காலையில் தான் வாய்க் கொழுப்பு பானா சீனா தொலைக்காட்சியில், அண்ணா ஹசாரே கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்தி லெக்சர் அடித்துக் கொண்டிருந்தார்! போலீஸ் உத்தரவை மீறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று வாய்க் கொழுப்புடன் பானா சீனா பேசிக் கொண்டிருந்தார். உளறுவாயர் கபில் சிபலுக்குக் கறுப்புக் கொடி காட்டியதும் கொஞ்சம் ஆடிப் போனார்.கடைசியில் தாங்கள் எடுத்த வாந்தியைத் திரும்ப வாய்க்குள்ளே போட்டுக் கொள்கிற நிலைமை இருவருக்குமே!
திஹார் சிறையில் களவாணி கல்மாடியோடும்,உலகமகா ஊழல் செய்த கலைஞரின் இளைஞன் ஆ.ராசாவோடும், ஊழலை எதிர்த்தவர்களை ஒன்றாக அடைத்துக் காங்கிரசின் தலைமையிலான ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு கேலிக்குரிய ஒன்றாக ஆகிப் போனது. சொந்த ஜாமீனில் வெளிவர மறுத்தவர்களை ஏழுநாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு வாங்கி, திஹார் சிறைக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தது.அம்பிகா சோனி, டில்லிப் போலீஸ் எடுத்த நடவடிக்கைக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தமே இல்லை என்று அம்பிகா சோனி நாடு நடுவே காமெடி செய்து கொண்டிருந்தார்.
நேற்றைக்கு இளவரசர் ராவுல் விஞ்சி பிரதமரோடு நீண்ட நேரம் ஆலோசனை செய்தாராம்! இன்றைக்குக் காலை இப்படித்தான் நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்று இளவரசருக்கு, டில்லிப் போலீசோ, உள்துறை அமைச்சரகமோ தகவல் சொல்லாமல் இருந்திருப்பார்கள் என்று நம்புகிறீர்களா?
நேற்று முன்தினம் வரை, இந்த டம்மிப் பீஸ் பிரதமர், ஹசாரேவை சம்பந்தப்பட்டஅதிகாரிகளோடு பேசுமாறும், பிரதமர் அலுவலகத்துக்கும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுக்கப் பட்டதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கொஞ்சம் கடுமையான வார்த்தைகளில் கடிதம் எழுதிய கூத்தும் நடந்தது. மன்மோகன் சிங்கை ஆட்டுவிப்பவர்கள் யாரென்று உலகத்துக்கே தெரிந்த நிலையில்,எல்லாப் பழியையும் அவர்தலையிலேயே சுமத்திவிட்டு, இளவரசர் தியாகச் செம்மலாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். முந்தைய உண்ணாவிரதப்போராட்டத்தின் போதுகூட சோனியா, அண்ணா ஹசாரேவுடைய ஊழலுக்கெதிரான போராட்டத்தில் தன்னுடைய "அக்கறையைக் காட்டிக் கொண்ட நாடகம்" நினைவுக்கு வருகிறதா?
லோகல் காமெடியன்களுக்குக் கிடைக்கிற மரியாதை கூட ராவுலுக்குக் கிடைக்கப்போவதில்லை என்பது தனி விஷயம்!
நியாயத்தின் அடிப்படையில் அல்ல, நிலைமை கைமீறிப்போய்க் கொண்டிருக்கிறது என்பது இளவரசருக்கு உறைக்கவும்,அண்ணா ஹசாஈ மற்றும் அவரது சகாக்களை விடுவிக்க முடிவு செய்தததாக இந்த செய்தி சொல்கிறது.
அண்ணா ஹசாரே, இந்த நாடகத்தில் இன்னொரு திருப்பமாக சிறையில் இருந்து வெளியே வர மறுத்துக் கொண்டிருக்கிறார்! முன்பு கூறியிருந்தபடி, காலவரையற்ற உண்ணாவிரதத்தை நடத்த அனுமதி கொடுத்தால் சிறையை விட்டு வெளியே வருகிறேன் என்று, 'தியாக சிகரங்களுடைய மூக்கை' அறுத்திருக்கிறார்!!
இப்போது தலைப்பை மறுபடி படியுங்கள்!
கோழைகளின் ஆட்சியிலே உய்ய லாலா..! கேணைகளின் கூட்டமடா உய்ய லாலா..!
இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இவர்களை சகித்துக் கொண்டிருக்கப்போகிறீர்கள்?

