புதுதில்லி, ஆக.16: இன்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த அண்ணா ஹசாரேவுக்கு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸார் அவரை இன்று காலை கைது செய்தனர்.அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
ஊழலுக்கேதிரான இந்தியா என்ற முழக்கத்துடன், இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கவிருந்த அண்ணா ஹசாரேவை டில்லிப் போலீசார் கைது செய்தனர். அரசு விதித்த தடையை மீறத் துணிந்ததாலேயே கைது நடவடிக்கை என்று உள்துறை செயலர் 'விளக்கம்; தெரிவித்திருக்கிறார்.
கோழைகள், ஆட்சி பீடத்தில் அமரும்போது கொடுங்கோன்மை, அடக்குமுறை இவையெல்லாம் இயல்பாகவே சேர்ந்து கொள்கிறது. இந்திரா காலத்திலும் அப்படித்தான்! தன்னுடைய பதவிக்கு ஆபத்து என்றவுடன், நெருக்கடி நிலை பிறந்தது. இப்போது ஒரே வித்தியாசம், அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையைக் காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணிக் குழப்பம் அறிவித்திருக்கிறது.
பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாடினான் பாரதி!
காங்கிரஸ் அரசு செய்யும்போதும் அப்படித்தான்!
இதிலும் ஒரு நல்லது உண்டு! பெரிய அழிவுக்கு முன் தான் இப்படி பெரிய அளவில் ஆட்டம் போடுவார்கள் எல்லா கொடியவர்களும். அந்த அளவில், இது காங்கிரஸ் ஆட்சியின் அழிவிற்கான அறிகுறியாகவே இதை நான் காண்கிறேன்!
ReplyDelete