பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

......

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பது பழமொழி அல்லது சொலவடை.வேளாண் பெருமக்கள் தங்களுடைய சொந்த சோகங்களையும் தாண்டி,ஊருக்கு உணவு படைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் தங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் சூரியன் முதல் உழவுமாடுகள் வரை ஒவ்வொன்றையும் நினைத்து நன்றியோடு குடும்பம் சுற்றம், ஊரோடு பொங்கலிட்டு, கூடியிருந்து அனுபவிக்கிற ஒரு இனிமையான நாளாகக் காலம் காலமாக இந்தப் பொங்கல் திருநாள்  இருந்து வருகிறது.

ஆகப் பொங்கல் என்றாலே ஒரு சமுதாயம் ஒற்றுமையாகக் கூடி இருந்து அனுசரிப்பது, அனுபவிப்பது!இந்தத் தைமுதல்நாளில் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! 


இங்கே தைப் பொங்கல் உழவர் திருநாள் என்று கொண்டாடப்படுகிற மாதிரியே இந்தப் பரந்த பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் மகர சங்கராந்தி என்றும் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.அரசியல்வாதிகள் புகுந்து  குட்டையைக் குழப்புவதற்கு முன்னால், இந்தத் தை முதல் நாள் ஒரு சமுதாயமாக அனைத்துத் தரப்பினரும், ஒன்று சேர்ந்து கொண்டாடுகிற திருநாளாகத்தான் தமிழ் நாட்டிலும் இருந்து வந்தது  தைமுதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து ஒரு குழப்பம் இடையில் சில காலம் இருந்தது.அந்தக் குழப்பத்தை வலிந்து திணித்தவர்களே இப்போது அதைப் பேசுவதில்லை!


மக்களுடைய மனவோட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் செய்யப்படுகிற எதுவுமே நிலைப்பதில்லை என்பது இந்த ஒரு விஷயத்திலேயே தெளிவானது.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளில்  மாடாய் ஒழச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான் என்ற கேள்விக்கு தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை  நிறையாது சிந்திச்சு முன்னேற வேணுமடி என்ற பதில் இருக்கிறதே!


நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! 

1 comment:

  1. நாடு செழிக்க நல்ல மழை பேய பொங்கலோபொங்கல்!!!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!