#அரசியல் யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே!

தினமலர் நாளிதழுக்கும் மு.க.அழகிரிக்கும் அந்த நாட்களில் இருந்தே அப்படி ஒரு ஏழாம் பொருத்தம்! அஞ்சா நெஞ்சனாக அழகிரி அந்தநாட்களில் மிரட்டி வந்த காலத்தில்,மதுரையில் தினமலரும் ஒரு பாடம் படிக்க வேண்டி வந்தது நிறையப்பேருக்கு மறந்து போனாலும் தினமலர் மறந்த மாதிரித் தெரியவில்லை.  


இந்த 3 நிமிட வீடியோவில் தினமலர் சற்றே எகத்தாளமாக நாங்க அப்போவே சொன்னோமில்ல ராகம்போட்டு மு.க.அழகிரி சைலண்டாகி விட்டதை கொஞ்சம் கண் மூக்கு காது வைத்துச் சொல்கிற வேடிக்கையில் என்ன தெரிகிறது?  தினமலர் இன்றைக்கு சொன்ன விஷயத்தை போன சனிக்கிழமைப் பதிவில் நண்பர் பந்துவுக்கு எழுதிய பின்னூட்டத்தில் அழகிரி அமைதியாக இருப்பதன் காரணம் என்ன என்பதையும் சேர்த்தே தெளிவாகச் சொல்லியிருந்தேன். ஒவ்வொரு அரசியலுக்கும் பின்னால் உள்முரண்பாடுகள் இருப்பது புதிதல்ல! இங்கே நான் கேள்வி எழுப்புவது தினமலர் செய்தியின் கொக்கரிப்புக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைத்தான்!

ஊடகங்கள் காசுக்குக் கூவுகிற கூட்டம் தான்! அதனால் அப்படியே 100% அந்தக்கொள்கைப் பிடிப்பிலேயே இருப்பார்கள் என்று சொல்லிவிடமுடியாது அவர்களுக்கு சௌகரியப்படுகிற வரையில் இந்தப்பக்கமாகக் கூவல்! சௌகரியங்கள் கொஞ்சம் மாறும்போது அந்தப் பக்கமாகவும் கூவுவார்கள்! மாறுவதற்கும் கூட அதிகக் காசு, சொந்த விரோதங்கள் காரணமாக இருக்கலாம், விவி மினெரல்ஸ் வைகுண்டராஜன் மீது சிபிஐ தொடுத்த வழக்கில் அவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை எனத்தீர்ப்பு  வந்திருக்கிற இந்தநேரத்தில் அவர் நடத்தும் நியூஸ் 7 சேனலில் அதைச் சொல்வார்களா? வேறு எவராவது இப்படி சிபிஐ விசாரணைக்குள்ளாகிற செய்தியை என்ன மாதிரித்திரித்து presenணை  செய்வார்கள்? FB யில் ஸ்டேன்லி ராஜன் எழுதிய விரிவான பகிர்வு இங்கே 
 

இன்னொரு உதாரணமும் சொல்கிறேன். கபில் சிபல் புகழ்பெற்ற வழக்கறிஞர். காங்கிரசுக்கு வாதாடுவதில் நிறையக்காசும் பார்த்தவர் என்பது தனியாகச் சொல்ல அவசியமே இல்லாத செய்தி. HTN திரங்கா டிவி என்று ஒரு செய்திச் சேனலை நடத்தி மோடி எதிர்ப்பை வைத்துக் காலம் தள்ளிவந்தார். பர்கா தத், கரண் தாப்பர் போன்ற உலகப்புகழ் பெற்ற மோடி எதிர்ப்பாளர்களை வைத்து நடந்த அந்த சேனல் சரியாக போணியாகாததால் இழுத்து மூடப்பட்டது. லட்சியப்பிடிப்பும் விசுவாசமும் மிகுந்த காங்கிரஸ்காரராக கபில் சிபல் இருந்திருந்தால் லாபநட்டக்கணக்கைப் பார்த்து ,சேனலை மூடியிருக்க மாட்டார்! சேனல் ஆரம்பித்ததும், மோடியை எதிர்த்ததும் காசுக்காக என்பதால் போணியாகாத மோடி எதிர்ப்பு, சேனலை மூடுவதில் முடிந்தது. அதுதான் பெரும்பாலான ஊடகங்களின் பக்கச்சாய்வுக்கு முதற்காரணமாக இருப்பது புரிகிறதா?  

.

கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கையில் நிறையப் பட்டும் கையைச் சுட்டுக்கொண்டும் கற்றுக்கொண்ட அந்த  அனுபவமே இந்தப்பாடலில் வெளிப்பட்டிருக்கிதென்று சொல்வார்கள்.

இந்திய வாக்காளர்களாகிய நாமும் கூடத் தேர்தலுக்குத் தேர்தல் நிறையப்பட்டும் கெட்டும் கையைச் சுட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். எதையாவது கற்றுக் கொண்டிருக்கிறோமா? இனியாவது கற்றுக்கொள்ள முயற்சி செய்யப்போகிறோமா?

வருகிற சட்டசபைத் தேர்தல்களில் எங்களை விட்டால் தமிழ்நாட்டுக்கு வேறு கதியே இல்லை என்கிற மிதப்பில் இருக்கிற இரண்டு கழகங்களுக்கும் மப்பைக் குறைத்தாக வேண்டும் கூட்டணி என்!ற பெயரில் சேர்ந்து கூத்தடிக்கும் உதிரிக்கட்சிகளை அறவே நிராகரிப்பது முதற்படி! மைனாரிட்டிகளைக் குளிர்விக்கிற சாக்கில் பெரும்பான்மையை அவமதிக்கும் எவருக்கும் வாக்கு இல்லை என்ற உறுதியோடு இருப்பது இரண்டாவது படி 

தொகுதியின் வேட்பாளருடைய தகுதி, கடந்தகாலப் பின்னணி, இதுவரை உருப்படியாக என்ன செய்திருக்கிறார், இனி என்ன செய்யப்போகிறார் என்பதையெல்லாம் கேள்விகேளுங்கள்

நீங்கள் மட்டும் இப்படி ஒரு மாற்றத்துக்குத் தயாரானால் போதுமா? நண்பர்களிடமும் எடுத்துச் சொல்லித் தயார் செய்யுங்கள்! அவர்களையும் அதேமாதிரி நண்பர்கள் வட்டத்தை விரிவு படுத்த உற்சாகப்படுத்துங்கள்.

மாற்றத்துக்குத் தயாராவது, மாற்றத்துக்கான கருவியாக இருப்பது இவை இரண்டும் இந்த நேரத்தின் அவசரமும் அவசியமும்!

மீண்டும் சந்திப்போம்.     
   
       

4 comments:

 1. //தொகுதியின் வேட்பாளருடைய தகுதி, கடந்தகாலப் பின்னணி, இதுவரை உருப்படியாக என்ன செய்திருக்கிறார், இனி என்ன செய்யப்போகிறார் என்பதையெல்லாம் கேள்விகேளுங்கள்// - இதுக்கு நேரமில்லாவிட்டால், வாக்களிக்கச் செல்லாதீர்கள் என்றும் எழுதிடலாமே... தகுதி உடைய வேட்பாளர்கள் எங்க இருக்காங்க?

  சென்ற தேர்தலின்போது, தினமலர் ஓனர்களில் ஒருவர் திமுக சார்பு என்றும் இன்னொருவர் பாஜக சார்பு என்றும் கேள்விப்பட்டேன். அதுனாலத்தான் தினமலர், திமுகதான் வெற்றிபெறும் என்று எழுதியது. (தேர்தல் சமயத்தில் ஒரு நாளைக்கு)

  ReplyDelete
  Replies
  1. தகுதியுடைய வேட்பாளர்கள் களமிறங்காமல் இருப்பதற்கே ஒருவகையில் நாம்தான் காரணம் நெல்லைத்தமிழன் சார்! தொடர்ந்து இந்தக்குப்பை அல்லது அந்தக்குப்பை என்றே வாக்களித்துக் கொண்டிருந்தால் நல்ல தகுதியுள்ளவர்கள் எப்படி தைரியமாகக் களமிறங்குவார்கள்?

   தினமலர் மட்டுமல்ல பெரும்பாலான ஊடகங்கள் எல்லாமே அக்மார்க் வியாபாரிகள் என்பதைத் தானே வேலைமெனக்கெட்டு முதல் வீடியோவுக்குக்கீழே மூன்று பாரா எழுதியிருக்கிறேன் :-((

   Delete
 2. //தொகுதியின் வேட்பாளருடைய தகுதி, கடந்தகாலப் பின்னணி, இதுவரை உருப்படியாக என்ன செய்திருக்கிறார், இனி என்ன செய்யப்போகிறார் என்பதையெல்லாம் கேள்விகேளுங்கள்/இப்போதெல்லாம் அரசியல் நடத்த மிகப் பெரிய அளவில் பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. எந்த ஒரு பொதுக் கூட்டம் என்றாலும் அதிக பட்சம் 10% தானாக வந்த கூட்டமாக இருக்கும். மற்றவர் எல்லாம் காசு கொடுத்து வரவழைத்த கூட்டம். 5000 பேர் கூட்டம் என்றால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய காசு + பிரியாணி + குவார்ட்டர் + வண்டி வாடகை + இடைத்தரகர்களை கொடுக்க வேண்டியது எல்லாம் சேர்த்தால் குறைந்த பட்சம் 30 லட்சம் ஆகும். எவ்வளவு பொதுக் கூட்டங்கள் கூட்ட வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் செலவழிப்பவர்கள் நேர்மையாக இருப்பார்கள் என்று எப்படி நினைக்க முடியும்?

  இதற்கெல்லாம் முடிவே இல்லை என்று தோன்றுகிறது!

  ReplyDelete
  Replies
  1. விடை மிகவும் சிம்பிள், பந்து!

   இப்படிப் பணம் செலவழித்துக் கூட்டம் சேர்க்கிறவர்கள், ஒட்டுக்குப் பணம் கொடுப்பவர்கள் எவரானாலும் நிராகரிப்பது! ஒரு தெளிவோடு செயல்பட ஆரம்பித்தால் வழிகள் தாமாகவே புலப்படும்! முதல் எட்டு எடுத்து வைப்பதற்கு முன்னாலேயே இப்படிக் குழம்பாமல் இருப்பது முக்கியம்

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!