ஊழலுக்கெதிரான இந்தியா : காங்கிரஸ் கொள்ளையனே வெளியேறு!

சண்டேன்னா மூணு! கொஞ்சம் கொசுறும்!

ன்மோகன் சிங்கைக் கொஞ்சம் தைரியமாக டயலாக் விட 'மேலிடம்'  உத்தரவு பிறப்பித்திருக்கிறது போல! மனிதர் கொஞ்சம் படபடப்புடனேயே எதிர்க்கட்சிகளைக் கைகாட்டத் தொடங்கி இருக்கிறார். தன்னுடைய தவறுகளுக்குப் பதில் சொல்வதை விடுத்து, அடுத்தவர் மீது சேற்றை வாரி இறைக்கும் காங்கிரஸ் கலாசாரக் கருமாந்திரம், மன்மோகன் சிங்கின் மீது பரிதாபமாக ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், மனிதர் நீண்ட நாள் பிரதமராகத் தாக்குப் பிடிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.
சிபிஐ, உண்மையைக் கண்டுபிடிக்கிற கருவியாக இருந்ததெல்லாம் எப்பவோ! காங்கிரசுக்கு சாதகமாக, வேண்டாதவர்கள் மீது குற்றம் சுமத்தவும், காங்கிரஸ் மீது வரும் புகார்களைக் குப்பைக் கூடையில் அள்ளிப் போடவும், க்வத்ரோச்சி முதலான மேலிடத்துக்கு நெருக்கமானவர்களைத் தப்ப வைக்கவும் உபயோகப்படுத்தப்படுகிற கருவியாக மாறி, நீண்ட நாட்களாயிற்று!.

கூட்டணி தர்மத்தில், எங்களையும் அதே மாதிரிக் காப்பாற்ற முடியாதா என்பதுதான் கருணாநிதியின் ஆதங்கம்! கூட்டணி தர்மம் என்றால் கூட இருந்தே குழி பறிப்பது என்பதுதான் காங்கிரசின் கலாசாரக் கருமாந்திரம் என்பது கூடப் புரியாமல், இத்தனைநாள் அரசியலில் எப்படிக் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார் என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்!

காங்கிரஸ்காரனுக்கு ஊழல் செய்வதென்றால் லட்டு சாப்பிடுகிற மாதிரி! காமன்வெல்த் கேம்ஸ் ஊழலா? அதை நாங்கள் விளையாட்டாகத் தானே செய்தோம்! அதற்குப் போய் ஷீலா தீக்ஷித்தைப் பதவி நீக்க வேண்டும் என்று கேட்டால் எப்படி?  


டியூரப்பா வெறும் இருபது கோடி ரூபாய் ஊழல் செய்தால் வீட்டுக்கு அனுப்பு  என்போம்! அதேவேளையில், காங்கிரஸ்காரர்கள்  ஊழல் செய்தால், கூட்டணி தர்மத்தில் கூட்டணிக் கட்சிக்காரனைப் பலி கொடுத்தாவது கல்மாடியோ,களவாணியோ காப்பாற்றுவோம்!

துதாண்டா காங்கிரஸ்!! இது கூடத்தெரியவில்லை என்றால், அது ஜனங்களின் தலையெழுத்து!

ருத்துக் கணிப்பாவது, கத்தரிக்காய்க் கூட்டாவது?

மு கூட்டணிக் குழப்பத்தின்மீது ஜனங்களுடைய அதிருப்தி படுவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது, இப்போது தேர்தல் நடந்தால் தேறுவது கடினம் என்று செய்தி வெளியிட்ட அதே ஊடகத்தில், இப்போது தேர்தல் வந்தால் ஐமுகூட்டணி குழப்பம் தான்  ஜெயிக்கும் என்றும் செய்தி வர வைக்க, காங்கிரஸ்காரனால் மட்டும் தான் முடியும்! காரணம் இவையெனத் தனியாக விவரிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை!காசு கொடுத்து செய்தி போடுவது, வருமானவரித்  துறை முதலான அரசு இயந்திரம் எதற்காக இருக்கிறதாம்?!

இனி பொறுப்பதில்லை தம்பி! எரிதழல் கொண்டு வா!

ந்த சுதந்திர தின சூளுரையாக, பாரதியின் இந்த வரிகள் தான், நம் ஒவ்வொருவரிடத்திலும் எதிரொலிக்க வேண்டும்.
 

காங்கிரசை வேரோடு சாய்த்தால் ஒழிய இந்த தேசத்துக்கு விடிவு காலம் இல்லை.

ன்ன சொல்கிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!

தொடர்புடைய பதிவுகளாக......

இங்கே      இங்கே     இங்கே   இங்கே 

1 comment:

  1. `நல்லதொரு பதிவு நண்பரே..தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு மாற்று தேவைபடுகிறது..ஆனால் எதிர்கட்சிகள் ஒரு ஒற்றுமை இன்றி பலம்இழந்து கானப்படுகின்றனவே..

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!