Showing posts with label கழகமா கலக்கமா. Show all posts
Showing posts with label கழகமா கலக்கமா. Show all posts

மண்டே ன்னா ஒண்ணு! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிர்வலைகள்!

மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசிவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக தலீவர் இசுடாலின் பொங்குகிற அளவுக்குப் போயிருப்பது தமிழக அரசியல் களத்துக்கு மிகவும் விசித்திரமானது! அந்த அளவுக்கு சமீப நாட்களில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது, அரசியல் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.


அக்னிப் பரீட்சை என்றால் கேள்விகளில் தீப்பொறி பறக்கவேண்டும் இல்லையா? இங்கே கார்த்திகேயன் அமைச்சர் பதில் சொல்வதில் மேற்கொண்டு என்ன கேட்பது எனத்தெரியாமல் பம்முகிறார் என்றால் இது யாருக்கு  அக்னிப் பரீட்சை? கார்த்திகேயனுக்கா? புதிய தறுதலை சேனலுக்கா? வழக்கமான குறுக்கீடுகள், விஷமத்தனமான கேள்விகள் எதுவும் எடுபடாமல் போனதொரு வேடிக்கையான விவாதம்! வீடியோ 37 நிமிடம். வேடிக்கையை ரசித்துத்தான் பாருங்களேன்!

நெஞ்சில் நஞ்சும்,வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியான நடவடிக்கை தேவை!
Quote Tweet
PuthiyathalaimuraiTV
@PTTVOnlineNews
·
’அக்னிப் பரீட்சை’ இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  
#AgniParitchai #RajendraBalaji #BJP #ADMK #Rajinikanth #DMK #MKStalin  

அமைச்சருடைய அக்னிப் பரீட்சை நேர்காணலுக்கு இசுடாலின் இத்தனை கோபமாக ட்வீட்டரில் பொங்குவானேன்? ஊடக எடுபிடிகளுடைய முயற்சி தோற்றுப்போனதால் வந்த ஏமாற்றமா? கோபமா?  

 வீடியோ 9 நிமிடம் 

இப்படி இசுடாலின் பொங்கியதற்கெல்லாம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொஞ்சம்கூட அசருவதாயில்லை! அவர்பாட்டுக்குத் தன் மனதிற்கு சரி என்று படுவதை வெளிப்படையாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். இது நேற்றைக்கு முகநூல் துக்ளக் வாசகர் குழு ஒரு ட்ரஸ்ட் ஆகத் தொடங்கப்பட்ட நிகழ்வில் பங்குகொண்டு பேசியதென்ன என்பதைக் கொஞ்சம் பாருங்களேன்!

  
வைகுண்டராஜன் சேனல் நியூஸ் 7 மட்டும் இந்த விவகாரத்தை விட்டு விடுமா? பத்திரிகையாளர் மணி முதலில் பொங்குகிறார், அடுத்து விசிகவின் ஆளூர் ஷாநவாஸ்! இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தையை அமைச்சர் சொல்லலாமா? திராவிட அரசியலின் வழக்கமான கதைத்தல்களில் இருந்து விலகி ஒரு புதிய பாதையில் பயணிக்கிறதா அதிமுக என்ற முக்கியமான கேள்விக்கு சரியான பதிலை எவராலும் சொல்ல முடியவில்லை என்பது இந்த 55 நிமிட விவாதத்தின் சாரம்.

ஆக, தமிழக அரசியல்களத்தில் புதிய அதிர்வலைகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்படுத்திவிட்டார்! செக்கு மாடுகள் மாதிரி அய்யா புகழ் அண்ணா புகழ் கருணாநிதி புகழ்  எம்ஜியார் புகழ் அம்மா புகழ் என்றே லாவணி பயாடிக் கொண்டிருந்த திராவிட அரசியல் வேறுபாதையில் பயணிக்குமா? உள்ளது உள்ளபடியே பிரச்சினைகள், இருப்பதைத் துணிச்சலுடன் ஒப்புக்கொள்வது முதல்படி. அதிலிருந்து தீர்வுகள் காண முயற்சிப்பது அடுத்தபடி    

மீண்டும் சந்திப்போம்.      

கருவாடே மீன் ஆனாலும்! கறந்தபால் மடிபுகுந்தாலும்!

தி.மு.கழகத் தலீவர் என்று ஆனபின்னாலும் ஸ்டாலின் செயல்பாடுகளில் வேகமுமில்லை, விவேகமுமில்லை என்பதுதான் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறதோ?


ஏற்கெனெவே கமல்ஹாசன் நடத்தி முடித்துவிட்ட கிராமசபை கூட்டங்களை, இப்போது நகலெடுத்து நடத்திக் கொண்டிருப்பது, என்ன சாதித்திருக்கிறது?


தலையால தண்ணி குடிச்சாலும்..
தட்டானுக்கு சட்டை போட்டாலும்..
அத்தைக்கு மீசை மொளச்சாலும்..
அயிரை மீன் சைவமானாலும்...
வாழைமரம் பிள்ளை பெற்றாலும்..
கள்ளிப்பால் அமிர்தமானாலும்..
கருவாடே மீன் ஆனாலும்...
காக்கை தேசியப் பறவை ஆனாலும்...
கறந்த பால் மார் புகுந்தாலும்..
தேரிழுக்காம திருவிழா முடிந்தாலும்...
செயலு என்றைக்கும் முதலு ஆக முடியாது..   
என்று பாட்டே எழுதிவிட்டார்! அதற்கேற்ற மாதிரியே 


என்று இசுடாலின் தினகரனைச் சீண்டிவிட தினகரன் பதிலுக்கு நக்கலும் நையாண்டியுமாக பதில் சொல்லி இருக்கிறார்.




29/05/2011 தேதியிட்ட ஜூனியர் விகடனில் இருந்து....கழுகார் பதில்கள்! கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது.  ஜூவிக்கு நன்றியுடன்

இனிதி.மு.க-வில் ஸ்டாலின் கை ஓங்க வாய்ப்பு உள்ளதா

முதலில்தி.மு.க-வின் கை ஓங்க வாய்ப்பு உள்ளதா என்று பாருங்கள். அதன் பிறகுதான் ஸ்டாலின்!

இப்போதும் அப்பாவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து​கொள்ளும் சங்கோஜப் பிள்ளையாகவே ஸ்டாலின் இருந்தால்... அவர் எப்போது தான் தளபதி ஆவதுஎந்தப் பிரச்னையிலும் தன் சொந்தக் கருத்தை ஸ்டாலின் சொல்லியது இல்லை. அறிமுகம் இருப்பவர் களை பார்த்துக்கூட சிரிக்கத் தயங்குகிறார். இயக்கப் பொறுப்பாளர்களை உட்காரவைத்து இது வரை எந்த யோசனையும் கேட்டதும் இல்லை. மாஜி மந்திரிகளுக்குமாவட்டச் செயலாளர்களுக்குயார் எல்லாம் எதிர் கோஷ்டியோ... அவர்களைத் தன்னுடைய எதிர் கோஷ்டியாக நினைக்கிறார்.

இத்தனை மனோபாவங்களையும் மாற்றிக்கொண்டால்​தான்ஸ்டாலின் கை ஓங்கும். இல்லாவிட்டால்...  

இப்படிச் சொல்லியிருந்தது இன்றைக்கும் மாறவில்லை என்பது கழகத்தின் சோகம்! 

*******
கழகங்களைப் பற்றிப்பேசி வீண்பொழுதுபோக்கவோ வலையெழுத்தில் வந்தது? காக்கைப்பொன்னையே மினுமினுப்பாகக் காட்டியே அசல் பொன்னை மறைத்து விட்டார்களே என்கிற ஆதங்கம், கொதிப்பு அன்றி வேறு இல்லை.

இன்று லால்பகதூர் சாஸ்திரி நினைவுதினம். 


காங்கிரஸ் கட்சியின் வரலாறேஆளுபவரோடு இசைந்து போய்க் கொஞ்சம் சலுகைகளைக் கூட்டிக் கொடுக்க முடியுமா என்று பவ்யமாகப் பணிந்து கேட்கும் மிதவாதத்தினரால் நிரப்ப பட்டது தான்!

1937 களில் இந்தப் போக்கிற்கு நேருவின் தந்தை மோதிலால் நேருவே முன்னணியில் இருந்து நடத்தியதும், காந்தி சிறையில் இருக்கும்போதே இவர் தன்போக்கிற்குப் பதவியைத் தேடி ஓடியதும் இங்கே நிறையப் பேருக்குத் தெரியாத தியாக வரலாறு

காங்கிரசில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரேசுதந்திரத்தைப் பற்றிப் பேசினார்கள்அப்படிப்பட்ட சிலருமே,கண்முன்னால் இருந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல்வெவ்வேறு வழிகளில் பயணப்பட்டுக் காணாமலும் போனார்கள்

காங்கிரசின் பழைய வரலாறு, முரண்பாடுகளின் மொத்த உருவம். அத்தனை கோளாறுகளையும் மீறி, காந்தி என்றொரு ஆளுமை, ஜனங்கள் அவர் சொன்னதை அப்படியே கேட்டு நடந்த விந்தை தான், காங்கிரசை இன்றைக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சியாகச் சொல்லிப் பெருமிதப் பட்டுக் கொள்ள முடிகிறது. ஆனால், சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வழிநடத்தும் தலைவர்கள் கிடைத்தார்களா என்று பார்த்தால், காந்தியை மறந்த காங்கிரஸ் ஜீரோவாகி நிற்கிறது.





சண்டேன்னா மூணு!பெட்டி!போட்டி! பொட்டி!


திமுகவில் உட்கட்சித்தேர்தல்கள் தமாஷா உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 2004 க்குப் பிறகு நடக்கும் தேர்தல் இது. இலவுகாத்த கிளியாக அறுபதைத்தாண்டியும் இருக்க வேண்டியிருக்கிறதே என்று விசனப்பட்டு மு க ஸ்டாலின் தரப்பு கொஞ்சம் ஊக்கமாகவே இறங்கி வேலை செய்ய ஆரம்பிப்பதும் கடைசியில் ஒன்றுமில்லாமல் புஸ்வாணமாகிப் போவதும் சமீப காலமாக நடந்து கொண்டிருப்பதுதான். 



தி.மு.க., உட்கட்சி தேர்தல், சமீபத்தில் மாவட்டம் தோறும் நடந்தது. சட்டை கிழிப்பு, சேர் உடைப்பு, ஆள் கடத்தல் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறின. மாவட்ட செயலாளர் பதவிக்கு மட்டுமின்றி, கிளை செயலாளர், பகுதி, ஒன்றியம், பேரூராட்சி மற்றும் நகர செயலாளர் பதவிகளை கைப்பற்ற, பல லட்சங்களை செலவிட்டு, கட்சி பதவியை கைப்பற்றியுள்ளனர். சென்னை அறிவாலயத்தில், பேச்சுவார்த்தை நடத்தியே, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பும் வெளியானது.


முக அழகிரி, கனிமொழி இருவரையும் ஓரம் கட்டி விட்டு ஸ்டாலின் அணி மொத்தக் கட்சியையும் கைப்பற்றி விட்ட மாதிரியே மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்படுகிற வரைக்கும் ஒரு பிம்பம் உருவாக்கப் பட்டுக்கொண்டே வந்தது. இன்றைய தலைப்புச்செய்திகளாக ஸ்டாலின் ராஜினாமா என்றும் அதை மறுத்து கழகத்தின் எதிரிகள்  கிளப்பிவிட்ட வதந்தி நம்பவேண்டாம் என்று ஸ்டாலின் அறிக்கை விட்டதுமாக ஆனது ஒன்றுதான் ஸ்டாலின் அணி கண்ட பலன்!  


பேராசரியர் வழிவிட்டு ஒதுங்குகிறார், ஸ்டாலின் பொதுச்செயலாளர் ஆகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருந்தபோது எந்தவிதமான மறுப்பும் அறிக்கையும் விடாதவர் தரப்பில் திடீரென்று ராஜினாமா, மறுப்பு என்றாகிக் கொண்டிருப்பதன் பின்னணி என்னவோ எப்போதும் கழகத்தில் நடக்கிற சொந்தக்கதை சோகக்கதைதான். தினமலர் நாளிதழில் முக அழகிரி சொன்னது இப்படி "தி.மு.க.,வை பொறுத்தவரை, கட்சிக்குள் ஏதாவது மாற்றம் வரும் முன்பாக, குழப்பத்தை ஏற்படுத்துவது வழக்கம். அரசியல் ராஜதந்திரம் தெரிந்தவர் கருணாநிதி. கட்சி பொறுப்புகளை ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக வெளியான தகவல்களும், தற்போது, அந்த தகவலை மறுப்பதும் அவர்களாக ஏற்படுத்தும் குழப்பம் தான். இதை அறிந்தே, 'எல்லாம் நாடகம்  "

"குழப்பத்தை பயன்படுத்தி, பொது!ச்செயலாளர் பதவிக்கு பெட்டி வைத்து தேர்தல் நடத்தி, ஸ்டாலினை பதவிக்கு கொண்டு வருவார். அல்லது, கட்சிக்குள் யாராவது ஒருவரை பலிகடா செய்து, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பார். குட்டையை குழப்பி மீன் பிடிக்க தெரிந்தவர் கருணாநிதி. தி.மு.க.,வில் என்ன நடக்கிறது என்பது, அறிவாலயத்தில் 7ம் தேதி நடக்கும் மனுத்தாக்கல் நிகழ்ச்சியில் தெரிந்து விடும். எந்த முடிவாக !இருந்தாலும், 9ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தான் தெரியும்." என்று தினமலர் செய்தி மேலும் விரிகிறது 

ஆக,மூணில் முதலாவது பெட்டி! 
******


பெட்டிக்குப் போட்டி! வேறு யார் ? நம்ம  அஞ்சாநெஞ்சன் முக அழகிரிதான் !


M. K. Alagiri


சென்னை:
 தி.மு.க.வினர் திருந்தினால் அக்கட்சியில் சேருவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.இங்கே 

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தி.மு.க.வில் தகுதியற்றவர்கள் பலர் உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு கட்சியை நடத்துகின்றனர்.எனவே தி.மு.க.வினர் திருந்த வேண்டும். தி.மு.க.வினர் திருந்தினால் அக்கட்சியில் சேருவேன்'' என்றார்.


மு.க.ஸ்டாலின் தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான செய்தி குறித்து கேட்டதற்கு, ''ஸ்டாலின் ராஜினாமா குறித்த தகவல் எல்லாம் எனக்கு தெரியாது, முகவரி இல்லாத ஸ்டாலினை பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை'' என்றார். 


சபாஷ்! சரியான போட்டி!  

******
டிசிஎஸ் நிறுவனத்தில் பொட்டி தட்டுகிறவர்களுக்காக வினவு தளத்தில் சங்கம் அமைப்போம் என்று சொன்ன பிறகு விழித்துக் கொண்டவர்களில் முதலாவது மார்க்சிஸ்ட் கட்சி. அடுத்து தமிழ்க்குடிதாங்கி மருத்துவரும் குரல் கொடுத்திருக்கிறார். விவரம் இங்கே  

Currently, Information Technology companies are not covered by the Industrial Employment Act.

Currently, Information Technology companies are not covered by the Industrial Employment Act. என்கிற கசப்பான உண்மை எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை 

As part of its decision to lay off 25,000 employees, TCS has been issuing pink slips to its employees since the last few days. This is an entirely unethical exercise aimed at cost-cutting and maximising profits. Already over 1,000 employees have contacted us. They are associate software consultants or associate software technologists, with an experience ranging from seven to 14 years. Almost none of them are under-performers as they have got performance grading of A, B or C. If the management says these people are underperformers, it should show the proof,” Vinod, a co-ordinator of Chennai-based Forum for IT Employees (FITE), told this newspaper.

பொட்டி தட்டும் தொழிலில் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டுத்துவக்கமே சரியாக இல்லை போல இருக்கிறது.ஆனால் இதே மாதிரி இன்ஃபோசிஸ் உள்ளிட்டு பிற ஐடி நிறுவனங்களில் வாடிக்கையாக நடந்து கொண்டிருந்த போது இவர்களில் எவரும் அதிகமாக அலட்டிக் கொண்டதில்லை. இங்கே எண்ணிக்கை அதிகம் என்பதால் சத்தமும் பெரிதாக இருக்கிறதா அல்லது கார்பரேட் நிறுவனங்களில் இதெல்லாம் சகஜமப்பா என்றிருப்பதா?

பொட்டிதட்டுகிறவர்களே! உங்கள் துறையில் என்ன நடக்கிறது என்பதைப் பின்னூட்டங்களாக இங்கே தட்டிவிடுங்களேன்! இந்த நாட்டில் நெஞ்சுக்கு நீதி கிடைககிறதா என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். "

மூணில் முதலாவதான பெட்டிச் செய்திக்கு அப்டேட் இங்கே 

'கட்சியின் பொதுச் செயலர் பதவியை பெறுவதற்காக, தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய ராஜினாமா நாடகம், கருணாநிதியின் உறுதியான முடிவால், எடுபடாமல் போய்விட்டது'   

என்று சோகக்கதையைப் போட்டுடைக்கிறது இந்தச்செய்தி!

2G ஸ்பெக்ட்ரம் ஊழலும், இணையப் பரப்புரைகளும்! #செஞ்சது சரியா சொல்லு ராசா!



.ராசா, ஜாமீனில் வெளியே வந்து, சில நாட்களில் புதிய தலை முறை தொலைக் காட்சிக்கு, தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்ற ரீதியில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.உடனே 2G வழக்கும், திரு.ஆ.ராசா அவர்கள் நேர்காணலும் பின்னே ஒரு புஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆன மாய பலூனும்! தகத்தகாய சூரியன் புறப்பட்டு விட்டார், ஊடகங்களின் பொய்யைக் கிழித்தெறிந்து விட்டாரென்ற ரீதியில் சில திமுக நண்பர்கள் கூகிள் ப்ளஸ், முகநூல் முதலான சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்ய ஆரம்பித்தார்கள். 

இணையத்தில் கட்சி  வளர்ப்பதோடு, இணையத்திலேயே ஆ.ராசாவைக் குற்றமற்றவர் என்று நிரூபிக்க அவர்கள் செய்த பரப்புரை முயற்சிகள், கொஞ்ச நாட்களிலேயே சுருதி குறைந்து, சுத்தமாகக் காணாமலும் போய்விட்டது! ஆ.ராசா பேட்டியை அடுத்து அடுத்து, நாடாளுமன்றக் குழு முன்னால் சிபிஐ, அமலாக்கத் துறை  கொடுத்த அறிக்கையில் கலைஞர் தொலைக் காட்சிக்குப் பணம் வந்த விதம் லஞ்சமாகத்தான் என்றும், கனிமொழி, தயாளு இருவரையும் கைது செய்ய முகாந்திரம் இருப்பதாகச் சொன்னதில் சுருதிப்பெட்டியே தொலைந்து விட்டதோ என்னவோ! 

அப்புறம் ரிசர்ச் அண்ட் அனலிசிஸ்  விங் எனப்படும் இந்திய உளவுத் துறை ஆராசா  சட்டவிரோதமாக ஹவாலா மோசடி செய்து சுமார் நூற்றுப்பத்துக் கோடி ரூபாய் வெளிநாட்டில் முதலீடு செய்தார் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது! இப்போது அதன் மீது சிபிஐ விசாரனை தொடங்கியிருப்பதில் சென்னையை சேர்ந்த ராஜேஷ் ஜெயின் என்பவர் கொஞ்சம் வித்தியாசமாக அலறியிருக்கிறார்.

ஆ.ராசா அவரது  நண்பரோ, உறவினரோ, கூடப் படித்தவரோ, ஒரே பொதுவான மொழி பேசுபவரோ, ஒரே மதத்தை சேர்ந்தவரோ இல்லையாம்! ஊழல் என்பது இதையெல்லாம் கடந்தது, கூட்டாளிகளாக்குவது என்பது இவருக்குத் தெரியாதோ?

இன்றைய தினமணி தலையங்கம், இணைய உளுந்துகள் பரப்புரை முயற்சியை தவிடுபோடியாக்கியிருக்கிறது. கொஞ்சம் அல்ல! மொத்தமாகவே!
கலையும் ஒப்பனைகள்..!

First Published : 09 Aug 2012 01:52:58 AM IST



2ஜிஅலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டது என்பது சுத்தப் பொய். இது தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி.) கற்பனைக் கணக்கு' என்று வாதம் செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள், தற்போது அது கற்பனை அல்ல, உண்மைதான் என்று ஒப்புக்கொள்ளும் நிலைமைக்கு ஆளாகியுள்ளன.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற பாஜக அரசின் கொள்கை முடிவின்படியே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்று ஐக்கிய முற் போக்குக் கூட்டணிக் கட்சிகள் கூறின. ஆனால், முதலில் விண்ணப்பம் கொடுத்தவர்கள் என்ற அடிப்படையை, முதலில் பணம் அல்லது காசோலை கொடுத்தவர்கள் என்று மாற்றியது தவறு என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டதால், இதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் மத்திய அரசு திணறிக் கொண்டிருக்கும் வேளையில், இப்போது சி.ஏ.ஜி. போட்ட கணக்கில் தவறில்லை என்பதைச் சொல்லாமல் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

செல்போன் நிறுவனங்களின் 122 உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், அந்த அலைக்கற்றைகளுக்கு மறுஏலம் நடத்தவுள்ள மத்திய அரசு, தற்போது நிர்ணயித்துள்ள அடிப்படைத் தொகை ஜிஎஸ்எம் (குளோபல் சிஸ்டம் ஆப் மொபைல்) சேவைக்கு 5 மெகாஹெர்ட்ஸ் ரூ.14,000 கோடி! சிஎம்டிஏ (கோட் டிவிஷன் மல்டிபிள் அக்ஸஸ்) சேவைக்கு ரூ.18,200 கோடி!

சிஏஜி போட்ட கணக்கு முழுக்க முழுக்க சரி என்பதை இதன் மூலம் நாம் அளவிட முடியும். தற்போது ஜிஎஸ்எம் சேவைக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள கட்டணத்தின்படி 1,800 மெகா ஹெர்ட்ஸ் விற்பதால் அரசுக்குக் கிடைக்கக் கூடிய அடிப்படைத் தொகை ரூ. 2.52 லட்சம் கோடி.

2008-ல் நடந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், ஒரு மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ரூ.1,658 கோடிக்கு விற்கப்பட்டது. 1,800 மெகா ஹெர்ட்ஸ் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.1.02 லட்சம் கோடி மட்டுமே! ஆனால் தற்போது, 1.50 லட்சம் கோடி அரசுக்கு கூடுதலாக கிடைக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் பரிந்துரைத்த தொகை, ஜிஎஸ்எம் சேவையில் 5 மெகா ஹெர்ட்சுக்கு ரூ.18,000 கோடி. இதை அப்படியே நிர்ணயம் செய்திருந்தால் அரசுக்குக் கிடைத்திருக்கக்கூடிய தொகை ரூ. 3.24 லட்சம் கோடி!

 2010-ல் மத்திய அரசு 3ஜி அலைக்கற்றைக்கு நிர்ணயித்த தொகையை அடிப்படையாகக் கொண்டு, 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் இந்திய அரசுக்கு ரூ.1.39 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், உரிமம் பெற்ற நிறுவனங்கள், ஒதுக்கப்பட்ட 6.2 மெகா ஹெர்ட்சுக்கும் கூடுதலாக அலைக்கற்றையைப் பயன்படுத்தியதற்கான கட்டணம் வசூலிக்காத வகையில் அரசுக்கு இழப்பு ரூ.36,000 கோடி என்றும், ஆக மொத்தம் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு' என்று இதைத்தானே தலைமைக்கணக்குத் தணிக்கைத் துறையினரும் சரியாகக் கணக்கிட்டுச் சொன்னார்கள்!

அந்த அறிக்கையைத்தானே வெறும் கற்பனை என்று மத்திய அமைச்சர்கள் கூறினார்கள்! கூட்டணிக் கட்சியின் மேடைகளில் எள்ளி நகையாடினர்! முறைகேடு நடந்தபோது அதற்கு அனுமதி மறுக்காத அன்றைய நிதியமைச்சரும், இப்போது உள் துறையிலிருந்து மீண்டும் நிதித்துறை பொறுப்பேற்றிருக்கும் ப. சிதம்பரமும், ஏனைய அமைச்சர்களும், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் படாதபாடு பட்டார்கள்!

3ஜி அலைக்கற்றை விலையை 2ஜி விலையோடு ஒப்பிடலாமா, அம்பாஸிடர் காரையும் பிஎம்டபிள்யு காரையும் ஒப்பிட முடியுமா என்று கேலி பேசினார்கள்! மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராக, ஆ.ராசாவுக்குப் பிறகு பொறுப்பேற்ற, கபில் சிபல், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் "இழப்பு ஒன்றுமே இல்லை' (ஜீரோ லாஸ்) என்று சொன்னாரே! ஆனால், இப்போது அதே அமைச்சர் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சரவைதான் இந்தத் தொகையை நிர்ணயம் செய்திருக்கிறது!

ஜீரோ லாஸ் (இழப்பு ஒன்றுமே இல்லை) என்று அமைச்சர் கபில் குறிப்பிட்டாலும், ஏழைகளும் செல்போன் பயன்படுத்தவே குறைந்த கட்டணத்தில் விற்றோம் என்று ஆ. ராசா கூறினாலும், அந்த வாதங்கள் எடுபடவில்லை. ஏனென்றால், 2008 அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்றவர்கள் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை விற்று பல மடங்கு லாபம் பெற முடிந்தது.

ஸ்வான் டெலிகாம் 340 மில்லியன் டாலருக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்று, வெறும் 45% பங்குகளை 900 மில்லியன் டாலருக்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் 365 மில்லியன் டாலருக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்று, 60% பங்குகளை 1.36 பில்லியன் டாலருக்கு டெலினார் நிறுவனத்துக்கு விற்றது.

பொன்முட்டையிடும் வாத்து என்பது தெரிந்தே, அதைப் பற்றி கவலைப்படாமல் அல்லது அந்த உண்மையை வேண்டுமென்றே மறைத்து, சாதாரண வாத்துகளுக்கான விலைக்கு விற்றால், அதற்குப் பெயர் ஊழல் அல்லாமல் வேறென்ன?


 பிப்ரவரி 2012-ல் உச்ச நீதிமன்றம் 122 உரிமங்களை ரத்து செய்தது. இன்னமும் மத்திய அரசு ஏலம் நடத்தவில்லை. நடத்தவிடாமல் சில சுயநல சக்திகள் தடுக்கின்றன என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. ஆகஸ்ட் 3-ம் தேதிதான் விலையை நிர்ணயித்துள்ளனர். ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களைத் தவிர, புதிய நபர்கள் யாரும் ஏலத்தில் பங்குகொள்ள முன்வரவில்லையே ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. இதுகூடக் கூட்டு சதியோ என்னவோ, யார் கண்டது?

இந்த ஏலம் மேலும் சில மாதங்கள் தள்ளிப்போகலாம் என்று சொல்லப் படுகிறது. ஒப்பனைகள் யாவும் கலைந்துபோன நிலையில், புது ஒப்பனையுடன் தோன்றுவதற்காக இந்தக் காலநீட்டிப்பு அவசியமாக இருக்கிறதோ என்னவோ?