காலையில் தான் வாய்க் கொழுப்பு பானா சீனா தொலைக்காட்சியில், அண்ணா ஹசாரே கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்தி லெக்சர் அடித்துக் கொண்டிருந்தார்! போலீஸ் உத்தரவை மீறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று வாய்க் கொழுப்புடன் பானா சீனா பேசிக் கொண்டிருந்தார். உளறுவாயர் கபில் சிபலுக்குக் கறுப்புக் கொடி காட்டியதும் கொஞ்சம் ஆடிப் போனார்.கடைசியில் தாங்கள் எடுத்த வாந்தியைத் திரும்ப வாய்க்குள்ளே போட்டுக் கொள்கிற நிலைமை இருவருக்குமே!
திஹார் சிறையில் களவாணி கல்மாடியோடும்,உலகமகா ஊழல் செய்த கலைஞரின் இளைஞன் ஆ.ராசாவோடும், ஊழலை எதிர்த்தவர்களை ஒன்றாக அடைத்துக் காங்கிரசின் தலைமையிலான ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு கேலிக்குரிய ஒன்றாக ஆகிப் போனது. சொந்த ஜாமீனில் வெளிவர மறுத்தவர்களை ஏழுநாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு வாங்கி, திஹார் சிறைக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தது.அம்பிகா சோனி, டில்லிப் போலீஸ் எடுத்த நடவடிக்கைக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தமே இல்லை என்று அம்பிகா சோனி நாடு நடுவே காமெடி செய்து கொண்டிருந்தார்.
நேற்றைக்கு இளவரசர் ராவுல் விஞ்சி பிரதமரோடு நீண்ட நேரம் ஆலோசனை செய்தாராம்! இன்றைக்குக் காலை இப்படித்தான் நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்று இளவரசருக்கு, டில்லிப் போலீசோ, உள்துறை அமைச்சரகமோ தகவல் சொல்லாமல் இருந்திருப்பார்கள் என்று நம்புகிறீர்களா?
நேற்று முன்தினம் வரை, இந்த டம்மிப் பீஸ் பிரதமர், ஹசாரேவை சம்பந்தப்பட்டஅதிகாரிகளோடு பேசுமாறும், பிரதமர் அலுவலகத்துக்கும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுக்கப் பட்டதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கொஞ்சம் கடுமையான வார்த்தைகளில் கடிதம் எழுதிய கூத்தும் நடந்தது. மன்மோகன் சிங்கை ஆட்டுவிப்பவர்கள் யாரென்று உலகத்துக்கே தெரிந்த நிலையில்,எல்லாப் பழியையும் அவர்தலையிலேயே சுமத்திவிட்டு, இளவரசர் தியாகச் செம்மலாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். முந்தைய உண்ணாவிரதப்போராட்டத்தின் போதுகூட சோனியா, அண்ணா ஹசாரேவுடைய ஊழலுக்கெதிரான போராட்டத்தில் தன்னுடைய "அக்கறையைக் காட்டிக் கொண்ட நாடகம்" நினைவுக்கு வருகிறதா?
லோகல் காமெடியன்களுக்குக் கிடைக்கிற மரியாதை கூட ராவுலுக்குக் கிடைக்கப்போவதில்லை என்பது தனி விஷயம்!
நியாயத்தின் அடிப்படையில் அல்ல, நிலைமை கைமீறிப்போய்க் கொண்டிருக்கிறது என்பது இளவரசருக்கு உறைக்கவும்,அண்ணா ஹசாஈ மற்றும் அவரது சகாக்களை விடுவிக்க முடிவு செய்தததாக இந்த செய்தி சொல்கிறது.
அண்ணா ஹசாரே, இந்த நாடகத்தில் இன்னொரு திருப்பமாக சிறையில் இருந்து வெளியே வர மறுத்துக் கொண்டிருக்கிறார்! முன்பு கூறியிருந்தபடி, காலவரையற்ற உண்ணாவிரதத்தை நடத்த அனுமதி கொடுத்தால் சிறையை விட்டு வெளியே வருகிறேன் என்று, 'தியாக சிகரங்களுடைய மூக்கை' அறுத்திருக்கிறார்!!
இப்போது தலைப்பை மறுபடி படியுங்கள்!
கோழைகளின் ஆட்சியிலே உய்ய லாலா..! கேணைகளின் கூட்டமடா உய்ய லாலா..!
இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இவர்களை சகித்துக் கொண்டிருக்கப்போகிறீர்கள்?
//காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் சுயமரியாதை, தன்மானம், ரோஷத்துக்கும் வெகு தூரம் என்பது தெரிந்த ஒன்று தான் என்பதால்//
ReplyDeleteஇது காங்கிரஸ் என்று இல்லை. அத்தனை அரசியல்வாதிகளுக்கும் பொருந்துகிறது. ஜனங்கள் அரசியல்வாதிகள் அளவு இல்லை என்றாலும் மாற்றம் கொண்டு வருவதில் அவர்களுக்கும் முனைப்பு இல்லை. அலுத்துப் போய் விடுகிறது போலும்.
//ராவுல் விஞ்சி//
ராகுல் காந்தி ஏன் விஞ்சி ஆனார் என்று புரியவில்லை!
அன்னா ஹசாரே காமெடியில் கிரண் பேடி பங்கு ஆச்சர்யமளிக்கிறது
அன்னா ஹசாரே பார்ட் I, பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே பார்ட் II, ம்..
ஹூம்...நாடகமே உலகம்!
வாருங்கள் ஸ்ரீராம்!
ReplyDeleteமாற்றத்துக்குத் தயாராவதில், சமூகத்தின் எல்லாப்பகுதிகளுமே ஒரே நேரத்தில் தயாராவதில்லை என்பது தான் யதார்த்தம். அதனால் தான் தலைவர்கள், அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் என்று தேவைப்படுகிறார்கள்.இப்படி ஒரு பகுதி மாற்றத்தின் அவசியத்தை முன்னெடுத்து வைத்த பிறகே, சமூகத்தின் இதரபகுதிகள் மாற்றத்துக்காகக் குரல் எழுப்ப ஆரம்பிக்கின்றன. இந்த அம்சத்தை தலைமைப் பண்பு, மாற்றங்களுக்குத் தயாராவது என்ற தலைப்பில் இந்தப்பக்கங்களிலேயே பலமுறை பார்த்திருக்கிறோம்.
அடுத்து ராகுல் காண்டி!
இந்த நபருக்கு ராவுல் விஞ்சி என்ற இத்தாலிய முகமும், குடியுரிமையும் இருக்கிறதே, அதை இதுவரை அவரோ, குடும்பத்தினரோ அதிகாரப் பூர்வமாக மறுத்திருக்கிறார்களா?கிறித்தவப் பின்னணி! இருந்துவிட்டுப் போகட்டும்! ஆனால் குங்குமக் கீற்றை அணிந்து கொண்டு இந்தியவாக்காளர்களிடையே உலா! இதில் எது உண்மையான முகம் என்பதை நேர்மையாக, வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்களா?இதெல்லாம் சொந்தவிஷயம் என்பது, பொதுமக்களுடைய தலைவராக அடையாளம் காட்டிக் கொண்டு உலாவரும்போதே அடிபட்டுப் போகிறது,
அண்ணா ஹசாரே, கிரண் பேடி, கேஜ்ரிவால், சுவாமி அக்னிவேஷ் இவர்களுடைய நம்பகத்தன்மையை, மற்ற எல்லோரையும் விட ஆர் எஸ் எஸ் மற்றும் சில இடதுசாரிக் குழுக்களும் தான் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தன.இவர்களுடைய போராட்டத்தைப் போலியானது என்றும் சொல்லிக் கொண்டிருந்தன. இருந்துவிட்டுப் போகட்டும்!
எடியூரப்பா மாதிரி ஆசாமிகளை வைத்துக் கொண்டு பிஜேபி ஊழல் ஒழிப்பைப் பற்றிப் பேசுவது எவ்வளவு கேலிக் கூத்தாக இருந்தது என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.
இவர்களால் கொண்டுவர முடியாத மக்களுடைய எழுச்சியை, அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கெதிரான இந்தியா இயக்கம் ஏற்படுத்தி வருகிறது, அண்ணா ஹசாரே நாளை மாறிப்போனாலும் இந்த எழுச்சியை மாற்ற முடியாது என்பதால் மட்டுமே, இந்த இயக்கத்தோடு நாம் ஒன்று பட்டு நிற்க வேண்டும் என்று சொல்கிறேன்.
சிம்பிள்!
superb!!!!!!!!!!!!
ReplyDelete