தேர்தல் களம் 2011! கை கொடுக்கும் கையா? கை கழுவும் கையா?இந்தியா டு டே  இதழின் வலைப்பக்கங்களில் இதைப்படித்த போது,எதை விதைக்கிறோமோ அதை அறுவடை செய்கிறோம் என்பது எவ்வளவு உண்மை என்பதை நினைத்துப் பார்க்க முடிந்ததே தவிர பெரிதாக ஆச்சரியம் ஒன்றுமில்லை! எதிரிகளின் பலவீனங்கள், அமைப்பில் உள்ள ஓட்டைகளை சரியாகப் பயன் படுத்தத் தெரிந்த சாமர்த்திய சாலி, கட்சிக்குள்ளும் சரி, தேர்தல்களிலும் சரி இருந்த ஓட்டைகளை வைத்தே இந்த அளவுக்கு முன்னேற  முடிந்தவர்! தன்னைத் தலை சிறந்த அரசியல் நிபுணராகவும், தமிழினத்தின் தனிப்பெரும் தலைவராகவும் காட்டிக் கொள்ள கருணாநிதி செய்த முயற்சிகள் பலனளிக்காமல் போன பரிதாபத்தைத் தன்னுடைய வாழ்நாளின் மிகப்பெரிய சரிவாக சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

 “In his sunset years, the old fox of the DMK is on an elusive quest - to be recognised and treated as an elder statesman.

This desire has been consuming the octogenarian in no less measure and he occasionally gives vent to this craving Well, even his mentor and DMK founder C N Annadurai never betrayed such aspirations.

…………

However, the scriptwriter's attempts to fashion himself as a statesman have come to nought.

If the Eelam fiasco was more than enough to damage his credibility, the 2G spectrum scam has once and for all sealed his fate. His claim to a moral high ground falls flat as he is known to have perfected family rule at the cost of the party.

With the results of the Asembly elections threatening to be a requiem for his rein, he can only hope for many a scam revisiting him.”
ஊழ்வினை வந்து உறுத்தூட்டும் என்று சிலப்பதிகார வரிகள் ஏனோ நினைவுக்கு வருகிறது!

புதன்கிழமை திமுகவின் உயர்மட்டக் குழு கூடி என்ன முடிவை எடுத்து விட முடியும்? ஊகிக்க முடியாத ஒன்றல்ல! ராஜினாமா மிரட்டல் எடுபடாது! சுயமரியாதை காற்றோடு பறக்கவிட்டு அநேக காலமாகிவிட்டது!வீர வசனம் பேச முடியாது! தியாகியாகிற தகுதியும் போய்விட்டது!உண்மையை சொல்லப்போனால், முடிவெடுக்க அதிக சாய்ஸ் இல்லை!

சிவகங்கை சின்னப்பையன்கள் கூட சரியான பாடத்தை கற்றுக் கொடுக்கும் அளவுக்கு ஆகிவிட்டதே!

இப்போது சொல்லுங்கள் கை கொடுக்குமா கை? இல்லை, தன்னுடைய ஊழல்களில் இருந்து கவனத்தைத்திசைதிருப்ப, கை கழுவி விடுமா? 

1 comment:

  1. திமுக‌ அஸ்த‌மிக்கும் கால‌ம், முக‌வின் முக‌வ‌ரி சாண‌க்கிய‌த்த‌னம‌ல்ல‌ ச‌ண்டித்த‌னம் ம‌ட்டுமே என்ப‌து ம‌க்க‌ளுக்கு புரிந்து விட்ட‌து. க‌ட்சிக்கார‌ர்க‌ளுக்கும் தெரிய‌த் தொட‌ன்ஹ்கி விட்ட‌து. இன்றைய‌ க‌ட்சிக் கூட்டத்தில் ம‌த்திய‌ ம‌ந்திரிக‌ளின் 'கை'க‌ள் தான் ஓங்கி இருக்கிற‌து. முத‌ன் முறை முக‌ வின் ப‌ட்ஷா க‌ட்சியிலேயே ப‌லிக்க‌வில்லை. க‌வுண்டிங் ஸ்டார்ட்ஸ் நெளவ்........

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!