திமுகவின் வெற்றி விழா! காங்கிரஸ் என்ற விஷ விருட்சம்!

 அது ஒரு கனாக் காலம்!இனிமே இந்தப்பக்கம் சாய்வாங்களா என்ன ?


பொய் வழக்கு, பழிவாங்கும் பாவை, ஆடும் வரை  ஆடட்டும் இப்படி என்னென்ன வசனங்கள் பேசினாலும், நில அபகரிப்புக் குற்றங்களை செய்துவிட்டு இப்போது புகார்களில் சிக்கிவரும் திமுக புள்ளிகள், முன்னோடிகள், தின்றதை எல்லாம் கக்கினாலும் கூட,  மோசமான விளைவுகளை சந்தித்துத் தான் ஆக வேண்டும் போல் இருக்கிறது!

கனிமொழியை ஜாமீனில் தான் எடுக்க முடியவில்லை! இடை வெளியில் எதையாவது கொண்டாட வேண்டாமா? சமச்சீர் கல்வி விவகாரத்தில்  வெற்றி விழாவாகத் திமுக  கொண்டாடப் போகிறார்களாம்! பெங்களுரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகியே தீரவேண்டும் என்ற உத்தரவையும் சேர்த்துக் கொண்டாடுவார்கள்! 

அதனால் இவர்கள் கதை கந்தலாகிக் கிடப்பதில் என்ன முன்னேற்றம், லாபம் கிடைத்து விடும்?கிழிந்து தொங்கும் டமாரங்கள், முரசுகளைத் திரட்டி ஒலிக்கப் போகிறார்களாம்!முரசொலித்துக் கிழிந்தது கிழிந்தது தான்!

காங்கிரசிடம் காவடி எடுத்துப் பார்த்தார்கள்! கூட்டணி தர்மம் என்ன சொல்லியதோ தெரியவில்லை! தர்மம் செய்யும் அதிகாரம் படைத்தவர் இப்போது மருத்துவ மனையில்! 

பிரதமராக ஆசை! நிராசைதானோ?

'நான் பிரதமராக  ஆதரவு தந்தால், வழக்குகளில் இருந்து விடுவிக்க உதவுகிறேன்' என்று பேரம் பேசிப் போனவர், இப்போது நால்வர் குழுவில் கூடத் தன்னை ஒரு ஆளாக சேர்க்கவில்லை, மதிப்பு இல்லை என்று புழுங்கிக் கொண்டிருக்கிறார். 

தராசு ஒழுங்காப் பிடிக்கத் தெரியணுமே!

வாய்க் கொழுப்பினால் எல்லோரையும் பகைத்துக் கொண்ட அந்த கோமானோ,நாளை நடப்பதை யாரறிவார் என்று பட்டினத்தார் ரேஞ்சுக்கு, கம்முனு கிடக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்! போதாக்குறைக்கு, சுப்ரமணிய சாமியின் வீட்டைக் காங்கிரஸ் குஞ்சுகள் தாக்க, அவரோ, நான் பன்னிரண்டாம் தேதி (இன்றுதான்) ஊருக்குத் திரும்புகிறேன், வைத்துக் கொள்கிறேன் வாண வேடிக்கையை என்று சவால் விட்டிருக்கிறார். 

வாரிசுக்கு வாரிசுகளுக்கும் கும்பிடு போட்டாவது பிரதமர் நாற்காலி!
வீட்டைத் தாக்கியது ராபர்ட் வதேராவின் அடியாட்கள் தான் என்றும் பானா சீனாவுக்கு அடுத்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கப்போவது  பிரியங்கா என்கிற பியாங்கா வின்சியின் காதல் கணவர் ராபர்ட் வதேரா தான் என்று டிவிட்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்!

ஆகஸ்ட் இருபத்துநாலாம் தேதி, ஸ்பெக்ட்ரம் வழக்கில் பானா சீனாவையும் சேர்க்க வேண்டும், பாதுகாப்புக் குளறுபடிகள் பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று சுப்ரமணிய சாமி தாக்கல் செய்திருந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. 


சுப்ரமணிய சாமி இந்திய மண்ணில் காலடி வைத்தபிறகு தான் ஆட்டம் இன்னும் சூடு சுவாரசியம் பிடிக்கும் போல!!

திமுகவும் காங்கிரசும் பரஸ்பரம் தழைந்துபோய் சட்ட சபைத் தேர்தலுக்காகக் கூட்டணி சேர்ந்த நேரம் ரொம்பவே நல்ல நேரம் போல் இருக்கிறது!

மனித உரிமைகள் ஆணையத்திடம் மனுக் கொடுத்துப் பார்த்தார்கள், மனிதர்களைப் புழுக்களைவிடக் கேவலமாக நடத்திவிட்டு இப்போது குத்துதே குடையுதே என்று போனால் அந்த ஆணையம் தான் என்ன பெரிதாகக் காப்பாற்றிவிட முடியும்?

அண்ணா ஹசாரே ஆகஸ்ட் பதினாறன்று தொடங்கவிருக்கும் உண்ணாவிரதத்துக்கு மூன்றே நாட்கள் தான் அனுமதி
ளிக்கப் பட்டிருக்கிறது. அதற்கு அப்புறம்?

பாபா ராம்தேவைத் தூக்கியது போல, நள்ளிரவு நாடகம் ஒன்றை இப்போது
ம் நடத்த முடியுமா என்று தெரியவில்லை. ஜனநாயக் காவலனாக அவ்வப்போது அவதாரம் எடுக்கும் அமெரிக்கக் கழுகுகள், அமைதியான ஜனநாயகப் போராட்டத்தை நசுக்க முயலக் கூடாது என்று இந்திய அரசுக்கு மெலிதான எச்சரிக்கையைக் கசிய விட்டிருக்கின்றன."உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ!" என்று வெளியுறவுத் துறைப்  பேச்சாளர் ஒருவர்  சொல்லியிருப்பதாக இந்த செய்தி  சொல்கிறது! நம்ப முடியவில்லை! நாளைக்கே இதே செய்தி வேறு விதமாக வரும்!

சாதுபோலக் காட்டிக் கொள்ளும் சால்வை அழகர் என்ன செய்யப் போகிறார்? வாய்க் கொழுப்புடன் பேசுவது என்பது வேறு, உறுதியான அரசியல் முடிவுகளை எடுப்பதென்பது வேறு! 


காங்கிரஸ்காரன் எவனுக்குமே  முதுகெலும்பும் கிடையாது, சொந்தக் காலில் நிற்கவும் திராணி கிடையாது! இதில் எங்கே போய் உறுதியான, தெளிவான அரசியல் முடிவை எடுப்பது? நேரு முதல் பார்த்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கலாசாரக் கருமாந்திரம் தானே இது?!

இன்றைக்கு அண்ணா ஹசாரேவுக்கு உண்ணாவிரத அனுமதி மூன்றே நாட்கள்தான் என்று ஒருபுறம் எச்சரித்துவிட்டு, இன்னொரு புறம் பேச்சு வார்த்தை நடத்தலாமே என்றும் கண்டனூர்ப் பானா சீனா சொல்லியிருக்கிறார். உள்துறை அமைச்சகம் இந்த வாய்க் கொழுப்புப் பிடித்த மனிதரிடம் சிக்கிக் கொண்டு சிக்கல்களை இன்னும் இன்னும் என்று வளர்த்துக் கொண்டிருக்கிறது.இன்னொரு திசையில் நரேந்திர மோடிக்கு எச்சரிக்கை என்று ஒரு ஆபத்தான விளையாட்டில் இறங்கியிருக்கிறார். மோடிக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொம்பு சீவி விடுகிற மாதிரி அவரது அறிக்கை இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி விஷவிருட்சமாக வளர்ந்திருக்கிறது. இதை வேரோடு சாய்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை! இன்றைக்கு  ஸ்டேட் ஆப் தி நேஷன் என்ற பகுதியில் சிஎன்என்- ஐபிஎன் சர்வே, இப்போது தேர்தல் நடந்தால், ஐமு கூட்டணிக் குழப்பம் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று சொல்கிறது!

சட்ட சபைத்தேர்தலில் திமுகவைத்  தோற்கடித்தது கூடப் பெரிய விஷயமில்லை! ஊழலின் விளைநிலமாக, விஷவிருட்சமாக வளர்ந்திருக்கிற காங்கிரசை ஒட்டு மொத்தமாக, வேரோடு சாய்ப்பதில் தான் இந்த தேசத்தின் விமோசனம் இருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!

4 comments:

  1. தங்களை ஓரளவுக்குக் கூட அறிமுகப்படுத்திக் கொள்ளத் தயங்குகிற சிங்கம் மற்றும் பைரவி என்ற பெயரில் வந்த பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

    கருணாநிதி குடும்பத்தினர் சமச்சீர் கல்வி கற்கிறார்களா என்று சிங்கம் கேட்டிருக்கிறார். கோபாலபுரத்துக்குப் போகவேண்டிய கேள்வி!

    //காங்கிரஸ் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் எள்ளளவும் தடுமாற்றமில்லை. மாற்றாக யோசிக்கக் கூடிய நிலையில் எதிர்க்கட்சிகள் பலமாக இல்லையே.//
    என்று பைரவி வருத்தப்பட்டிருக்கிறார்.எதிர்க்கட்சிகள் பலமடைவதைவிட, தேர்தல்முறைகளில் தகுந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தேலேயே பிரச்சினைகளின் ஊற்றுக்கண் அடைபட்டுவிடும்.

    தேர்தல் முறைகளில் வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில் தான் பிரதிநிதித்துவம் என்று மாற்றம் கொண்டு வந்தாலேயே சில நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பது இந்தப்பக்கங்களிலேயே பலமுறை விவாதிக்கப்பட்டிருக்கிறது.

    ஜனநாயகம், உரிமைகள், சுதந்திரம் என்பது அதன் அருமை தெரிந்து பாதுகாத்துக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான்!

    ReplyDelete
  2. அன்புடன் வணக்கம் திரு கிருஷ்ணா மூர்த்தி
    ஜனநாயக நாடான நமது நாட்டின் மன்னர்கள் !!!தேர்ந்தெடுப்பது ஒரு நேர்மையான.. ஒழுக்கமான.. படித்த... சேவை மனப்பான்மை... உள்ள நபரை தேர்தெடுக்க வேண்டும் !!!இந்த மனப்பாங்கு மக்களுக்கு வந்தது விட்டால் நமது நாடு
    முன்னேறிவிடும் .... இது போன்ற வலை தளத்தை படித்து விட்டு மட்டும் செல்லாமல் சற்று சிந்தித்து தானும் வாக்களித்து மற்றவரும் வாக்களிக்க வைத்தால்???? தற்போது பல நாடுகளில் நடக்கும் புரட்சி அனைத்தும் இது போன்ற இணைப்பில்தான்.. சிந்தியுங்கள் நண்பர்களே.. !!! நன்றி..

    ReplyDelete
  3. நாட்டுப்பற்றில்லா நடுவன் ஆட்சியாளரும், சுயநலமிக்க ஒரு குடும்ப கட்சித் தலைவனும், நாட்டை மிகவும் அசிங்கப்படுத்தி வருகின்றனர்! தகுந்த எதிர் கட்சி இல்லாதது, அதை விட சோகம்!

    ReplyDelete
  4. நல்லதொரு பதிவு நண்பரே..சிந்திக்க வேண்டிய விடயம் இது..அக்காலத்தில் படிப்பறிவு இல்லாத களத்தில் இருந்த சிந்தனை கூட, படிப்பறிவு மிகுந்த தற்காலத்தில் குறைவாக உள்ளது வருந்தத்தக்கது..நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலம் இது..சிந்தித்து முடிவெடுங்கள் இளைஞர்களே..நாளை நமதே..

    என்றும் நட்புடன்
    பூபதி

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!