ராகுல் காண்டி சும்மா இருந்தாலும் விட மாட்டார்கள்
போலிருக்கிறது! காங்கிரசின் உதவித் தலைவராம்! சோனியாவுக்கு அடுத்தபடி அதிக
அதிகாரம் படைத்தவராம்!அதைவிடப் பெரிய தமாஷ், காங்கிரசை மாற்றிவிட முடியுமென்று தனக்கு நம்பிக்கை இருப்பதாக ராகுல் பேசியிருப்பதுதான்! காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களின் அலப்பறை,
கும்மிச்சத்தம் தாங்க முடியவில்லை! இவ்வளவு கஷ்டப்பட்டாவது கூஜா தூக்கவில்லை என்று யார் அழுதது?
சென்ற மாதம் பதினேழாம் தேதி திரு ராமச்சந்திர குஹா தன்னுடைய புத்தகமான Patriots and Partisans வெளியிடப்பட்டதை ஒட்டி திரு விவேக் கௌலுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் மிக வெளிப்படையாகவே, ராகுல் சராசரிக்கும் மிகவும் கீழே! (அரசியல் தவிர) வேறு வேலை பார்க்கப் போகட்டும் என்று சொல்லியிருந்தார். இந்தப் பேட்டியில்,திரு ராமச்சந்திர குஹா வேறு சில முக்கியமான விஷயங்களையும் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். புத்தகம் இப்போது வாசிப்பில் இருக்கிறது.இரண்டு வருடங்களுக்கு முந்தி எழுதிய ஒரு பதிவு, பொருத்தம் கருதி, இப்போது மீள்பதிவாக.
ooOoo
ஜான் பிட் ஜெரால்ட் கென்னெடி! ஒரு சகாப்தம் என்று சொல்லிக் கொள்ளலாம்! ஆனால் அந்த சகாப்தத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு என்ன பலன் இருந்தது என்பதை மட்டுமே அடிப் படையாக வைத்துப் பார்த்தால், இந்த மாதிரி சகாப்தங்கள் என்று சொல்லப்பட்டவர்கள் ஒரு சாபமாகவே இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு சொல்லும். அமெரிக்க அரசியலில், ஜனநாயகக் கட்சியின் வரலாற்றில் ஏறத்தாழ ஐம்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த கென்னெடி குடும்பத்தில் இருந்து, வருகிற 2011 ஆம் ஆண்டில் எவருமே இருக்க மாட்டார்களாம்! இதை ஒரு சகாப்தத்தின் முடிவு என்று வைத்துக் கொண்டாலும் சரி! ஒரு சாபத்தின் முடிவு என்று வைத்துக் கொண்டாலும் சரி!
இந்த செய்தியைப் பார்த்த போது முதலில் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது! அப்புறமாக, "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று நன்னூல் சூத்திரம் மாற்றங்களைக் குறித்துச் சொல்வது எவ்வளவு பொருத்தமானது என்பதும் யோசித்துப் பார்க்கையில் தெளிவாகப் புரிந்தது!
கடைசிப்
பாராவைக் கொஞ்சம் கவனியுங்கள்! நேருவின் அமெரிக்க விஜயம் கென்னடியைப்
பொறுத்தவரை மிகக் கசப்பானதாகவே இருந்ததாம்.. நேருவின் பார்வை, கரங்கள் தன்
மனைவியின் மீது படுவதை சகித்துக் கொள்ள முடியாத எரிச்சல் கென்னடிக்கு
இருந்ததையும் இந்தப் பாரா சொல்கிறது. பெண்கள் என்றாலே நேருவுக்கு ஒரு
"கிறக்கம்" இருந்ததையும் சொல்கிறது.
இங்கேயும், நேரு குடும்பத்து வாரிசுகள் எவருமே அரசியலில் இல்லாமல் போகிற ஒரு காலம், இந்த தேசத்தைப் பிடித்த சாபத்தில் இருந்து விடுதலை என்ற திருநாளும் வாராதோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா!
மாற்றங்கள் வரும்! புதிய மொந்தையில் பழைய கள்ளை மட்டுமே பரிமாறத் தெரிந்த, ஊழல் முடை நாற்றம் பிடித்த காங்கிரஸ் கட்சியின் பிடியில் இருந்து இந்த தேசம் விடுதலை பெறும் திருநாளும் வரும்!
நம்பிக்கையாகவும், பிரார்த்தனையாகவும்!
*******
தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றால் என்ன?
பதினைந்து
இருபது ஆண்டுகளுக்கு முன்னால், குறிப்பாக, நரசிம்ம ராவ் காலத்தில்
அறிமுகமான பொருளாதார சீர்திருத்தங்கள் சமயத்தில் இந்த வார்த்தைகளை
விளக்குவது, விளங்கிக் கொள்வது கடினமாகவே இருந்தது.இணையத்தில் சில
வருடங்களுக்கு முன்னால், பிரிட்டிஷ் இளவரசி டயானா தன்னுடைய காதலர் டோடி
பேயட் உடன் கார் விபத்தில் பரிதாபமான முறையில் இறந்துபோன சம்பவத்தைத்
தொட்டு, குரூரமாக இருந்தாலும் கூட அதிலும் கூட கொஞ்சம் நகைச்சுவை கலந்து
ஒரு வியாக்கியானம் உலாவந்து கொண்டிருந்தது, இன்றைக்கு மறுபடி கண்ணில்
பட்டது.
அதற்குப் பதில் வருகிறது பாருங்கள்!! "இளவரசி டயானாதான்!"
எப்படி என்று மேலும் விளக்கம் கேட்பதற்கு முன்னாலேயே வருகிறது.
"ஒரு பழமைவாதப் பெருமை பேசும் ஆங்கிலேய அரச குடும்பத்துப் பெண், இளவரசி தன்னுடைய எகிப்துக் காதலனோடு, பிரெஞ்சு சுரங்கப்பாதையில் டச்சு எஞ்சின் பொருத்திய ஜெர்மன் காரை, பெல்ஜியத்தை சேர்ந்த டிரைவர் ஸ்காட்ச் விஸ்கியைக் குடித்துவிட்டு ஓட்ட, இத்தாலியப் பத்திரிகையாளர் துரத்த எங்கேயோ எப்படியோ இடிபட்டு விபத்தாகிக் காயப்பட்டு, அமெரிக்க டாக்டர் பிரேசிலிய மருந்தைக் கொடுத்து சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இறந்து போனாரே அது தான்!"
தாராளமயம், உலகமயம் என்பதை இதை விட சுருக்கமாக, பொருத்தமாக சொல்லிவிட முடியாது என்று தான் தோன்றுகிறது.
இங்கே உலகமயம்,தாராளமயம் என்றால், எங்கோ ஒரு வெளிநாட்டில் பிறந்தவர் இங்கே வாழ்க்கைப்பட்ட ஒரே காரணத்தால், அந்தக் குடும்பத்துக்குக் கூஜா தூக்குவதற்கென்றே ஆட்களும் அதிகாரிகளில் சிலரும் இருப்பதால் கட்சி ஆட்சி இரண்டையும் கைப்பற்ற முடிகிறது.அந்தக் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தால் அனுபவமே இல்லாத ஒரு சிறுபிள்ளை, வருங்காலப் பிரதமராக சித்தரிக்கப்படுகிறார். இத்தனை தாராளம், உலகமயம் வேறெந்த நாட்டில் நடக்கும்?
உங்களுக்கு எப்படியோ...?!
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!