தமிழிசை! சீனாதானா! ஓசிச்சோறு வீரமணி! Bank Mergers!

முந்தைய பதிவில் ஒரு கோடிகாட்டி விட்டுப்போன சேனல் அபத்தங்களைப் பற்றி நண்பர்கள் யாருமே அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை என்பதில் எனக்கு எந்த ஆச்சரியமுமே இல்லை. காரணம், ஊடக அபத்தம் என்பது இங்கே ஊழல், மோசடிகள் மாதிரியே இதெல்லாம் இங்கே சகஜம் என்ற மாதிரியே ஒருவித மனோநிலைக்கு ஜனங்கள் தள்ளப்பட்டு இருப்பதன் அடையாளமே அது என்பதுதான்! இவைகளைப் பேசி என்ன ஆகப்போகிறது என்கிற மாதிரியான பாமரத் தனம் என்றுகூடச் சொல்லலாம்!  


மிழக ஊடகங்கள், உள்ள பிரச்சினைகள் பற்றிப் பேசுவதை மறந்து விட்டு, தமிழிசைக்கு தெலங்கானா ஆளுநர் பொறுப்பு கொடுக்கப்பட்டது குறித்தே தொடர்ந்து கூவுவதில் முந்தைய இருபதிவுகளில் கொஞ்சம் அலுப்புடனேயே தொட்டுப்   பேச வேண்டிய அவசியமும் எழுந்தது. இன்றும் அப்படித் தான் என்று சொல்ல முடியாதபடி இந்த விவாதம் கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது என்று சொல்ல வேண்டும்! காங்கிரசின் செல்வப்பெருந்தகை பேச்சு கிட்டத்தட்ட புதுவை முதல்வர் நாசா உளறலுக்கு இணையாகத் தான் இருந்தது. பிஜேபி சார்பில் பேசிய குமரகுரு கொஞ்சம் கவனிக்கிறமாதிரி நிறைய விஷயங்களோடு பேசுகிறார். யார் இவர் என உற்றுக் கவனிக்க வைத்த பேச்சு! சமீபகாலங்களில் தந்திடிவி விவாதங்களில் கொஞ்சம் பார்க்கிறமாதிரி இருந்த  விவாதம் என்று கூட சொல்லலாம். 

சீனாதானா விவகாரத்தை அவ்வளவு எளிதாகத்  தமிழிசை பெயரால் மறக்கடித்து விடமுடியுமா என்ன? இன்று மதியம் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு இன்றே முடிந்தால் அப்டேட் கொடுக்க நினைத்திருக்கிறேன்!  

 

டாக்டர் சுவாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஒரு நாள் தாமதமாகி சொன்னால் தான் என்ன? 80 வயதாகிறதாம்!     இந்த வீடியோவில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தன்னுடைய star birthday என்று செய்தியைச் சொல்லிவிட்டு பானாசீனாவைப் பற்றியும் தொடர்ந்து சொல்கிறார். அதை பார்த்துவிட்டு, முகநூலில் சுவாரசியமான பகிர்வு ஒன்றையும் படித்தேன்!

   
Mr . P . சிதம்பரம்,
உங்கள் மனைவி, நீட் தேர்வு தமிழகத்துக்கு வேண்டும் என்று கோர்ட் ஏறி வாதாடியவர். நீங்கள் NEET தேர்வை எதிர்ப்பவர். அவருக்கு நேர் எதிர் இந்த விஷயத்தில். இன்று அவர் உங்களை சிறையில் சந்தித்து கம்பராமாயணம் கொடுத்ததாக கேள்விப்பட்டேன். எனக்கென்னவோ உங்களுக்கு ஒரு செய்தி கொடுத்திருக்கிறார் என்றே படுகிறது.
ராமன், எப்பேர்ப்பட்டவன். (தந்தை சொன்னதாகச் சொன்ன) தாய் சொல்லைத்தட்டாமல் சுயநலம் ஏதுமில்லாமல் அரியணையை தம்பிக்கு கொடுத்து 14 வருடம் காட்டுக்குச் சென்றவன். "என் தம்பி பெற்ற செல்வம் மற்றும் புகழ் நான் பெற்றதன்றோ" என்று எந்த சுய நலமுமில்லாமல் அரியணை துறந்தவன்.
"மன்னவன் பணியன்றாகினும்பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியேன் பெற்றதன்றோ" என்றவன்.
ஆனால் நீங்கள் "அறம் என்றே என்னவென்று தெரியாமல், செல்வம் சேர்ப்பது ஒன்றே குறியாய் வாழ்ந்தவர்" என்ற அரச குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர்.
 கம்பராமாயணத்திலிருந்து கொஞ்சம் அறம், சுயநலமின்மை, பொது நலம் எல்லாம் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் என்று உங்கள் மனைவி உங்களுக்கு செய்தி சொல்லி இருப்பதாய் எனக்குப் படுகிறது.
இரண்டே செய்யுட்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர ஆசைப்படுகிறேன். படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
யுத்த காண்டத்தில் விபீஷணன் ராவணனுக்கு சொல்லும் அறிவுரை உங்களுக்கே சொன்னது போல் இருக்கிறது.
பாட்டைக் கேளுங்களேன்.
"மீனுடை நெடுங் கடல் இலங்கை வேந்து என்பான்
தானுடை நெடுந் தவம் தளர்ந்து சாய்வது, ஓர்
மானுட மடந்தையால்"
அதாவது "இலங்கை வேந்தே, உன் தவமெல்லாம் தளர்ந்து கெடுவது, முன்னர் மக்கள் கொடுத்த சாபமோ என்று தோன்றுகிறது" என்கிறான் விபீஷணன்
இந்திய மக்கள் இதையே தான் சொல்லி மனதை ஆற்றிக் கொள்கின்றனர். அவரவர் மொழியில் "என்னைக்காவது சிக்காமலா போவான்" என்று எத்தனை முறை சொல்லி இருப்போம்.உங்கள் கொடுந்தவம்/நெடுந்தவம் தளர்ந்து சாய்கிறது PC அவர்களே.
இதற்கு அடுத்த இன்னொரு பாட்டுத்தான் highlight. உங்களுக்காகவே எழுதியது போல இருக்கிறது. இதுவும் யுத்த காண்டத்தில் விபீஷணன் ராவணனைப் பார்த்து சொல்வது.
"தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனித் தலைவன்,
அன்ன மானுடன் ஆகி வந்து, அவதரித்து அமைந்தான்,"
பொருள் என்னவென்றால் "தனக்கு முன் இப்படி ஒருவன் பிறந்ததில்லை என்று சொல்லும் படியான ஒப்பற்ற தலைவன் மானுடன் வடிவில் அவதரித்து இருக்கிறான். அவன் நம்மை முடிப்பது உறுதி". அந்த தலைவன் யாரென்று தெரிகிறதா? அவர் பெயரும் இரண்டெழுத்தால் ஆனதுதான். ☺️
PC - ஆண்டவன் உங்கள் மனைவி மூலம் உங்களுக்கு ஒரு message அனுப்பிச்சு இருக்கார். "செத்தடி நீ" ன்னு
-ச, சண்முகநாதன்
சீனாதானா மாதிரி சின்னத்தனமான ஆசாமிகளுக்கு இப்படி கம்பராமாயணப் பாட்டெல்லாம் சொல்வது வேஸ்ட் என்றே எனக்குப் படுகிறது. செட்டியாருக்கு படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்றொரு  வழக்குச்சொல் தான் பொருத்தமாக இருக்கும் என்று படுகிறது. ஒரு நாத்திகராகத் தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிற பசி, ஈவெரா நாத்திகவாதிகள் மாதிரியே தனக்கொரு இடைஞ்சல் வருகிற போது குடும்பத்தாரோடு போய் குச்சனூர் சனி பகவானையும் வணங்குவார் என்ற பழைய கதை இந்தப்பக்கங்களிலேயே எட்டு வருடங்களுக்கு முன்னாலேயே பேசப்பட்டதுதான்!   

கி.வீரமணி வங்கிகள் இணைப்பைப் பற்றிக் குறைசொல்லி முழநீள அறிக்கையொன்றை வெளியிட்டிருப்பதை OneIndia தமிழில் பார்த்தேன்.  யார்யார் எதைப்பற்றிக் கருத்துரைப்பது என்ற விவஸ்தை இல்லாத தேசம் இது. முகநூலில் அதற்கு பதிலடி கொடுக்கவும் ஆளிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி!    
ந்தியாவின் முதல் வங்கி எது என்று தெரியுமா
தெரிஞ்சுக்க ..முழுசா படிங்க
வங்கிகளை இணைத்து ஒரு அறிக்கை விட்டாலும் விட்டார் நிர்மலா சீதாராமன்! ஐயகோ வங்கிகளை இணைத்து பெரும் பாவத்தை செய்து விட்டாரே நிர்மலா சீதாராமன்
வங்கியில் பணத்தை தான் காணலை என்றால் வங்கியையே காணோமே இப்படி எல்லாம் பல பதிவுகள்.வங்கிகளை ஒன்றாக்கினால் பொருளாதாரம் மேம்படுமா போச்சு போச்சு ..வேலை வாய்ப்பு போய் எல்லோரும் நடு தெருவுக்கு வர போறோம் டுமீல் டமால்
இப்படி பல பதிவுகள் பேச்சுக்கள்
சரி.உலக தொலைகாட்சியில் இது தான் முதல்முறையா மெர்ஜரா என்று பார்த்தால். நஹி..நஹி ..
இந்திய வங்கிகளின் துவக்கமே இப்படி பட்ட இணைப்புகளில் தான் தொடக்கி இருக்கு.SBI வங்கி தான் இந்தியாவின் பழமையான வங்கி 1806 ல் ..பேங்க் ஆப் கல்கத்தா என்று துவக்க பட்டு 1809 ல் பேங்க் ஆப் பெங்கால்லாக செயல் பட்டிருக்கு
வெள்ளைக்காரன் காலத்தில் இது போல இரண்டு வங்கிகள் துவக்க பட்டிருக்கு பேங்க் ஆப் பாம்பே,பேங்க் ஆப் மதராஸ் (அட..அந்த காலதத்தில் முதல் மூன்றில் நாம் இருந்திருக்கோம் )
அப்புறம் இந்த மூன்று வங்கிகளும் 1921ல் இணைக்க பட்டு
பேங்க் ஆப் இம்பீரியல் என்று ஆகி பின்னர் விடுதலைக்கு பின்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
அப்பனே ..துவக்கமே மெர்ஜரில் தான் ..அப்போதெல்லாம் யாரேனும் பொருளாதார மேதைகள் பதிவுகள் போட்டார்களா தெரியவில்லை.சரி,இதுக்கு பிறகு எந்த மெர்ஜரும் நடக்கவில்லையா என்றால் 1990 க்கு முன்னால்
Allahabad Bank + United Industrial Bank Limited
Bank of Baroda+Traders Bank Ltd
Punjab National Bank+ Hindustan Commercial Bank Ltd
State Bank of India +Bank of Cochin Ltd
Canara Bank+Lakshmi Commercial Bank Ltd
Union Bank of India +Miraj State Bank Ltd
State Bank of India + Bank of Bihar Ltd
State Bank of India +National Bank of Lahore Ltd
என்னது லாகூர் பேங்கா 1947ல் பாகிஸ்தானோடு போய் விட்ட லாகூர் பேர்ல எல்லாம் பேங்க் நடத்தி இருக்காங்க அதுவும் 1990 வரைக்கும் லாகூர் பேங்கை இணைத்த போது
இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று சொல்லி இருப்பாங்க கண்டிப்பா
1990 to 2000 த்தில்
Bank of Baroda+ Bareilly Corporation Bank Ltd
Union Bank of India +Sikkim Bank Ltd.
Oriental Bank of Commerce +Bari Doab Bank Ltd.
Oriental Bank of Commerce +Punjab Co-operative Bank Ltd.
State Bank of India +Kashinath State Bank Ltd
Bank of India +Bank of Karad Ltd
Punjab National Bank +New Bank of India
Bank Of India + Parur Central Bank Ltd
Central Bank Of India +Purbanchal Bank Ltd.
Indian Bank + Bank of Thanjavur Ltd.
Indian Overseas Bank +Bank of Tamilnadu Ltd
அட நம்ம மாநிலத்தின் பெயரில் இருநத ஒரே வங்கி அதையும் ஓவர் சீஸ்க்கு அனுப்பிட்டாங்க
2000 - 2009 வரையில்
HDFC Bank +Centurion Bank of Punjab
ICICI Bank Ltd +Sangli Bank
Indian Overseas +Bank Bharat Overseas Bank
Centurion Bank of Punjab+ Lord Krishna Bank
Federal Bank +Ganesh Bank of Kurandwad
Nainital Bank +Bank of Baroda
IDBI Ltd +United Western Bank
IDBI Ltd IDBI Bank ஆக ஆனது
Bank of Punjab(POB) +Centurion Bank
Bank of Baroda +South Gujarat Local Area Bank
Oriental Bank of Commerce+ Global Trust Bank
Punjab National Bank +Nedungadi Bank Ltd.
 ICICI Ltd. 
ICICI Bank ஆக ஆனது 
Bank of Baroda +Benares State Bank Ltd
ICICI Bank Ltd +Bank of Madura Ltd
HDFC Bank Ltd.+ Times Bank Ltd.
இவற்றில் பல 2004 க்கு பிறகு நடந்த இணைப்புகள்
அப்போது எதெல்லாம் என்ன புத்திசாலி தானம் பொருளாதார மேதை மண்ணு மோகனின் விலாசமான வங்கி சீர்திருத்த பார்வைன்னு சொல்லி இருப்பாங்க ..கண்டிப்பா
சரிதான் இது எல்லாம் அந்தகாலம் சமீபத்திய வரலாறு சொல்லுங்க ன்றால்
2010 டு 2017 ல்
State Bank of India Bharatiya Mahila Bank (BMB)
State Bank of India State Bank of Travancore (SBT)State Bank of India State Bank of Bikaner and Jaipur (SBBJ)
State Bank of India State Bank of Hyderabad (SBH)
State Bank of India State Bank of Mysore (SBM)
State Bank of India State Bank of Patiala (SBP)
Kotak Mahindra Bank +ING Vyasa Bank
ICICI Bank +Bank of Rajasthan Ltd.
என்னது 2017 வரைக்குமா வங்கி இணைப்புகள் நடந்து இருக்கு ..
ஏம்பா போராளிகளே இதை எல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சொல்லாமல் எதோ நிம்மி மாமி வந்து தான் இப்படி செஞ்சுட்டாங்கன்னு பேசுறது எல்லாம் ..நியாயமா
93-94லேயே ..இரண்டு தேசிய வங்கிகளை
Punjab National Bank (PNB) and New Bank of India (NBI) ஒன்றாக இணைத்து சாதனை செஞ்சு இருக்கோம்.
ஆமா ..இதெல்லாம் இருந்தும் ஏன் நம்ம ஆளுங்க இப்படி பேசுறாங்க என்றால் அதுக்கு இரண்டே காரணம் 
ஓன்று மத்தியில் மோடி ஆட்சி! இன்னொன்று இவர்கள் எல்லோரும் பயங்கரமான நடு சென்டர் நியாயவாதிகள் ..
நிற்க
The Bank of Hindustan Was the First Bank to be established in India in 1770.என்னது பேங்க் ஆப் ஹிந்துஸ்தானா ..ஆமா அப்பல்லாம் நம்ம நாடு அடிமையா இருந்தாலும் ஹிந்துக்கள் நாடா இருந்துச்சு விடுதலைக்கு பிறகு சுதந்தரமா இருந்தாலும்
ஹிந்து நாடு என்பது காணாமல் போச்சு ஹிந்துக்கள் சுதந்திர அடிமைகளாகி போனார்கள்
சரி இதுக்கெலாம் லைக்கு ஷேர் எல்லாம் கிடைக்கும்ன்னு எதிர்பார்க்க முடியாது ஏன்னா ..மோடி அரசுக்கு எதிரா கூவினா தானே போராளி 
அவங்களுக்கு தானே ஆதரவு கொடுப்பான் டமிலன்டா 

இந்தப்பகிர்வில் நிறைய விஷயங்ளை கோர்வை இல்லாமல் அள்ளித்தெளித்து விட்டுப் போயிருந்தாலும்  ஒரு முன்னாள் வங்கியாளனாக, யாரோ ஒரு சம்பந்தமே இல்லாத ஒருவர் வங்கி இணைப்புக்கள் வாடிக்கையாளர் பாதுகாப்பு கருதியும் நிர்வாக நடைமுறை வசதிக்காகவும் அவ்வப்போது  செய்யப்படுபவைதான் என்பதைக் கவனித்திருக்கிறார் என்பதோடு  பதிவை நிறைவு செய்வோம்.

மீண்டும் சந்திப்போம்.           

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!