ராஜா காது கழுதைக் காது! ராஜா காது........!


பொறுப்பு, பொதுக்கணக்கு, விசாரணை என்று வந்தாலே காங்கிரஸ் கொஞ்ச நஞ்சமல்ல, நிறையவே தடுமாறும்! 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளு மன்றத்தால் நியமிக்கப்பட்ட பொதுக்கணக்குக் குழு விவகாரத்திலும் அப்படித் தான்!எந்தெந்த இடங்களில் சறுக்கினார்கள், தடுமாறினார்கள், உளறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்தத்தலையங்கம் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது .பொதுக் கணக்குக் குழு ஒன்றும் தண்டிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு அல்ல! அதன் வேலை,ஒருவிஷயத்தைக் குறித்து விசாரணை நடத்தி, நாடாளு மன்றத்துக்கு என்ன செய்யலாம் என்கிற பரிந்துரையை, ஒரு அறிக்கையாகக் கொடுப்பது மட்டும் தான்.

ஆனால், விசாரணை என்று லேசுபாசாக ஆரம்பித்ததாலேயே, ஏகப்பட்ட குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துவிடுவதை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தவிர்க்க முடியவில்லை. ஒரு கேள்விக்கு பதில் என்று பார்த்தால், ஏகப்பட்ட கேள்விகளுக்கு இடம் கொடுக்கிற மாதிரி, தோண்ட தோண்ட பூதங்களாகக் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன.ஆ.ராசா மட்டுமல்ல, மன்மோகன் சிங் முதல் ரத்தன் டாட்டா, அணில் அம்பானி, கார்பரேட் அரசியல் தரகர்கள் என்று  ஏகப்பட்ட பேர் அம்பலத்துக்கு வருவதை இனிமேலும் மூடி மறைக்க முடியாதே! தினமணி தலையங்கத்தைக் கொஞ்சம் பாருங்கள்!


"நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, பொதுக் கணக்குக் குழு (பிஏசி)எதற்காக எல்லோரையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று குழு உறுப்பினர்களில் ஒருவரான மாநிலங்கள் அவை உறுப்பினர் திருச்சி சிவா எதிர்ப்புக் குரல் எழுப்பியபோது, இந்த விசாரணையை ஊத்திக் கவிழ்க்கும் முயற்சியின் முதல்கட்டம் தொடங்கி விட்டது என அப்போதே தெளிவாகிவிட்டது.

 பி.ஏ.சி.-யின் தனி விசாரணை தேவையில்லை என்ற எதிர்ப்பு ஏற்பட்ட நாளன்று சட்டத்துறைச் செயலரும், அட்டர்னி ஜெனரல் வாஹன்வதியும் நேரில் விளக்கம் அளிக்க வந்திருந்தனர் என்பதையும், இப்போது கசிந்துள்ள அறிக்கையில்,"அன்றைய தினம் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாஹன்வதி, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்கிற நடைமுறை சரியானது தான் என்கிற கருத்தை, சட்டத்துறையைப் புறந்தள்ளி விட்டு நேரடியாகத் தொலைத்தொடர்புத் துறைக்கு அறிவித்தார் என்று கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதையும் இப்போது இணைத்துப் பார்க்கும் போது, இவர்களுக்குக் கோபம் எங்கே கிளைக்கிறது என்று புரிந்துகொள்ள முடியும்.

 நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தாலும்கூட, நாடாளு மன்றத்தால் சட்டப்படி உருவாக்கப்பட்ட பொதுக்கணக்குக் குழு, அரசுக்கு ஏற்பட்ட நிதியிழப்பு குறித்து விசாரிக்க முழு உரிமை பெற்றுள்ளது. அதன்படிதான், பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, தொலைபேசித் துறைச் செயலர் முதல் இதில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் அழைத்து விசாரித்து வந்தார். அவர்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன, என்ன பதில் அளிக்கப்பட்டது என்பது வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது.

பொதுக் கணக்குக் குழு நடத்திய விசாரணையில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப் படாத சில விஷயங்களும்கூட வெளிப்பட்டுள்ளதும், இவை பொதுக்கணக்குக் குழு அறிக்கையில் பதிவு செய்யப்படுமேயானால், இதில் சுட்டிக்காட்டப்பட்ட விஷயங்களை நாளை நீதிமன்றமும் கையில் எடுக்கக் கூடும் என்கிற அச்சமும்தான் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது.

 பி.ஏ.சி. விசாரணைக்குத் தடை விதித்த பிறகு, அடுத்ததாக இந்த அறிக்கையைத் தடுத்து நிறுத்தும் முகமாக, சமாஜ்வாதி கட்சியின் அங்கத்தினர் ஒருவர், பகுஜன் சமாஜ் கட்சியின் அங்கத்தினர் ஒருவர் என இரண்டு பேரை மட்டும் தங்கள் பக்கம் "இழுத்து'க்கொண்டு எண்ணிக்கை பலத்தை 11 ஆகக் காட்டி, இந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி, ஜோஷி மீது கடுமையாக வசை பாடினார்கள்.

இதையெல்லாம்விட பெரிய கேலிக்கூத்து, இவர்களின் "ரகளை பொறுக்க மாட்டாமல் ஜோஷி வெளியேறியபோது, ஓடுகிறார் என்று கேலி பேசியதுடன், அந்த 11 பேரும் உட்கார்ந்து பிஏசி தலைவராகப் பேராசிரியர் சைபுதின் சோசை த் தேர்வு செய்தார்கள்.


பிஏசி தலைவராக இருப்பவர் மக்களவை உறுப்பினராக இருக்க வேண்டும் என்கிற அடிப்படை கூடத் தெரியாமல், மாநிலங்களவை உறுப்பினரான சோஸ் தேர்வு செய்யப்படுகிறார் என்றால், இது குறித்து இன்றுவரையிலும் மக்களவைத் தலைவரும் பிரதமரும் ஏதும் பேசாமல் வாய்மூடி மௌனியாக இருப்பார்கள் என்றால், இதை என்னவென்பது?

 இந்த அறிக்கை உள்நோக்குடன் கசிந்தது என்றும், மத்திய அரசைக் களங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தயாரிக்கப் பட்டது என்றும் காங்கிரஸ் கட்சி கருதினால் அதை பிஏசி கூட்டத்தில் விவாதிப்பதும், கேள்வி கேட்பதும் நியாயமானதே. ஆனால், அதற்காக அந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பது என்பது இத்தனை நாள்களாக பிஏசி நடத்திய விசாரணையையே அழிப்பதாக ஆகாதா?

பி.ஏ.சி.-யில் ஒவ்வொருவரும் தெரிவித்த தகவல்களை வைத்துத் தான் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது உறுப்பினர்களுக்கே நன்றாகத் தெரியும். அத்தனையும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள். இதில் தனியாக ஜோஷியோ அல்லது பாஜகவோ இட்டுக்கட்டி எழுதுவதற்கு ஏதுமில்லை. அவ்வாறு இருந்தால், விசாரணையில் பதிவு செய்யப்படாமல் தன்னிச்சையாக எழுதப்பட்ட பகுதிகள் எவையெவை என்பதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டி அதை நீக்க வேண்டும் என்று கோரினால் அது நியாயமான அணுகுமுறையாக இருந்திருக்கும்.

இவர்களது அடிப்படை அச்சம் , இணையான விசாரணை நடந்தால், அறிக்கை வெளியானால், தங்கள் குற்றம் மேலும் உறுதி செய்யப்படும் என்பதுதான். ஆகவேதான் காங்கிரசும் திமுகவும் இதில் இந்த அளவுக்கு எதிர்ப்பு காட்டியுள்ளன.

 நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தன்னிச்சையாகத் தயாரித்துவிட்டார் என்று கூக்குரலிடுகிறார்கள் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள். இது போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கும்போது, குழுவின் சார்பில் விசாரணையின்போது அனைவரும் கலந்து கொள்வதும் அதன் தலைவர் அறிக்கையைத் தயாரிப்பதும்தானே வழக்கம். அந்த அறிக்கை குழுவின்முன் விவாதத்துக்கு வைக்கப்படும் போது, தங்கள் ஆதரவையோ, ஆட்சேபணைகளையோ உறுப்பினர்கள் பதிவு செய்வதுதானே முறை?

 பொதுக்கணக்குக் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அதில் பிரதமரின் செயல்பாடுகள் குறித்த பல கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதுதான், காங்கிரஸ் - திமுக உறுப்பினர்களின் ஆவேசத்துக்கும், அவசரத்துக்கும் காரணம்.

2003-ல் கார்கில் போரின்போது ராணுவக் கொள்முதல்கள் பற்றி விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட பூட்டா சிங் தலைமையிலான பொதுக் கணக்கு விசாரணைக் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிடாமல் அன்று ஆட்சியிலிருந்த பாஜக தடுத்தது. இப்போது, முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்யவிடாமல் இன்றைய ஆளும் கட்சிகள் தடுக்கின்றன.

தவறுகளையும், முறைகேடுகளையும் யார் செய்திருந்தாலும் வெளிக் கொணர வேண்டிய நமது மாண்புமிகு உறுப்பினர்கள், தவறுகளை மூடி மறைப்பதில் காட்டும் அக்கறை பிரமிக்க வைக்கிறது.

இந்தியா ஒளிர்கிறது,  நிஜம்!"

எதிலெல்லாம் என்று கேட்கிறீர்களா?

ஊழலில்! பொறுப்பற்ற தனத்தில்!செயல்படாத அரசு நிர்வாகத்தில்! தடைக்கற்களாக இருப்பதே நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களுடைய முக்கியத் தொழிலாக ஆனதில்! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்!

பொதுக்கணக்குக் குழு விவகாரத்தில் காங்கிரசின் நிலையை  திருமதி ஜெயந்தி நடராசன் தொலைக்காட்சிகளில் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த விதம் மிக வேடிக்கையாக இருந்தது.இருநூற்றெழுபது  பக்க அறிக்கையின் சில பக்கங்கள் மட்டும் வெளியே கசிந்தது எப்படி என்று திரும்பத்  திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்.

கேட்டிருக்கவேண்டியது, பொதுக்கணக்குக் குழுவின் உறுப்பினர்கள்! பொதுக்கணக்குக் குழுக் கூட்டத்தில்!

ஆனால் அம்மிணி இதற்கு பிஜேபிதான் பதில் சொல்ல வேண்டும் என்று வேறு சொல்லிக் கொண்டிருந்தார். அம்மிணியின் இதே தர்க்கநியாயப்படி, கனிமொழி விவகாரத்தில், கனிமொழி, தயாளு அம்மாள் பெயர்கள் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெறும் என்று தகவல்களைக் கசிய விட்டுக் கொண்டிருந்தார்களே, அப்போது எவரைக் கேட்பதாம்? ஜன நாயகத்தின் ஒவ்வொரு நிறுவனத்தையும் காங்கிரஸ் இடித்துத் தரை மட்டமாக்கிக் கொண்டிருக்கிறதே என்ற கேள்விக்கு அம்மிணி பூசி மெழுகி சொன்ன பதில் சிரிப்பைத் தான் வரவழைத்தது.
பொதுக்கணக்குக் குழு விவகாரத்தில், தங்களுடைய கோளாறுகள் அம்பலத்துக்கு வந்துவிடுமே என்று காங்கிரசும் திமுகவும், PAC அறிக்கையை முடக்கி வைத்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கலாம். பிஜேபி மீது பழியைப் போட்டுவிட்டுக் கொஞ்ச நாள் குளிர் காயலாம்.

நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன!!

ராஜா காது கழுதைக் காது! என் எஸ் கிருஷ்ணன் - மதுரம், டி. ஆர் ராமச்சந்திரன் காமெடி ஒன்று நினைவுக்கு வருகிறதா?

அந்தக் கதைதான்!





எது பலிக்கும்? கைப்புள்ள வடிவேலு சொல்வதா? கருத்துக் கணிப்பு சொல்வதா?





ச்சரியத்திலும் பெரிய ஆச்சரியம் குடும்பத் தொல்லைக் காட்சி எதுவும் ஹெட்லைன்ஸ் டுடே-ஒ ஆர் ஜி நடத்திய கருத்துக் கணிப்பைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொண்ட மாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை

னால், இன்றைக்குக் காலையில் காமெடியன் வடிவேலு முதலமைச்சரை சந்தித்தது மட்டும் தான் செய்தியாகவும், ஸ்க்ரோல் நியூசாகவும் ஓடிக் கொண்டிருந்தது.  

கருத்துக் கணிப்பை விட, காமெடியன் கணிப்பை மட்டுமே திமுக நம்புகிற மாதிரித்தான் தெரிகிறது!

போகிற போக்கில் ரஜனிகாந்த் படத்தில் இருந்து நீக்கப் பட்டதைப் பற்றியும் கேள்வி எழுந்தது. இந்த செய்தியைப் பாருங்கள்!

திமுக தலைவர் கலைஞரை, நடிகர் வடிவேலு 29.04.2011 அன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடன் இருந்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு சொன்னது:

"
திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருத்துக் கணிப்புகளை விட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும்"

கேள்வி: விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ராணா படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?

தில்: ராணா  படம், கானா படம் எதில் இருந்து நீக்கினாலும் நான் கவலைப்படவில்லை. மே 13 ந் தேதி மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும். அதன் பிறகு எல்லாம் மாறும்.

கேள்வி: அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்ததுதான் அதற்கு பின்னடைவு என்று கூறுகின்றீர்களா?

தில்: பொறுத்து இருந்து பாருங்கள். கலைஞரிடம் தோற்பதற்கு காத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அப்போது தெரியும்" என்றார் வடிவேலு.

ந்த வீடியோவில் மாடு பிடிக்கப் போன வடிவேலு என்ன பாடு படுகிறார் என்பதைப் பாருங்கள்! படத்தில் மட்டும் தான் இந்தக் காமெடி என்று இருந்தவருக்கு வாழ்க்கையிலும் இது போலத்தான் என்றாகிவிடுமோ?



டிவேலு ஜாதகம் அப்படி! நாம் என்ன செய்ய?!!


நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுத்தது என்பார்கள்! வடிவேலுவை  அவர்  வாயே கெடுத்தது என்றால் அதில் தவறேதுமில்லை! வடிவேலு கதை கிடக்கட்டும்!

கூத்தாடிகளிடம் அரசியலைக் கொடுத்துவிட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் பாருங்கள், நம்மைச் சொல்ல வேண்டும்!






தமிழகத் தேர்தலும் இன்னொரு கருத்துக் கணிப்பும்!




ஹெட்லைன்ஸ் டுடே தொலைகாட்சி திமுக அணிக்குத்தான் வாய்ப்பு  இருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பை ஓட்டிக் கொண்டிருப்பது, நொந்து நூடுல்சாகிக் கிடக்கும் உடன்பிறப்புக்களுக்குக் கொஞ்சம் தவித்த வாய்க்குத் தண்ணீர் கிடைத்த மாதிரித்தான் இருக்கும்!கனிமொழி விவகாரத்தில் என்ன ஆகுமோ என்று தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் ஆறுதலாக இருக்கலாம்! ஆனால், வழக்கு, விவகாரம் எல்லாம் கையை மீறிப் போய் விட்டதாகவே தான் இருப்பதாகத் தெரிகிறது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, காங்கிரசுக்கு, கூட்டாளிகளை சிக்க விடுவதைத் தவிர வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை. கூட்டணி தர்மம் என்பது இதுதான்!

ஏழு சதவீதவாக்குகள் கூடுதலாகக் கிடைத்தாலும் அதிமுக அணிக்கு நூற்றைந்தில் இருந்து நூற்று இருபது இடங்கள் வரை கிடைக்கலாம் என்று சொல்கிறார்கள். அதேநேரம், வெறும் மூன்று சதவீதம் மட்டுமே கூடுதலாகப் பெற்று திமுகவுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


அவர்கள் சொல்வதன் படி திமுக அணிக்கு 48 % (45%), அதிமுக அணிக்கு 47% (40%) மற்றவை 5% (15%) என்று தேர்தலுக்குப் பிறகு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளாகச் சொல்கிறார்கள்.அடைப்புக் குறிக்குள் இருப்பது 2006 நிலவரம். அந்த மற்றவை பதினைந்து சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாகக் குறைந்திருப்பதாக சொல்வதில் தான், இந்த கருத்துக்கணிப்புகளின் நம்பகத்தன்மை மிகவும் குழப்புவதாக இருக்கிறது.


ஆனால் ஹெட்லைன்ஸ் டுடே-ஒ ஆர் ஜி இணைந்து நடத்திய இந்தத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை குடும்பத் தொல்லைக் காட்சிகளே நம்பவில்லை போல இருக்கிறது. செய்தியை ஸ்க்ரோலில் ஒட்டியதோடு சரி!

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, சிபிஐ எண்பதாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை இந்த மாதம் இரண்டாம் தேதியன்று தாக்கல்  செய்த போது, இது குற்றப்பத்திரிகையா அல்லது வெற்றுப்பத்திரிகையா என்று சந்தேகம் எழுகிற அளவுக்குத் தெளிவாக இல்லாமல் சமர்ப்பிக்கப் பட்ட தருணங்களில் இருந்தே "கூட்டணி தர்மத்தில்" புதிய அத்தியாயமாக காங்கிரஸ்-திமுக இடையே  பூனை- எலி விளையாட்டு ஆரம்பமாகி விட்டதைப் புரிந்து கொள்ள முடிந்தது! 'சட்டம் என் கையில்; என்று ஆரம்பத்தில் வீராவேசமாகக் குதித்தவர்கள், தாங்கள் ஒன்றும் "புலிகள்" இல்லை, வெறும் எலிகள் தான் என்பதைப் புரிந்து கொண்டு சத்தமில்லாமல், சட்டப்படி குற்றச்சாட்டுக்களை சந்திப்போம் என்று தீர்மானம் போட வேண்டிய நிலையையும் நேற்றைக்குப் பார்க்க முடிந்தது.  


பெரிய இடத்தின் மனைவி, மகள் இருவர் பெயரும் கூடுதல் குற்றப் பத்திரிகையில் இடம்பெறும் என்று வேண்டுமென்றே செய்திகள் கசிய விடப் பட்டது.என்ன மாயமோ, என்ன பேரமோ, பெரிய இடத்தின் மனைவி பெயர் மட்டும் இடம் பெறவில்லை! மகள் பெயரை சேர்ப்பதைத் தடுக்க முடியவில்லை!  கூட்டணி தர்மம் அங்கே கொழுந்துவிட்டு எரிந்தது! பாரதத்து தர்மபுத்திரனாகத் தன்னை சித்தரித்துக் கொண்டு, தர்மனுக்கேற்பட்ட சங்கடம் போல இதையும் முறுவலுடன் ஏற்பதாகப் பொருமிக் கொண்டேதான் சொல்ல முடிந்தது!

டில்லியில் இருந்து மட்டுமல்ல, எங்கிருந்து எந்தப் பிரபலம் வந்தாலும் சந்தித்து சால்வை போர்த்தி வணங்கி ஆசி பெற வேண்டிய அளவுக்கு உயர்ந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு நபரை ராகுல் காந்தி சந்திக்கவே இல்லை. அதைப் பெரிய விஷயமாகவும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. தாரை, தப்பட்டைகளோடு  சென்னைச் சங்கமம் தான் நடத்த லாயக்கு, டில்லியை வென்ற சென்னைப் பாதுஷா எல்லாம் இல்லை என்பது வெளியே கசிந்து விடாமல் மறைக்கவும், ஈகோ பன்க்சராகிப் புகைந்ததும் பழைய வரலாறெல்லாம் இல்லை! இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்று தான்!

உள்ளூரில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் அ'லெக்சாண்டர்களுக்கு, ராகுல் காண்டி கொஞ்சம் புகைச்சலாகத் தெரிவதில் வியப்பு இல்லை என்று பாதுஷாக் கனவுகளைப் பற்றி சொன்னது நினைவிருக்கிறதா?

சுப்பிரமணியன் சுவாமி சொன்னது நிஜமாகிவிடும் போலத்தான் இப்போதைய நிலவரம் இருக்கிறது!

ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகையில், முதலில் ஒன்றுமிருக்காது! அப்புறம் கனிமொழி பேர் சேர்க்கப்படும்,அப்புறமாக தயாளு அம்மாள், அதற்கப்புறம் கருணாநிதி பெயரும் சேர்க்கப்படும் என்று மனிதர் நிஜமாகத்தான் சொன்னாரா, அல்லது நக்கலுக்காகச் சொன்னாரா என்பது தெரியாது.

" I fully endorse and welcome the draft Report of the Public Accounts Committee prepared under the Chairmanship of the former Union Minister Dr. Murli Manohar Joshi
 

 The principal conclusions of the draft PAC Report are –



(1) that the bureaucrats of the PMO failed to keep the Prime Minister in the loop on the process of decision making by the Ministry of Communications & IT; 

(2) the Finance Minister (Mr. P. Chidambaram) and the Telecom Minister (Mr. Raja) erroneously decided the price of Spectrum at the very low price of 2001, and that it is a complex subject and hence in future it should be left to the TRAI; 

(3) that the Government should cancel all the 2G licenses so far allotted to nine companies since January 10, 2008.



These three conclusions are what I had argued in the Supreme Court  wherein I held the Prime Minister as a powerless person but not culpable in the 2G Scam; (2) that Mr. P. Chidambaram is as culpable in causing the loss to the nation of Rs.l.76 lakh  crores as Mr. Raja was and who has already been indicted for and is in prison; (3) that all the 2G licenses should be cancelled forthwith and fresh auction be held for the same." இது டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் அறிக்கை!

அப்புறம் மனிதர் இன்னொரு ஆரூடமும் சொல்கிறார் பாருங்கள்!அது கூடப் பலித்துவிடுமோ என்கிற மாதிரித்தான் நிலைமை இருக்கிறது!

"தமிழ்நாட்டில் எவர் ஜெயித்து வந்தாலும், 2013 வரை கூடத் தாக்குப் பிடிக்க முடியாது.நாடாளுமன்றத் தேர்தலுடன் மறுபடி தேர்தலை சந்திக்கும்படியாகத் தான் இருக்கும்!"






எதையும் தாங்கும் இதயம் கேட்டது இதற்காகத் தானோ?




ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக, வெளியே உலாவிக்கொண்டிருந்த, "2 ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கு, தமிழக முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டது. அவரது அருமை மகள் கனிமொழி, கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக கூடுதல் குற்றப் பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
 
இதுவரை, சாதிக் பாட்ஷா, ராஜா, அவரது சகோதரர் என தி.மு.க., சுற்று வட்டாரங்களையே சுற்றிவந்த சி.பி.ஐ., இம்முறை, அக்கட்சித் தலைவரின் வீட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டது. நேரடியாக குற்ற வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார் கனிமொழி. 


இப்போது என்ன செய்யப்போகிறது தி.மு.க.,? 

இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடக்கவுள்ளது. இதில், இப்பிரச்னை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அப்படி என்ன முக்கிய முடிவு? என்னுடைய பார்வையில், "கழக எம்.பி., கனிமொழி மீது சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையை, சட்டத்தின் துணையோடு சந்திப்போம்' என்பதைத் தவிர, வேறெந்த முடிவையும் தி.மு.க., எடுக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். 

"இதற்கு மேல் கருணாநிதி பொறுக்க மாட்டார். நிச்சயம் பொங்கி ழுந்து விடுவார். அமைச்சரவையிலிருந்து விலகுவார். ஆதரவையாவது வாபஸ் பெறுவார்' என்றெல்லாம், சில நப்பாசைக் காரர்கள் தப்பாசைப் படுவார்கள். ஆனால், அது நடக்கப் போவதில்லை. காரணம் என்னவென்று விளக்குகிறேன்.

கடந்த 2009ல் இவர்கள் கேட்ட எண்ணிக்கையில் அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை; கேட்ட துறைகளும் கிடைக்கவில்லை. "இவ்வளவு தான்; அதுவும், இன்னின்ன துறைகள் தான்' என காங்கிரஸ் தரப்பில் ஒரு பார்முலா அறிமுகப்படுத்தப்பட்டது. அதிர்ந்த தலைவர், "ஆட்சியில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்' என ரோசத்தோடு சென்னை திரும்பினார். தி.மு.க., இல்லாமலேயே மத்திய அமைச்சரவை பதவியேற்றது. கருணாநிதி அதையும் தாங்கினார்.

"முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து, முதல்வர் கருணாநிதி தலைமையில், மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' அறிவிக்கப் பட்டது. அமைச்சர் ராஜாவின் அலுவலகத்துக்குள் சி.பி.ஐ., புகுந்தது தான் தாமதம், அடுத்த நாளே, கேரளா அரசைக் கண்டித்து என அந்தப் போராட்டம் மாற்றப்பட்டது. இறுதியில், போராட்டமே கைவிடப்பட்டது. கருணாநிதி அதையும் தாங்கினார்.

காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், நூறு முறை தமிழகம் வந்துவிட்டார். ஒரு முறை கூட முதல்வரைச் சந்திக்கவில்லை. தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளும் அதுபற்றி கேள்வி எழுப்பின. கருணாநிதி அதையும் தாங்கினார்.

ராஜா கைது செய்யப்பட்டார். அப்போது கூடிய தி.மு.க., பொதுக்குழு, "சட்டப்படி எதிர்கொள்வோம்' என சம்பிரதாயத்துக்கு ஒரு தீர்மானம் போட்டு முடித்துக் கொண்டது. தி.மு.க., சார்பில் அவருக்கு ஜாமீன் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. 85 நாட்களுக்கும் மேலாக சிறையிலேயே இருக்கிறார். "தலித் என்பதால் தான் ராஜா கட்டம் கட்டப்படுகிறார்' என கவலைப்பட்ட கருணாநிதி, அதையும் தாங்கினார்.

சமீபத்தில் முடிந்த சட்டசபைத் தேர்தலில், "63 சீட் வேண்டும்; அதுவும், நாங்கள் கேட்கிற தொகுதி தான் வேண்டும்' என, இதுவரை எந்தக் கூட்டணியிலும், எந்தக் கட்சியும் விதித்திராத நிபந்தனையை காங்கிரஸ் விதித்தது. "இது நியாயமா?' என பக்கம் பக்கமாக அறிக்கை விட்ட கருணாநிதி, "தி.மு.க., மத்திய அமைச்சர்கள் ராஜினாமா' என அறிவித்தார். யாரும் கெஞ்சாமலேயே, ராஜினாமா முடிவை மாற்றிக் கொண்டார். அனைத்து ஊடகங்களும் கேலி செய்தன. அதையும் தாங்கினார் கருணாநிதி.

தமிழக சட்டசபைத் தேர்தலில், வரலாறு காணாத அளவு கெடுபிடியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. நான் முன்பே சொன்ன மாதிரி, காங்கிரசின் கண்ணசைவு இல்லாமல், இவ்வளவு கெடுபிடி சாத்தியமில்லை. கருணாநிதியும் உணர்ந்திருந்ததால் தான் அதை, "எமர்ஜென்சி'யோடு ஒப்பிட்டார். அந்த அளவுக்கு தி.மு.க.,வின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது தேர்தல் கமிஷன். அதையும் தாங்கினார் கருணாநிதி.

இரண்டு நாட்கள் முன்பு கூட தலைமைச் செயலத்தில் ஒரு பெண் நிருபர், "கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிகையில் இருந்தால், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிவிடுவீர்களா?' எனக் கேட்க, "ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, இப்படி இதயத்தை தூக்கியெறிந்துவிட்டு கேள்வி கேட்கலாமா' என, பதில் கேள்வி கேட்டார். 

இதற்கு என்ன அர்த்தம்

மேற்சொன்ன அத்தனையையும் தாங்கிய முதல்வர் கருணாநிதி, கனிமொழி மீதான குற்றப்பத்திரிகையையும், ஒருவேளை அவர் கைதானால், அதையும் கூட தாங்குவார் என்பது தான், அதன் அர்த்தம்.

ஏனெனில்அவருடையது, எதையும் தாங்கும் இதயம்.!