செய்திகள் சில வரிகளில்...!நச்சி'னார்க்கினியர் உரையுடன்!

ராசாவின் அடிச்சுவட்டில்.......!


ஆ.ராசா! சபாஷ் மாப்பிளே! அப்பிடிப் போடுங்க அருவாள!

ஆ.ராசா, இன்றைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தனதுதரப்பு வாதங்களை எடுத்து வைக்கையில் சொன்னது இது: 


"நான் பன்னிரண்டு வருடங்கள் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறேன். அமைச்சராக உறுதிமொழி ஏற்கையில் அரசியல் சாசனத்துக்குக் கட்டுப் படுவேனென்று சொன்னேனே ஒழிய மன்மோகன் சிங்குக்கோ சிதம்பரத்துக்கோ அவர்கள் ஆலோசனைக்குக் கட்டுப்படுவேனென்று சொல்லவில்லை."

ஆ.ராசா! மாப்பிளே! அப்பிடிப் போடுங்க அருவாள! நீங்க எத்தினி வாட்டி சொருகினாலும் சுரணையே இல்லாத ஜன்மங்களாக அல்லவா காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள்! கல்லுளிமங்கன் என்ற வார்த்தையை நீக்கிவிட்டுக் காங்கிரஸ்காரன் என்று மாற்றிவிடலாம் போலிருக்கிறதே!

கனிமொழி இன்றைக்கு நீதிமன்றத்தில் வாய்மலர்ந்து சொன்னது இது:

"கலைஞர் தொலைக்காட்சிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள், என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவே தெரியாது!"

கதைவசனகர்த்தாவின் மகள் என்பதைத் தப்பாமல் நிரூபித்திருக்கிறார்! சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி எப்படித்தான் சிரிக்காமல் இதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாரோ? நாமாவது அவரது சார்பில் சிரித்து  வைப்போமே!


 இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினார்  -- செய்தி!

இந்தியாவின் ஆஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் டாக்டரை மனிதாபிமான அடிப்படையில் 'பாகிஸ்தான் அரசு' விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உளறிக் கொட்டியதால் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பெரும் அமளியில் இறங்கினர். இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் குறுக்கிட்டு கிருஷ்ணாவின் பேச்சுக்கு விளக்கம் அளிக்க நேரிட்டது.

எஸ்.எம்.கிருஷ்ணா வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே எதையாவது ஒரு குழப்பம் செய்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். டெல்லியில் சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்தபடி தினசரி அலுவலகம் வந்து முதலில் சர்ச்சையைக் கிளப்பினார். பின்னர் ஐ.நா. சபையில் பேசும் போது மெக்ஸிகோ நாட்டு அமைச்சரின் உரையைப் படித்து சொதப்பினார். சமீபத்தில் விம்பிள்டனுக்குப் போய் டென்னிஸ் பார்த்து விட்டு வந்து சர்ச்சையில் .சிக்கினார்.


டம்மிப் பீஸ் மன்மோகன் சிங்குக்கு எஸ் எம் கிருஷ்ணா மாதிரி லோ கிளாஸ் அமைச்சர்களைத் திருத்தும் உரிமை மட்டும் தான் காங்கிரசில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது போல!

ஓட்டை வாய் திக்விஜய் சிங், கபில் சிபல் அல்லது வாய்க்கொழுப்பு பானாசீனா முதலானோர் உளறுவதற்கெல்லாம் விளக்கம் அல்லது திருத்தம் செய்வதற்கு அனுமதி இல்லை இல்லையாமா?! 

இப்படி வெட்கம் கெட்டுப் பிரதம மந்திரியாக இருப்பதை விட வேறு உருப்படியான வேலை பார்க்கப் போகலாமே!


திராவிடக் கட்சிகளை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை- டாக்டர் ராமதாஸ் பேச்சு!

தமிழ்நாட்டை சீரழித்ததே இந்த திராவிடக் கட்சிகள்தான். இவற்றை ஒழிப்பது தான் பாமகவின் முதல் வேலையாகும் என்று கட்சி தொடங்கிய நாள் முதல் திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்து ஓய்ந்து போய் விட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மருத்துவர் ஐயா! நீங்களும் தான் திராவிடக் கட்சிகளுடம் மாறி மாறிக் கூட்டணி வைத்து நாங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்று மார்தட்டிக் கொண்டிருந்தீர்கள்! கேப்டன் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருத்தர், இந்த உடான்சை அம்பலத்துக்குக் கொண்டு வந்துவிட்டார். உங்களுடைய பவிசு, பலம் இரண்டையும் நாடி பிடித்துப் பார்த்துவிட்ட இரண்டு கழகங்களும் கதவை அடைத்து விட்ட நிலையில் இப்படி வசனத்தை எடுத்து விடுகிறீர்களாக்கும்! 

இதுவும் எத்தனை நாளைக்கோ?
 

காவலர்கள் கைத்தாங்கலாக அழைத்துவர, ஆந்திர முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வரும் ரோசையா!

தமிழகத்தின் புதிய ஆளுநர் ரோசய்யா? ?!?!

முன்னாள் ஆந்திர முதல்வரான ரோசய்யா தமிழகத்தின் அடுத்த கவர்னராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

தமிழக கவர்னராக உள்ள சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக் காலம் முடிந்து விட்டது. திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான அவருக்கு இனியும் பதவி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு தயாராக இல்லை. அவரது உடல் நிலையைக் காரணம் காட்டி, வேறு ஒருவரை கவர்னராக நியமிக்க முடிவு செய்துள்ளனர் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும்.

இந் நிலையில் இந்தப் பதவிக்கு கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், உத்தர்கண்ட் மாநில கவர்னருமான மார்க்ரெட் ஆல்வாவின் பெயர் அடிபட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் நெருக்கமானவர் என்பதால், அதிமுகவுடன் எதிர்கால கூட்டணியை மனதில் வைத்து இந்த முடிவை மத்திய அரசு எடுக்கலாம் என்று கூறப்பட்டது.ஆனால், இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ரோசமே இல்லாத ஒருத்தரைத்தாங்க காங்கிரஸ் கட்சி தாங்கும் என்பது தெரிஞ்சது தானே! இதில் ரோசய்யா என்ன ?ஆல்வா என்ன!!


டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே உண்ணா விரதம் இருக்க ஹஸாரேவுக்கு அனுமதி

அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் நடத்தப்போகும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீசார் ஒதுக்கியுள்ள இடம் திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்று அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.

லோக்பால் வரைவு மசோதாவுக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால் அதில் ஹஸாரே குழுவினர் கொடுத்திருந்த பரிந்துரைகள் எதுவுமே இடம் பெறவில்லை. இதையடுத்து மத்திய அரசின் வரைவு மசோதாவை கடுமையாக கண்டித்த ஹஸாரே குழுவினர், இது ஊழலை ஒழிக்க உதவாது என்று விமர்சித்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் முடிவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த ஹஸாரே, ஆகஸ்ட் 16-ம் தேதி திட்டமிட்டபடி டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தித்தார்.

ஹஸாரேவின் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது. சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு அனுமதி அளித்ததோடு ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானதுக்கு அருகில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயணன் பூங்காவில் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுமாறு டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை அன்னா ஹஸாரே அணியின் உயர்மட்டக் குழு கூடியது. இதில் ஹஸாரே, அரவிந்த் கேஜ்ரிவல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.பின்னர் ஹஸாரே செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி போலீசார் ஒதுக்கியுள்ள இடம் நல்ல நிலையில் உள்ள இடம். அது திருப்தி அளிப்பதாக உள்ளது. உண்ணாவிரதத்தை எப்படி நடத்துவது என்பது பற்றி உயர் மட்டக் குழு ஆய்வு செய்து வருகிறது என்றார்.

உளறுவாய் திக்விஜய் சிங் முன்பே சொன்னபடி, ராம்தேவ் ண்ணா விரதப்பந்தலில் நள்ளிரவில் போலீஸ் புகுந்து கண்ணீர்ப்புகை வெடித்துக் கைது செய்து களேபரம் பண்ணிய மாதிரி மறுபடி செய்வதற்கும் தோதான இடம் தான் இது  என்று டெல்லிப் போலீசும், சால்வை அழகரும் திருப்தி தெரிவித்தார்களாமா? 

அண்ணா ஹசாரே அதையும் கேட்டுத் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது!!


"காக்கா' கூட்டம் அலம்பல்; காத்திருந்த உறவினர்கள் புலம்பல்!
 
நில அபகரிப்பு புகாரில் கைதாகி, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள "மாஜி'க்களை பார்க்க வந்த தி.மு.க.,வினரால், மற்ற கைதிகளை பார்க்க வந்த உறவினர்களும், நண்பர்களும், நீண்ட வரிசையில், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.நில அபகரிப்பு வழக்கில் கைதான மாஜி அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், ராஜா, எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் உள்ளிட்ட தி.மு.க.,வினர், கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களை பார்த்து நலம் விசாரிக்கவும், ஆறுதல் கூறவும், ஏராளமான தி.மு.க.,வினர், சிறைக்கு சென்று வருகின்றனர்.

கழகங்கள் ஆட்சியில் இருந்தாலும் உபத்திரவம்! இல்லாவிட்டாலும் உபத்திரவம் என்பது தெரிந்தது தானே!

4 comments:

  1. //"கலைஞர் தொலைக்காட்சிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள், என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவே தெரியாது!"//
    நல்ல வேளை. கலைஞ்சர் தொலை காட்சி என்று ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது என்று சொல்லாமல் விட்டாரே!
    பர்னாலா உடல் நிலையை காரணம் காட்டி தூக்கி விட்டு உடல் நிலை சரியில்லாத ரோசய்யாவை போடுகிறார்களா, வேண்டியது தான்!
    என்று காங்கிரஸ் ஒழியுமோ அன்றே நம் பொன்னாள்!

    ReplyDelete
  2. ஆட்டுக்குத் தாடி தேவையா? இப்படி கவர்னர் பதவி தேவையே இல்லை என்று இலக்கியமாகச் சொன்ன கழகங்களை இந்த ஒரு விஷயத்தில் ஆதரிக்கலாம் என்று தான் தோன்றுகிறது. மாநில அளவில் எதற்காக கவர்னர்கள்? மத்திய அரசின் கண்காணிகளாக, எடுபிடிகளாகச் செயல்பட்டதைத் தவிர இந்தப் பொறுப்பினால் உருப்படியாக எதுவும் இந்திய அரசியலில் நடந்ததே இல்லை.

    ReplyDelete
  3. oru urayaikkooda thappillamal solla theriya villai இவர்களெல்லாம், எப்படி அமைச்சரானார்கள்,,ஒரே தமாசு

    ReplyDelete
  4. காங்கிரசின் இன்றைய தலைகள் எல்லோருமே, திமுக முன்னோடிகள் மாதிரி ஒருவித நாசகார சக்தியாக இருப்பவர்கள் தான்!

    வெளியுறவுத் துறையில் இன்றைக்கு சொதப்பிக் கொண்டிருக்கும் எஸ் எம் கிருஷ்ணா, கர்நாடக காங்கிரசில் ஒரு காலத்தில் தாதா! காங்கிரஸ் கலாசாரப்படியே எதிர்க் கோஷ்டிகள் வலுத்த நேரத்தில், மாநில கவர்னர் பதவி கொடுத்து வெளியேற்றப்பட்டார். கவர்னராக இருந்து கொண்டே கர்நாடக அரசியலையும் ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருந்ததால், மத்திய அமைச்சராக்கப்பட்டு, சாந்தப்படுத்தப்பட்டார்.

    அமைச்சரகமும் இந்திய மக்களும் தான் இந்தமாதிரி வீணாய்ப்போனவர்கள் கையில் சிக்கிக் கொண்டு படாதபாடு படவேண்டியிருக்கிறது!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!