கேட்டது கிடைக்கும்! #அரசியல் செய்தி! அக்கப்போர்! எதுவேண்டும் சொல் மனமே!

இன்றைக்கு காலையில் பார்த்த முதல் காமெடிச் செய்தி, நாளை திமுக நடத்துவதாக இருந்த மொழிப் போராட்டம் தற்காலிகமாக  ஒத்திவைக்கப்படுவதாக! வேடிக்கைதான்!  அதென்ன தற்காலிகமாக ஜகா வாங்குவது என்று திமுகவின் இசுடாலினிடம் யாரும் கேட்காமலேயே அவரே விளக்கமும் சொன்னார் என்கிறது செய்தி!


தமிழக ஆளுநர் உறுதி அளித்தாராம்! அதைக் கேட்டுக் கொண்டு திமுக தலீவர் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்தாராம் என்பது காதில் பூ சுற்றுகிற வழக்கமான திராவிடப்பம்மாத்து தான்!  கீழே சுபவீ எப்படி பூ சுற்றுகிறார் என்பதை ஒரு 23 நிமிட வீடியோவாக 



இது 1965 இல்லை. அந்தநாட்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை என்னமோ தாங்களேதான் உருவாக்கி, வழி நடத்தி 1967 இல் தமிழ்நாட்டில் ஆட்சியையும் பிடித்ததாக நினைத்துக் கொண்டிருந்தால், அதைவிட காமெடி வேறொன்று இருக்க முடியாது!1967 இல் நடந்தது ஒரு விபத்து மட்டும் தான்! அந்த சிறுவிபத்தைக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் காங்கிரஸ் 52 வருடங்களாக கோட்டைவிட்டுக் கொண்டிருப்பது காங்கிரசின் பலவீனமே தவிர திமுகவின் பலத்தால் அல்ல! 


ஹிந்தி தேவையா? இல்லையா?  இதை   யார் முடிவு செய்வது? இந்த 18 நிமிட விவாதம் மூன்று மாதப் பழசுதான்! ரங்கராஜ் பாண்டேவிடம் Behindwoods கற்றுக்குட்டி கேபிரியல் தேவதாஸ் விவாதிக்கிறார் அல்லது கேள்வி கேட்கிறார், இப்படியெல்லாம் சொல்ல ஆசைதான்! வீடியோவுக்கு அவர்களாகவே தலைப்பு வைத்துக் கொண்ட மாதிரி காரசாரமான விவாதம் எங்கே என்று என்னிடம் கேட்கவேண்டாம்!😎🙏  


அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! ஆரம்பநாட்களில் இவர் போன்ற அதிமுக ஆசாமிகளை நான் அவ்வளவாக சட்டை செய்ததுமில்லை, பதிவுகளில் பேசுபொருளாக எடுத்துக் கொண்டு  எழுதியதுமில்லை! ஆனால் எல்லோருக்கும் ஒரு காலம் வரும் இல்லையா! இது ராஜேந்திர பாலாஜியின் காலம் போல! திருச்சி வேலுசாமி போன்ற காங்கிரஸ்காரரை இங்கே நன்றாக வெளுத்து வாங்குகிறார்! கொஞ்ச காலத்துக்கு முன் திமுக பெருந்தலைகள் மாட்டிக் கொண்டார்கள்! வீடியோ 15 நிமிடம்! 

Kiran ji, a few things. This press conference was dedicated to Cabinet decisions. I began by saying that I was there in my capacity as Chair of the GoM which has dealt with the matter. is out of country for an international meet. 1/3
Quote Tweet
Kiran Mazumdar Shaw
@kiranshaw
·
E-cigarettes banned, says Finance Minister Nirmala Sitharaman - Shd this not come from Min of Health? How about banning gutka too? How about MoF announcing some fiscal measures to revive economy? ndtv.com/india-news/e-c
9:08 AM · Sep 19, 2019 

ட்வீட்டர் அக்கப்போர்களில் இது கொஞ்சம் ஆக்கபூர்வமான அக்கப்போர் என்று நான் சொன்னால் நம்புவீர்களா? Biocon நிறுவனத்தின் கிரண் மஜும்தார் ஷா எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளைத் தடை செய்வதாக சமீபத்தில் நிதியமைச்சர் நிருபர்கள் கூட்டத்தில் அறிவித்ததைக் குறித்து  கேள்வி கேட்டிருக்கிறார்! இது ஹெல்த் மினிஸ்டர் சொல்லியிருக்க வேண்டிய விஷயமில்லையோ? இது அம்மணியுடைய கேள்வி! இது அடுத்தது: குட்காவையும் தடைசெய்திருக்க வேண்டாமோ?  பொருளாதாரத்தை   புத்துயிரூட்ட  நிதியமைச்சகம் என்ன அறிவிக்கப்போகிறது? இதுதான் மெயின் கேள்வி! அதற்கு 2 துணைக்கேள்விகள் வேறு! அதற்கு நிர்மலா சீதாராமன் மூன்று ட்வீட்டுகளில் பதில் சொன்னார்.

As Finance Minister — you might’ve observed — I’ve been working on and regularly speaking about measures we’ve been taking on matters of the economy. 3/3
135
150
1.3K
I now understand n I stand corrected. Tks for explaining my confusion. Really grateful for your response.

நம்மூர் திராவிடப்பம்மாத்துகள் மாதிரி, வெட்டிஜம்பத்துக்கு  ஷோ காட்டிக்கொண்டு இருக்காமல் கிரண் மஜூம்தார் தன்னுடைய 3 கேள்விகளுக்கும் நிதியமைச்சர் சொன்ன பதில்களை ஏற்றுக் கொண்டு, தன்னுடைய தவறைத் திருத்திக் கொண்டதாக, நன்றியும்  தெரிவித்திருக்கிறார்.

அக்கப்போர் கழகங்கள் என்றைக்காவது தங்கள் தவறைத் திருத்திக் கொண்டதாகப் பொதுவெளியில் எப்போதாவது சொல்லக் கேட்டிருக்கிறீர்களா?   

மீண்டும் சந்திப்போம்.                          

2 comments:

  1. ராஜீவ் கொலை வழக்கு பற்றி திருச்சி வேலுச்சாமி எழுதிய புத்தகம் படித்திருக்கிறீர்களா?  

    ரங்கராஜ் பாண்டே வேந்தர் டிவியில வேறு எதிலோ ஞாயிறுகளில் அவர் நிகழ்ச்சியைத் தொடர்கிறார் போலவே....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்! புத்தகம் படித்ததில்லை திருச்சி வேலுச்சாமி சுப்ரமணியன் சுவாமி கட்சியில் இருந்து சோனியாG காங்கிரசுக்குத் தாவியவர்! இவருடைய புத்தகத்தைப் படிக்கிற அளவுக்கு அதில் விஷயம் இருக்கிறதா? ராஜீவ் கொலைபற்றி முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிற வீடியோ நிறையப் பார்த்திருக்கிறேன்!

      ரங்கராஜ் பாண்டே வேந்தர் டிவியின் தயாரிப்பு நிர்வாகியாகி பல மாதங்கள் ஆகிவிட்டதே! சாணக்கியா தளத்தில் தற்சமயம் வெளியாகும் வீடியோக்களில் பல வேந்தர் டிவிக்காகத் தயாரித்துக் கொடுத்ததுதான்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!