Showing posts with label வெறுப்பில் எரியும் மனங்கள். Show all posts
Showing posts with label வெறுப்பில் எரியும் மனங்கள். Show all posts

ஜார்ஜ் ஆர்வெல்! சீனாதானா 5! #வெறுப்பில்எரியும்மனங்கள்

எல்லாப் பன்றிகளும் சமம். ஆனால் சிலபன்றிகள் மற்ற பன்றிகளை விட அதிக சமம்!  விலங்குப் பண்ணை நாவலில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய இந்த வரிகள் ஸ்டாலின், மாவோ காலத்துக் கம்யூனிஸ்ட் ஆட்சியில் மட்டுமல்ல, காங்கிரஸ் காலம் முடிந்து போன பிறகும் கூட,அவர்களுடைய  விசுவாசிகள் அரசின் பல்வேறு அங்கங்களில் இன்னமும் நீடித்து வருவதில்,  சீனாதானா என்றால் சட்டம்,  நடைமுறைகள் எல்லாம் வளைந்து கொடுக்கிறதே என்று பேசிக்கொண்டு இருப்பதில் அர்த்தம் இருக்கிறதா? 


ஐந்தாவது முறையாக சிபிஐ சிறப்புநீதிமன்றத்தில் சீனாதானா ஆஜர்! வாய்க்கொழுப்பு மன்னன் அங்கே கூட ஐந்து விரல்களை விரித்துக்காட்டி 5 என்றால் என்ன என்று பூடகமாக நிருபர்களுக்கு கிளாஸ் எடுத்ததாக இதே புதிய தறுதலை வீடியோ ஒன்றைத் தனியாக வெளியிட்டு மகிழ்கிறது! 
  
   
நேற்றுவரை இதே ரகோத்தமன் பேசியதில் அப்பச்சிக்கு கீழ் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துவிடுகிற மாதிரித்தான் சொல்லிக் கொண்டிருந்தார். அவரையும் இப்படி மாற்றிப்பேச வைத்துவிட்டார்களே!😟😠😡 


நமக்கும் நம்முடைய ஊடகங்களுக்கும் இந்தமாதிரி ஆபத்து இல்லாமல் லந்தடிக்கத்தான் முடியும் என்று சொன்னால் அதில் குறியீடு உள்ளர்த்தம் எல்லாம் தேடி அலையாதீர்கள்!  


ஆட்சியில் இருந்தபோது சொன்னதை இப்போது மாற்றிச் சொல்கிறாரே என்று மன்மோகன்சிங் பற்றி நாணயமாகப் படம் வரைந்துவிட்டாராம் சதீஷ் ஆசார்யா! கொடுமை என்ன என்றால் மண்ணுமோகனர் அன்றைக்கும் சோனியாG வகையறா சொன்னபடிதான் சொன்னார்! இன்றைக்கும் அதே குடும்பம் என்ன சொல்கிறதோ அதையே திருப்பிச்சொல்லும் கிளிப் பிள்ளையாக! 86 வயதானபிறகும் ராஜ்யசபா எம்பி பதவி, அரசின் சலுகைகள் எல்லாமும் வேண்டியிருக்கிற மனிதரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? Oxord டாக்டரேட் வாங்கியென்ன பிரயோசனம்? 

படித்ததில் பிடித்தது பகுதிக்காக 


தமிழக சமூக ஊடக மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டுமா?! இந்த ஃபோட்டோ பதில் சொல்லும்!       இந்தச் செய்திக்கட்டுரையை இணைப்பில் படித்துப் பாருங்கள்!

#வெறுப்பில்எரியும்மனங்கள் இது எழுத்தாளர் ஜெயமோகன் எந்தக் காலத்திலோ பயன்படுத்திய சொல்லாடல்! இன்றும்கூட எத்தனை பொருள் பொதிந்ததாக இருக்கிறது! இப்படி வெறுப்பில் எரிகிற மனங்களிடம் இருந்து எப்படி விலகி இருந்து   நம்மைக் காப்பாற்றிக் கொள்ளப்போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.  
   

மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! #1001

த்தனை முறை இங்கே எழுதியிருந்தாலும், இங்கே ஊழலில் பானாசீனாவின் சாதனையை எவரும் இந்திய அரசியலில் இதுவரை முறியடிக்கமுடியவில்லை என்பதைத் திரும்ப ஒரு முறை எழுதவேண்டி வரும்போது, நம்மூர் நீதிமன்றங்கள், விசாரணை நடைமுறைகள், குற்றவாளியைத் தப்பிக்க வைக்க உதவுகிற அதிகாரிகள் என்று பல அம்சங்களைத் தொட்டு ஒருவிதமான அயற்சியும் சலிப்பும் வந்து விடுகிறது.



ர் இந்தியா நிறுவனத்துக்கு ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அதிக அளவில் ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன என்பது புகார். இந்த செலவுகளால்தான் ஏர் இந்தியா நிறுவனம் நட்டம் அடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகிறது.

ங்கே பணம் சம்பாதிக்கிற வழி தெரிந்தாலும் அது எந்த அமைச்சகமாகஇருந்தாலும் அங்கே அப்பச்சி மூக்கை நுழைத்து விடுவார்! அடுத்து ஏதோ ஒருவகையில் அவரது மனைவியும் புகுந்துகொள்வார் என்பது அரசியல் நடப்பை கவனித்து வருகிற எல்லோருக்குமே தெரியும். 2004--2014 இந்தப்பத்தாண்டுகளில் இந்தக்குடும்பம் சம்பாதித்தது மற்ற எவரையும் விட அதிகம்! சென்னை விமான நிலைய மேற்கூரை எத்தனை முறை இடிந்து விழுந்தது என்பதற்கு எப்படிக் கணக்கே மறந்து போனதோ அதுபோலவே வாய்க்கொழுப்பு மிகுந்த சால்வை அழகரும் அவரது மகனும் எத்தனை முறை கைதுநடவடிக்கைக்கு தடை வாங்கி இருக்கிறார்கள் என்பதற்கும் கணக்கு வைத்துக்கொள்ள அலுத்து விட்டது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் O P  சைனி கற்பக மரமாய் அந்த அளவுக்கு கைதுக்குத் தடை நீட்டிப்பு வழங்கிக் கொண்டே இருக்கிறார்! அடுத்தமாதம்  கற்பகமரம் ஓய்வு பெறுகிறாரே, மாற்றம் வருமா என்று கேட்கிறீர்களா? இந்த மரம் போனாலென்ன? இன்னொரு இலுப்பை மரம் வராமலா போய்விடும்? அப்பச்சிகள் தெனாவட்டாகத்தான், அதே வாய்க்கொழுப்புடன் தான் அலைகிறார்கள்!   

   
நிறைய நேரங்களில் கள யதார்த்தம் என்னவென்பதை உள்ளே இருந்து எழும் கலகக்குரல்கள்தான் காட்டிக் கொடுக்க வேண்டும்! பாகிஸ்தானுடைய இன்றைய பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணமாக இருப்பது, இந்தியாவை உடைத்துக் கொண்டு தனிநாடாக ஆனபின்னாலும் கூட இந்திய வெறுப்பில் எரியும் மனங்களாக எதற்கெடுத்தாலும் இந்தியாவுடன் போட்டி, வீண் சவடால்கள் என்றே ஆனதுதான்! இந்திய வெறுப்பில் ஒரு ஜனநாயக அமைப்பை நிறுவுவதில் தோற்றார்கள்! விளைவு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு, மேல்மட்டத்தில் இருந்தவர்கள் நாட்டைச் சூறை ஆடினார்கள்! உள்நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இந்தியாவுக்குத் தொல்லை கொடுப்பது ஒன்றை மட்டுமே பிரதானமாய், தீவிரவாதத்தை வளர்க்கிற பண்ணையாக மாற்றினார்கள். பழங்குடிகளுக்கு கல்வி மருத்துவம் தொழில் என்று வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்வதற்குப் பதிலாக ஆயுதங்களைக் கொடுத்து அக்கம் பக்கம் உள்ள நாடுகளில் மதத்தின் பெயரால் பயங்கரவாத செயல்களைச் செய்யவும்   தூண்டிவிட்டார்கள். 


ம்ரான் கானே சமீபத்தில் ஒப்புக் கொண்டபடி, பாகிஸ்தானுக்குள் ஆயுதப்பயிற்சி பெற்ற தீவீரவாதிகள் 35000 முதல் 40000 வரை இருப்பார்கள் என்கிற செய்தியில், அவர்களுக்கு கொஞ்சம்  காசும் வேலையும் கொடுத்து எங்காவது அனுப்பாவிட்டால், அவர்களது தாக்குதல் வளர்த்தவர்கள் மீதே பாய்ந்துவிடுவதான ஒரு சாபமும் இருப்பது புரிகிறதா? அதைத்தான் ஆயிஷா சித்திக்கி என்கிற பாகிஸ்தானிய ஸ்காலர், நூலாசிரியர் இம்ரான் கானுக்கும் ராணுவத்தளபதி பாஜ்வாவுக்கும் அவர்கள் முகத்தையே கண்ணாடியில் பார்த்துக் கொள்கிற மாதிரி மேலே வீடியோவில்  சொல்லி இருக்கிறார். வீடியோ 3 நிமிடம்தான்!

ந்து தமிழ்திசையில் கூட சமயங்களில் உண்மைக்கு நெருக்கமாக சில செய்திகள் வந்துவிடும்! கிட்டத்தட்ட ஒன்றேகால் வருடம் கழித்து இந்தப்புத்தகத்தைப் பற்றிய அறிமுகமாக!  வந்திருக்கிற மாதிரி! 

Sardar Patel – Unifier of Modern India
by R.N.P. Singh
Publisher: Vitasta Publishing Private Limited (18 May 2018)
Language: English
ISBN-10: 9386473240
ASIN: B07D5XLHL3


Patel was convinced, ‘small States cannot subsist as independent entities without endangering Indian unity’ and this book tells the bold and brazen story of how State by State, from Junagadh to Patna, Travancore to J&K, that is, two-thirds of the land mass was shepherded under Mother India’s wings, by one man’s steadfast commitment to the larger cause, ‘no further division’ of the subcontinent. India is today suffering the consequences of ignoring Patel’s advise on Kashmir and China. Though it covers just five years of Sardar Patel’s life and times, this is a work of historicity that every Indian must read to understand how India came to be the India that Google today shows us. 

இது புத்தகம் வெளிவந்தபோதே ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தக அறிமுகம்.   

அதென்ன #1001 ? இது இந்தப்பக்கத்தில் எழுதப்படும் ஆயிரத்தொன்றாவது பதிவு.

மீண்டும் சந்திப்போம்.

                

அராஜகம் செய்வோம்! ஆனால் ஜனநாயகம் காப்போம் என்றேதான் கூவுவோம்!

இந்தப் பதிவைப் புரிந்துகொள்ள அருள்கூர்ந்து முந்தைய பதிவையும் வாசித்து விடுங்கள்! நேற்று கொல்கத்தா வீதிகளில் மம்தா பானெர்ஜி, தனது தேர்தல் பரப்புரையாக ஒரு குழாயடிச் சண்டை நடத்தி ஆரம்பித்து வைத்திருக்கிறார். அரசே பந்த் நடத்துவது இடதுசாரிகள் ஆரம்பித்துவைத்த, இங்கே கழகங்களும் தொடரும் அரசியல் கலாசாரம்! மார்க்சிஸ்டுகள் ஆரம்பித்து வைத்த அரசியல் அராஜகத்தை, அவர்களைவிட பலமடங்கு வேகத்தோடு செய்து வருகிறவர் மம்தா பானெர்ஜி!

மம்தா பானர்ஜியின் இந்தக் குழாயடிச்சண்டை ஸ்டண்ட் பின்னணியில் நேற்று கொல்கத்தா பிரிகேட் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரட்டிய கூட்டம் இருந்திருக்கலாமோ? ஜனவரி 19 அன்று மம்தா இதே இடத்தில் கூட்டிய கூட்டத்தை விட  இருமடங்காக  இருக்கலாம் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி!       

Earlier today at Brigade, the vast sea of people and red flags have sent a scare in the hearts of TMC and BJP. People came out in vast numbers today despite the heavily funded PR campaigns of BJP and the threat posed by TMC goons.
39.1K views,
0:31 / 0:50
9:53 AM - 3 Feb 2019   
என்று சீதாராம் யெச்சூரி பெருமிதப்பட்டுக் கொண்ட  நிகழ்ச்சி கூட மம்தா பானெர்ஜியின் திடீர் ஸ்டன்டுக்கு காரணமாக இருந்திருக்கலாம்! 

“Seeing the sea of humanity here, it is evident that the people will evict Modi from Delhi and Mamata Banerjee from Bengal,” Yechury said and threatened of an “inferno of resistance” if people were prevented from exercising their franchise by TMC workers in the state. “Last month, we had seen the opposition rally here where they called for removing the Modi government at the Centre. But it is the TMC which brought the saffron brigade to Bengal,” Yechury alleged. கூட்டத்தை வைத்து ஓட்டு விழாது என்ற கசப்பான உண்மையை கருணாநிதி இங்கே அனுபவபூர்வமாக உணர்ந்ததை இங்கே தமிழக காம்ரேடுகள் எவரும் யெச்சூரிக்குச் சொன்னதில்லையோ?     

இப்படி பிஜேபியை மேற்கு வங்கத்துக்கு அழைத்து வந்ததே திரிணமுல் தான் என்று சொன்னால்? மம்தா பொறுப்பாரா? மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து கையில் வைத்திருப்பது, அவருடைய பிரதமர் கனவுக்கு, 2019 இல் முடியா விட்டாலும், பின்னால் உதவும் என்கிற ரீதியில் கிடைத்த சான்சை மம்தா தீதி நன்றாகவே பயன்படுத்திக் கொண்டு விட்டார்! 

சாரதா குழும ஊழல்! ரோஸ் வாலி ஊழல்! இந்த இரண்டுமாக சேர்ந்து, முன்னது 40000 கோடி, பின்னது 60000 கோடிரூபாய் என்று சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்களை Ponzi Schemes வகையில், மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஒரிசா, பிஹார், என்று சுற்றுப்புறம் முழுதும், ஏழை எளிய மக்களிடமிருந்து மோசடி செய்த நிறுவனங்கள்! செயல்பட்டவிதம் மிகவும் சிம்பிள்! சதுரங்க வேட்டை திரைப்படத்தில், மனிதனுடைய பேராசையைக் கிளர்ந்தெழுகிற மாதிரி, கவர்ச்சி கரமான முதலீட்டுத்திட்டம் என்று ஆரம்பிப்பது! குறைந்தபட்சம் நூறு ரூபாய்! அதிகத்தொகைக்கு உச்ச வரம்பில்லை! முதலீட்டுக்கு 15% முதல் 50% வரை வட்டி கிடைக்குமென்றால், ஏமாறாதவர்கள் யார்? சாரதா குழுமம் மட்டும் 200க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் தொடங்கி, முதலீடு செய்தவர்களுடைய பணத்தோடு காணாமல் போனதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள்!

இவ்வளவு மோசடியும் அரசியல்வாதிகளுடைய கூட்டில் வெகுநாட்களாகவே நடந்து கொண்டிருந்ததுதான்! காசு புழங்குகிற இடம் என்றால் களவாணிகளும் கூடவே இருப்பார்கள்தானே? கூடவே ஜாமீன் அப்பச்சிகளும்!

சாரதா குழுமம் மம்தா பானெர்ஜிக்கு மிகவும் வேணுங்கப் பட்டவர்களால் நடத்தப்பட்டது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை, சாரதா குழுமம் நல்ல விலைக்கு வாங்கியது. TMC யின் நாடாளுமன்ற உறுப்பினர் குணால் கோஷ் சாரதா மீடியாவுக்குத் தலைவராக இருந்தார்! இன்னொரு எம்பி சதாப்தி ராய் சாரதா விளம்பரங்களில் தொடர்ந்து தோன்றிக் கொண்டிருந்தார்!மூக்கில் வியர்த்ததும், திருமதி சீனாதானா சட்ட ஆலோசகர் போர்வையில் உள்ளே நுழைந்தார்!

ஏழை உழைப்பாளிகள் அழுத கண்ணீர், இவர்களை இன்னமும் எரிக்காமல் விட்டுவைத்திருக்கிறது!
     
சகாரா குழுமத்தின் சுப்ரதா ராய் ஒருவர் மட்டும்தான் இதுவரை நீதிமன்றத்தின் கண்டிப்பினால், மலையை  விழுங்கி இப்போது சிறுகச் சிறுகத் திரும்பிச் செலுத்திக் கொண்டிருக்கிறார்! அங்கே கூட துணையாக இருந்து, உருவிக்கொண்ட முலாயம் சிங் வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளவில்லை என்பது இந்த தேசத்தில் மட்டுமே நடக்கும் அரசியல்! ஜனநாயகம் காப்போம் என்று கூவிக்கொண்டே அராஜகம் செய்கிற அரசியல்!பாசிஸ்ட் என்று அடுத்தவருக்கு முத்திரை குத்தி மட்டுமே, தாங்கள் உத்தமர்கள் என்று காட்டிக் கொள்கிற அரசியல்!    

இன்னும் இவர்களிடம் ஏமாந்துகொண்டே இருக்கப் போகிறோமா என்பதுதான் 2019 தேர்தல் களம் நமக்கு முன்னால் எழுப்புகிற கேள்வி!             

                         

இருள் மூடிக் கிடக்கும் மனமும் வெளுத்து...! ஒளி பிறக்கட்டும்!




தீபாவளிக் கொண்டாட்டங்களின் பரபரப்பு நம் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொண்டிருக்கும் இந்த இனிமையான தருணத்தில், இதயம் நிறைந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.



தீபாவளி என்றாலே பட்டாசுச் சத்தம், புதுத்துணி, இனிப்புப்பலகாரங்களோடு, நண்பர்கள், சுற்றம் உறவுகள் என்று அனைவரோடும் பகிர்ந்துகொள்கிற தருணமாக இருப்பது, இந்த நாளை விசேஷமான பண்டிகையாகக் கொண்டாடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பண்டிகைக்கான காரணங்கள் பலவிதமாக சொல்லப்பட்டபோதிலும், முக்கியமான உள்ளடக்கம் தீமையை, இருளை அழிக்கும் ஒளியைக் கொண்டாடுவதே!


அசதோ மா சத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம்! சாந்தி, சாந்தி, சாந்தி:


பொய்மையிலிருந்து சத்தியத்திற்கு அழைத்துச் செல்வாய்
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய்
மரணத்தில் இருந்து மரணமற்ற தன்மைக்கு இட்டுச் செல்வாய்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

இப்படி  திரிகரண சுத்தி, திரிதேகத்திலும் அமைதியும் சாந்தமும் நிலவ வேண்டிப் பிரார்த்தனை செய்வதே தீபங்களின் வரிசை என்று பொருள்படும் தீபாவளிப் பண்டிகையின்  முக்கியமான உட்கிடக்கையாக இருக்கிறது. ஸ்வாமி சிவானந்தரின் வார்த்தைகளில் தீபாவளிப் பண்டிகையை பற்றிக் கொஞ்சம் கேட்போம்.

தீபாவளி என்றால் காசைக் கரியாக்கிப் பட்டாசு கொளுத்துவது இல்லை! இந்தப் பட்டாசு கலாசாரம் மிகப் பிந்தைய காலத்தில் பண்டிகையோடு சேர்த்து ஆரவாரமான ஒரு  வியாபாரமாக்கப் பட்டது.  தீபங்களின் வரிசை என்று பொருள் தரும் இந்தப்பண்டிகை, வெளியே விளக்கேற்றி வெளிச்சத்தைக் கொண்டாடுவது என்று மட்டுமில்லை, நம்முடைய அகத்திலும் ஒளி பிறக்கவேண்டும் என்ற பிரார்த்தனையை உள்ளடக்கியது.பட்டாசுகளின், புத்தாடைகளின் பகட்டில் இந்த உள்ளார்ந்த பிரார்த்தனையை நாம் இழந்து விடக் கூடாது இல்லையா?

பிரார்த்தனை என்று சொல்லும் போதே Lead Kindly Light என்று துவங்கும் இந்தப் பாடல் என்னுடைய சிறுவயதில் இருந்தே எனக்குப் பிடித்தமான ஒன்றாக, இன்றைக்கும் என்னுடைய பிரார்த்தனைகளில் மிகவும் பிடித்தமானதாக ஒளியைக் கொண்டாடுவதாக மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.


இருள் மூடிக் கிடக்கும் மனங்கள் வெறுப்பில் எரியும்மனங்கள் என்று எதுவானாலும் சரி,
இருள் விலக்கும் தூய ஒளி பிறக்கட்டும்!

அனைவருக்கும் எனது தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்!


ஒரு கை ஓசையும் வெறுப்பில் எரியும் மனங்களும்..!

ஒரு கை ஓசை! இது கே பாக்யராஜ், 1980 இல் திரைக்கதை வசனம் எழுதி, நடித்து இயக்கிய ஒரு படத்தின் தலைப்பு! படத்தின் ஆரம்ப சீனில் தற்கொலை செய்துகொள்ளக் கேணத்தனமாக முயற்சிக்கும் கதாநாயகனாக பாக்யராஜ், வாத்து மடையன் என்று கதாநாயகனைத் திட்டிக் கொண்டு அறிமுகமாகும் கதாநாயகி என்று அமர்க்களமாக ஆரம்பித்தாலும், படத்தின் தலைப்பு சொல்வது போல, உண்மையில் ஒரு கையால் ஓசை எழுப்பவே முடியாது!
 
ஆனால் வெறுப்பில் எரியும் மனங்களால், சடசடவென ஓசை எழுப்ப முடியும்!
 

தமிழ் வலைப் பதிவர்கள் குழுமம் குறித்தான பதிவுகளைப் படித்த பிறகு, அதைத் தொடர்ந்து வந்த பதிவர் வெண் பூ, டோண்டு ராகவன், கோவி கண்ணன் ஆகியோரது பதிவுகளில், பின்னூட்டங்கள் , அதில் கொஞ்சம் சீண்டிப் பார்க்கிற மாதிரிக்கேள்விகள் என்று கடந்த மூன்று நாட்களுமே கொஞ்சம் மனச் சோர்வை அளித்ததாகவே  இருந்தது.  வெள்ளிக் கிழமைக் கேள்விகளுக்காக வேறு சில முக்கியமான விஷயங்களைக் குறித்து வைத்துக் கொண்டு ஒரு வரைவு எழுதி வைத்திருந்த போதிலும்  அதை எடிட் செய்ய மனம் இல்லாமல், நான்கு படங்களை வைத்து மட்டும் நேற்றைய பதிவு இருந்தது.

நான் சட்டம் பேச முனைகிற வழக்கறிஞர் இல்லை! மன நல மருத்துவம் செய்ய முனைகிற வைத்தியரும் இல்லை! எனக்குத் தெரிந்தது தான் உலகம் என்று கிணற்றுத் தவளை போலக் கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பேன், நீ என்ன பதில் சொன்னாலும் கவலையில்லை, இன்னமும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பேன் என்ற மாதிரி கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்தபோது நேற்றைய அரசியல் சுவாரசியம் ஒன்று நினைவுக்கு வந்தது.கேள்விகள் கேட்பது, புரிந்து கொள்வதற்காக என்ற நிலையில், அதற்குரிய இடம், மரியாதையே  வேறு! 

இதைச் சொல்வது கூட, கொஞ்சம் lighter vein இல் விஷயங்களை எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்பதற்காகத் தான்.

போ ஃபார்ஸ்
பீரங்கி வாங்கியதில் ஊழல் பிரச்சினை கிளம்பிய தருணத்தில் ராம் ஜெத் மலானி ஒரு கேள்வியைக் கேட்டபோது, ராஜீவ் காந்தி கொஞ்சம் கடுப்பாகி, கொஞ்சம் நிலைதடுமாறிப் பேசப் போக, ராம் ஜெத் மலானி, இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையில் ராஜீவ் காந்திக்கு தினமும் பத்துக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த வேடிக்கையான லாவணி ஒன்று நினைவுக்கு வந்தது. கூடுதல் சுவாரசியமாக, அந்தப் பத்துக் கேள்விகளைத் தான் தான் எழுதியதாகவும், ராம்ஜெத்மலானி சரி பார்த்து ஒகே சொன்னது மட்டும் தான் என்று அருண் ஜெயிட்லி பின்னாட்களில் சொல்லிக் கொண்டதும் உண்டு.   

ராம் ஜெத் மலானி என்ற வித்தியாசமான மனிதரைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு பதிவு!

வெறுப்போடு எரியும் மனங்கள்! எப்போதும் எதையாவது தீய்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அதைத் தவிர வாழ்க்கையில் வேறு ஒன்றுமே வேண்டாம்! இப்படிப் பட்ட குணாதிசயங்களை புரிந்து கொள்வதற்கு நாடறிந்த மன நல மருத்துவராகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இங்கே வலைப் பதிவுகளில், விவாதங்களில் வருகிற பின்னூட்டங்களைக் கொஞ்சம் பார்த்தாலே போதும். பதிவு  அல்லது விவாதத்திற்குச் சம்பந்தமே இல்லாமல் தடம் புரண்டு கடைசியில் சொத்தைக் கடலையைக் கடித்த அனுபவமாகிப் போவதை நிறையவே பார்த்தாயிற்று.

"இல்லாத, நமக்குத் தெரியாத ஒன்றோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால், நாம் எதை வெறுக்கிறோமோ, சண்டைக்குக் கூப்பிடுகிறோமோ, அதனுடன் நமக்கு நெருங்கிய தொடர்பு நம்முடைய விரோதத்திலேயே, வெறுப்பதிலேயே உண்டாகி விடுகிறது! இப்படிச் சொல்வதால், நான் வன்மத்தை, வெறுப்பை, நல்லதென்று சொல்வதாக நினைக்க வேண்டாம்.வன்மம், வெறுப்பால் மந்தமாகிப் போனவனுடைய பார்வையில் நேசத்தைக் காண்பது மிகவும் அரிது. கோபத்தினாலும், விரோதம் பாராட்டுவதாலும் கனல் போலத் தகிக்கும் ஒருவன் பார்வையில் கூட, பலதரம் அன்பைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.அங்கே அன்பு பின்னப்பட்டுப் போயிருக்கிறது, விகாரப்பட்டுப்போயிருக்கிறது....."

ஸ்ரீ அரவிந்த அன்னையின் இந்த உரையாடலின் ஒரு பகுதி இடது பக்கத்திலேயே பல  நாட்களாக இருக்கிறது.அதன் உண்மையைப் புரிய வைப்பதற்காகத் தானோ என்னவோ இந்த அனுபவங்கள் ஏற்பட்ட மாதிரியே படுகிறது. பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுகிற தன்மையைப் பற்றி இந்தப் பக்கங்களில் முன்பே பார்த்திருக்கிறோம்.

அதை அற்புதமாக வெளிப்படுத்திய சிறுகதை ஒன்று, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் படித்தது, இன்னமும் பசுமையாக நினைவில் இருப்பதும் கூட! உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இங்கே!
 

(சு)வாசிக்கப் போறேங்க வலைப்பதிவில் சிறுகதைகளைப் பற்றிப் பேச எழுதிய பதிவு இது! 

இந்தப் பகுதி இங்கே மீள்பதிவுதான்!

லண்டனில் கல்வி பயில்வதற்காக,  விடுதியில் தங்கியிருக்கும் ஒரு இந்திய மாணவன் சொல்வதாக இந்த சிறுகதை ஆரம்பிக்கிறது.

ஒரு விடுதி அறையில் இவனும், ஒரு ஆப்பிரிக்க மாணவனும் கூட்டாளிகள்! இந்த ஆப்பிரிக்க மாணவனுக்கும், ஒரு ஆங்கிலேய யுவதிக்கும், எப்படியோ காதல் மலர்கிறது. இவனைத் தேடி அந்தப் பெண் அறைக்கு வருவதும், சந்தோஷமாகப் பேசிக் கழிப்பதும், வெளியே செல்வதுமாக, இந்த நிகழ்வுகளுக்குசாட்சியாக, கதை சொல்லியாக வரும் இந்திய மாணவனுடைய பாத்திரம்இருக்கிறது.

ஆயிற்று, அந்த ஆப்பிரிக்க இளைஞன்,  சொந்த ஊருக்குக் கிளம்பும் நேரம் நெருங்குகிறது. தன்னுடைய சூட்கேசில் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டு  இருக்கும்போது ஒரு புகைப்படம் கீழே வந்து விழுகிறது. அதில் இவனும், ஒரு இளம் பெண், குழந்தைகள், பெரியவர்கள் என்று குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்
படம்! கதை சொல்லி கேட்கிறான், "இது யார் உன் தாய் தந்தை சகோதரி இவர்களோடு எடுத்துக் கொண்டதா?"

"கதையையே மாற்றி விட்டாயே! இது என் மனைவி, மாமனார், மாமியார், என் குழந்தைகளோடு எடுத்துக் கொண்டது! இன்னும் சில நாட்கள் தான்! என் குடும்பத்தோடு ஒன்றாகக் கூடி சந்தோஷமாக இருப்பேன்!"

"அப்படியானால் நீ இந்தப் பெண்ணுடன் நெருக்கமாகப் பழகியது.....?"

"அதெல்லாம் சும்மா! பொழுது போவதற்காக! அவ்வளவுதான்! இந்த ஆங்கிலேயர்களுக்கே ரொம்பவும்தான் கர்வம்! தங்களுடைய வெள்ளைத் தோல் மீது அவ்வளவு பெருமிதம்! அந்தப் பெருமிதத்தோடு கொஞ்சம் விளையாடிப்பார்க்கலாமே என்று தான்."

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே அறைக்கதவுக்கு  வெளியே யாரோ தடதடவென்று ஓடுவது போல, படியில் உருண்டு விழுவது போல  சத்தம் கேட்கவே, இந்த இந்திய மாணவன் பதறிப்போய், வெளியே பார்க்கிறான்.

அந்தப் பெண் தான், ஆப்பிரிக்க இளைஞனைக் காதலித்த அதே பெண் தான், காதலனைத் தேடிவந்தவள், இந்த சம்பாஷணையைக் கேட்டு, அதிர்ச்சியில் பதறி, படியில் உருண்டு அடிபட்டு மயங்கிக் கிடக்கிறாள்.

அந்த விடுதிக் காப்பாளர், இவனைக் கூப்பிட்டு, "இந்தப் பெண்ணுக்கு  மருத்துவ சிகிச்சை தேவைப் படுகிறது. ஒரு கை கொடுத்து உதவுவாயா?"  என்று கேட்பதோடு கதை, இந்த வாக்கியத்தோடு முடிகிறது.

"எண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை! தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது!"

இந்த கேள்வி, அறையில் நண்பர்களுக்குள் விவாதிக்கப் பட்ட அதே கேள்விதான்! பதில் தான் முற்றுப் பெறாமல் கேள்வியாகவே நின்று விடுகிறது.

1965 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிவந்த  கல்கி ராணுவச் சிறப்பிதழில் திரு. தி. சா. ராஜு எழுதிய சிறுகதை இது. மூன்று அல்லது நான்கு பக்கங்களுக்குள் தான் இருக்கும்!

கதாபாத்திரங்களுடைய பெயர்கள், வர்ணனைகள் எல்லாம் எழுத்துக்கு எழுத்து அப்படியே நினைவில் இல்லை! ஆனால், கதாசிரியர், மனித மனங்களின்  பேதப்பட்டு நிற்கும் குணத்தைச் சொல்வதாகவும் அதே நேரம் , வாசகருக்கு ஒரு கேள்வியாகவும் , இந்த ஒரு வரியில் முடித்துவிடுகிறார்!

"எண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை! தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது!"

தி.சா. ராஜு! ராணுவத்தில் பணிபுரிந்தவர்! சாகித்ய அகடமிக்காக, ஒரு பஞ்சாபி நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு காந்தீயவாதி! மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை எழுத்தில் கொண்டு வந்தவர்.

அகிலன், தீபம் நா.பார்த்த சாரதி போன்ற எழுத்தாளர்கள், கொஞ்சம் சுயகௌரவத்தோடு, லட்சியவாதிகளாகவும் இருந்தது போல, புகழ், பொருளுக்காக எழுத்தை சமரசம் செய்து கொள்ளத் தெரியாத இன்னொரு லட்சியவாதி. தமிழ் எழுத்தாளர்களில், லட்சியவாதிகளும்  இருந்தார்கள் என்பதே இன்றைக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தோடு அப்படியா என்று கேட்க வைக்கும் சங்கதி!

இந்தக் கதையைக் கொஞ்சம், அந்த தண்ணீர்-எண்ணெய் சமாசாரத்தை யோசித்துப் பாருங்களேன்!

பேதம் எங்கிருந்து வருகிறது? நிறத்திலா, இனம், மொழி, தேசம், நகரம், கிராமம், தெரு, எதிர் வீடு, பக்கத்து வீடு இப்படிப் பிரித்துச் சொல்வதில் இருந்தா? பேதம் என்பதே கற்பிதம் தானா?

பேதங்கள் தேவை தானா?  தவிர்க்க முடியாதவை தானா?


வெறுப்பில் எரியும் மனங்கள் எப்போது அமைதியைத் தேடி வரும்? வெறுப்பது மட்டுமே தீர்வாகி விடுமா?

நல்ல எண்ணங்களை, சிந்தனைகளை  விதைத்தல் என்பது ஒரு பண்பாக இங்கே எப்போது வளரும்?

கொரிய மக்களுக்குப் புரிந்து, அங்கே
சொன்ஃபில் இயக்கமாக, நல்ல எண்ணங்களை வளர்த்தல் என்பதை முன்னெடுத்துச் செல்வது போல இங்கேயும் வளர வெறுப்பில் எரியும் மனங்கள் தான் முதல் தடை என்பதைப் புரிந்துகொள்ளும் நேரமும் வருமா?


சொன் ஃபில்! நல்லெண்ணங்களை விதைத்தல்!