Showing posts with label மானாட மயிலாட. Show all posts
Showing posts with label மானாட மயிலாட. Show all posts

இந்தப் போலித்தனம் யாருக்காக... எதற்காக?

சிறுவயது முதலே நாளிதழ்களைப்  படிப்பது, குறிப்பாக அந்த நாளிதழின் அன்றைய தலையங்கம் என்ன சொல்கிறது என்பதை எல்லாம் கவனமாக உள்வாங்கிக் கொண்டு சிந்திக்கும் வழக்கம் எப்படியோ இன்றைக்கும் என்னிடம் நீடித்துவரும் ஒரு வழக்கமாக இருக்கிறது. விஷயங்களைத் தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய ஆசிரியர்கள், நண்பர்கள், பெரியவர்கள், புத்தகங்கள் என்று ஒரு பெரிய பட்டியலையே காரணமாகச் சொல்ல முடியும்.  என்னைப் பற்றி இப்படிச் சொல்லிக் கொள்ளும்போது, என்னை மாதிரியே எத்தனைபேர் ஒரு நாளிதழில் வெளி வரும் தலையங்கத்தைப் படிக்கிறார்கள், அப்புறம் அதைப் பற்றி எப்படி சிந்திக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால் தெளிவான விடை தெரிவதில்லை. முதலில் சமூகப் பொறுப்புடன் எத்தனை நாளிதழ்கள் தலையங்கத்தைத் தொடர்ந்து எழுதிவருகின்றன என்று கேட்டால், அதற்கும் விடை எத்தனைபேருக்குத் தெரியும் என்பது கூட என்னால் ஒரு குத்துமதிப்பாகச் சொல்ல முடிவதில்லை.



தமிழகத்தில் பெரும்பாலான நாளிதழ்கள் தலையங்கம் என்ற ஒன்றையே மறந்து விட்டன. அல்லது, தங்கள் சௌகரியத்துக்கேற்றபடி எழுதுவது மட்டுமே தலையங்கமாக வருகிறது. இந்த மாதிரி இல்லாமல், பொது விஷயங்களில், ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில், ஒரு தெளிவான பார்வையோடு பிரச்சினையை அணுகுகிற விதத்தில் தலையங்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களாக, ஹிந்து, இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், என்று ஆங்கிலத்தில் பல நாளிதழ்கள் இருந்தாலும், தமிழில் ஒரே ஒரு நாளிதழ் தான், ஆரம்பகாலம் முதல், ஒரு நாளிதழின் கடமையாக இன்றைக்கும் தலையங்கத்தை வெளியிட்டு  வருவதாக இருக்கிறது! அது தினமணி! திரு ஏ. என் சிவராமன் ஆசிரியராக இருந்த காலங்களில் இருந்து தினமணி தலையங்கங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.



இப்படிச் சொல்லும்போது, வேறு சில இதழ்களிலும் தலையங்கங்கள் அவ்வப்போது  வருகிறதே, பார்ப்பதில்லையா என்று கேட்கிறீர்களா? தலையங்கம் என்ற பெயரில் வருவதெல்லாம்  தலையோடு இருப்பதாக எண்ண முடியவில்லை! நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த சிந்தனையும் கொண்டு ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள தைரியமில்லாத, தலைல்லாத முண்டங்களாகத் தான், சில நாளிதழ்களின் ஆசிரியர் பக்கம் அல்லது தலையங்கங்களைப்  பார்க்க முடிகிறது. அரசியல் கட்சி சார்புடைய நாளிதழ்கள் என்றால் கேட்கவே வேண்டாம்! குதிரைக்குக் கண்ணைக் கட்டிய மாதிரிக் குருட்டாம்போக்கில், ஒருபக்கச் சார்புடன்  திட்டித் தீர்ப்பதற்காகத் தான் தலையங்கமே என்ற அளவுக்குத் தரம் தாழ்ந்துபோனவைகளாக மட்டுமே இருப்பதை இங்கே கணக்கில் சேர்த்தி இல்லை!



இந்தத் தலையங்கம் நேற்றைய தினமணி நாளிதழில் வெளியானது. "போதுமே இந்தப் போலித் தனம்!" என்ற தலைப்பில் எழுதப்பட்டது. கொஞ்சம் கவனமாகப் படித்தீர்களானால், சொல்லப் பட்டிருக்கும் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை, இந்தப் போலித் தனத்தை உதறினால் எந்த அளவுக்கு நன்மை  உண்டு என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியும்!

போதுமே இந்தப் போலித்தனம்..!

இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்துவரும் வளர்ச்சி நிதி உதவியை (250 மில்லியன் அமெரிக்க டாலர்) நிறுத்திக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அரசு சென்ற மாதம் அறிவித்தது. பிரிட்டனிடமிருந்து அதிகமாக நிதியுதவியைப் பெறும்  நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஒருவேளை, முந்நூறு ஆண்டுகளாக இந்தியாவிடம் பெற்றதை பிரிட்டன் நினைத்துப் பார்ப்பதாலும் இந்தத் தாராள மனது இருக்கக்கூடும்.

அணுமின் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி செலவிடுகிற இந்தியாவுக்கு, அதிலும் வளர்ந்து வரும் நாடு என்கிற நிலையில் உள்ள நாட்டுக்கு நாம் தொடர்ந்து உதவி அளிக்கத்தான் வேண்டுமா என்பது இங்கிலாந்தின் இப்போதைய நியாயமான கேள்வி. மேலும், 2009 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தனது பொருளாதாரமே தள்ளாட்டம் போடும் நிலையில் அடுத்தவருக்குச் செலவழிக்க வேண்டுமா என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. இந்தியாவுக்கு உதவியை நிறுத்துவது பற்றி யோசிக்கும்போதே சீனாவுக்கும் ரஷியாவுக்கு வளர்ச்சிநிதியை நிறுத்திவிட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

இத்தகைய வளர்ச்சி நிதி என்பது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் 1970-ல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம். இதன்படி, வசதியான நாடுகள் தங்கள் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டினை இத்தகைய வளர்ச்சி நிதிக்காக (டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்) வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்குக் கட்டுப்பட்டு, 0.7 விழுக்காடு நிதி வழங்கும் நாடுகள். சுவீடன், நார்வே, லக்ஸம்பர்க், டென்மார்க், நெதர்லாந்து போன்றவைதான்.

உலகில் மிக அதிக அளவு வளர்ச்சி நிதி வழங்குவது அமெரிக்கா. 2009-ம் ஆண்டு 28 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறது. என்றாலும், இது நாட்டின் மொத்த வருவாயில் 0.3 விழுக்காடு மட்டுமே! இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) இருப்பினும் இது நாட்டின் மொத்த வருவாயில் 0.5 விழுக்காடு ஆகும்.

இந்த நிதியுதவியை இந்தியாவுக்கு அளிப்பதில் தயக்கம் காட்டுவதற்குக் காரணம், மேலே சொன்னதைப்போல, இந்தியா வளர்ந்துவரும் நாடு என்பதுதான். இந்த வளர்ச்சி நிதியை மற்ற ஏழை நாடுகளுக்குக் கொடுப்பது குறித்து இந்த "கொடைநாடு'களுக்கு எந்த மனத்தடையும் இல்லை. மேலும், கொடைநாடுகள் தரும் வளர்ச்சி நிதியுதவியில் 5 விழுக்காடுதான் வளரும் நாடுகளுக்கு அளிக்கப் படுகிறது. இந்தப் பட்டியலில் முதல் முக்கியமான 10 நாடுகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.  நாம் ஆண்டுக்கு சுமார் 2,650 மில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சி நிதியாகப் பெறுகிறோம்.

இவர்கள் தரும் நிதியுதவி உண்மையாகவே வளர்ச்சிக்குப் பயன் படுகிறதா என்பதே கேள்விக்கு உட்படுத்தப்படும் விஷயம். இவர்கள் நிதியைக் கொடுத்துவிட்டு, வளர்ச்சிப் பணிக்கான பொருள்களை தங்கள் நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் அவர்களுக்கு வியாபாரம் நடக்கிறது; பணம் தருகிறோமே என்கிற உரிமையில்  நம் நாட்டில் கடைவிரிக்கிறார்கள்; நிதியின் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ஊழலுக்கே போகிறது என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி- நாம் வளர்ந்து வரும் நாடா, வல்லரசாக மாறப்போகும் நாடா, அல்லது ஏழை நாடா?

ஒரு பக்கம் பல ஆயிரம் கோடியில் திட்டங்கள். 8 விழுக்காடு வளர்ச்சி என்கிறோம். நிறைய வசதி வாய்ப்புகள் உருவாகிவிட்டன. வானத்தில் விமானங்களின் நெரிசல் அதிகமாகிவிட்டது. ஏற்றுமதி ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வணிக வாசல்களை எல்லோருக்குமாக தாராளமாகத் திறந்துவிட்டாகிவிட்டது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 42 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்க்கிறார்கள். அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்வது இந்தியாவில்தான். இதை வளர்ச்சி என்று சொல்லிவிட முடியுமா?

எதை நாம் வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வது? ஒருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசியும், உறைவிடமும் பெரும் பான்மையான குடிமக்களுக்கு எட்டவே எட்டாத இடத்தில் இருக்கிறது. இன்னொருபுறம், மோட்டார் வாகனங்களின் விலை குறைந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்த இருபது ஆண்டுகளில், குடிசைகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றோ, நடைபாதை வாசிகளின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளும்பொழுதுமாக அதிகரித்து வருவது குறித்தோ எந்தவிதப் புள்ளி விவரங்களும் சேகரிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு நாம் வேலைக்கு உத்தரவாதமும், உணவுக்கு உத்தரவாதமும், கல்விக்கு உத்தரவாதமும் ஏட்டளவில் சட்டமாக்கி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை இந்தியத் திருநாட்டின் பிரஜைகளாகக்கூட நாம் கணக்கிடுகிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

இந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று பெருமை பேசுகிறோம். 1,000 குடும்பங்கள் குடிசைகளில் வாழும் கிராமத்தில், ஓர் அனில் அம்பானியோ, ஒரு ரத்தன் டாடாவோ, ஓர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ அல்லது நமது கோடீஸ்வர நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரோ பங்களா கட்டிக் கொண்டு வாழ்ந்தால், அந்தக் கிராமத்தில் தனிமனித வருமானம்கூட பல லட்சங்களாக இருக்கும். அதுவா கணக்கு?

தீவிரவாத இயக்கங்கள் பெருகுவதும், அரசின் நிர்வாக இயந்திரத்துக்குக் கட்டுப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்களில் பாதி பேர் வறுமையிலும், கடனிலும் வாழ்வதும் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்க முடியுமா?

ஒன்று, "நானே நடந்து வருவேன், நடைவண்டி தேவையில்லை' என்று சொல்லும் தன்னம்பிக்கை வேண்டும். அல்லது இன்னமும் நடைபழகி முடியவில்லை என்று துணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊர் உலகத்துக்காக கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்தவரிடம் பணம் எதிர்பார்த்து நிற்பது தேவையில்லாத போலித்தனம் அல்லவா!

இந்தத் தலையங்கத்தின் ஒவ்வொரு எழுத்தும் பத்தியும் சொல்வதைப் புரிந்து கொண்டால் .....

மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!

 
எலிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.

இயேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு வெறும் கையோடு  திரும்புகிறான்!

அதே மாதிரித் தான்!

சமூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!

சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!

எப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?

இப்போதாவது........  

இலவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு !

உலகத்  தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல்,

எங்கோ என்னமோ நடக்கிறது  எனக்கென்ன என்றிருக்காமல், சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு

இருக்க முயற்சியை ஆரம்பிப்போமா!  




 

தமிழ்ப் புத்தாண்டே வருக.. ! நல்ல மாற்றங்களைத் தருக..!

உங்கள் அனைவருக்கும் இதயபூர்வமான  தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! விக்ருதி என்ற பெயரில் மாற்றத்தைக் குறிக்கும் இந்த ஆண்டு, நம்முடைய வாழ்வில் நல்லவிதமான மாற்றங்களைத் தருவதாக அமையட்டும் என எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுவோம்!


சித்திரை முதல் நாளே வருடத்தின் முதல்நாளாக வழிவழியாகக் கொண்டாடி வருவதை அரசு அறிவிப்பு ஒன்று மாற்றி விட முடியாது என்பதை, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று தமிழ்ப் புத்தாண்டு  கொண்டாடப் பட்டு வருவதை செய்திகள் தெரிவிக்கின்றன.




 குட்டைப் பாவாடை இஸ்லாமுக்குக் கேவலம் என்றார்கள் உலேமாக்கள்!
பர்தா அணிந்தா ஆடமுடியும் என்று கேட்டவர்தான், இங்கே சவுதியில் அம்மாவுடன்!
மயில்ராவணன்,  இப்போது திருப்தியா..?
கடைசியாக நடந்து முடிந்தே விட்டது!  
சானியா மிர்சா திருமணத்தைத் தான் சொல்கிறேன்!


இந்தப் பெண், விளையாட்டில் தான் பின்தங்கி வந்தாரென்று பார்த்தால், திருமணம் பற்றிய பேச்சு வந்த போதெல்லாம் அதை விடசொதப்பலாகத் தான் இருந்தது! ஒருவழியாக, திங்கட்கிழமை திருமணம் முடிந்து, நேற்று செவ்வாய் மெஹந்தி இடும் சடங்கும் நடந்து முடிந்ததாம்! இன்றைக்கு சங்கீதம் பாடப் போறாங்களாம்! வழக்கம் போல, இதிலும் திடீர் திருப்பங்கள், அதிரடி மாற்றங்கள் ஏதாவது வருமா என்று மைக்ரோஸ்கோப் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான்!


ஹைதராபாத் உலேமாக்களுக்கு  ஃபாத்வா, கண்டன அறிக்கை கொடுப்பதற்குத் தோதாக, சானியா மட்டும் தான் இருந்தார். இப்போது திருமணம் முடிந்து, துபாய்க்குக் குடித்தனம் போன பிறகு என்ன செய்வார்கள்?

அதென்னமோ துபாய் என்றாலேயே டுபாக்கூர், வில்லங்கங்கள் என்பது தான் நினைவுக்கு வருகிறது!


டுபாக்கூர் என்ன என்பதை  முதலில் பார்ப்போம், அதன் பின்னால் உள்ள  வில்லங்கம் என்னஎன்று தற்போதைய செய்திகள் சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்!  இதில் துபாய் நேரடியாகவோ மறைமுகமாகவோ எங்கே வருகிறது என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
செய்தியின் புதுப்பிக்கப் பட்ட நிலை @18.51 hrs IST

கிரிக்கெட், ஹிந்தி சினிமா, சூதாட்டம், என்றாலே  டி-கம்பனி என்று செல்லமாக அழைக்கப் படும் தாவூது இப்ராஹீம் கும்பல் பின்னால் இருக்கும் என்பது மிகப் பழைய செய்தி! புதிதாக உள்துறை அமைச்சகத்திற்குப் பொறுப்பேற்றிருக்கும் பனா சீனா இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்!
டி கம்பனியிடமிருந்து, சசிதரூருக்கு ஐபிஎல் விவகாரத்தில் இருந்து விலகிக் கொள்ளும்படி மிரட்டல் வந்திருக்கிறதாம்!டிவிட்டரில் மோடியை மிரட்டிய அமைச்சருடைய உதவியாளர் ஜேகப் ஜோசப்  மிரண்டுபோய், உள்துறை அமைச்சகத்திற்குத் தகவல் சொல்லியிருக்கிறார்! இந்த செய்தியில் இன்னொரு சுவாரசியமான விஷயம், டி கம்பனியிடமிருந்து, லலித் மோடிக்கும் மிரட்டல் வந்து, அவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருக்கிறதாம்!

தரூருக்கு வேணுங்கப்பட்ட அம்மிணி, கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கூட, அவரை கூட்டாளியாக சேர்ந்து கொள்ள அழைத்ததாகவும், காலம் வரட்டும் என்று காத்திருந்ததாகவும் சொன்னதை அந்த அணி மறுத்திருக்கிறது! 
 
இந்த செய்தியை, "என்னை மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையில கேட்டாக-அந்த மாயவரத்துல கேட்டாக" என்ற பாட்டைப் பின்னணியாக ஹம்மிங் செய்து கொண்டே வாசிக்கவும்! அம்மணி அங்கே அழகுநிலையம் மட்டுமே நடத்தவில்லையாம்! 
 
Incidentally, Sunanda Pushkar, the lady in Tharoor's life, is a property dealer in Dubai. என்றும்  மேலே உள்ள லிங்க் செய்தியில் இருக்கிறது!  
 
துபாய், டுபாக்கூர் எப்படி வந்து சேர்கிறது என்பது கொஞ்சம் உறைக்கிறதா?!

டி- கம்பனி என்றால் தாவூத் இப்ராஹீம் கம்பனி மட்டும் அல்ல, துபாயும் சேர்ந்தே வந்து விடுகிறது!


சசி தரூர் விவகாரத்தில் அவருக்குவேணுங்கப் பட்டவங்களாகச்   சொல்லப் படும் பெண்மணி கூட துபாய் வாசி தான்! ஸ்பா என்று சொல்லப் படும் பெரிய  அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அழகு நிலையங்கள் என்றாலே தமிழ் நாட்டில் மசாஜ் பார்லர்கள் தான் பிரபலமாக நினைவுக்கு வரும்! அதை  ஸ்பாவோடு ஒப்பிட்டால், மசாஜ் பார்லர் என்பது சில்லறை! ஸ்பா என்பது எல்லாவிதத்திலும் பெரிது தான் போல!

விக்கிபீடியாவில் ஸ்பா என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள!

அம்மணிக்கு கி ஃப்டாக, கொச்சி ஐபிஎல் பிரான்சைசில் கிடைத்த பங்கு, மொத்தத்தில் நாலரை சதவீதம்! சுமார் எழுபத்தாறு--எண்பது கோடி ரூபாய்! அமைச்சருக்கு நெருக்கமாக இருந்ததற்காகத் தான் இந்த கிஃப்டா என்பது பாரபட்சமில்லாத விசாரணை நடந்தால் தானே தெரிய வரும்? நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்று நேற்றைய பின்னணி என்னவாக இருந்தாலும், அவர்கள் இன்றைக்கு எப்படிப் பட்ட ஞானிகளாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க மட்டுமே சொல்லப் பட்டது!

நம்மூர் அரசியல் வியாதிகள், வாரிசுகளுடைய வருமானம் அதன் மூல வர்கம் எப்படிப்பட்டது என்பதை சாமானிய ஜனங்கள் ஒருபோது தெரிந்து கொள்ளப் போவதில்லை! அவர்களுக்கு இலவச டிவி, மானாட மயிலாட மாதிரி மங்கையர் ஆடும் நிகழ்ச்சிகள்,  நமீதா வந்து மச்சான்ஸ் என்று ஓங்கி ஒரு குரல் கொடுத்தால் போதாதா! 
தேர்தல் வரும்போது மட்டும் ஒரு க்வார்டர், பிரியாணி, அப்புறம் மேல் செலவுக்குக் கொஞ்சம் பணம் இதைக் கொடுத்தால் போதுமென்று அரசியல் வியாதிகள் நினைப்பதற்குத் தகுந்த மாதிரித்தான், ஜனங்களுடைய இயல்பும் இருக்கிறது.

புள்ளிராசா வங்கி என்ற குறியீட்டுச் சொல்லில்  வங்கிகள் எப்படிப்  பேராசை கொண்டு  அலைகின்றன என்பதை இந்தப் பக்கங்களில் முன்னமேயே பார்த்திருக்கிறோம்! 
சசிதரூர் விவகாரத்திலும் புள்ளிராசா ஒருத்தர், ஸ்டாண்டர்ட்  சார்டர்ட் வங்கியில்(Director, Public Affairs) தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றும் சுஷேன் ஜிங்கன் என்று பெயர், சூத்திர தாரியாகச் செயல் பட்டது இப்போது பரபரப்பான செய்தி! இந்த நபருடைய மனைவி பூஜா குலாடியும் ரெண்டேவூ  ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட் நிறுவனத்தின் பங்குதாரர்! 
வங்கியாளராக  இருந்ததில், ஜிங்கனுக்கு ஏலத் தொகையை வெற்றிகரமாக நிர்ணயிப்பது முதற்கொண்டு பலதொழில்களும் தெரிந்த சாமர்த்தியத்தில் தான் கொச்சி ஐபிஎல் அணி பிரான்சிஸ் முடிவானது என்றும் சொல்கிறார்கள்!

வில்லங்கமாக ஒரு வங்கியாளரும் வந்தாயிற்று! அப்புறம் புள்ளி. புள்ளிராசா என்று தொடர்ச்சியாக வரத்தானே செய்யும்!

அப்புறம்..........?