசாந்த் கிஷோரை முழுமையாக நம்பிக் களத்தில் இறங்கிக் கொண்டிருக்கும் போது கட்சிக் காரர்கள் பொருமலையெல்லாம் சட்டை செய்வாரா என்ன? ஆக, பிரசாந்த் கிஷோரை நம்பிக்கெட்டவர்கள் லிஸ்டில் இசுடாயினும், இலவுகாத்தகிளியாக சேரப் போகிறார் என்பதைத் தாண்டி வேறென்ன சொல்ல? நண்பர் நெல்லைத்தமிழன் முரளி இந்த அனுமானத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்தான்! அதனால் சொல்லாமல் விட்டு விட முடியுமா?😃😄 


வருகிற திங்கட்கிழமை கோட்டைவாய் நாசாவுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கப்போகிறது! இந்த 5 நிமிட வீடியோவில் மத்திய அமைச்சராக இருந்த சமயம் அமைதியாக இருந்த நாராயணசாமி என்று சொல்கிறார்களே! இந்தக் கொடுமையை, தலை சுற்றலோடு  எந்த விதமான காமெடியில் சேர்ப்பது என்று புரியாமல் பதிவை முடிக்கிறேன்!  

மீண்டும் சந்திப்போம். 

8 comments:

  1. எப்படியும் தேர்தல் நடந்து ரிசல்ட் தெரியத்தானே போகுது. அப்புறம் சாக்குப் போக்கு சொல்லக்கூடாது (அமுமுக தனியா நின்னு வாக்கைப் பிரித்தது, சிறுபான்மையினர் வாக்குகள் என்றெல்லாம்... 150-160 + 20-30 +... என்றுதான் ரிசல்ட் இருக்கப்போகுது)

    ReplyDelete
    Replies
    1. ஆனாக்க இந்தக்கழகம் ஆகாட்டி அந்தக்கழகம் என்றே வரப்போகிற ரிசல்ட்டை வைத்து நான் எதற்காக சால்ஜாப்பு சொல்ல வேண்டும்? தனிப்பட்ட முறையில் எனக்கு இரண்டு கழகங்களுமே ஆகாதவைதான்!

      Delete
  2. திமுகவில் (சச பேட்டியில் உள்ளதுபோல) பவர் ஸ்டிரகிள் இல்லைனு நினைக்கிறேன். உதயநிதிதான் அடுத்த கட்டத் தலைவர் என்று ப்ரொஜெக்ட் பண்ணறாங்க (எனக்கென்னவோ சில வருடங்களில் கனிமொழி தலைவராவார்னு நினைக்கிறேன்). சபரீசன் ஸ்டாலின் சார்புலதான் போய்ப் பேசுகிறார். அதுனால சங்கர் அனுமானம் தவறு.

    ReplyDelete
    Replies
    1. சவுக்கு சங்கரை விடுங்கள்! மூன்றாவது பாராவில் பிபிசி தமிழ்ச் செய்திகளுக்கான லிங்க் இருக்கிறதே! நன்றாக மழுப்பிக் கதைத்திருக்கிறார்களே! அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று கொஞ்சம் பார்த்தால் என்ன?

      ச.ச கவிதாயினியின் ஆதரவாளராக அறியப்படுகிறவர் அவருக்கே நீங்கள் சொல்கிற மாதிரி கனிமொழியின் எதிர்காலம் இருக்குமா என்பதில் தெளிவிருக்குமா என்பது சந்தேகமே!

      உ நிதி திமுகவின் ராகுல் காண்டியாக / காமெடிப்பீசாக ஆவதற்கு கடுமையாக உழைக்கிறார்!

      சபரீசனுக்கு அரசியல் ஆசை இருக்காதென்றா நினைக்கிறீர்கள்?

      Delete
  3. சவுக்கு சொல்வது அர்த்தமில்லை என்றே தோன்றுகிறது. இங்க கட்சி, சாதி, மதம் இவைகள்தான் வாக்குகளைத் தீர்மானிக்கும். ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. சவுக்கு சங்கரைப்பற்றி எனக்குப்பிரமாதமான அபிப்பிராயம் எதுவுமில்லை என்பதைப் பதிவில் தெளிவுபடுத்தியிருக்கிறேன். ஆனால் அவர் வேறெவரும் பேச முற்படாத சில விஷயங்களைத் தொட்டிருக்கிறார் அவை என்னென்ன என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன்

      ஆக அவர் சொன்னதில் அர்த்தமிருக்கிறதா இல்லையா என்பதில் perception difers! அவ்வளவுதான்!

      Delete
  4. கொள்கை.. பேச்சுத்திறமை.. எதையும் வெறும் பேச்சிலேயே வென்றுவிடுவது.. வெறும் டீ குடித்து பல நாட்கள் வேலை செய்யும் தொண்டர்கள்.. தன் சொந்த பணத்தை கட்சிக்காக செலவழிக்கும் தொண்டர்கள்..

    இதெல்லாம் கடந்த சில வருடங்களில் காணாமல் போய்விட்டது. இனியும் வராது.. கட்சி நடத்துவது ஒரு பெரிய வியாபாரம். யாரிடம் பணம் அதிகம் இருக்கிறதோ.. பணத்தை வசூலிக்கும் திறமை இருக்கிறதோ.. அவர்கள் தான் கட்சியை கட்டுப்படுத்த முடியும்..

    அதனால் கனிமொழி / ராஜா டீமிற்கும் ஸ்டாலின் / உதயநிதி டீமிற்கும் தலைமையை அடையும் போட்டி வரும் என நினைக்கிறேன்.

    இந்த தேர்தலில் முடிவு தெளிவாக இருக்காது .. ஸ்டாலின் முதல்வராக முடிந்தாலும் ஒரு மைனாரிட்டி ஆட்சியாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

    Interesting Times!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      அரசியல் இங்கே கார்ப்பரேட் மயமாகி நீண்ட காலமாகிறதே! சில முட்டாப்பயல எல்லாம் காசு முதலாளியாக்குதடா''தாண்டவக்கோனே என்று கருணாநிதி வசனம் தீட்டிய பராசக்தி படத்தில் ஒரு பாடல் வரும்! அதைக் கழகங்களும் காங்கிரசும் வேறு சில மாநில அளவிலான உதிரிக்கட்சிகள் விஷயத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது போல! :-))))

      கனிமொழி -ராசா வகையறாவுக்கு ஒருவிதமான கவலை! இசுடாலின் மனைவி மகன் இவர்களுக்கு இப்பவே எல்லாத்தையும் கட்டி ஆளனும் என்கிற பேராசை! மாப்பிள்ளை இப்போதைக்கு மாமனாருக்கு விசுவாசமானவராக வெளியே அதிகம் தன்னைக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், சந்திரபாபு நாயுடு மாதிரி எந்த நேரத்திலும் மாமனாரைக் கவிழ்க்க முன்வரலாம்! இத்தனையும் திமுக அறக்கட்டளை இன்னபிற இடங்களில் இதுவரை சேர்த்து வைத்திருக்கிற பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் குறிவைத்து மட்டுமே என்பது என்னுடைய கருத்து. முக அழகிரி கூட அதை மனதில் வைத்துக்கொண்டு தான் அமைதியாக இருக்கிறார் போல! ஆக திமு கழகத்தைக் கவிழ்க்க இந்த உள்முரண்பாடுகளே போதும். இன்னொரு தேர்தல் தோல்வி இந்த உள்முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தும்.

      இசுடாலின் கவலையே இப்போது அதுதான்! இன்னொரு தேர்தல் தோல்வியைத் தவிர்க்கவே இதுவரை கண்டிராத அளவுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவு செய்து கருணாநிதி கூடச்செய்திராத விதத்தில் புயல்வேகத்தில் சுற்றிக் கொண்டு இருக்கிறார்.

      இப்போதுள்ள சூழலில் இரண்டு கழகங்களுக்கும் இடையே neck and neck race தான்! எந்தவொரு எதிர்ப்பு அல்லது ஆதரவு அலையே இல்லாத ஒரு தேர்தலாக 2021 களம் அமைந்தால் அது யாருக்குச் சாதகமாக இருக்கும்? அந்தக்குழப்பத்தில் தான் நேரடி எதிரியான அதிமுகவைக் குறிவைக்காமல் மோடி எதிர்ப்பு மோடுக்கு மாறும்படி , பிரசாந்த் கிஷோர் ஆலோசனை சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!