உங்கள் அனைவருக்கும் இதயபூர்வமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! விக்ருதி என்ற பெயரில் மாற்றத்தைக் குறிக்கும் இந்த ஆண்டு, நம்முடைய வாழ்வில் நல்லவிதமான மாற்றங்களைத் தருவதாக அமையட்டும் என எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுவோம்!
சித்திரை முதல் நாளே வருடத்தின் முதல்நாளாக வழிவழியாகக் கொண்டாடி வருவதை அரசு அறிவிப்பு ஒன்று மாற்றி விட முடியாது என்பதை, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப் பட்டு வருவதை செய்திகள் தெரிவிக்கின்றன.
குட்டைப் பாவாடை இஸ்லாமுக்குக் கேவலம் என்றார்கள் உலேமாக்கள்!
பர்தா அணிந்தா ஆடமுடியும் என்று கேட்டவர்தான், இங்கே சவுதியில் அம்மாவுடன்!
மயில்ராவணன், இப்போது திருப்தியா..?
பர்தா அணிந்தா ஆடமுடியும் என்று கேட்டவர்தான், இங்கே சவுதியில் அம்மாவுடன்!
மயில்ராவணன், இப்போது திருப்தியா..?
கடைசியாக நடந்து முடிந்தே விட்டது!
சானியா மிர்சா திருமணத்தைத் தான் சொல்கிறேன்!
இந்தப் பெண், விளையாட்டில் தான் பின்தங்கி வந்தாரென்று பார்த்தால், திருமணம் பற்றிய பேச்சு வந்த போதெல்லாம் அதை விடசொதப்பலாகத் தான் இருந்தது! ஒருவழியாக, திங்கட்கிழமை திருமணம் முடிந்து, நேற்று செவ்வாய் மெஹந்தி இடும் சடங்கும் நடந்து முடிந்ததாம்! இன்றைக்கு சங்கீதம் பாடப் போறாங்களாம்! வழக்கம் போல, இதிலும் திடீர் திருப்பங்கள், அதிரடி மாற்றங்கள் ஏதாவது வருமா என்று மைக்ரோஸ்கோப் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான்!
ஹைதராபாத் உலேமாக்களுக்கு ஃபாத்வா, கண்டன அறிக்கை கொடுப்பதற்குத் தோதாக, சானியா மட்டும் தான் இருந்தார். இப்போது திருமணம் முடிந்து, துபாய்க்குக் குடித்தனம் போன பிறகு என்ன செய்வார்கள்?
அதென்னமோ துபாய் என்றாலேயே டுபாக்கூர், வில்லங்கங்கள் என்பது தான் நினைவுக்கு வருகிறது!
டுபாக்கூர் என்ன என்பதை முதலில் பார்ப்போம், அதன் பின்னால் உள்ள வில்லங்கம் என்னஎன்று தற்போதைய செய்திகள் சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்! இதில் துபாய் நேரடியாகவோ மறைமுகமாகவோ எங்கே வருகிறது என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
டி கம்பனியிடமிருந்து, சசிதரூருக்கு ஐபிஎல் விவகாரத்தில் இருந்து விலகிக் கொள்ளும்படி மிரட்டல் வந்திருக்கிறதாம்!டிவிட்டரில் மோடியை மிரட்டிய அமைச்சருடைய உதவியாளர் ஜேகப் ஜோசப் மிரண்டுபோய், உள்துறை அமைச்சகத்திற்குத் தகவல் சொல்லியிருக்கிறார்! இந்த செய்தியில் இன்னொரு சுவாரசியமான விஷயம், டி கம்பனியிடமிருந்து, லலித் மோடிக்கும் மிரட்டல் வந்து, அவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருக்கிறதாம்!
தரூருக்கு வேணுங்கப்பட்ட அம்மிணி, கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கூட, அவரை கூட்டாளியாக சேர்ந்து கொள்ள அழைத்ததாகவும், காலம் வரட்டும் என்று காத்திருந்ததாகவும் சொன்னதை அந்த அணி மறுத்திருக்கிறது!
அதென்னமோ துபாய் என்றாலேயே டுபாக்கூர், வில்லங்கங்கள் என்பது தான் நினைவுக்கு வருகிறது!
செய்தியின் புதுப்பிக்கப் பட்ட நிலை @18.51 hrs IST
கிரிக்கெட், ஹிந்தி சினிமா, சூதாட்டம், என்றாலே டி-கம்பனி என்று செல்லமாக அழைக்கப் படும் தாவூது இப்ராஹீம் கும்பல் பின்னால் இருக்கும் என்பது மிகப் பழைய செய்தி! புதிதாக உள்துறை அமைச்சகத்திற்குப் பொறுப்பேற்றிருக்கும் பனா சீனா இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்!டி கம்பனியிடமிருந்து, சசிதரூருக்கு ஐபிஎல் விவகாரத்தில் இருந்து விலகிக் கொள்ளும்படி மிரட்டல் வந்திருக்கிறதாம்!டிவிட்டரில் மோடியை மிரட்டிய அமைச்சருடைய உதவியாளர் ஜேகப் ஜோசப் மிரண்டுபோய், உள்துறை அமைச்சகத்திற்குத் தகவல் சொல்லியிருக்கிறார்! இந்த செய்தியில் இன்னொரு சுவாரசியமான விஷயம், டி கம்பனியிடமிருந்து, லலித் மோடிக்கும் மிரட்டல் வந்து, அவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருக்கிறதாம்!
இந்த செய்தியை, "என்னை மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையில கேட்டாக-அந்த மாயவரத்துல கேட்டாக" என்ற பாட்டைப் பின்னணியாக ஹம்மிங் செய்து கொண்டே வாசிக்கவும்! அம்மணி அங்கே அழகுநிலையம் மட்டுமே நடத்தவில்லையாம்!
Incidentally, Sunanda Pushkar, the lady in Tharoor's life, is a property dealer in Dubai. என்றும் மேலே உள்ள லிங்க் செய்தியில் இருக்கிறது!
துபாய், டுபாக்கூர் எப்படி வந்து சேர்கிறது என்பது கொஞ்சம் உறைக்கிறதா?!
டி- கம்பனி என்றால் தாவூத் இப்ராஹீம் கம்பனி மட்டும் அல்ல, துபாயும் சேர்ந்தே வந்து விடுகிறது!
சசி தரூர் விவகாரத்தில் அவருக்குவேணுங்கப் பட்டவங்களாகச் சொல்லப் படும் பெண்மணி கூட துபாய் வாசி தான்! ஸ்பா என்று சொல்லப் படும் பெரிய அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அழகு நிலையங்கள் என்றாலே தமிழ் நாட்டில் மசாஜ் பார்லர்கள் தான் பிரபலமாக நினைவுக்கு வரும்! அதை ஸ்பாவோடு ஒப்பிட்டால், மசாஜ் பார்லர் என்பது சில்லறை! ஸ்பா என்பது எல்லாவிதத்திலும் பெரிது தான் போல!
விக்கிபீடியாவில் ஸ்பா என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள!
அம்மணிக்கு கி ஃப்டாக, கொச்சி ஐபிஎல் பிரான்சைசில் கிடைத்த பங்கு, மொத்தத்தில் நாலரை சதவீதம்! சுமார் எழுபத்தாறு--எண்பது கோடி ரூபாய்! அமைச்சருக்கு நெருக்கமாக இருந்ததற்காகத் தான் இந்த கிஃப்டா என்பது பாரபட்சமில்லாத விசாரணை நடந்தால் தானே தெரிய வரும்? நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்று நேற்றைய பின்னணி என்னவாக இருந்தாலும், அவர்கள் இன்றைக்கு எப்படிப் பட்ட ஞானிகளாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க மட்டுமே சொல்லப் பட்டது!
நம்மூர் அரசியல் வியாதிகள், வாரிசுகளுடைய வருமானம் அதன் மூல வர்கம் எப்படிப்பட்டது என்பதை சாமானிய ஜனங்கள் ஒருபோது தெரிந்து கொள்ளப் போவதில்லை! அவர்களுக்கு இலவச டிவி, மானாட மயிலாட மாதிரி மங்கையர் ஆடும் நிகழ்ச்சிகள், நமீதா வந்து மச்சான்ஸ் என்று ஓங்கி ஒரு குரல் கொடுத்தால் போதாதா!
டி- கம்பனி என்றால் தாவூத் இப்ராஹீம் கம்பனி மட்டும் அல்ல, துபாயும் சேர்ந்தே வந்து விடுகிறது!
சசி தரூர் விவகாரத்தில் அவருக்குவேணுங்கப் பட்டவங்களாகச் சொல்லப் படும் பெண்மணி கூட துபாய் வாசி தான்! ஸ்பா என்று சொல்லப் படும் பெரிய அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அழகு நிலையங்கள் என்றாலே தமிழ் நாட்டில் மசாஜ் பார்லர்கள் தான் பிரபலமாக நினைவுக்கு வரும்! அதை ஸ்பாவோடு ஒப்பிட்டால், மசாஜ் பார்லர் என்பது சில்லறை! ஸ்பா என்பது எல்லாவிதத்திலும் பெரிது தான் போல!
விக்கிபீடியாவில் ஸ்பா என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள!
அம்மணிக்கு கி ஃப்டாக, கொச்சி ஐபிஎல் பிரான்சைசில் கிடைத்த பங்கு, மொத்தத்தில் நாலரை சதவீதம்! சுமார் எழுபத்தாறு--எண்பது கோடி ரூபாய்! அமைச்சருக்கு நெருக்கமாக இருந்ததற்காகத் தான் இந்த கிஃப்டா என்பது பாரபட்சமில்லாத விசாரணை நடந்தால் தானே தெரிய வரும்? நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்று நேற்றைய பின்னணி என்னவாக இருந்தாலும், அவர்கள் இன்றைக்கு எப்படிப் பட்ட ஞானிகளாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க மட்டுமே சொல்லப் பட்டது!
நம்மூர் அரசியல் வியாதிகள், வாரிசுகளுடைய வருமானம் அதன் மூல வர்கம் எப்படிப்பட்டது என்பதை சாமானிய ஜனங்கள் ஒருபோது தெரிந்து கொள்ளப் போவதில்லை! அவர்களுக்கு இலவச டிவி, மானாட மயிலாட மாதிரி மங்கையர் ஆடும் நிகழ்ச்சிகள், நமீதா வந்து மச்சான்ஸ் என்று ஓங்கி ஒரு குரல் கொடுத்தால் போதாதா!
தேர்தல் வரும்போது மட்டும் ஒரு க்வார்டர், பிரியாணி, அப்புறம் மேல் செலவுக்குக் கொஞ்சம் பணம் இதைக் கொடுத்தால் போதுமென்று அரசியல் வியாதிகள் நினைப்பதற்குத் தகுந்த மாதிரித்தான், ஜனங்களுடைய இயல்பும் இருக்கிறது.
புள்ளிராசா வங்கி என்ற குறியீட்டுச் சொல்லில் வங்கிகள் எப்படிப் பேராசை கொண்டு அலைகின்றன என்பதை இந்தப் பக்கங்களில் முன்னமேயே பார்த்திருக்கிறோம்!
புள்ளிராசா வங்கி என்ற குறியீட்டுச் சொல்லில் வங்கிகள் எப்படிப் பேராசை கொண்டு அலைகின்றன என்பதை இந்தப் பக்கங்களில் முன்னமேயே பார்த்திருக்கிறோம்!
சசிதரூர் விவகாரத்திலும் புள்ளிராசா ஒருத்தர், ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கியில்(Director, Public Affairs) தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றும் சுஷேன் ஜிங்கன் என்று பெயர், சூத்திர தாரியாகச் செயல் பட்டது இப்போது பரபரப்பான செய்தி! இந்த நபருடைய மனைவி பூஜா குலாடியும் ரெண்டேவூ ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட் நிறுவனத்தின் பங்குதாரர்!
வங்கியாளராக இருந்ததில், ஜிங்கனுக்கு ஏலத் தொகையை வெற்றிகரமாக நிர்ணயிப்பது முதற்கொண்டு பலதொழில்களும் தெரிந்த சாமர்த்தியத்தில் தான் கொச்சி ஐபிஎல் அணி பிரான்சிஸ் முடிவானது என்றும் சொல்கிறார்கள்!
வில்லங்கமாக ஒரு வங்கியாளரும் வந்தாயிற்று! அப்புறம் புள்ளி. புள்ளிராசா என்று தொடர்ச்சியாக வரத்தானே செய்யும்!அப்புறம்..........?
//சித்திரை முதல் நாளே வருடத்தின் முதல்நாளாக வழிவழியாகக் கொண்டாடி வருவதை அரசு அறிவிப்பு ஒன்று மாற்றி விட முடியாது என்பதை, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப் பட்டு வருவதை செய்திகள் தெரிவிக்கின்றன.//
ReplyDeleteஎல்லாத்துக்கும் காலம் வரணும் இல்லையா ? பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்து என்பதற்காக துக்ளக்கும், தினமலரும் சீர்திருத்த எழுத்து அறிமுகப்படுத்தி பலர் பயன்படுத்திய பிறகும் பயன்படுத்த தயங்கினார்கள். பின்பு வழியில்லாமல் மாற்றிக் கொண்டார்கள்.
எப்படியோ கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்து சொல்வது எனக்கு மகிழ்வான ஒன்றே.
உங்களுக்கு நல்வாழ்த்துகள்.
என்ன சொன்னா என்னங்க, நம்ம ஆளுகளுக்கு ஒன்னும் உறைக்காது.இதுவே சாமியார் மேட்டராக இருந்தால் போதும் கும்மியடிப்பாங்க.
ReplyDeleteஉங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
pl.give due share for manjal thundu/cabara dancer@ green saaree
ReplyDeleteவாசுதேவன் கிருஷ்ணமூர்த்தி....Voted. உங்கள் மகனா?
ReplyDeleteதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சானியா படத்தில் காட்டும் பாவம் திருமணம் நடந்து விட்டது என்பதற்கா?
கலக்கறீங்க !!!
ReplyDeleteஅற்புதமான இடுகை !!!
கார்த்திகை - முரசொளிமாறன்
ReplyDeleteமார்கழி - கலாநிதிமாறன்
தை - தயாநிதிமாறன்
மாசி - உதயநிதி ஸ்டாலின்
பங்குனி - தயாநிதி அழகிரி
அப்படியே தொடர்ந்திருக்கலாமே!!!
சானியா படத்தில் காட்டும் பாவம் திருமணம் நடந்து விட்டது என்பதற்காக இல்லை. அது எல்லாருக்கும் பெப்ப! என்பதை குறிக்கின்றது.
திரு.சுதாகர்!
ReplyDeleteசாமியார் மாட்டர் கெடைச்சு நாளாச்சுதே, வேற ஏதாவது இருந்தா சொல்லுங்கப்பா என்று பதிவர் ஒருவரின் ஜிமெயில் ஸ்டேடஸ் மெசேஜில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்! இன்றைக்கு சன் டிவி நிகழ்ச்சி அறிவிப்பில் கூட, சுறா பட நிகழ்ச்சியில் வடிவேலு சொன்னது காமெடியா, வஞ்சப் புகழ்ச்சியா என்பது தான் எனக்குக் கொஞ்சம் சந்தேகம்!அவர் சொன்னது:
"சன் டிவி படம்னா அதை அவங்க எப்படியாவது ஓட்டிடுவாங்க! சமீபத்துல சாமியார் மாட்டர் கூடத் தாறுமாறாய்......!"
மேற்கே, சிறுவர்கள் மீது பாதிரிமார் செய்த பாலியல் சில்மிஷங்கள் வரிசையாக வெளிவந்து வெடித்துக் கொண்டிருக்கின்றன! அமெரிக்க சர்ச்சுகள் மட்டும் வழக்குகளில் நஷ்ட ஈடாக பலநூறு கோடி டாலர்களை தண்டம் அழுது கொண்டிருப்பது தெரியும் தானே!
திரு கோவி கண்ணன்!
ReplyDelete/எல்லாத்துக்கும் காலம் வரணும் இல்லையா?/
எழுத்துச் சீர்திருத்தம் என்பது வேறு, மரபு, பண்பாடு குறித்த விஷயங்களில் கைவைப்பது வேறு! கல்வெட்டுக்கள் புகைப்படங்களில் பார்த்தீர்களானால், எழுத்தின் வடிவம் அன்றைக்கு வட்டெழுத்து என்பதாக இருந்ததும், காலப் போக்கில் அதன் வடிவங்கள் மாறிக் கொண்டே இருந்ததும் தெரிய வரும்!
இப்போதுகூட, தமிழில் எழுத்துச் சீர்திருத்தங்கள், கிட்டத்தட்ட, பழைய தமிழ்டைப்ரைட்டரில் இக்'குக்கு மேல் உ அடித்து கு என்ற வடிவம் வருவதுபோல, செய்தால் உயிர்மெய் எழுத்துக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பளு குறைந்து விடும் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆதரிப்பவர்கள் சிலர், எதிர்ப்பவர்கள் பலர் என்று இன்றைக்கு இருப்பது, நாளைக்கு மாறலாம்!
அப்புறம் நீங்கள் சொல்லும் எழுத்துச் சீர்திருத்தத்தை படைத்தவர் வேறொருவர்!அதை வலுவாக ஆதரித்துப் பெயர் வாங்கிக் கொண்டவர், பெரியார்!
அயோத்திதாசப் பண்டிதரை இன்றைக்கு நினைவில் வைத்திருப்பவர்கள், அவர் ஆற்றிய பணியின் அருமையை உணர்ந்திருப்பவர்கள் எத்தனை பேர்?
பெயரென்னவோ, பெரியாருக்குத் தான் போனது!
மாறுபட்ட கருத்துக்களைக் கவனமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன், சிந்திக்கிறேன் என்பதைச் சொல்வதற்காக மட்டுமே இது!
திரு.பதி!
ReplyDeleteகாபரே டான்சர், பச்சைப் புடவை...?ம்ம்ம்ம்..
நீங்கள் சொல்வது எனக்கு முழுமையாக விளங்கவில்லை! மஞ்சள் துண்டுக்கு இங்கே விளம்பரம் கொடுப்பதாக இல்லை!எனக்கு அவரால் ஆகவேண்டியது ஒன்றுமில்லை! பாராட்டு விழா நடத்தி, காபரே டான்ஸ் காட்டிப் பரவசப் படுத்த வேண்டிய தேவையும் இல்லை!
இங்கே கண்டனூர் சால்வை அழகருக்கு மட்டும் தான் இலவச விளம்பரம்! இது ச்சும்மா, வெறும் ஊர் அபிமானம்!
ஸ்ரீராம்!
ஆமாம்!
சானியா படத்தில் காட்டும் பாவம்...!
வழக்கம் போல சொதப்பாமல் நடந்து முடிந்துவிட்டதே என்பதற்காகக் கூட இருக்கலாம்!
இதற்கு மேல் ஏதாவது சொன்னால், மயில்ராவணன் வந்து வருத்தப் படுவார்!
திரு.சீனிவாசன்!
ReplyDeleteநெஞ்சுக்கு நீதி மூன்று பாகத்தையும் படித்துவிட்டு நொந்துபோன எனக்கு, வாரிசுகளின் வரலாற்றையும் படிக்க/தொடர இப்படிப் பின்னூட்டத்தில் சொல்கிறீர்களே, இது நியாயமா?
சானியா படம் உண்மையில் எல்லோருக்கும் "பெப்பே" காட்டுவது தான்! நடந்த நிகழ்வுகள் அத்தனையையும் பெப்பே என்ற மூன்றெழுத்து வார்த்தைகளில் சுருக்ம்கி சொல்லியிருக்கிறீர்கள்! நன்றி!
சாருக்கு ஊர் கமுதியோ?
@செந்தழல் ரவி!
இப்படித் தான் கலக்கறீங்கன்னு ஒரே வார்த்தைப் பின்னூட்டத்தோடு அம்பேல் ஆகி விடுகிறீர்கள்!
சேர்ந்து கலக்க ஒரு கை கொடுத்தால் என்ன...!?
இனிய விக்ருதி புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDelete