ராகுல் காந்திக்கு அரசியல் சரிப்பட்டு வரவில்லையா? வேறு வேலை பார்க்கப்போகலாமே!



ராகுல் காண்டி  சும்மா இருந்தாலும் விட மாட்டார்கள் போலிருக்கிறது! காங்கிரசின் உதவித் தலைவராம்! சோனியாவுக்கு அடுத்தபடி அதிக அதிகாரம் படைத்தவராம்!அதைவிடப் பெரிய தமாஷ், காங்கிரசை மாற்றிவிட முடியுமென்று தனக்கு நம்பிக்கை இருப்பதாக ராகுல் பேசியிருப்பதுதான்! காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களின் அலப்பறை, கும்மிச்சத்தம் தாங்க முடியவில்லை! இவ்வளவு கஷ்டப்பட்டாவது கூஜா தூக்கவில்லை என்று யார் அழுதது?


சென்ற மாதம் பதினேழாம் தேதி திரு ராமச்சந்திர குஹா தன்னுடைய புத்தகமான Patriots and Partisans வெளியிடப்பட்டதை  ஒட்டி திரு விவேக் கௌலுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் மிக வெளிப்படையாகவே, ராகுல் சராசரிக்கும் மிகவும் கீழே! (அரசியல் தவிர) வேறு வேலை பார்க்கப் போகட்டும்  என்று சொல்லியிருந்தார். இந்தப் பேட்டியில்,திரு ராமச்சந்திர குஹா வேறு சில முக்கியமான விஷயங்களையும் குறிப்பிட்டுச் சொல்லி ருக்கிறார். புத்தகம் இப்போது வாசிப்பில் இருக்கிறது.இரண்டு வருடங்களுக்கு முந்தி எழுதிய ஒரு பதிவு, பொருத்தம் கருதி, இப்போது மீள்பதிவாக.
ooOoo

 
 


ஜான் பிட் ஜெரால்ட் கென்னெடி! ஒரு சகாப்தம் என்று சொல்லிக் கொள்ளலாம்! ஆனால் அந்த சகாப்தத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு என்ன பலன் இருந்தது என்பதை மட்டுமே அடிப் படையாக வைத்துப் பார்த்தால், இந்த மாதிரி சகாப்தங்கள் என்று சொல்லப்பட்டவர்கள் ஒரு சாபமாகவே இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு சொல்லும். அமெரிக்க அரசியலில், ஜனநாயகக் கட்சியின் வரலாற்றில் ஏறத்தாழ ஐம்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த கென்னெடி குடும்பத்தில் இருந்து, வருகிற 2011 ஆம் ஆண்டில் எவருமே இருக்க மாட்டார்களாம்! இதை ஒரு சகாப்தத்தின் முடிவு என்று  வைத்துக் கொண்டாலும் சரி! ஒரு சாபத்தின் முடிவு என்று வைத்துக் கொண்டாலும் சரி!



இந்த
செய்தியைப் பார்த்த போது முதலில் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது! அப்புறமாக, "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று நன்னூல் சூத்திரம் மாற்றங்களைக் குறித்துச் சொல்வது எவ்வளவு பொருத்தமானது என்பதும் யோசித்துப் பார்க்கையில் தெளிவாகப் புரிந்தது!  


கடைசிப் பாராவைக் கொஞ்சம் கவனியுங்கள்! நேருவின் அமெரிக்க விஜயம் கென்னடியைப் பொறுத்தவரை மிகக் கசப்பானதாகவே இருந்ததாம்.. நேருவின் பார்வை, கரங்கள் தன் மனைவியின் மீது படுவதை சகித்துக் கொள்ள முடியாத எரிச்சல் கென்னடிக்கு இருந்ததையும்  இந்தப் பாரா சொல்கிறது. பெண்கள் என்றாலே நேருவுக்கு ஒரு "கிறக்கம்" இருந்ததையும் சொல்கிறது.



இங்கேயும், நேரு குடும்பத்து வாரிசுகள் எவருமே அரசியலில் இல்லாமல் போகிற ஒரு காலம், இந்த தேசத்தைப் பிடித்த சாபத்தில் இருந்து விடுதலை என்ற திருநாளும் வாராதோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா!

மாற்றங்கள் வரும்! புதிய மொந்தையில் பழைய கள்ளை மட்டுமே பரிமாறத் தெரிந்த, ஊழல் முடை நாற்றம் பிடித்த காங்கிரஸ் கட்சியின் பிடியில் இருந்து இந்த தேசம் விடுதலை பெறும் திருநாளும் வரும்!

நம்பிக்கையாகவும், பிரார்த்தனையாகவும்!


*******
தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றால் என்ன?
 
பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னால், குறிப்பாக, நரசிம்ம ராவ் காலத்தில் அறிமுகமான பொருளாதார சீர்திருத்தங்கள் சமயத்தில் இந்த வார்த்தைகளை விளக்குவது, விளங்கிக் கொள்வது கடினமாகவே இருந்தது.இணையத்தில் சில வருடங்களுக்கு முன்னால், பிரிட்டிஷ் இளவரசி டயானா தன்னுடைய காதலர் டோடி பேயட் உடன் கார் விபத்தில் பரிதாபமான முறையில் இறந்துபோன சம்பவத்தைத் தொட்டு, குரூரமாக இருந்தாலும் கூட அதிலும் கூட கொஞ்சம் நகைச்சுவை கலந்து ஒரு வியாக்கியானம் உலாவந்து கொண்டிருந்தது, இன்றைக்கு மறுபடி கண்ணில் பட்டது.
ஒருவர் கேட்கிறார்: தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றால் என்ன?

அதற்குப் பதில் வருகிறது பாருங்கள்!! "இளவரசி டயானாதான்!"

எப்படி என்று மேலும் விளக்கம் கேட்பதற்கு முன்னாலேயே வருகிறது.

"ஒரு பழமைவாதப் பெருமை பேசும் ஆங்கிலேய அரச குடும்பத்துப் பெண், இளவரசி தன்னுடைய எகிப்துக் காதலனோடு, பிரெஞ்சு  சுரங்கப்பாதையில் டச்சு எஞ்சின் பொருத்திய ஜெர்மன் காரை
, பெல்ஜியத்தை சேர்ந்த டிரைவர் ஸ்காட்ச் விஸ்கியைக் குடித்துவிட்டு ஓட்ட, இத்தாலியப் பத்திரிகையாளர் துரத்த எங்கேயோ எப்படியோ இடிபட்டு விபத்தாகிக் காயப்பட்டு,  அமெரிக்க டாக்டர் பிரேசிலிய மருந்தைக் கொடுத்து சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இறந்து போனாரே அது தான்!"

தாராளமயம், உலகமயம் என்பதை இதை விட சுருக்கமாக, பொருத்தமாக சொல்லிவிட முடியாது என்று தான் தோன்றுகிறது.



இங்கே உலகமயம்,தாராளமயம்  என்றால், எங்கோ ஒரு வெளிநாட்டில் பிறந்தவர்  இங்கே வாழ்க்கைப்பட்ட  ஒரே காரணத்தால், அந்தக் குடும்பத்துக்குக் கூஜா தூக்குவதற்கென்றே ஆட்களும் அதிகாரிகளில் சிலரும் இருப்பதால் கட்சி ஆட்சி இரண்டையும் கைப்பற்ற முடிகிறது.அந்தக் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தால் அனுபவமே இல்லாத ஒரு சிறுபிள்ளை, வருங்காலப் பிரதமராக சித்தரிக்கப்படுகிறார். இத்தனை தாராளம், உலகமயம் வேறெந்த நாட்டில் நடக்கும்?
 

உங்களுக்கு எப்படியோ...?!

ஒரு புத்தகம்! அது தந்த அறிமுகத்தெளிவு! ஒரு விமரிசனம்

.....
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதிய ஹிந்துமதம்-ஒரு அறிமுகத் தெளிவு சென்னை சந்தியா பதிப்பக வெளியீடாக 277 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.விலை ரூ.170/-
இந்தப்புத்தகத்தை, இதன் சிலபகுதிகள் கூகிள் வலைக் குழுமங்களில் வெளிவந்து கொண்டிருந்த தருணங்களிலேயே படித்திருக்கிறேன்.புத்தகத் தலைப்பே சொல்வது போல இது இன்றைய இந்திய இளைஞர்களுக்கான ஒரு நல்ல அறிமுகம், அவசியமானதும் கூட!


இப்படி இந்தப் புத்தகத்துக்கான முன்னோட்டமாக 2011 கடைசியில் கூகிள் ப்ளஸ்ஸில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டது. என்னுடைய எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. எத்தனையோ ஆர்ப்பரிப்புக்களுடன் பல புத்தகங்கள் புத்தகக் கண்காட்சிகள் வந்து போகலாம் வந்த சூட்டுடனேயே மறந்து போகலாம். ஆனால் எந்த ஆரவாரமுமில்லாமல் வந்த இந்தப் புத்தகம் இளைய தலைமுறையினரிடம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இன்றைக்கு வந்த மின்னஞ்சல் தெளிவாகவே சொன்னது. பெங்களூருவில் இருந்து திரு கே வி முகுந்த் என்ற இளைஞரிடமிருந்து வந்த இந்த  விமரிசனத்தை  அவருடைய அனுமதி இல்லாமலேயே இங்கே  பதிவாகப் பகிர்ந்து கொள்கிறேன்.இன்றைக்கு கூகிள் ப்ளஸ்ஸில்   நண்பர்கள் ஹிந்து மதம் பற்றியும், வேறு சில விஷயங்களையும் விவாதித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது இந்த மாதிரித் தெளிவைத் தருகிற அறிமுகமாக நூல்கள் இன்னும் அதிகமாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் சம்பிரதாயமான அனுமதிக்கெல்லாம் காத்திருக்க வேண்டாம் என்று இங்கே...!
திரு கே வி முகுந்த்  எழுதுகிறார்.....



Overall, I found the book an engaging reading. The book should appeal to the logical mind of the present-day youth, who are products of the scientific education system and to whom atheism appears to be a fashionable option. Although the author claims that this book is primarily targeted at beginners, this book should serve as a good, clarifying, companion to even those who have had some kind of initiation into the literary works of Hinduism.

The author’s effort in demystifying Hinduism to the target audience is commendable. The book, to a greater extent, succeeds in unravelling the vedic religion in its truest form - free of its biases and abuses. The book answers some of the most fundamental questions and misconceived notions of Hinduism. Also, the choice of appropriate pramanams to drive home the concepts remains this book’s biggest asset. The chapters clarifying the ritual aspects of Hinduism make for interesting reading. In addition, the wealth of information representing different various traditions in the cross-references adds a lot of credibility to this book and reinforces its unbiased nature.

நுழைவு வாயில்’ chapter serves as a good introduction section. It helps to set the expectations right at the beginning. ‘உருவாய் அருவாய்’ chapter clarifies the foundations of Hindu philosophy quite well. However, when you point out that most schools draw from the same source (Veda/Vedanta) for Tattva Nirupanam, you could have added a couple more lines to explain why the knowledge of tattvams vary across siddhanthams, despite drawing from the same source. Though you have pointed out who the paramatma is according to each sampradhayam, an explanation regarding why Advaita recognizes one tattvam, while Visistadvaitam recognizes three and so forth could be a clarifying inclusion.

ஒரு ஜீவனுக்கு கர்மாதீனமாக ஒரு சம்பிரதாயத்தில் ஈடுபாடு கிட்டுவதாகவும், ஒரு ஆகம-ரீதியான சம்பிரதாயத்தை மற்றொரு சம்பிரதாயத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றத்-தாழ்வுக்கு இடம்  இல்லை என்று கூறியிருந்தீர்கள். கர்மத்தின் அடிப்படையில் மனிதர்களுக்குள் ஏற்றத்-தாழ்வு நிலவும் பொழுது, கர்மத்தின் அடிப்படையில் கிட்டும் சம்ப்ரதாய சம்பந்தத்தில் ஏன் ஏற்றத்-தாழ்வு இருக்கக் கூடாது என்ற கேள்வி எழுகிறது.

'நீயா நானா' தலைப்பில் மதத்தை ஒரு அலுவலகமாக பாவித்து செய்யப்பட்டுள்ள ஒப்பீடு மிக அருமை. இது தொடங்கி முடிவு chapter பர்யந்தமாக பல லௌகீக உவமைகள் தந்து கருத்துகளைக் கையாண்டிருக்கும் விதம் பாராட்டிற்குரியது.

In this age of information revolution, where every possible information (authenticated and false) is available to seekers at the click of the button, the chapters on what to read to know about Hinduism, how to read them and what to avoid is a welcome necessity. I also appreciate the provisioning of references at the rear end, thereby encouraging the reader to probe further if he/she is interested.

புத்தகம் முழுவதிலும் உங்கள் சுய-நம்பிக்கையை வெளிப்படுத்தும் கருத்துகள் இல்லாமல் பொதுவாக மதச்சார்பின்றி விஷயங்களைச் சொன்னது இந்த புஸ்தகத்தின் இன்னொரு விசேஷம்.  Today’s youth looks at religion with a lot of pessimism. It is imperative to be as unbiased as possible in demystifying Hinduism to such a target audience.

The book is replete with ‘‘warnings’, which I think will help the reader to exercise his/her judgment before accepting the words of such people/books at face value. One such example is reproduced below:

இதிஹாசங்கள்-புராணங்கள் எல்லாம் வேதாந்தம் புகட்டும் தத்துவ உண்மைகளை பல கதைகளின் மூலமும், பெரியோரின் விளக்கங்கள் மூலமும் நன்கு விளக்கி காட்ட வந்தவை. அவற்றில் மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கு விதிமுறை தேடுதல் என்பது ஹிந்து மதம் சொல்லாதது.

இது கல்வெட்டில் பொறித்து வைக்க வேண்டிய வாசகம். ஏனெனில், இன்று இதிஹாச-புராணங்களை கதா-காலக்ஷேபமாக சாதிக்கிறேன் என்று கண்டதையும் அர்த்த-விசேஷம், வாழ்வுக்கு விதிமுறை என்றெல்லாம் சொல்ல முனைபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.  

In sum, one needs to go through the book multiple times to understand it better. The book is a culmination (and a high-level synthesis) of the thoughts that have circumnavigated this country under the broad aegis of Hinduism. The author, while undertaking the arduous task of simplifying Hinduism for the present day youth, can be said to have broadly succeeded in his effort. The collection of essays could have been ordered better as I felt that the reader is taken back and forth between various topics. Also, it would have been better if the book went through one more round of proofreading as there are a few spelling mistakes.

This is all that comes to my mind now. If something is left unsaid, I shall follow it up.

இந்த இளைஞருடைய வலைத்தளத்தைப் பார்த்த பிறகு எனக்கேற்பட்ட பிரமிப்பை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

http://sreevaishnavam.wordpress.com/2013/01/16/hinduism-an-introduction-blurb/

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

......

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பது பழமொழி அல்லது சொலவடை.வேளாண் பெருமக்கள் தங்களுடைய சொந்த சோகங்களையும் தாண்டி,ஊருக்கு உணவு படைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் தங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் சூரியன் முதல் உழவுமாடுகள் வரை ஒவ்வொன்றையும் நினைத்து நன்றியோடு குடும்பம் சுற்றம், ஊரோடு பொங்கலிட்டு, கூடியிருந்து அனுபவிக்கிற ஒரு இனிமையான நாளாகக் காலம் காலமாக இந்தப் பொங்கல் திருநாள்  இருந்து வருகிறது.

ஆகப் பொங்கல் என்றாலே ஒரு சமுதாயம் ஒற்றுமையாகக் கூடி இருந்து அனுசரிப்பது, அனுபவிப்பது!இந்தத் தைமுதல்நாளில் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! 


இங்கே தைப் பொங்கல் உழவர் திருநாள் என்று கொண்டாடப்படுகிற மாதிரியே இந்தப் பரந்த பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் மகர சங்கராந்தி என்றும் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.அரசியல்வாதிகள் புகுந்து  குட்டையைக் குழப்புவதற்கு முன்னால், இந்தத் தை முதல் நாள் ஒரு சமுதாயமாக அனைத்துத் தரப்பினரும், ஒன்று சேர்ந்து கொண்டாடுகிற திருநாளாகத்தான் தமிழ் நாட்டிலும் இருந்து வந்தது  தைமுதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து ஒரு குழப்பம் இடையில் சில காலம் இருந்தது.அந்தக் குழப்பத்தை வலிந்து திணித்தவர்களே இப்போது அதைப் பேசுவதில்லை!


மக்களுடைய மனவோட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் செய்யப்படுகிற எதுவுமே நிலைப்பதில்லை என்பது இந்த ஒரு விஷயத்திலேயே தெளிவானது.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளில்  மாடாய் ஒழச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான் என்ற கேள்விக்கு தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை  நிறையாது சிந்திச்சு முன்னேற வேணுமடி என்ற பதில் இருக்கிறதே!


நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! 

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! வரலாறும் படிப்பினையும்!



வெள்ளிக் கிழமைக் கேள்விகள்! அதென்ன, வெள்ளிக்கிழமைதான் கேள்வி வருமா, அப்படியானால் மற்ற கிழமைகளில் என்ன வரும் என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், இங்கே எழுதிக் கொண்டிருந்த, இன்னமும் இந்தக் கதைகளைத் தேடியே இந்தப்பக்கங்களுக்கு புதிய நண்பர்களை வர வைத்துக் கொண்டிருக்கும் பீர்பால் கதைகளில் கடைசியாக எழுதிய கதையைப் பார்த்து விட்டு, அப்புறம் கேள்விக்குப் போகலாம்!




பாதுஷா, பீர்பாலுக்குத் தான் எப்போதும் ஆதரவு தருகிறார்! பாதுஷாவுடைய ஆதரவு இல்லா விட்டால், இந்த பீர் பாலை விட நாங்கள் பெரிய புத்திக் கொழுந்துகள் என்பதைக் காட்ட முடியுமாக்கும் என்று பாதுஷா காதில் விழுகிற மாதிரியே, அரசவையில் இருந்த நிறையப் பேர் பொருமிக் கொண்டிருந்தார்கள்.

அக்பருக்கும் அப்படித்தான் தோன்றியது! இந்த பீர்பால் ரொம்பவும் தான் துள்ளுகிறான்! பாதுஷா என்று கூடப் பார்க்காமல், எப்போதும் தன்னை முட்டாளடித்துப் பார்க்கிறவனை, நாமும் பதிலுக்குப் போட்டுப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் பாதுஷாவுக்கு வந்தது. இந்த பாதுஷாக்களே நிலையில்லாத புத்திக்காரர்கள்! எப்போது கனிவாக இருப்பார்கள், எப்போது கடித்துக் குதறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பீர்பாலை சிக்க வைப்பது, மற்றவர்கள் முன்னால் முட்டாளாக்கிக் காட்டுவது  என்று பாதுஷா முடிவு செய்துவிட்டு, ஒரு சோதனை வைத்தார்.

எல்லாம் ஒரு செட் அப் தான்! இப்படி ஆளைக் கவிழ்க்கிற கலையில் பாதுஷாக்களுக்கு இருக்கிற தேர்ச்சி, வேறு உருப்படியான விஷயங்களில் இருந்ததில்லை என்பது சரித்திரம். சரித்திரம் என்ற உடனேயே கற்பனை, புனைவு ,கனவு இவைகளும் வந்து விட வேண்டும் இல்லையா?

அரசவையில் பாதுஷா பம்பீரமாக சபையை இப்படியும் அப்படியுமாகப் பார்க்கிறார்.அல்லது கம்பீரமாகப் பார்ப்பது போல நினைத்துக் கொண்டார்.

"
எனக்குப் பிரியமானவர்களே! இன்று அதிகாலை நான் ஒரு கனவு கண்டேன்! எனக்கு உண்மையானவர்கள், பிரியமானவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பதை அந்தக் கனவில் தெரிந்து கொண்டேன்!" என்று சொல்லி விட்டு சபையை அப்படியும் இப்படியும், இப்படியும் அப்படியுமாக மறுபடி பார்த்தார்.

சபையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! புரிந்து என்ன ஆகப் போகிறது! சபைக்குப் போவதே சம்பாதிப்பதற்குத்தானே!

"
இன்று மாலை நீங்கள் வரிசையாக ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போக வேண்டும். அங்கே நீங்கள் என் மீது பிரியத்துடனும், உண்மையாகவும் இருந்தால்  உங்களுக்கு ஒரு கோழி முட்டை கிடைக்கும். அதை இங்கே கொண்டு வந்து காண்பிக்க வேண்டும். என் மீது விசுவாசமாக இருப்பவர்கள் யார் என்பது அப்போது தெரிந்து விடும்." என்று சொன்னார் அக்பர்.

கோழி முட்டைக்கும் விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்! பாதுஷாக்கள் கேள்வி கேட்பவர்களை எப்போதுமே விரும்புவதில்லை.

சபையில் இருந்த பிரமுகர்கள் ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போனார்கள். குதித்தார்கள். ஆளுக்கு ஒரு கோழி முட்டையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி வெளியே வந்தார்கள். கோழி முட்டை கிடைத்ததோடு, கொஞ்சம் காசும் கிடைக்கும் என்ற சந்தோஷத்தோடு அரண்மனைக்குப் போனார்கள்.

பீர்பாலும், தலைவிதியே என்று குளத்தில் குதித்தார். குளத்தில் குதித்தால், உண்மையாக இருப்பவருக்குக் கோழிமுட்டை கிடைக்கும் என்று அக்பர் சொன்னபோதே இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பதை அறிந்திருந்தார். அவருக்கு கோழி முட்டை கிடைக்கவில்லை. அதனால் என்ன, எப்போதும் கைகொடுக்கிற புத்தி சாமர்த்தியம் இருக்கிறதே, அது போதாதா! இரண்டு கைகளையும் உயர்த்திப் பிடித்தபடி, சேவல் கொக்கரிக்கிற மாதிரி சத்தம் எழுப்பிக் கொண்டேஅரசவைக்குப் போனார்!

அக்பருக்குக் கொஞ்சம் ஆச்சரியம்! முட்டை கிடைக்கவில்லை என்றதும், பீர்பால் சோர்ந்த முகத்துடன், அப்போதாவது கொஞ்சம் பணிவோடு சபைக்கு வருவான் என்று நினைத்தால், சேவல் கொக்கரிக்கிற மாதிரிக் கொக்கரித்துக் கொண்டல்லவா வருகிறான்! என்ன ஆயிற்று இவனுக்கு?

"
பீர்பால்! சேவல் மாதிரிக் குரல் எழுப்புவதை நிறுத்து!"

"
அப்படியே ஆகட்டும் ஹூசூர்!" என்று பணிவுடன் சொன்னார் பீர்பால்!

"
எங்கே உன் கைகளில் முட்டையை காணோம்?" பாதுஷா கொஞ்சம் எகத்தாளமாக பீர்பாலிடம் கேள்வி கேட்டார். ஏற்கெனெவே பேசி வைத்து மற்றவர்கள் எல்லோருக்கும் முட்டை கிடைக்கிற மாதிரிச் செய்து விட்டு, பீர்பாலை வெறும் கையுடன் வரவைக்கிற திட்டத்தைப் போட்டதே அவர் தானே! இன்னும் சிறிது நேரத்தில் பீர்பால் காலில் விழுந்து கெஞ்சப் போகிறான் என்ற நினைப்பே பாதுஷாவுக்கு பாரசீகத்து மதுவைக் குடித்த போதை மாதிரி சுகமாக இருந்தது.

"
நான் சேவல் ஹூசூர்! என்னிடம் எப்படி முட்டை இருக்கும்?"

"
முட்டையைப் பற்றிக் கேட்டால் நீ சேவலை பற்றி எதற்குச் சொல்கிறாய்?" பாதுஷாவிற்குக் கொஞ்சம் குழப்பம் வர ஆரம்பித்தது. பீர்பாலை ஜெயிக்கவே முடியாதோ?

"
ஹூசூர்! இங்கே இருப்பவர்கள் அனைவருமே பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் தான்! ஆனால் குளத்தில் குதித்தவுடனேயே முட்டை வந்து விடுமா? அதற்கு சேவல் துணை வேண்டாமா? நான் சேவலாக இருந்து இவர்களுக்கு முட்டை கிடைக்கச் செய்தேன். சேவலிடம் எப்படி முட்டை இருக்கும்?" என்றார் பீர்பால்.

தங்களை பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் என்று பீர்பால் சொன்னதிலேயே குளிர்ந்து போன சபையோர்கள், தாங்கள் பெட்டைகளாக்கப் பட்டதைக் கூட மறந்து வாரே வா என்று கரகோஷம் எழுப்பினார்கள்.

பாதுஷாவுக்கு வேறு வழி இருக்கவில்லை!

கெஞ்சினால் மிஞ்சுவன், மிஞ்சினால் கெஞ்சுவன் என்று பிற்காலத்தில் குடிலன் என்ற கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு இரண்டும் கெட்ட தன்மையை மனோன்மணீயம் என்ற நாடகக் காப்பியத்தில் பெ. சுந்தரம் பிள்ளை என்பவர் எழுதி வைக்கப் போகிறார்   என்பது அன்றைக்கு அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்!

தன்னுடைய தோல்வியை மறைத்துக் கொண்டு பீர்பாலைப் புகழ்ந்து பரிசுகள் கொடுத்து அப்போதைக்கு சமாதானம் செய்து கொண்டார் டில்லிப் பாதுஷா!

வேறென்ன செய்ய முடியும்!
 
ooOoo 

இந்தப்பக்கங்களில் அரசியல் உள்ளிட்டு எத்தனையோ விஷயங்களைக் குறித்து எழுதிக் கொண்டிருந்ததில், சென்ற ஆண்டு, வேண்டுமென்றே ஒரு பெருத்த இடைவெளி. சுமார் ஏழுமாதங்கள், பதிவுகளை எழுவதில் ஏகப்பட்ட இடைவெளி.வெறுமனே பதிவுகளை எழுதிக் கொண்டிருப்பதனால் என்ன பயன்? நேரடியாகக் களம் இறங்கிச் செயல் படுகிற மாதிரி வருமா? என்னுள் உறுத்திக் கொண்டிருந்த இந்தக் கேள்விக்கு களத்தில் இறங்கிப் பார்த்து விடுவது சரி என்று முடிவெடுத்தேன். தொழிற்சங்கம், அரசியல் என்று முப்பது ண்டுகளுக்கும்  மேலாகக் களத்தில் இறங்கிப் பணியாற்றிக் கொண்டிருந்தவன் வேறு மாதிரி முடிவெடுக்க முடியாதே!

புதுத்திண்ணை இணைய இதழில் திரு மலர்மன்னன்
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் எழுதிய ஒரு வேண்டுகோள் களத்தில் இறங்கிப் பார்த்து விடுவது என்ற முடிவுக்குத் தோதாக வந்து சேர்ந்து கொண்டது. புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் ஆதரவுக் கரங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என்ற செய்தியை கூகிள் ப்ளஸ் முதலான தளங்களில்  பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.சென்ற அக்டோபர் கடைசி வரை, தொடர்ச்சியாக பொதுவெளியில் ஒரு இயக்கமாகவே நடத்திவந்ததுகடந்த இரு மாதங்களாகக் குறைந்தும் போனது கிடைத்த அனுபவங்கள் அப்படி! அனுபவங்களைப் பரிசீலனை செய்தத்தில் கிடைத்த தகவல்கள், அப்படியே பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள முடியாதவையும் கூட!

ஞானாலயா ஆய்வு நூலகம்  மாதிரியான புத்தக சேகரங்கள் பாது காக்கப்பட வேண்டியவை.கௌரவிக்கப்பட வேண்டியவை.இந்த விஷயத்தில் உங்களால் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்குத் தோன்றுவதை, இந்தச் சுட்டிகளில் இருக்கும் செய்திகளைப் பார்த்து விட்டு நேரடியாக புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கே அனுப்பும்படி வேண்டிக் கொள்கிறேன்.



ooOoo


திரு ராமச்சந்திர குஹா எழுதிய Patriots and Partisans புத்தகம்,  ப்ளிப்கார்டில் ஆர்டர் செய்திருந்தது இன்றைக்குக் கைக்குக் கிடைத்தது. நேற்றைக்கு அனுப்பிவிட்டதாக மின்னஞ்சல் இன்றைக்கு டெலிவரி. இந்த நிறுவனத்துடைய சேவை என்னை வியக்க வைக்கிறது. இந்த ஆண்டு வாசிக்க நினைக்கும் புத்தகமாக இதை மூன்று நாட்களுக்கு முன்தான் கூகிள் ப்ளஸ்ஸில் பரிந்துரை செய்திருந்தேன்.

இப்போது வெள்ளிக்கிழமைக் கேள்வியாகக் கேட்க நினைப்பது!

தி டெலிகிராப் நாளிதழில் சென்ற வருடம் நவம்பரில் வெளியான திரு ராமச்சந்திர குஹாவின் கட்டுரையில் 2009 பொதுத் தேர்தல்களின் போது முன் வைத்த சில கருத்துக்களை மறுபடியும் முன்வைப்பது போல, ஒரு நான்கு விஷயங்களை, இந்திய அரசியல் மேம்பட உதவும் என்று சொல்கிறார். இந்தக் கட்டுரையை வாசித்து விட்டு எழுதி வைத்த குறிப்புக்கள் என்னுடைய யோசனையில் நாற்பது நாட்களுக்கும் மேலாக, இன்னமும் ஒரு முழுமையான வடிவத்தை எட்டவில்லை

சுருக்கமாக, இந்திய ஜனநாயகம் முதிர்ச்சி பெற, மேம்பட நான்கு விஷயங்கள் நடந்தே ஆகவேண்டும் என்று திரு ராமச்சந்திர குஹா சொல்வது  இந்தப்பதிவில் சொல்லியிருந்ததைப் படித்தீர்களா? நடைமுறை சாத்தியம்தானா? உங்கள் கருத்தென்ன?