Showing posts with label விசிக. Show all posts
Showing posts with label விசிக. Show all posts

மீண்டும் திருமாவளவன் சர்ச்சை! ஏன் #விசிக #பாமக #இடதுசாரிகள் போன்ற உதிரிகளை நிராகரிக்கவேண்டும்?

விசிகவின்  தலைவர் திருமாவளவன் மீண்டும் மீண்டும் ஹிந்து மதக் கோட்பாடுகளை மனம்போனபோக்கில் திரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அடிக்கடி அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்துவார். ஆனால் இஸ்லாம், கிறித்தவம் பற்றி அம்பேத்கர் என்னமாதிரி அபிப்பிராயம் கொண்டிருந்தார் என்பதைப் பேசவே மாட்டார். ஈவெரா படத்தைப் பயன்படுத்துவார். ஆனால் ஈவெராவின் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் போகிற    #வெங்காயநாத்திகம் கூட அவரது பேச்சில் இருக்காது. 




இந்த 43 நிமிட வீடியோவில், திருமா எத்தனை விஷயங்களை தெரிந்தே திரித்துப் பேசுகிறார் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? கிறிஸ்தவப் பெருவிழா நடத்துகிறார், கிறித்தவத்தை தூக்கிப் பிடிக்கிறார் என்பதா விஷயம்? இல்லை! ஹிந்து மதத்தின் மீது விஷத்தைக் கக்குகிறார். நிறையத் திரித்துப் பேசுகிறார்.

இவரை மாதிரி இஸ்லாமும் கிறித்தவமும்  பேசுகிற சமத்துவமும் சகோதரத்துவமும் நடைமுறையில் காணோமே, பதில் சொல்வாரா? படைக்கப்பட்ட அனைத்தும் சமமாகவா இருக்கிறது? கிருஷ்ணன் பிறந்த இந்த பாரதத்தை விடுங்கள், இவர் கொண்டாடுகிற இஸ்லாமிய நாடுகளில் எதிலாவது உயர்வு தாழ்ச்சி இல்லாத சமத்துவ சமூகம் இருக்கிறதா?

இங்கே கிறித்தவம் மனிதநேயம் உள்ளது, ஜெப ஊழியங்கள் மதம் மாற்றுவதற்காக அல்ல என்கிறாரே, ஜெப ஊழியம் என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகளில் வருமானம் ஈட்டுகிற தொழில்தான் என்பது தெரியாதா? DGS தினகரன் குடும்பம் ஜெபகோபுரம். இயேசு அழைக்கிறார் என்று கூவிக்கூவியே பலநூறு கோடிகள் ஆண்டுவருமானம் பெறுகிற கதை தெரியுமா தெரியாதா?காருண்யம் பெயரளவுக்குத்தான்! எல்லாம் காசுபார்ப்பதற்காக பயன்படுத்தப்படுகிற வெற்று வார்த்தைகள் தான் என்பது திருமா என்கிற தலித்தீயம் பேசுகிற வியாபாரிக்குத் தெரியாதா?

அவர் பேசுவதில் உண்மை இருந்தால் இஸ்லாமும் கிறித்தவமும் நடைமுறையில் சமத்துவம், சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்கின்றன என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் தெளிவுபடுத்தி விட்டுப் போக வேண்டியது தானே! அதைச் செய்யாமல் கிருஷ்ணன் தான் மனிதர்களில் சாதிப்பாகுபாடுகளை ஏற்படுத்தினார் என்று புரளி பேசுவானேன்? சைவர்கள் கிருஷ்ணனை, ஏற்றுக் கொண்டதில்லை என்கிறாரே, அதற்கென்ன ஆதாரம் காட்ட முடிந்ததாம்?

மதன் டயரியில் நவம்பரிலேயே திருமாவைக் குருமா வைத்து விட்டார் வீடியோ 22 நிமிடம் தான்!  

ஆனால் திருமா மாதிரியான உதிரிக் கட்சிகளின் உண்மையான அஜெண்டாவே வேறு! நரேந்திர மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, மோடி மீதான வெறுப்பை விதைப்பதற்காக, சிறுபான்மை இனத்தவர் வாக்குகளைப் பெறுவதற்காக, ஹிந்து மதத்தைப் பழித்துப் பேசவேண்டும்! தலித் மக்களின் ஏகோபித்த தலைவராகத் தன்னை project செய்துகொள்ள வேண்டும் என்பதுதான்! தலித் மக்களில் மிகக்குறைந்த சதவீதம் மட்டுமே இவரை ஆதரிக்கிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம்! உங்களுக்குத் தெரியாதா என்ன?!

பேச்சு வியாபாரிகளாக மட்டுமே அரசியல்களத்தில் உலாவரும் உதிரிக்கட்சிகளில், விசிக, மதிமுக, பாமக, இடதுசாரிகள் இன்னும் கமல் சீமான் ரஜனி விஜய் என்று கிளம்பியிருக்கும் புற்றீசல்களை தேர்தல்களில் முழுதாக நிராகரிப்பதிலிருந்தே நம்முடைய ஜனநாயகக் கடமை தொடங்குகிறது. 

இதில் காங்கிரசை விட்டுவிட்டேனே என்று அதிசயப்படுகிறீர்களா? காங்கிரசும் கூட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், இங்கே தமிழகத்திலும்  உதிரிதான்! ஆனால் என்ன, மேலே சொன்ன உதிரிகளை விட இன்றும் கூட 5% முதல் 6% வரை வாக்குகள் பெற முடிகிற கட்சி ( உண்மை நிலவரம் தனித்தே 234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே தெரியும்! ஆனால் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்கள் அந்தக் கட்சியில் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்!

ஜனநாயகம் என்பது தகுதியில்லாதவர்களைக் கழித்துக் கட்டுவதில் ஆரம்பித்து, மிஞ்சுகிறவர்களில் தகுதி வாய்ந்த வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது!

ஜனநாயகக் கடமையைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறீர்களா?

மீண்டும் சந்திப்போம்.   

பதிவு #1025 மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் சொல்ல விடுபட்டவை!

ங்கே இங்கே எங்கே சுற்றினாலும் தமிழக அரசியலுக்கு வந்து தானே ஆகவேண்டும்? தமிழக அரசியலில் கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயங்களாக, இங்கே சொல்ல விடுபட்டவைகளாக சில செய்திகளைப் பார்க்கலாமா?



ந்த 43 நிமிட விவாதத்துக்கு புதிய தலைமுறை சேனல் வைத்திருக்கிற தலைப்பே கொஞ்சம் காமெடியானது! நிறையவே விஷமத் தனமானது என்பதை தனியாகச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? தமிழக சோனியாG காங்கிரஸ் தலைவர் நாங்குனேரியில் பேசியதை வைத்துத்தான் இந்த விவாதம் என்பதால் என்னபேசினார் என்பதைக் கொஞ்சம் பார்த்து விடுங்கள்! செய்தி 9 நிமிடம். 

   
ந்திய தேசிய காங்கிரஸ் என்ற பெயரை எப்படி இந்திரா காண்டி, தேர்தல் கமிஷனில் எப்படி ஒரு சில்லறைத்தனமான வேலையைச் செய்து தக்கவைத்துக் கொண்டார் என்ற தகவல் இணையத்திலேயே தேடக் கிடைக்கும். ஆனால் அம்மணியின்  பிரதான குறிக்கோள், மத்தியில் தன்னுடைய ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது மட்டுமே என்றிருந்ததில் படிப்படியாக அதன் தேசியத் தன்மை என்பது நீர்த்துப் போய்க் கொண்டே வந்து ஏதோ ஒருசில மாநிலங்களில் மட்டும் சில MP சீட் கெலிக்கிற, கழுதை தேய்ந்து கட்டெறும்பான  கேலிக்கதை ஆகிப் போய்க் கிடக்கிறது. இந்தப் பின்னணியில் மேலே முதலில் உள்ள விவாதத்தைக் கவனித்துக் கேளுங்கள்! செல்வப் பெருந்தகை என்னதான் முட்டுக் கொடுத்தாலும்  திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் பெரிதாகிக் கொண்டே வருவது நன்றாகவே புலப்படுகிறது. என்ன விரிசல் வந்தாலும் கூட்டணி தர்மம்  கூட்டுக்  களவாணிகளை எப்படி ஒன்றுசேர்க்கும் என்பதும் கூட ஊகிக்க முடிவதுதான்! 


டகங்கள் தேடுகின்றனவோ இல்லையோ, ஊடகங்களைத் தேடித்தேடி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் விசிகவின் திருமாவளவன் என்பது கொஞ்சம் வினோதமாக இல்லையா? லண்டனில் அவர் பேசப்போன இடத்தில் ஒரு இலங்கைத்தமிழர் கரன்சி நோட்டுகளை வீசியெறிந்தார், அவரைப்போன்றவர்களால் தான் ஈழத்தில் இழப்பே, காசுதானே வேண்டும் இந்தா பொறுக்கிக் கொள் என்கிற மாதிரி ஒரு வீடியோ வைரலாகப் பரவியதும், அந்தக் கூட்டத்தில் விசிகவுக்கு நிதியுதவி கேட்டார் என்பதும், சீமான் பிரபாகரனோடு ஆமைக்கறி சாப்பிட்ட கதை மாதிரியே,  திருமாவளவனுக்கு சேரலாதன் என்பவர் வழியாக ஒரு சேதி அனுப்பினார் என்பதும், மூன்றுமாகச் சேர்ந்து ஒரு இக்கட்டான நிலைமையை ஏற்படுத்தியிருப்பதில், தன்னிலை விளக்கம் கொடுப்பதற்கு மனிதர் படாதபாடு படுகிறார். திமுகவோடு இணக்கமா பிணக்கமா என்ற சாதாரணமான ஒரு கேள்விக்குக் கூட கொஞ்சம் முறுக்கிக் கொண்டே பதில் சொல்கிறார் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

உங்களிடம் விடை இருக்கிறதா? இருந்தால்  பதிலைக் கொஞ்சம் சொல்லுங்களேன்! 

மீண்டும் சந்திப்போம்.                 
      

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!


தந்தி டிவியை விட்டு ரங்கராஜ் பாண்டே வெளியே வந்து விட்டபிறகும் கூடத் தலைப்புச் செய்தியாகவே இருக்கிறார். திராவிடர் கழகத்தின் வீரமணி, சுப. வீரபாண்டியன் போன்றவர்களைத் தடுமாற வைத்த கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி இன்னமும் பசுமையாக நினைவில் வைத்துக் கொள்கிற மாதிரி!


வீரமணியைப் பேட்டி எடுத்ததில் எடிட் செய்து தில்லு முல்லு செய்து விட்டதாக அன்றைக்குப் புலம்பியதே இந்த பேட்டியிலும் ஒரு கேள்வியாக வைக்கப்பட்டதற்கு பாண்டே என்ன பதில் சொல்கிறார் என்றும் பாருங்கள்!வீரமணி என்னென்ன கேட்பார் செய்வார் என்பதை மறைந்த பதிவர் டோண்டு ராகவன் தன் அனுபவமாக  கொஞ்சம் விரிவாகவே எழுதியிருக்கிறார். பாண்டே பேட்டியின் கீழே பார்த்தவர்கள் கமென்டுகள் சில இன்றைய கேள்விகளாக! கேள்வி கேட்டாலே இங்கு எவருக்கும் பிடிப்பதில்லை என்பதற்காகக் கேள்விகள் எழாமல் இருந்து விடுமா?  

ரங்கராஜ் பாண்டே தனக்கென்று யூட்யூப் பக்கம் ஒன்று வைத்திருக்கிறார்  

*******
திருமா அவர்கள், என்றேனும் ஒருநாள் தமிழக முதல்வராக வந்தால், ஏன் துணை முதல்வராக வந்தால்கூட அது நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதை. ஒரு முறை அவரின் இந்த உரையைக் கேட்டுவிடுங்கள்! என்று இந்தச்சுட்டியை பரிந்துரை செய்கிறார் பதிவர் +கல்வெட்டு Kalvetu இது அவர் வரிவடிவாக்கி இருப்பதன் ஒலிவடிவம்.

அதன் மேல் என் கருத்தாக .....

இங்கே இருக்கிற திராவிடங்களை விட, காங்கிரசை விட, #திருமா தகுதியானவர்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் #திருமா வுக்கு status quo என்கிற இப்போதிருக்கிற நிலையே போதும் என்றிருக்கிற மாதிரி #அரசியல்நிலைபாடு என்றால் கூட இருப்பவர்களே அதுமாதிரிக் கனவுகூடக் காண்பதில்லை என்பது நிகழ்காலச் சோகம்!

மைனாரிடியை வைத்து மெஜாரிடியைக் கட்டியாண்ட சாமர்த்தியம் கருணாநிதிக்கு இருந்தது #onetimewonder தான்! வேறெவர்க்கும் அமைவது கடினம்தான் என்கிற யதார்த்தம் சுள்ளென்று சுடுகிறதே! இப்படி ஒரு நான்கு நாட்களுக்கு முன்னால் கூகிள் ப்ளஸ்சில் சொல்லி இருந்தேன் அதற்கு அவர் திருமா மிகவும் கனிந்து வந்திருப்பதாக ஒரு பதிலும் சொல்லி இருந்தார்.


இந்த வீடியோ, நக்கீரனில் எவிடென்ஸ் கதிர் முதலானவர்கள் பேசியிருப்பது உணர்த்துவது திருமாவளவன் கனிந்திருக்கலாம், குட்டிகள் கனியவுமில்லை! அரசியல் முதிர்ச்சியைப் பெறவும் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறதே! என்ன செய்ய?

*******

Former Prime Minister Dr.Manmohan Singh evades question on the film
!!
0:02
20.2K views

மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! அரசியல்!அரசியல்!

`தேசியக் கட்சிகள் மாநில நலனில் சரியாக செயல் பட முடியாமல் இருக்கிறது. காவிரி பிரச்னை, பெரியார் அணை பிரச்னைகளில் வாக்கு வங்கி அரசியலுக்காக நடுநிலையோடு செயல் படவில்லை’ என குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி.தினகரன் சீறினார் என்கிற தலைப்போடு ஆனந்தவிகடன் செய்தி வெளியிட்டிருக்கிறது 
டி.டி.வி.தினகரன்
இங்கே நேரு காலத்தில் மாநிலங்களுடைய பிரச்சினைகள் அடியோடு புறக்கணிக்கப் பட்டதில் தான் மாநிலக்கட்சிகள் கிளைத்தெழுந்தன என்பதை நேற்று சரண்சிங் பிறந்தநாள் எப்படி  விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்ற செய்தியைத் தொட்டும், நேரு, சாஸ்திரி, தலைமைப்பண்பு என்கிற குறியீட்டுச் சொற்களில் ஏற்கெனெவே எழுதிய பல பதிவுகளிலும் பேசி இருக்கிறோம். இங்கே சென்னை மாகாணமாக இருந்த நாட்களில் இருந்தே திராவிட அரசியல் எப்படியெல்லாம் சந்தர்ப்பத்துக்கேற்ற மாதிரி முகமூடியுடன் சுயநல அரசியலாகவே வளர்ந்து கழகங்களானது என்பதன் நீட்சிதான் தினகரன் பேச்சு! கழகம் என்றாலேயே சூது, மோசடி, ஊழல், அதிகாரக்கொலைகள், மோசடி, ஊழல் செய்வதற்காகவே கூட்டணி தர்மம் என்கிற அர்த்தங்கள் புரிந்துவிடுகிறது, இல்லையா!!
*******     
இங்கே மூச்சுக்கு மூச்சு இது பெரியார் மண் என்று திராவிடம் பேசிப் பிழைப்பு நடத்துகிறவர்கள் பேசக் கேட்டிருப்பீர்கள்! ஈவெரா நினைவுதினம் இன்று. நண்பர் மாணிக்கம் கூகிள் பிளஸ்சில் பகிர்ந்த ஒரு படம் பழையநினைவுகளைக் கிளறி விட்டதோ?
 பதிவர் மறைந்த டோண்டு ராகவனின் இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டம் இது இதைப்படித்தால் மேலே உள்ள படத்துக்கும் டோண்டு சாரின் பதிவுக்கும் என்ன சம்பந்தம் எனப்புரிந்துவிடும் !


Blogger Suresh Ram said...
கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம், சாதி வெறி, ஆணாதிக்கம் அனைத்தையும் எதிர்த்து வந்த தந்தை பெரியாருக்கு கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை செய்யும் அதிசயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்த அதிசயத்தை ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் செய்து காட்டியிருக்கிறது.

http://www.vinavu.com/2010/09/17/untouchability-in-temples/
September 30, 2010 5:30 PM

அதிசயப்பட்டு மூக்கில் விரலை வைப்பதற்கு முன்னால் அவர் கொடுத்திருக்கும் சுட்டியில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டுத் தெளிவாகக் குழம்பவும்! #வினவு வழக்கமாகக் கையாளும் உத்திதான்!   

டோண்டு ராகவனின் ஒரு பின்னூட்டம் 
டோண்டு சாரின் பதிவையும் பதிவுக்கு வந்த 83 பின்னூட்டக்  கணைகளை யும் வாசித்துப் பார்க்கும்போது டோண்டு ராகவனோடு, அந்தநாட்களில் வலைப்பதிவு எழுதுவது எத்தனை சுவாரஸ்யமாக இருந்தது என நினைத்துப்பார்த்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது 
*******
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதன் தலைவர்  திருமாவளவனும் தொடர்ந்து  சர்ச்சைகளில், ஊடகவெளிச்சத்தில் சிக்குவது தற்செயலானதுதானா?

இப்போ தெரியுதா ஏன் விடுதலை சிறுத்தைகள் பொன்மாணிக்கவேலை பதவி நீக்கணும்னு சொன்னாங்கனு?  என்று கேள்வி கேட்கிறார்கள்! 

இன்றைய செய்திகள் எழுப்பும் அரசியல் கேள்விகள் இவை! உங்களிடம் விடை இருக்கிறதா? கொஞ்சம் சொல்லுங்களேன்!