பிப்ரவரி 21, பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்தின் மிகச் சிறப்பான தரிசன நாட்களுள் ஒன்று! இந்த நாள் ஸ்ரீ அரவிந்த அன்னையின் பிறந்த நாள் என்பதுதான் விசேஷம்! ஸ்ரீ அரவிந்தராலே, சாதகர்களுக்கும் யே அன்னை என்று சாதகர்களுக்கு அறிவிக்கப்பட்டவர், பெற்ற தாயாகவே இவனைப்போன்ற பலருக்கும், அணுக்கமாக இருந்த ஆயிரக்கணக்கான அடியவர்களுக்கும் இன்றும் அருள்பாலிப்பவர்! ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் என்று உருவானதில் அன்னையின் பங்கே அதிகம்..
ஸ்ரீ அரவிந்த அன்னை என்று சொல்லும் போதே, இன்றும் ஆசிரமத்தில் வழங்கப்படும் தரிசன நாள் செய்தி, மலர் பிரசாதம், மலர் வழிபாடு இப்படி ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், பால்கனி தரிசனம் என்பதும் மிகவும் விசேஷமானது. அது எப்படி ஆரம்பித்தது என்று சில சுவாரசியமான தகவல்களுடன் அரவிந்த் என்கிற ஆசிரமவாசி, நேற்றைக்கு இந்த 19 நிமிட வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார்.
இது இன்றைய தரிசனநாள் செய்தியின் முகப்பு.இது ஸ்ரீஅரவிந்தர் அன்னையைத் தியானிக்க அருளிய மந்திரம்! ஸ்ரீ அரவிந்த அன்னை என்றென்றைக்கும் நம்மோடு துணையிருப்பாளாக! பிரார்த்தனைகளுடன்!
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!