ரகசியம், பரம ரகசியம்! காங்கிரஸ் இஷ்டைல்!


ஷ்..ஷ்..! ரகசியம்! பரம ரகசியம்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காண்டி என்ன செய்கிறார், எப்போது எதற்காக வெளிநாடு போகிறார் என்பது இந்த தேசத்தின் ராணுவ ரகசியத்தைவிடப் பெரிய, பரம ரகசியம். அதில் அப்படி என்ன தான் ரகசியமோ என்று, சந்தேகங்களை நிறைய எழுப்புகிற அளவுக்கு பரம ரகசியம்!!

ன்றைக்கு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் சோனியா காண்டிக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக,காங்கிரஸ் பேச்சாளர் ஜனார்தன் த்விவேதி தகவல் தெரிவித்திருக்கிறார். 
றுபத்து நான்கு வயதான சோனியாவுக்கு, ஐந்து நாட்களுக்கு முன்னால் வைரஸ் காய்ச்சல் என்று சொல்லப் பட்டது. 

ருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நேற்றைக்கு அமெரிக்காவுக்குப் போன அவருக்கு, இன்று வியாழக் கிழமை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும், இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு நாடு திரும்ப மாட்டார் என்றும், சோனியா நாட்டில் இல்லாத இந்த சமயத்தில் காங்கிரஸ் விவகாரங்களைக் கவனிக்க, ராகுல் காந்தி, ஏகே அந்தோணி, அஹமது படேல் மற்றும் ஜனார்தன் த்விவேதி ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் திவிவேதி தகவல் தெரிவித்தார்.என்ன கோளாறு, எதற்காக அறுவை சிகிச்சை என்ற தகவல்களை அவர் சொல்லவில்லை.

என்னவென்று  தெஹெல்காவும்அப்புறம் சி என் என்-ஐ பி என் செய்தியும் அடிக் கோடிட்டுக் காட்டின.


பெயரளவுக்கு நான்கு பேர் இருந்தாலும் சோனியாவின் உதவியாளர் அஹமது படேல் தான் உண்மையான ரிமோட் கன்ட்ரோல் என்பது காங்கிரஸ் விவகாரங்களைக் கவனித்து வருகிற எல்லோருக்கும் தெரியும்.

சில வாரங்களுக்கு முன்தான், தேசீய ஆலோசனைக் குழுவின் தலைவர் என்ற முறையில் இவர் அடிக்கடி மேற்கொள்ளும் வெளி நாட்டுப் பயணங்களைப் பற்றிய விவரம், செலவு குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர் ஒருவருக்குத்  தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தப்பக்கங்களிலேயே அந்தத் தகவல் பேசப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

காண்டி குடும்ப வாரிசுகள் வெளிநாடுகளுக்குப் போய்வருவதைக் குறித்து செய்திகள் எப்போதுமே இதுவரை வெளியானதில்லை. இதுதான் முதல் தரம் என்பதால், இந்தப் பக்கங்களிலும் இந்த அதிசயமான செய்திக்கு ஒரு இடம், அவ்வளவுதான்!

கொஞ்சம் கூர்ந்து இந்த செய்தியைக் கவனித்தீர்கள் என்றால், மன்மோகன் சிங் கழற்றி விடப்பட்டால், அல்லது தானாகவே விலகினால், பிரதமர் நாற்காலியைப் பிடிப்பதில் பிரணாப் குமார் முகர்ஜி, கண்டனூர் பானா சீனா இருவருக்கும் இடையில் தான் கடும் போட்டி இருக்கும் என்று  ஆரம்பகாலங்களில் பரவலாக சொல்லப் பட்டது. 

ன்னுடைய வாய்க் கொழுப்பினால் எல்லோரையும் பகைத்துக் கொண்ட சால்வை அழகர். சமீபத்தில் தன்னையும் உள்ளிட்டு அறுபது வயதைக் கடந்தவர்கள் பதவியில் இருப்பது தவறுதான் என்றும், பிரதமராகும் எண்ணமில்லை ஆனால் எழுத்தாளராகும் எண்ணம் ருக்கிறது என்று சொன்ன சேதி நினைவிருக்கலாம். பானா சீனா, சோனியாவின் பின்னால் ஒளிந்து கொண்டு, பதவியில் நீடிக்கிறார், அவ்வளவுதான்!

போதாக்குறைக்கு, இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றம், சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்திருந்த மனுவைத்  தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி சால்வை அழகர் பானா சீனா தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது!

ன்னொரு பக்கத்தில் இருந்தும் இடி!

ஸ்பெக்ட்ரம் விவகாரம் மட்டுமல்லாமல் அப்பச்சிக்கு "இடி"யாப்பச் சிக்கல்களாகவே தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த முறை ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி ராஜ.கண்ணப்பன் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்தத் தொகுதியில் இரண்டாவதாக வந்தவர் அதிமுகவைச் சேர்ந்த ராஜ.கண்ணப்பன். இவர் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடை பெறும் நிலையில், ராஜ.கண்ணப்பன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ப.சிதம்பரத்தின் இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

யர்நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராஜன், ராஜ.கண்ணப்பன் தாக்கல் செய்த தேர்தல் மனுவில் குறைபாடு இருப்பதால் அது தொடர்பான ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு சரிசெய்யப்பட்டன. இதன் காரணத்தால் அவர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சிதம்பரம் தரப்பில் கோரப்பட்டது. 

னால், ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு சரிசெய்யப்பட்ட காரணத்துக்காக ராஜ.கண்ணப்பனின் தேர்தல்மனுவை நிராகரிக்க முடியாது. இன்னும் மூன்று வாரகாலத்துக்குள் சிவகங்கை தேர்தல் வழக்கு விசாரணை நடைபெறும் என்றார் அவர். 
போட்டியில் ஒருவர் காலி! அப்படியானால், அடுத்த வாய்ப்பு  பிரணாப் குமார் முகர்ஜிக்குத் தானா? 

ப்படியும் சொல்லிவிட முடியாதபடி, காங்கிரஸ் அவ்வளவு குழப்பத்தில் இருக்கிறது. தியாக சிகரம் பட்டத்தை ஏற்றுக் கொண்டு, ஏழாண்டுகளுக்கு முன்னால், டம்மிப் பீசாக மன்மோகன் சிங்கைப் பதவியில் அமர்த்தி வைத்த சோனியாவின் அரசியல் சாதுர்யம் அளவுக்கு மீறியே புகழ்ந்து தள்ளப்பட்டது. இந்தப் பெண்மணிக்கோ, வாரிசுகளுக்கோ அரசியல் அரிச்சுவடியே தெரியாது என்பது இந்த ஏழாண்டுகளில் ஒவ்வொரு தருணத்திலும் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டப் பட்டிருக்கிறது.

பிரணாப் என்னவோ தனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாக நம்பிக் கொண்டு இங்கே திமுக உள்ளிட்ட ஐமு கூட்டணிக் குழப்பங்களிடம் ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கிறார்! முன்னர் ஒருதரம் இதே மாதிரி, பிரதமர் நாற்காலியில் உட்கார ஆசைப்பட்டு அவசர அவசரமாகக் காய் நகர்த்தி, மேலிடத்தின் நம்பிக்கையை இழந்த கதை பிரணாபுக்கு மறந்து போய் விட்டதோ என்னவோ!

ட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சல்மான் குர்ஷீத், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மாதக் கணக்கில் ஜாமீன் மறுக்கப் பட்டு வருவது சரியானதல்ல என்றும், அரசு தலையிட வேண்டி வரலாம் என்றும் சொன்னதாக என்டிடீவீ தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.

திமுக புள்ளிகளுக்கு அடுத்து, திஹார் சிறைக்குள் காங்கிரஸ் வாலாக்கள் தான் போக வேண்டியிருக்கும் என்பதால் எழுந்த கரிசனமோ இது என்று கொஞ்சம் ஆச்சரியம், சந்தேகப்பட வைக்கிறது. 

டில்லி முதலமைச்சர், ஷீலா தீட்சித் கூடிய விரைவிலேயே கல்மாடிக்குக் கம்பனி கொடுக்க வேண்டியிருக்கும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்ட பிறகோ, அல்லது அதற்கடுத்தோ, பானா சீனாவும் உள்ளே போய் உட்கார வேண்டியிருக்கும் என்ற சூழ்நிலையில் சட்ட அமைச்சரின் கரிசனம், ஜனங்களைக் கொந்தளிக்க வைக்கப் போகிறது.

ரசியல்வியாதிகளுக்கு  தங்களுக்கு ஒன்று என்றால் மட்டும் எத்தனை வித்தைகள் கை வருகிறது பாருங்கள்!








 
பதிவின் உள்ளடக்கம் பிடித்திருக்கிறதா? அடுக்கில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித்தெரிவியுங்களேன்!


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!