அழகிரி கோட்டை சரிகிறது!

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?
அழகிரியின் மதுரை சாம்ராஜ்ஜியத்தின்ஊழல், அதிகார வேர்களை தெஹெல்கா வார இதழ் கொஞ்சம் எளிதில் புரிகிற மாதிரி ஒரு சார்ட் தயாரித்து 06-08-2011 தேதியிட்ட இதழில் வெளியிட்டிருக்கிறது. கொஞ்சம் குறைச்சலாகத்தான் மதிப்பிட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது! 
ஏனென்றால் அடிப்பொடிகளே, ஐநூறு கோடி, ஆயிரம் கோடி என்று சம்பாதித்திருப்பதாகச் சொல்லப்படும்போது  தெற்கு மண்டல சுல்தானுக்கு மட்டும் கம்மியாக இருக்க முடியுமா, சாத்தியமா என்பதை வாசகர்கள் தான் ஊகித்துச் சொல்ல வேண்டும்.

படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும் 
பொட்டு சுரேஷுக்கு ஐநூறு கோடி, கோ.தளபதிக்கு நானூறு கோடி, அட்டாக் பாண்டிக்கு முன்னூறு கோடி என்று அடிப்பொடிகள் ஒவ்வொருவருக்கும் உத்தேசமாக எவ்வளவு தேறும் அல்லது தேற்றியிருப்பார்கள் என்று சிறு குறிப்பும் இந்தக் கட்டுரையில் வெளியாகியிருக்கிறது.
இன்றைக்கு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலில் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் பங்கையும் தணிக்கைத்துறை நூறுபக்க அறிக்கையில் தெள்ளத் தெளிவாக, எட்டு வகையாகப் பிரித்து வெளியிட்டிருக்கிறது. தனக்கு எந்த சம்பந்தமுமில்லை என்றே பேசி வந்த ஷீலா தீட்சித் இன்றைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல மறுத்திருக்கிறார். இது பெரிதாக வெளிவந்த அளவுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்னால், இதே தணிக்கைத்துறை, உர மானியங்களில் சுமார் 50587  கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாகத் தெரிவித்திருந்ததை, ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. செய்தி இங்கே.

ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்
'னாதான் என்றாலும், அண்ணன் மதுரையை சுற்றியே தன்னுடைய கோட்டையைக் கட்டிக் கொண்டிருந்ததில், அங்கே அவருக்குப் பிராக்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்த இணையமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா என்ன செய்து கொண்டிருந்தார் என்பதே தெரியாத அண்ணன் மேலேயே முழுப் பழியையும் சுமத்திவிட முடியாது என்று தான் தோன்றுகிறது.

ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு! சிக்கல்கள் பெரிதாகிக் கொண்டே வருகிற இந்தத் தருணத்தை விட்டால் பிரதமராகிற
வாய்ப்பு வேறெப்போதும் கிடைக்காது என்று பிரணாப் குமார் முகர்ஜி சில உள்வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.  

மன்மோகன் கழன்று கொள்கிறாரா என்ன!!

கேடி பிரதர்ஸ். பிரணாப் தயவில் மிக சாமர்த்தியமாகக் காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கலாநிதி மாறன் நாடு திரும்பியாயிற்றா, போலீஸ் சம்மன் என்ன ஆயிற்று என்பதே தெரியாத நிலையில், சன்டீவீ மீது புகார் கொடுத்தவர்கள் எல்லாம், புகாரில் சமரசம் ஏற்பட்டுத் தங்களுக்கு சேர வேண்டியது கிடைத்துவிட்டதாகப் புகார்களை வாபஸ் வாங்கிக் கொள்ள ஆரம்பித்திருக்கும் சித்து விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  


இதைத்தான், முந்தைய பதிவில், தாத்தா பேரன்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது என்றும் சொல்லியிருந்தேன்.

சிபி ஐ மூன்றாவது துணைக் குற்றப்பத்திரிகையை எப்போது தாக்கல் செய்யப் போகிறது என்பதோ, எவரெவர் பெயர்கள் அதில் இருக்கும், கைதுகள் இருக்கும் என்பது தெளிவாக இல்லாத நிலையில் அழகிரி, அட்டாக் பாண்டி என்று லோகல் ரேஞ்சில் மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டியது
தானா? 

கல்மாடிக்குக் கம்பனி....?
டாட்டா, அம்பானி,ஷீலா தீட்சித், சால்வை அழகர்கள் எல்லாம் திஹாருக்குள் கம்பனி கொடுக்கப் போக மாட்டார்களாமா?








 
பதிவு பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால், அருகில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித்தெரிவியுங்களேன்!

5 comments:

  1. அது சரி, மாலத்தீவுகள் இன்னும் அம்பலமாகவில்லை போலும்!

    ReplyDelete
  2. வாருங்கள் ஜீவா!

    மாலத்தீவுகள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட விஷயங்கள் அரசால் புரசலாகத் தெரிந்ததுதான்! டாக்ஸ் ஹெவன்களைப் பற்றிய நம்முடைய மக்களுடைய ஞானம் கொஞ்சம் குறைவுதான்! கருப்பை வெளுப்பாக்குகிற மணி லாண்டரிங் கூட இங்கே நிறையப்பேருக்கு முழுமையாகத் தெரியாது.

    ReplyDelete
  3. கருப்பை வெளுப்பாக்கிற வித்தையை தெரிஞ்சுக்க‌னுமுன்னு சிபிஐ நினைச்சா, உள்துறை அமைச்ச‌ரை "உள்ள‌" வ‌ச்சுக் கேட்ட‌லே போதுமே!! ப‌ழய‌ க‌ருப்பு, புது க‌ருப்பு, ச‌ந்தைக் க‌ருப்புன்னு,
    கஞ்சா கருப்பு மாதிரி க‌க்கிருவாரு. அதுக்கு பய‌ந்து தான‌, காவிப‌ய‌ங்க‌ர‌முன்னு பூச்சாண்டி காட்டிட்டு திரிகிறார். எதிர்க‌ட்சிக‌ளும் ச‌ரியில்லை, நாட்டை இவ்வள‌வு நாசம் ப‌ண்ற‌ இந்த யுபிஏ த‌லைமையையும், பிர‌த‌ம‌ரையும், ஊழ‌ல் ம‌ந்திரிக‌ளையும் ஒரு வ‌ழி ப‌ண்ணி, நாடு க‌ட‌த்த‌ வேண்டாமா?

    ReplyDelete
  4. வாருங்கள் வாசன்!

    முதல் குற்றம் நம்மிடம் தான் !மாற்று ஒன்றை சீரியசாகத் தேடாத ஒரே ஒரு பாவத்தினால், இத்தனை கூத்தும் வெட்கமில்லாமல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

    ஜனங்களுடைய குரலை செவிகொடுத்துக் கேட்க மறுக்கும் அளவுக்கு, நம்முடைய மக்கள் பிரதிநிதிகள் துணிச்சலாகிப் போனதற்கு நாம் தான் காரணம்!

    ReplyDelete
  5. (senthilgoogle) செந்தில்கூகிள் என்ற பெயருடன் ஒரு அனானியிடமிருந்து "கடவுள் இருக்கிறாரா?" என்று ஆங்கிலத்தில் தமிழைத் தட்டச்சி ஒரு பின்னூட்டம் வந்திருக்கிறது. ப்ரோபைலில் தங்களைப் பற்றிய ஒரு சிறு விவரமாவது தெரிவிக்கத்தயங்குகிரவர்கள் என்னைப் பொறுத்தவரை அநாமதேயங்கள் தான் என்பதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். கமென்ட் பெட்டி மேலேயே இந்த அறிவிப்பும் இருக்கிறது.
    அதனால், பின்னூட்டத்தை மட்டுறுத்துகிறேன். கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு, விஜய் டீவீயில் சைக்கிள் பிராண்ட் அகர்பத்திக்காரர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களேன்!

    இந்தப் பதிவின் உள்ளடக்கத்துக்கும், இந்தக் கேள்விக்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!