மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் புதுச்சேரி கச்சேரி பாட்டு ஒண்ணு படிச்சேன்!

புதுச்சேரி சட்டசபையில் வி, நாராயணசாமி புதிய சாதனை ஒன்றைப்படைத்திருக்கிறார்! நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஒன்றரை மணிநேரம் பேசியவர், தீர்மானத்தை அப்படியே அம்போவென விட்டுவிட்டு வெளிநடப்பு செய்ததோடு, துணைநிலை ஆளுநரைச் சந்தித்துத் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.இனி  ஆளுநர்தான் முடிவுசெய்ய வேண்டுமென்கிற அங்கலாய்ப்பு வேறு! புதுச்சேரி சபாநாயகர், ஆளும் தரப்பு மெஜாரிட்டியை நிரூபிக்காமல், தீர்மானம் தோற்று விட்டதாக மங்களம் பாடிவிட்டார் என்ற நிலையில் துணைநிலை ஆளுநர் என்னசெய்யப் போகிறார்? சாதாரணமாக, மாற்று ஏற்பாடு செய்கிற வரை, ஒரு காபந்து அரசாகச் செயல்பட முதல்வரை வேண்டிக்கொள்கிற வழக்கம் இங்கேயும் நடந்ததா? 



சபாநாயகரின் முடிவு தவறு என்று வெளியே வந்து பேட்டி அளித்த நாராயணசாமி, தனது எதிர்ப்பை அங்கேயே பதிவு செய்யாமல் வெளிநடப்பு செய்தது ஏன்? உடனே ஓடிப்போய் துணைநிலை ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தது ஏன்? நாசா அதற்கெல்லாம் பதில் சொல்வதாக இல்லை. மாற்று அரசு அமைக்கிற எண்ணம் இல்லை என பிஜேபி அறிவித்திருக்கிற நிலையில், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக இருக்கிறது


இத்தாலிய மாமியா அந்தோனியோ மைனோ பிரதமர் மோடிக்கு  பெட்ரோல் விலை உயர்வு குறித்துக் கடிதம் எழுதுகிற நாடகம் நடத்தினார். மச்சான் ராகுல் காண்டி வயநாடு தொகுதியில்  ட்ராக்டர் ஓட்டி ஷோ நடத்திக்  காட்டுகிறார். மாப்பிள்ளை வாத்ரா மட்டும் சும்மா இருப்பாரா? அவர் பங்குக்கு சைக்கிளில் ஆபீசுக்குப் போகிற டிராமாவை (தொர ஆபீசுக்கெல்லாம் போவுதா?) நடத்தினார் என்று ஹிந்து நாளிதழ் சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிறது. தொர சைக்கிள் ஓட்டிப்போன நாடகத்தில் முன்னும் பின்னும் எத்தனை கார்கள் அணிவகுத்துப் போயின என்பதையும் எண்ணிச் சொல்லி இருக்கலாம்!   
  

அக்னிப் பரீட்சை என்பது நிகழ்ச்சியின் பெயர். அது  யாருக்கு என்பதை இந்த 36 நிமிட வீடியோவில் பார்த்து ரசியுங்களேன்!

Stanley Rajan  9ம.  முகநூலில் பகிர்ந்தது 
 · 
தவளையும் ஓணானும் பிடித்து கொண்டு தன்னை மாவீரன் என கருதி கொண்டவன் சிங்கத்திடம் சிக்கினால் எப்படி இருக்கும்? அப்படித்தான்  மு.க ஸ்டாலினையோ சீமானையோ பேட்டி எடுப்பது போல் நிர்மலா சீதாராமனிடம் பேட்டி எடுக்க சென்று கதற கதற அடி வாங்குகின்றார் கார்த்திகை செல்வன்
நிதியமைச்சரின் செவிட்டில் அடிக்கும் பதிலுக்கு அவரிடம் பதில் இல்லை, அம்மையாரின் தீர்க்கமான பதிலில் இன்னொரு கன்னத்தையும் காட்டி கொண்டு அவர் நிற்பது பரிதாபமாக இருக்கின்றது
"ஊறுகாய் மாமி" என திராவிட கும்பலால் பட்டம் சூட்டபட்ட நிர்மலா கார்த்திகை செல்வனை ஊற போட்டு அடித்து துவைத்துவிட்டார் 

தமிழ்நாட்டில் இப்போதைக்கு நிர்மலாவிடம் பேட்டி எடுத்து தப்பிவிட ஒரு பத்திரிகையாளனும் இல்லை, ஆண்மை இருந்தால் எவனாவது முயற்சித்து பார்க்கட்டும்! மிக துல்லியமான தரவுகள், குழப்பமே இல்லாத பதில்கள், தன் நேர்மையினை மட்டுமல்ல தன் அமைச்சரவை நேர்மையினையே நிரூபித்து நிற்கும் ஆளுமை, பதற்றமே இல்லாத வாதம் என விஸ்வரூபமெடுத்து நின்றார் நிர்மலா

அவரிடம் கேட்க எந்த கேள்வியுமில்லை என்ற பரிதாப நிலைக்கு தள்ளபட்டார் கார்த்திகை செல்வனார்.
திராவிட பத்திரிகா தர்மம் இப்படித்தான் இருக்கின்றது, இவர்கள் வளர்த்த பத்திரிகை சுதந்திரம் இதுதான்
ராம்சாமி, திராவிடம், சமூகநீதி என குண்டு சட்டிக்குள் கழுதை ஓட்டி அதை தாண்டி எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி பத்திரிகை சமூகத்தை உருவாக்கியதுதான் இவர்கள் சாதனை!

நல்ல வேளையாக மோடிக்கு தமிழ் தெரியவில்லை, தெரிந்திருந்தால் இந்நேரம் தமிழக மீடியா கோஷ்டியெல்லாம் இலங்கைக்கு தப்பி ஓடியிருக்கும்! நிர்மலா ஏன் மத்திய அமைச்சரானார், இப்பொழுது ஏன் களத்தில் இறக்கபடுகின்றார் என்பதற்கான விடைகள் ஒன்றும் கடினமானதல்ல‌. இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல என்பதுதான் விஷயம்  

ஆனாலும் நிர்மலா சீதாராமனை குறை சொல்ல வேண்டுமே என்பதற்காகவே குறை சொல்கிற போக்கு இங்கே தமிழ்ச்சாதியின் விதி போல 


மீண்டும் சந்திப்போம். 

2 comments:

  1. கார்த்திகைச் செல்வன், அவருக்கு ஸ்டாலின் என்ன அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறாரோ அதனைச் செய்பவர். அவருக்கான நிர்மலா சீதாராமனின் பதில் சரியானதுதான். பேட்டி எடுப்பதற்குப் பதில் திமுகவின் குரலை ஒலிக்க நினைத்த கார்த்திகைச் செல்வனுக்கு வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. காசுக்கு கூவுகிற ஊடகங்களாகப் பெரிய அளவில் வளர்த்துவிட்டதே சோனியா காங்கிரஸ் தான்! இதை இந்தப்பக்கங்களிலேயே நாலாவது தூண், காசுக்கு கூவறது என்ற ஹேஷ்டாகில் முந்தைய வருடங்களில் எழுதிய பளபதிவுகள் இருக்கின்றன.

      நிர்மலா சீதாராமன் பேசும் விதத்தை முன்னாட்களில் வலைப்பதிவராக அறிமுகமான ஒரு நண்பர் ட்வீட்டரில் எப்படிப்பேச வேண்டுமென்று கிளாஸ் எடுத்ததை இங்கே ஸ்க்ரீன் ஷாட்டாக போட்டிருப்பதும் கூட கார்த்திகைச்செல்வன் மாதிரி காசுக்கு கூவும் ஊடகக்காரர்களுக்காக அல்ல, அதையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறதே அதற்காக!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!