மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் தமிழிசை! சேனல் அபத்தங்கள்!

என்றைக்குமே குழந்தைச்சாமியாகவே இருக்கிற பிள்ளையார் அப்பனுடைய அவதார நாளாக அன்பர்களால் கொண்டாடப் படும் இன்று  விநாயக சதுர்த்தி நாளில் நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

 
தடைகள், சங்கடங்களை நீக்கி வழிபடுகிறவர்களுக்கு நல்வழி அருளுகிற பிள்ளையாரப்பன் இந்த நன்னாளில் எல்லோருக்கும் நல்லதையே அருளட்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!
******* 
தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப் பட்டதில் நியூஸ் 18 சேனலுக்கு ரொம்பவுமே வருத்தம் போல! பொதுவாகவே இங்கே தமிழகத்தில் ஊடகங்களும் சேனல்களும் பிஜேபியின் அரசியல் எதிரிகளைக் காட்டிலும் அதிகமாகக் கூவுவதில் அரசியல் கட்சிகள் அபத்தமா? சேனல்கள் அதிக அபத்தமா? என்ற தலைப்பில் ஆலமன்  சாப்பையா தலைமையில் ஒரு விடுமுறைதினச் சிறப்பு பட்டிமன்றமே நடத்திவிடலாம் போலத்தோன்றுகிறதா?


பட்டிமன்றங்கள் நடத்தாவிட்டால்தான் என்ன? சேனல்களில் தினசரி இதுமாதிரி வெட்டிமன்றங்கள் நடந்துகொண்டு தானே இருக்கின்றன!காங்கிரசின்   திருச்சி வேலுச்சாமி பேசும்  ஆரம்ப அபத்தங்களை செம காமெடியாக எடுத்துக் கொள்ள முடியும் என்றால் இந்த 44 நிமிட வெட்டிமன்றக் கேள்வியையும் ரசிக்க முடியும்! ரசிக்க முடியாதவர்கள் குறைந்த பட்சமாக எதனால் வந்தது இந்த இழிநிலை என்று யோசிக்கலாம் இல்லையா? செய்து பாருங்களேன்! 

கட்சிக்கு உழைத்து ஆனால் பல காரணங்களால் வெற்றி  பெற முடியாமலோ அல்லது பதவியிலே இல்லாமல் இருந்தவர்களுக்கு பதவி கொடுத்து கவுரப்படுத்துவது காலம் காலமாக இருக்கும் சங்க பரிவார வழக்கம்.
அதே போல பதவியிலே பலகாலம் இருந்தவர்கள் தானாகவே ஒதுங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு வழிவிடுவதும் சங்கத்திலே மட்டுமே இருக்கும் வழக்கம்.
அதன்படியே தமிழிசை சவுந்திரராஜன் ஆளுநர் பதவிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்.
என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் உழைத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
2006 மேயர் தேர்தலிலே தமிழிசை சவுந்திரராஜன் என எழுதப்பட்ட டயோட்ட குவாலிஸ் காரிலே வேளச்சேரியிலே சுற்றி சுற்றீ பரப்புரை செய்தார். கூட்டம் வராவிட்டாலும் பேசிக்கொண்டிருப்பார். அப்போது பலர் சிரித்துவிட்டு கடந்து போனார்கள். அதையெல்லாம் தாண்டியே உழைத்தார்.
அவரின் உருவத்தை வைத்து அசிங்கமாக இன்றைக்கு வரைக்கும் படம் போடுகிறார்கள், யூடியூப்பிலே காணொளிகள் கொட்டிக்கிடக்கின்றன. அதைக்கண்டெல்லாம் மனம் தளராமல் பேசியே வந்தார்.
தமிழிசை பேசியதிலே இப்போதும் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது ஆனால் அவ்வளவு கிண்டல் கேலிகளுக்கு இடையேயும் கோபப்படமல் பொதுவெளியிலே முகம் சுளிக்காமல் தம்மை கோபப்படுத்ததான் இப்படி செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அமைதியாகவே எதிர்வினை ஆற்றிக்கொண்டிருந்தார்.
ரொம்பவும் நாகரீகம் கடைபிடிக்கிறேன் என டீம்கா கூட்டத்துக்கு எல்லாம் போனார். அதுவேறு விஷயம்.
மற்றவர்கள் எல்லாம் அது இது என பட்டப்பெயர் போட்டுக்கொண்டு விளம்பரப்படுத்திக்கொண்டு இருந்த போதிலும் அப்படியெல்லாம் வரம்பு மீறவில்லை.
எல்லோருடனும் ஒருங்கிணைந்து வேலை செய்யவில்லை என்பது இவரின் மீது மட்டுமல்ல திராவிட பாஜக தலைவர்கள் எல்லாரின் மீதும் வைத்தே வந்துள்ளேன். தேசப்பணியை விட பலருக்கு அவர்களின் சொந்த புகழ் முக்கியமாக போனது தமிழக தேசபற்றாளர்கள் அனுபவிக்கும் கொடுமை.
நிலைமை எப்படியிருந்தாலும் உழைத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதை சங்கபரிவாரம் எப்போதும் கடைபிடித்து வருகிறது.
அப்போது தான் வெற்றியால் மனம் திரும்பாமலும் தோல்வியால் துவண்டு போகாமலும் தேசப்பணி என்பதை செய்ய முடியும் என்பதால்.
வெற்றி கிடைத்தால் தான் மரியாதை என்றால் அதை நோக்கியே ஓடவேண்டியிருக்கும். பலசமயங்களிலே வெற்றி கிடைக்காமல் போகும் போது மனம் துவளும். அந்த நிலைமை வரக்கூடாது எனும் மேலாண்மை பாடத்தை பின்பற்றுவது எப்போதும் நல்லதே.
தெலுங்கானா ஆளுநராக பதவியேற்கும் தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த இனிய விநாயகர் சதுர்த்தி நன்னாளிலே திராவிட பாஜக ஆக இருப்பது தமிழக பாஜக ஆக அந்த வினை தீர்க்கும் விநாயகன் அருள்வானாக.
தமிழகத்திலே மக்கள் சந்திக்கும் கொடுமைகளை நீக்கிட அருள்புரிவானாக.
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
நண்பர் ராஜ சங்கர் கொஞ்சம் விஷயம் தெரிந்து விமரிசனம் செய்கிறவர் என்பதால் அடிக்கடி அவருடைய முகநூல் பகிர்வுகள் இங்கே இடம்பெறுவது நண்பர்களுக்குப் புரியும் என்றே நினைக்கிறேன். 

இது மதுரை புத்தகத்திருவிழா ஸ்பெஷலாக: 

மற்ற ஊர்களிலும் இப்படி இருக்கலாம்.எனக்கு மதுரையில்தான் இப்படி நடக்கும்.பேருந்தில் முன்பின் தெரியாத நபர்கள் திடீரென்று நம்முடன் பேச ஆரம்பிப்பார்கள்.முன்பு கடவுள் நமக்கு ஏதோ செய்தி சொல்கிறார் என்று அதை டீகோட் செய்து மண்டையை உடைத்துக் கொண்டிருப்பேன்.இப்போது மதுரைக்காரர்கள் அப்படித்தான் என்று விட்டுவிடுவது..
இன்றும் திருமங்கலத்தில் பஸ் ஏறியதும் பக்கத்து இருக்கை நபர் "வாங்க.கடைசில அதர்மம் ஜெயிச்சிடுச்சில்லே?" என்றார்.
நான் 'ஒரு நபர் மதுரைக்கு வருவது அதர்மமா?"என்பது போல் திடுக்கிட்டுஅவரை வழிமுழுவதும் ஓரக்கண்ணால் கவனித்தபடியே வந்தேன்.நல்ல வேளையாக அவர் வழியில் பேசவில்லை.
இறங்கும்போது மட்டும் "போயிட்டு வாங்க.ஆனா கவலைப்படாதீங்க.தர்மம் திரும்பி வரும்.Dharma will be back!" என்றார்.
நான் "தேங்க்ஸ்ங்க" என்று சொல்லிவிட்டு இறங்கிவிட்டேன்.
கூட வந்த நண்பர் "அப்படியே மதுரைக்காரனாவே மாறிட்டியே!" என்றார்.
ரொம்பப் பெருமையாக இருந்தது.
என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?  😰😰😭
 மீண்டும் சந்திப்போம்.  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!