Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

என் கேள்விக்கென்ன பதில் ?


ஒரு ஒட்டகம். பக்கத்தில் அதன் குட்டி.

குட்டி தாயிடம்  கேட்டது."அம்மா, எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன, கேட்டால் சொல்வாயா?"

தாய் சொன்னது :"தாராளமாகக் கேள்! தெரிந்ததைச் சொல்கிறேன்!"

"நமக்கு என் முதுகில் இவ்வளவு பெரிய திமில் இருக்கிறது?"




"நாமெல்லாம், பாலைவனத்தில் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்லவா? அதனால், நமக்குத் தேவைப் படும் தண்ணீரை, நம் உடலிலேயே சேர்த்து வைத்துக் கொள்வதற்காக திமில் இருக்கிறது."

"சரி அம்மா! அப்புறம் ஏன் நமக்கு மட்டும் உயரமான கால்கள், அகலமான குளம்புகள் என்று இப்படி கொஞ்சம் வித்தியாசமாகவே  இருக்கிறது?"




"நல்ல கேள்வி! இப்படி கால்கள் உயரமாகவும், குளம்புகளும்  இருப்பதால் தான் மணற்பாங்கான பாலைவனத்தில், நம்மால் வேறு எவரை விடவும் வேகமாக ஓட முடிகிறது!"

"சரிதான்! அப்புறம் இந்தக் கண்ணிமைகள் இவ்வளவு பெரிதாக, முடிகளோடு இருக்கிறது? சமயங்களில், சரியாகப் பார்க்கக் கூட முடிவதில்லையே?"




"என் செல்லமே! இது கேள்விகள் வாரமா?   கண் இமைகள் பெரிதாகவும், முடிகளோடும் இருப்பதனால் தான், பாலைவனத்தில் அவ்வப்போது ஏற்படும் மணல் சூறாவளியில், கண்களில் மண் விழுந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது?"

" அம்மா!நான் புரிந்து கொண்டது சரிதானா என்று சொல்! திமில்கள் இருப்பது, பாலைவனத்தில் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்வதற்காக. சரிதானா?"

"ஆமாம் செல்லம்!"

"உயரமான கால்கள், வித்தியாசமான குளம்புகள், பாலைவனத்தில் மண் பரப்பில் வேகமாக ஓடுவதற்காக! சரிதானா?"

"சரிதாண்டா செல்லம்!"

"கண் இமைகள் பெரிதாக, முடிகளோடு, கொஞ்சம் பயமுறுத்துகிற மாதிரி இருந்தால் கூட, அதுவுமே பாலைவனத்தில் அடிக்கடி ஏற்படும் மணல் சூறாவளியில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான்! அப்படித்தானே?"

"ஆமாண்டா ராசா!"




"அப்புறம்  எதற்காக நம்மை மீனாட்சி கோவில் திருவிழாக்களில் கலர்த் துணி எல்லாம் போர்த்தி, முன்னால் இழுத்துச் செல்கிறார்கள்? பாலைவன ஒட்டகங்களுக்கும், மீனாட்சி கோவில் திருவிழாவுக்கும் என்ன சம்பந்தம்?"

" இப்படியே போனால், மதுரையும் ஒருநாள் பாலைவனமாகிவிடும் என்பதை மதுரைமாநகர ஜனங்களுக்கு சிம்பாலிக்காகச் சொல்வதற்காகக் கூட இருக்கலாம்டா செல்லம்!"

"அம்மா! இன்னும் ஒரு கேள்வி!"

"கேளடா செல்லம்!"

"கோவில் திருவிழா  ஒட்டகம் முன்னால் வர மதுரையில் தான் சரி! அப்புறம் ஏன் நம் சகோதரர்களை காட்சிப் பொருளாக, மிருகக் காட்சி சாலைகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள்  ?"




"இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தால் நாம் ஒட்டகங்களாகப் பிறந்திருக்கவே மாட்டோமாடா செல்லம்! மனிதர்களாகப் பிறந்திருப்போம்!"

"அப்படியா சொல்கிறாய் அம்மா! இந்த மனிதர்கள் இருக்கிறார்களே, இவர்கள் தங்களை மூளைக் காரர்கள், ஆறறிவு படைத்தவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்களே! அது உணமைதானா?"




"மூளை என்று ஒரு உறுப்பு மனிதர்களிடம் இருக்கிறது! ஆனால்,அதைப் பயன்படுத்துவதே இல்லை! கைகால்களில் உழைக்கத் தெம்பும் இருக்கிறது!

உழைக்கத் தேவையே இல்லை,  நாங்கள் உங்கள் வீடு தேடி வந்து இலவசங்களால் நிரப்புவோம் என்று சொல்பவர்களிடம் மயங்கி, இருப்பதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். தொலைக் காட்சி என்று ஒன்று இருக்கிறதாம்! அதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அறிவு சுத்தமாகவே மழுங்கிவிடும் என்று கூடச் சொல்கிறார்கள்!"


"அம்மா! ...."

"போதுமடா செல்லம்! வியாதிகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது கூட, வியாதிகளுக்கு நாம் கொடுக்கும் வரவேற்பாக ஆகிவிடக் கூடும்! உருப்படியான நல்ல விஷயங்களை பேசலாமடா ராசா!"

ஒரு புதன் கிழமை! உ போ ஒ இல்லை!


இவரு பிரெஞ்சுக்காரராம்! தாடி வளர்க்கிறது கஷ்டமாய் இருந்திருக்கும் போல! மீசையிலேயே தோட்டம் வளர்த்திருக்கிறார்.

இவரு இத்தாலிக்காரரு! மீசையோட தாடியும் சேத்துப் பாத்தி கட்டி வளத்திருக்காரு!
முகம் தெரியுதுன்றதால, இவருக்கு ஒண்ணுமே கிடைக்கலையாம்!

இது என்ன கொடுமை சரவணான்றீங்களா? கொடுமையெல்லாம் கெடையாது! நாலு நாளைக்கு முன்னாலஜெர்மனியில்  பிராங்க்பர்ட் நகரத்துக்குப் பக்கத்துல தாடி, மீசை வளர்க்கறதுல கில்லாடிங்களுக்கான உலக அளவிலான போட்டி ஒண்ணு நடந்துச்சாம்.

ஒலக  மகா மீசை அழகன், தாடி அழகன் யார்னு தெரிஞ்சுக்கப் போட்டி நடந்ததாம். மீசை, தாடியை  முறுக்கிக்கிட்டுச் சும்மா  நூத்து அறுபது பேர் கலந்துகிட்டாங்களாம். அதுல இருந்து ரெண்டு, அதிகமில்லை ஜென்டில்மென், ரெண்டே சாம்பிள் தான்!

மீசைக்கு மட்டும்னு ஒண்ணு! மீசை தாடியோட ஒண்ணுன்னு! சரி நம்ம ஊர் மீசை,தாடி எதுவும் போச்சான்னு தெரியல!

ஏனாம்?

உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு விமரிசனம் கிறுக்கி எழுதித் தள்ளுற பதிவுலகக் கடமையிலே கண்ணாயிருந்துட்டாங்கன்னு, நடேசன் பூங்காப் பக்கம் திரியற பட்சி வந்து சொல்லிச்சு.

நாமும் பதிவுலகத்துல, குப்பை கொட்ட வந்திருக்கிற படியால, கடமைய வுட்ற முடியுமா?அதுக்காக, உ போ ஒவுக்கெல்லாம், உலகத் தர ரேஞ்சுக்கா   விமரிசனம் எழுத முடியும்?

அதனால,ரீமேக்  படத்துக்கு ஒரு ரெடிமேட் விமரிசனம், அதான், ஏற்கெனெவே யாரோ கொஞ்சம் நல்லாவே எளுதின  விமரிசனம், அத்தைப் போட்டு, நம்மோட பதிவுலகக் கடமையைக் கும்மியடித்துச் செஞ்சிடுவோம்!


from அம்மாஞ்சி by அம்பி 
திஸ்கி ஒண்ணு! --ஒரு புதன்கிழமைன்னு சரியாப் புரிஞ்சுக்கணும்.
விவகாரமா "ஏ " தரமான புதன் கிழமையான்னெல்லாம் கேட்டுறாதீங்க! வேறொண்ணுமில்லை ....பதில் தெரியாது!  இப்ப விமரிசனத்தைப் பாக்கலாமா?


"சில படங்கள் தான் குறைந்த பட்சம் ஒரு வாரமாவது நம் நினைவை விட்டு அகலாமல் நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இல்லை, நான் குருவி வகையறாக்களை பற்றி இங்கு பேசவில்லை. அந்த வகையில் வெட்னெஸ் டே குறிப்பிடதகுந்த படம். என் பதிவுக்கு தவறாமல் வரும் நிவி அக்கா சிபாரிசு செய்திருந்ததாலும், பல ஊடகங்களில் பாரட்டபெற்றதால் ஒரு வித எதிர்பார்ப்போடு இந்த படத்தை அணுகினேன்.

நயந்தாராவின் அபரிதமான நடிப்பால் தான் தமிழில் கஜினி கன்னாபின்னாவென ஓடியதாக்கும்! என்று அள்ளிவிட்டு என் டீமில் இருக்கும் ஒரு சப்பாத்தியிடம் வெட்னெஸ் டே டிவிடியை பண்டமாற்றம் செய்து விட்டேன்.

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்து விட்டு ஒற்றை பையுடன் தனி கிளைடர் விமானத்தில் ஜெய்பூர் அரண்மனை முன் வந்திறங்கி, உச்சா போக கூட ரீட் அண்ட் டெய்லர் சூட் மட்டும் அணிந்து காக்ரா சோளி, சராரா, பாந்தினி சில்க்ஸ் புடவைக்கு கை இல்லாத ரவிக்கையுடன், கார்னியர் லிப்ஸ்டிக் மின்ன "ஓ ஷப்பா, ஹை குடியே" என ஐநூறு பில்ஸ்பெர்ரி சக்கிப்ரேஷ் மைதாமாவு பெண்களுடன் ஆட்டம் போட்டு அதில் வரும் அடுத்தவன் பெண்டாட்டியை டாவடித்து, பின் அவள் தங்கச்சிக்கு தாலி கட்ட குதிரையேறி, முந்தின காதலிக்கு கண்ணீருடன் அல்விதா சொல்லும் ஷாரூக், சல்மான்களுக்கு மட்டுமே கதை பண்ணுவோம் நாங்கள் என்ற அடிப்படை நியூட்டன் விதிகளை தவிடுபொடி ஆக்கி விட்டார் இந்த படத்தின் டைரக்டர் நீரஜ் பாண்டே.

இந்தியாவின் நிர்வாக உள்கட்டமைப்பு, முக்ய முடிவுகள் எடுக்கும் திறன், தீவிரவாத தடுப்பு மற்றும் நீதி விசாரணை, தண்டனைகளின் தாக்கம் இவற்றை கொஞ்சம் கூட தயவுதாட்சண்யமின்றி உள்ளது உள்ளபடி காட்சிகளாக்கிய இயக்குனரின் தைரியத்தை எண்ணி நான் பிரமித்து நிற்கிறேன்.


ஒரு இந்தி படத்தில் ஸ்கர்ட் அணிந்த நாயகி கிடையாது, டைட் பனியனும், ரேபான் கிளாஸ் அணிந்த நாயகனும் இல்லை, ஏ.கே 56 ரக துப்பாக்கி, சாட்டிலைட் போன் வசதி கொண்ட வில்லனும் இல்லை.


பின்ன என்ன தான்யா இருக்கு இந்த படத்துல?


கதை இருக்கு, திரைக்கதை இருக்கு, உண்மைகளை டமால்னு போட்டுடைக்கும் தைரியம் மட்டும் இருக்கு.

ஒரு சாமான்யன் மனதில் குண்டுவெடிப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் எப்படி இருக்கும்? அதை அவன் எப்படி எதிர்கொள்வான்? என்பதை இதைவிட சிறப்பாக யாரும் காட்டமுடியாது. வசனங்கள் பல இடங்களில் பச்ச மிளகாய் ரகம்.
ஒரு மைக், வோடோபோன் நாய்குட்டி போல பின் தொடரும் கேமிராமேன் சகிதம் இன்று இன்வஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்ற பெயரில் பேட்டி எடுக்கும் அரை டிக்கெட்டு ஜர்னலிஸ்ட்டுகளை செமையா கலாசி இருக்கிறார் இயக்குனர். ஆனாலும் மும்பை குண்டுவெடிப்பில் இந்த அரை டிக்கட்டுகளின் அட்டகாசத்தை நாடு நன்கு அறியும்.

Spoofing என்று சொல்லபடும் பகடி பண்ணுதல் எப்படி? என்பதை இந்த படத்தை பார்த்து உதவி இயக்குனர்கள் கற்று கொள்ளலாம்.

ஒரு வளர்ந்து வரும் ஹீரோ தமக்கு வரும் கொலை மிரட்டலுக்கு பயந்து போலிஸ் கமிஷனரிடன் உதவி கேட்கும் போது தான் ஒரு மைனாரிட்டி, எனவே தனக்கு பாதுகாப்பு வேணும்! என சொல்லும் காட்சி தூள்.

ஒரு வலுவான, துரிதமான திரைகதை எப்படி இருக்க வேண்டும்? எனபதற்க்கு இந்த படம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு. படத்தில் நஸ்ரூதீன் ஷாவும், அனுபம் கேரும் மிக இயல்பாக நடித்து உள்ளனர். "ஏய்ய்ய், நான் பாக்கத் தான் சுள்ளான், சூடானா சூரியன்" என கத்தும் நம்மூர் பஞ்ச் பரமசிவன்கள் அவசியம் இந்த இருவரின் நடிப்பையும் பார்க்க வேணும்.

எனக்கிருக்கும் ஒரே கவலையெல்லாம் எக்காரணம் கொண்டும் இந்த படத்தின் தமிழ் உரிமையை நம்மூர் ரீமேக் ராஜாக்களான காப்பி-பேஸ்ட் ரவியோ, விஜய்யோ வாங்கி விட கூடாது. :)

மொத்தத்தில் 'ஏ வெட்னெஸ் டே' இந்தியாவின் மெத்தன போக்குக்கு ஒரு சவுக்கடி."

அம்பி எழுதின விமரிசனத்தைத் தேடியெடுத்துப் படிச்சப்புறம்  தான் தோணிச்சு!அப்படியே ரீமேக் ராஜா பட்டியலோடு சொதப்பல் ராஜா கமலையும் சேர்த்துக் கொண்டிருக்கக் கூடாதா?

ஆவநாழி, நளதமயந்தி தயாரிச்சப்பல்லாம், அதுல தான் நடிக்காம, சத்யராஜையும், மாதவனையும் நடிக்க வச்சதனாலதான்  படத்தையே பாக்க முடிஞ்சது! கமலுக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை வந்ததுன்னு தான் தெரியல!

கேபிள் காரர் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுன்னு சொல்றார். இன்னொருத்தர், சென்னையில மட்டும் தான் கொஞ்சம் ஓடுது, இன்னமும் மத்த இடங்களில் பிக் அப் ஆகலேங்கிறார்.

பதிவர்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை?

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாகப் பிரிந்து, பதிவுலக யுத்தத்தின் அடுத்த சீசன் களை கட்ட ஆரம்பித்தாகி விட்டது!

நல்லா  அடிச்சுக்குங்க  ராசா!  நல்லா இருங்க! வேறென்னத்தைச் சொல்றது?

உன்னைப் போல் ஒருவன் - வலையுலக விமர்சனங்களின் தொகுப்பு

 உண்மைத்தமிழன் சரவணன் சார்! பதிவுலகக் கடமையைச் செஞ்சாச்சு!குறிச்சு வச்சுக்கங்க!