எல்லாப் பன்றிகளும் சமம். ஆனால் சிலபன்றிகள் மற்ற பன்றிகளை விட அதிக சமம்! விலங்குப் பண்ணை நாவலில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய இந்த வரிகள் ஸ்டாலின், மாவோ காலத்துக் கம்யூனிஸ்ட் ஆட்சியில் மட்டுமல்ல, காங்கிரஸ் காலம் முடிந்து போன பிறகும் கூட,அவர்களுடைய விசுவாசிகள் அரசின் பல்வேறு அங்கங்களில் இன்னமும் நீடித்து வருவதில், சீனாதானா என்றால் சட்டம், நடைமுறைகள் எல்லாம் வளைந்து கொடுக்கிறதே என்று பேசிக்கொண்டு இருப்பதில் அர்த்தம் இருக்கிறதா?
ஐந்தாவது முறையாக சிபிஐ சிறப்புநீதிமன்றத்தில் சீனாதானா ஆஜர்! வாய்க்கொழுப்பு மன்னன் அங்கே கூட ஐந்து விரல்களை விரித்துக்காட்டி 5 என்றால் என்ன என்று பூடகமாக நிருபர்களுக்கு கிளாஸ் எடுத்ததாக இதே புதிய தறுதலை வீடியோ ஒன்றைத் தனியாக வெளியிட்டு மகிழ்கிறது!
நேற்றுவரை இதே ரகோத்தமன் பேசியதில் அப்பச்சிக்கு கீழ் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துவிடுகிற மாதிரித்தான் சொல்லிக் கொண்டிருந்தார். அவரையும் இப்படி மாற்றிப்பேச வைத்துவிட்டார்களே!😟😠😡
நமக்கும் நம்முடைய ஊடகங்களுக்கும் இந்தமாதிரி ஆபத்து இல்லாமல் லந்தடிக்கத்தான் முடியும் என்று சொன்னால் அதில் குறியீடு உள்ளர்த்தம் எல்லாம் தேடி அலையாதீர்கள்!
ஆட்சியில் இருந்தபோது சொன்னதை இப்போது மாற்றிச் சொல்கிறாரே என்று மன்மோகன்சிங் பற்றி நாணயமாகப் படம் வரைந்துவிட்டாராம் சதீஷ் ஆசார்யா! கொடுமை என்ன என்றால் மண்ணுமோகனர் அன்றைக்கும் சோனியாG வகையறா சொன்னபடிதான் சொன்னார்! இன்றைக்கும் அதே குடும்பம் என்ன சொல்கிறதோ அதையே திருப்பிச்சொல்லும் கிளிப் பிள்ளையாக! 86 வயதானபிறகும் ராஜ்யசபா எம்பி பதவி, அரசின் சலுகைகள் எல்லாமும் வேண்டியிருக்கிற மனிதரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? Oxord டாக்டரேட் வாங்கியென்ன பிரயோசனம்?
படித்ததில் பிடித்தது பகுதிக்காக
தமிழக சமூக ஊடக மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டுமா?! இந்த ஃபோட்டோ பதில் சொல்லும்! இந்தச் செய்திக்கட்டுரையை இணைப்பில் படித்துப் பாருங்கள்!
#வெறுப்பில்எரியும்மனங்கள் இது எழுத்தாளர் ஜெயமோகன் எந்தக் காலத்திலோ பயன்படுத்திய சொல்லாடல்! இன்றும்கூட எத்தனை பொருள் பொதிந்ததாக இருக்கிறது! இப்படி வெறுப்பில் எரிகிற மனங்களிடம் இருந்து எப்படி விலகி இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளப்போகிறோம்?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!