எவரெவரோ எது எதற்காகவோ
தமிழக முதல்வர் மனது வைத்தால் மட்டுமே நடக்கும் என்று சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள்! தமிழ்நாடு வளம் பெறுவதற்காக, மணல் கொள்ளையைத்
தடுப்பதற்காக, நமது நீராதாரங்கள் பாதுகாக்கப்படுவதற்காக, தோழர் ஆர்
நல்லகண்ணு குரல் கொடுத்திருக்கிறார். தமிழக முதல்வர் மனது வைத்தால்
நிறைவேறக்கூடியதாக இருக்கும் என்று தோழரும் சொல்கிறார்! கொஞ்சம்
செவிமடுத்துக் கேட்போமே!
"உணவெனப்படுவது நிலத்தொடு நீரே"
தோழர் ஆர்.நல்ல கண்ணு
தினமணியில்
எழுதிய கட்டுரை
First
Published : 26 Aug 2011 01:32:01 AM IST
தினமணி (3.8.2011) இதழ் "வாசகர் அரங்கம்' பகுதியில் வெளியான இருபது கடிதங்களையும் படித்தேன். தமிழ்நாட்டின் ஆறுகளிலிருந்து
மணல் கொள்ளை போகும் அவலங்களைக்
கண்டு வாசகர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
÷"சாயப்பட்டறை பிரச்னையில் முதல்வர் நேரடி கவனம்
செலுத்தியதைப்போல்,
மணல் கொள்ளையையும் தடுத்து நிறுத்த உறுதியான ஆக்கப்பூர்வமான
நேரடி நடவடிக்கைகளை எடுத்தால் மணல் கொள்ளை கட்டுக்குள் வரலாம்'' என்று ஒருவர் எழுதியிருந்தார்.
÷தமிழ்நாட்டில் 33 ஆற்றுப் படுகைகள் உள்ளன. அத்தனை படுகைகளிலும் கடந்த பத்தாண்டுகளாக அளவுக்கு அதிகமான ஆற்று மணல் அள்ளப்பட்டு
விட்டது. உயிர்ப் பிராணிகள் சில கொடூர மிருகங்களால் கடித்துக்குதறிச் சிதறிக்
கிடப்பதைப் போல அழகான ஆற்றுப் படுகைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. தேவைக்கும்
மாறாக அதிக லாபத்துக்கு விற்கப்படும்
பொருளாகக் கருதப்படுவதால் சட்ட விதிகள் மீறப்படுகின்றன.
÷சட்ட விதிகள்:
÷1.
அரசின் சட்ட விதிகளின்படி
மணல் என்பது சிறு கனிமமாகக் கருதப்படுகிறது. ஆற்றின் கரைகளிலிருந்து உள்புறமாக 50 மீட்டர் பாதுகாப்பு இடைவெளிவிட்டே மணல் குவாரி அமைக்கப்பட வேண்டும்.
÷2.
ஆற்றின் மேல்பரப்பிலிருந்து 1 மீட்டர் ஆழம் வரை மட்டுமே மணல் எடுக்கப்பட வேண்டும்.
÷3.
1959-ம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம
சலுகை விதி 36ஏ(6)ன் படி குவாரி செய்யும் பணிக்கு எந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது.
அரசின் அனுமதி பெற்ற பின்னரே கனரக எந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
÷4.
ஆற்றின் இயற்கையான
நீர்ப்போக்கில் மாற்றம் ஏற்படா வண்ணமும், ஆற்றின் கரைகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படா வண்ணமும் மணல்
எடுக்க வேண்டும்.
÷5.
மேற்படி பகுதியில் மணல்
எடுப்பதன் மூலம் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் மணல் எடுக்க வேண்டும்.
÷6.
தமிழ்நாடு குடிநீர்
வாரியத்தால் பராமரிக்கப்படும் நீர் ஆதார அமைப்புகளுக்கு விதிகளின்படி 500 மீட்டர் சுற்றளவு கொண்ட குறைந்த பட்ச பாதுகாப்பு இடைவெளி கண்டிப்பாக விடப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும்
மேற்படி நீர் ஆதார
அமைப்புகளுக்கு விடப்படும்
பாதுகாப்பு இடைவெளிப் பகுதியில் மணல் குவாரி செய்யக் கூடாது.
÷7.
மணல் எடுக்கும்போது
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படா வண்ணம் மணல் எடுக்க வேண்டும்.
÷8.
காலை 8 முதல் மாலை 6 மணி வரைதான் மணல் எடுக்க வேண்டும்.
÷9.
ஒரு லோடு மணலுக்கு ரூ.200 கட்டணமாகவும், வரி ரூ.26-ம் கட்ட
வேண்டும்.
÷மேற்படி இவ்விதிகளை மீறாமலிருக்க மாதம் ஒருமுறை சம்பந்தப் பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுப்பணித் துறை நிர்வாகப் பொறியாளர், மண்ணியல் அதிகாரி மற்றும் பல்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெறும். தவறு நடந்தால்
கண்காணிக்கும்,
முறைப்படுத்தும் பொறுப்பு
இவர்களுடையது என அரசின் விதிமுறைகள் அறிவுறுத்துகின்றன.
÷இத்தனை விதிகளும் காவல் கண்காணிப்புகளும் இருந்தாலும்
தடையின்றி மணல் கொள்ளை நடந்து
வருகிறது.
தோட்டக் காவல் காரனும் கொள்ளைக்காரனும் இணைந்துவிட்டால் விடியவிடியக் கொள்ளை அடிக்கலாம் என்பது நாட்டு வழக்கு.
÷சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் 2010 அக்டோபரில் தாமிரபரணி மணல் கொள்ளையை எதிர்த்து பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
மதுரை நீதிமன்றத்தின் அறிவுரைப்படி நிபுணர்குழு அமைக்க
உத்தரவிடப் பட்டது. புவியியல் ஆய்வாளர், நீதிமன்றப் பதிவாளர், சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
÷நீதிபதி பானுமதி, நீதிபதி நாகமுத்து ஆகியோர் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட அக்குழு பாதிக்கப்பட்ட தாமிரபரணி மணற்கொள்ளைப் பகுதிகளை
நேரடியாக ஆய்வுசெய்து ஆய்வறிக்கையை
நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
÷அந்த அறிக்கையின்படி தாமிரபரணி ஆற்றுப்படுகையின் மேலே உள்ள
மணல் மட்டும்
எடுக்கப்படவில்லை, மாறாக, மிக ஆழமாக, அகலமாக மணல் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது என்றும், இதனால்
ஆங்காங்கே பெரும் பெரும் பள்ளங்கள் காணப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த
விதிகளுக்கு மாறாக மணல் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது.
நதி முழுவதும் மேடுபள்ளங்களாக ஆக்கப்பட்டு பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, செயற்கை நீர்த் திட்டுகள் போன்று காணப்பட்டன.
÷இயற்கை ஊற்றுகள் அழிக்கப்பட்டிருந்தன. இனிவரும் 5 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதிகளில் மண் எடுக்க அனுமதிக்கக்கூடாது. நெறிமுறைகளுக்கும்
விதிமுறைகளுக்கும்
மாறாக 3 அடிக்கு மேலும் ஆழமாகத் தோண்டப்பட்டு மணல்
எடுக்கப்பட்டிருக்கிறது என்றெல்லாம்
அந்த நிபுணர்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
÷மணற் குவாரிகளில் பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதைத்
தடை
செய்வதாகவும் இதற்கான
விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிபடத் தெரிவித்திருந்தது.
÷இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று லாரி
உரிமையாளர்கள் மேல் முறையீடு
செய்து கொண்டதற்கு இணங்க,
மேற்படி தீர்ப்பைத்
தாற்காலிக அனுமதியுடன் செயல்படுத்த
நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக சில மணற்குவாரிகள் மூடப்பட்டனவே தவிர, குறிப்பிட்ட
இடங்களைத் தவிர மற்ற இடங்களில் எப்போதும் போல மணல் அள்ளப்படுவது குறைந்ததாகத் தெரியவில்லை
.
÷2010-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அளிக்கப்பட்ட நீதிமன்றத்
தீர்ப்பு முறையாக
நடைமுறைப்படுத்தவில்லை. உயர்
நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் அமைக்கப் பட்ட மாநில அமைப்பு செயல்பட, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நீதிபதி ஜோதிமணி (ஜூலை முதல் வாரத்தில்)
ஒரு தீர்ப்பில்
தெரிவித்திருக்கிறார்.
÷தமிழ்நாடு நீங்கலாக மற்ற மாநிலங்களில் எல்லாம் பொக்லைன்
எந்திரம்
பயன்படுத்துவதைத் தடை
செய்துள்ளனர். கேரளத்தில் 2001-ம் ஆண்டிலிருந்தும் ஆந்திரம், மகாராஷ்டிரத்தில் 2006-ம் ஆண்டிலும் பொக்லைன் எந்திரத்தின் மூலம் மணல் அள்ளுவது
தடை
செய்யப் பட்டுள்ளது.
÷தாமிரபரணி நதியில் மணல் அள்ளும் நடவடிக்கைகளுக்கு உயர்
நீதிமன்றம்
தடைவிதித்த பின்னர், பாலாற்றிலும் மணல் அள்ளுவதற்குத் தடைவிதித்துத் தமிழக அரசு உத்தரவிட்டது.
÷தாமிரபரணி, பாலாறு
மட்டுமன்றி தமிழ்நாட்டில் மணல் கொள்ளை போகும் முக்கிய நதிகளான காவேரி, பவானி, அமராவதி
மற்றும் பெண்ணை ஆற்றுக்கரைகளிலும் மணல் அள்ளத் தடை மற்றும் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு கொண்டு வரவில்லை.
÷தாமிரபரணி வழக்கில் அனுமதிக்கப்பட்ட மணல் எடுப்பு என்பது 6 மாதத்துக்கு 54,417 யூனிட் அளவுதான். ஆனால், ஒரே மாதத்திலேயே 65,000 யூனிட் அளவிலான மணல் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை பொக்லைன் எந்திரத்தைக்
கொண்டுதான் எடுத்திருக்க முடியும்.
ஆனால்,
அரசுத் தரப்பில் ஆஜரான
வழக்குரைஞர்,
வெறும் 1,758 யூனிட் அளவில் தான் தாமிரபரணியில் மண் எடுக்கப்பட்டுள்ளது என
நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
÷ஒரு டிப்பர் லாரியில் 100 கன அடி மணல் ஏற்றலாம். மணல் பாடி லாரிகளில் ஒன்றரை யூனிட் வரை ஏற்றலாம். ஒரு நாளைக்குக் குறைந்தது 5 முதல் 6 யூனிட்
வரை மணல் நிரப்பிக் கொண்டிருக்கின்றன, மெகா டிப்பர் எனப்படும் மணல் லாரிகள். ஆனால், அரசுக்கு 1 லாரி மணல் என கணக்குக் காண்பித்து 1 யூனிட் அளவு மண்ணுக்கு மட்டுமே பணம் தந்து விட்டுச் செல்கிறார்கள்.
÷மணல், மக்களின்
தேவைப் பொருளாக இருக்கிறது. கட்டுமான அமைப்புகளுக்கு அடிப்படையானதாக இருந்து வருகிறது. இந்த ஆற்று மணல் தமிழ்
மாநிலத்தில் கட்டட
வேலைகளுக்காக மட்டும்
பயன்படுத்துவதைவிட,
வெளி மாநிலங்களுக்கும் பிற
வெளி
நாடுகளுக்கும் கடத்திக்
கொண்டுபோய் விற்று வந்தார்கள். மணல் இவ்வாறு ஏற்றுமதிப் பொருளாக மாறியதுதான் மணல் கொள்ளைக்குக் காரணமாக இருக்கிறது.
÷வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் இயக்குநர் செயலகத்தின்
அறிக்கையின்படி மாலத் தீவுகளுக்கு
ஏற்றுமதி செய்யப்பட்ட மணல் அளவு 2008-2009-ம்
ஆண்டுகளில் 5.5
லட்சம் டன்னாக இருந்தது. இது 2009-2010-ம் ஆண்டுகளில் 10.5 லட்சம் டன்னாக உயர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
÷வெளிநாட்டுக்குக் கடத்தப்படும் இத்தகைய சட்டப்பூர்வ
நடவடிக்கைகளால் நமது நாட்டின்
இயற்கை வளமும் சுற்றுச்சூழல் வளமும் வெகுவாகப் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
÷இத்தகைய மணல் கொள்ளைகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது.
ஆற்றின் போக்கும்
மாறுகிறது. ஆக்கிரமிப்புக்கு
உள்ளாகின்றன. நாளாவட்டத்தில் நீர் வழித்தடங்கள் அழிக்கப்படுகின்றன.
÷அரசின் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக ஆழ்துளைக்
கிணறுகள்
அமைக்கப்படுவதாலும், நீர்மட்டம் குறைந்து போகிறது. தொழிற்சாலை பயன்பாடுக்கான ஏற்பாடுகளும் ஆற்று நதி நீரின் பெரும்பங்கை உறிஞ்சி எடுத்து
விடுகின்றன.
÷ஆற்று மணல் என்பது வெறும் கனிமப் பொருள் மட்டும் அல்ல. அது
நீரைச்
சுத்தப்படுத்தி நீரைச்
சேமித்து வைக்கும் இயற்கை சுத்திகரிப்பு சேமிப்புக் கலன். அது செடி கொடிகள் மற்றும் பல் உயிர்களையும் பாதுகாப்பதாகும்.
÷தமிழ்நாட்டில் நமது முன்னோர்கள் விளைநிலங்களைப் பாது காத்தார்கள். விவசாயத்துக்கான நீரைப் பெறுவதற்காக ஆற்றைப்
பராமரித்தார்கள். கரைகளைச் சீரமைத்தார்கள். குடிமராமத்துப் பணிகளை முறையாக
காலாகாலத்தில் நிறைவேற்றி வந்தார்கள். ஆறு,
குளங்கள் கரைகளைப்
பாதுகாப்பதற்கும் மதகுகளைப் பராமரிப்பதற்கும் கரைக்காவலர்கள், லஸ்கர்கள் நியமிக்கப்பட்டு வந்தார்கள்.
÷மணற் பரப்பினை "தொட்டனைத்து ஊறும் மணற் கேணி' என்றும், இத்தகைய
மணற்
கேணிகளில் சேமிக்கப்பட்டு
வரும் நீரை "நீரின்றி அமையாது உலகு' என்றும் திருக்குறள் வலியுறுத்துகிறது.
÷"உணவால் விளைந்தது உடம்பு. உணவெனப்படுவது நிலத்தொடு நீரே' என புறநானூற்று பாடல் அறிவித்துள்ளது.
÷தமிழக அரசின் 2011-2012-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீரைப் பாதுகாப்பதென்றும், பாசன வசதிகளைப் பெருக்குவதென்றும் திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
இத்திட்டங்கள் சரியாக நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் மணல்
கொள்ளையைத் தடுக்க
வேண்டும். கட்டுமான
நடவடிக்கைகளுக்கு மணல் கொடுப்பதற்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மணல் நமது பயன்பாட்டுக்கும் தேவைக்கும் மட்டுமே அள்ளப்பட வேண்டுமே தவிர, வெளி நாடுகளுக்கும், அண்டை மாநிலமான கேரளத்துக்குக் கடத்தப்படுவதும், ஏற்றுமதி செய்யப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். நமக்கு
நியாயமாகத்
தரப்படவேண்டிய
தண்ணீரைக் கூடத் தரமறுக்கிறார்கள், சகிக்கிறோம்.
ஆனால்,
நமது மணலைக் கொள்ளையடித்துப் போய் தமிழகத்தைப் பாலைவனமாக்குகிறார்களே, இது பொறுப்பதில்லை.
÷முதல்வர் மனதுவைத்தால் மட்டுமே நமது மணல் கொள்ளை போவது
தடுக்கப்படும்!
<script type="text/javascript">
var gaJsHost = (("https:" == document.location.protocol) ? "https://ssl." : "http://www.");
document.write(unescape("%3Cscript src='" + gaJsHost + "google-analytics.com/ga.js' type='text/javascript'%3E%3C/script%3E"));
</script>
<script type="text/javascript">
try {
var pageTracker = _gat._getTracker("UA-11911750-1");
pageTracker._trackPageview();
} catch(err) {}</script>
<!-- Place this tag in your head or just before your close body tag -->
<script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script>
<!-- Place this tag where you want the +1 button to render -->
<g:plusone></g:plusone>
var gaJsHost = (("https:" == document.location.protocol) ? "https://ssl." : "http://www.");
document.write(unescape("%3Cscript src='" + gaJsHost + "google-analytics.com/ga.js' type='text/javascript'%3E%3C/script%3E"));
</script>
<script type="text/javascript">
try {
var pageTracker = _gat._getTracker("UA-11911750-1");
pageTracker._trackPageview();
} catch(err) {}</script>
<!-- Place this tag in your head or just before your close body tag -->
<script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script>
<!-- Place this tag where you want the +1 button to render -->
<g:plusone></g:plusone>
unmaithaan muthalvar manam thirappaar...
ReplyDelete÷முதல்வர் மனதுவைத்தால் மட்டுமே நமது மணல் கொள்ளை போவது தடுக்கப்படும்!
ReplyDeleteதிரு தயாநிதி!
ReplyDeleteகட்டுரையில் தோழர் நல்ல கண்ணு சொன்ன ஒரு வாக்கியத்தை மட்டும் அப்படியே எடுத்துப் போட்டு ஒரு பின்னூட்டமா? உங்களுக்கு இது குறித்து வேறு கருத்து எதுவுமே இல்லையா?
முதல்வராக இருக்கும் ஒருவர் இப்படி எத்தனை ஆயிரம் விஷயங்களில் மனது வைக்க முடியும் என்று நம்புகிறீர்கள்?
ஜனங்களுக்கு இந்த விஷயத்தில் விழிப்புணர்வு, அக்கறை எதுவுமே வேண்டாமா? அதைக் குறித்து என்ன செய்யப்போகிறோம் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!
இந்த முதவர் மட்டும் பரிசுத்த ஆவியால் பிறந்தவரா என்ன? சென்ற முறை இவர் ஆட்சியில் மணல் கொள்ளைகள் நடக்கவில்லையா?
ReplyDeleteஎல்லார் ஆட்சியிலும் மணல் கொள்ளையர்கள் அவரவர் தலைகளுக்கு கப்பம் கட்டுவதும் நாடறிந்த ரகசியம்தான்.ஏதோ இந்த முதவர் மட்டும் மனது வைத்தால் இது முடிவுக்கு வந்துவிடும் என நினைப்பதெல்லாம் சுத்த Hambug.
வாருங்கள் மாணிக்கம்!
ReplyDeleteஅப்படிப்பார்த்தால், எந்த அரசியவியாதியும் பரிசுத்த ஆவியில் வெந்தவரும் அல்ல! கருணாநிதி தொகையறாவோடு ஒப்பிடும்போது,ஜெயலலிதா ஊழலில் பலமடங்கு கம்மிதான்! உடகங்களில் ஊதி ஊதியே ஜெயலலிதாவை, அவரது சைசுக்கும் மீறிய பூதமாக மாற்றிக்காட்டியதுதான் கருணாநிதி குடும்பம் செய்த சாதனை!
மணல் கொள்ளையில் சுமார் நாற்பதாயிரம் கோடி வரை சம்பாதித்திருக்கலாமென்று ஒரு மதிப்பீடு சென்ற ஆட்சி மீது இருந்தது.
எது எதற்காகவோ தமிழக முதல்வர்
ReplyDeleteGreat this shows your attitude
சக்ரா என்ற பெயரில் வெறும் ப்ளாக்கர் ஐ டி மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் திருவாளர் அனாமதேயம்!
ReplyDelete//Great this shows your attitude //
ஒவ்வொரு பதிவும், வலைப்பூவும் அவரவர் அணுகுமுறை,எண்ணவோட்டங்களைச் சொல்வது தான்! இதில் புதிதாக என்ன கண்டுபிடித்து விட்டீர்கள்? தவிர உங்கள் அணுகுமுறைதான் என்னுடையதாகவும் இருக்கவேண்டுமென்று எந்த அடிப்படையில் இந்தப் பின்னூட்டத்தை எழுதினீர்கள்?
புலிக்குட்டி என்ற பெயரில் பதிவெழுதும் கரிகால்!
ReplyDeleteஇந்தப்பக்கங்களில் இருந்து ஒருகார்டூனுக்காக நான் எழுதிய வாசகங்களை அப்படியே காப்பியடித்து உங்களுடைய பதிவில் பதினெட்டாம் தேதி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! போகட்டும்!
அதென்ன பாதிப்பதிவுகள் தமிழ் எழுத்துக்கள் தெரிகிற மாதிரியும், மீதிப்பாதி படிக்க கமுடியாத படி வேறொரு எழுத்து வகையிலும்? இந்தப் பின்னூட்டம் கூட,அதே பாதிப்போடுதான் எழுதினீர்களோ?
தன்னுடைய வாழ்வாதாரங்கள் பறிபோய்க் கொண்டிருப்பதற்கே இங்கே மக்கள் தெருவில் இறங்கிப் போராட முன்வருவதில்லை!இதில் இந்தக் கூத்து வேறா?