இன்று தமிழ்வருடப்பிறப்பு. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இறையருள் நம்மோடு எப்போதும் துணையிருப்பதாக.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினசரி வாசிக்கும் கொரோனா அறிவிப்புகள் வரவர செம காமெடியாக மாறிக் கொண்டிருக்கிறது. முழுப்பூசணிக்காயை மூடிமறைக்க இன்றைக்கு அவர் உபயோகித்திருக்கும் புதிய வார்த்தை #ஒரேதனித்தொற்று இப்படி சமாளிக்க முடியாத அரைகுறை தினசரி அறிக்கைகள் வாசிக்காமலேயே இருந்திருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
இங்கே தமிழகத்தில் மட்டும்தான் இப்படி கொண்டையை மறைக்கத்தெரியாத வடிவேலு காமெடி என்றில்லாமல் வேறுசில மாநிலங்களிலும் இதேகூத்துதான்! ஆனால் வேறுவேறு பெயர்கள் வைத்துச் சொல்கிற கொடுமையை மிக சிம்பிளாக ஒரே கார்டூனில் சொன்னதை PGurus தளத்தில் இன்றைக்குப் பார்த்தேன்.
நோய்த்தொற்றை எப்படிச் சமாளிக்கிறார்களோ, அது வேறு விஷயம்! உண்மையைச் சொல்வதனால் தங்களுக்கு வாக்குவங்கியில்பாதிப்பு வந்துவிடக்கூடாதே என்ற கவலை ஒவ்வொருவரையும் ஆட்டிப் படைப்பதை இதைவிட சிறப்பாகச் சொல்லியிருக்க முடியாது என்பது ஒருபுறம்! என்னதான் மறைக்கப் பார்த்தாலும் உண்மைநிலவரம் ஏதோவொரு வகையில் அம்பலப்பட்டுக் கொண்டே வருகிறது. அப்புறம் எதற்காக இதுமாதிரிச் செய்தியாளர் சந்திப்பு, அது இது என்று நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்க வேண்டும்? இன்று தமிழக அரசின் அறிவிப்புக்களில் lockdown என்கிற சுய ஊரடங்கை இந்தமாதம் 30 ஆம் தேதிவரை நீட்டித்திருப்பது ஒன்றே உருப்படியானது. ஆனால் அதுவரைக்கும் பீலா ராஜேஷ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுவார்த்தையைக் கண்டுபிடித்துச் சொல்வதைப் பார்த்துக் கொண்டு இருக்கவேண்டுமே என்பது தமிழ்நாட்டின் தலையெழுத்து! கழகங்கள் இல்லாத தமிழகம் என்றானால் விடிவுகாலமும் பிறக்கும். பிறந்திருக்கிற தமிழ்ப்புத்தாண்டில் அதற்கான வலுவான அடித்தளம் அமைய இறையருளை வேண்டிப் பிரார்த்தனை செய்வோம்!
சமீபகாலங்களில் எந்த தமிழக சேனல் விவாதங்களையும் பார்ப்பதில்லை என்பதிலேயே நிறைய விஷயங்களைத் தேடிப்படிக்கவும், புத்தகங்கள் வாசிக்கவும், Money Heist வெப் சீரீஸின் 4 பாகங்களை பார்க்கவும் போதுமான அவகாசம் கிடைத்தது என்றால் நம்புவீர்களா? அப்படிப் பார்க்க மு டிந்ததில் டேனியல் டிமார்டினோ பூத் என்கிற பொருளாதார வல்லுனரின் 93நிமிட நேர்காணலும் ஒன்று. மேலே அதன் சுருக்கப்பட்ட 6 நிமிட வடிவம். முழு நேர்காணலையும பார்க்க About Danielle: As Founder & CEO of Quill Intelligence, DiMartino Booth set out to launch a #ResearchRevolution, redefining how markets intelligence is conceived and delivered. To build QI, she brought together a core team of investing veterans to analyze the trends and provide critical analysis on what is driving the markets – both in the United States and globally. A global thought leader on monetary policy, economics and finance, DiMartino Booth founded Quill Intelligence in 2018. She is the author of FED UP: An Insider’s Take on Why the Federal Reserve is Bad for America (Portfolio, Feb 2017), has a column on Bloomberg View, is a business speaker, and a commentator frequently featured on CNBC, Bloomberg, Fox News, Fox Business News, BNN Bloomberg, Yahoo Finance and other major media outlets என்று யூட்யூப் தளத்தில் ஒரு சிறு அறிமுகம் கிடைக்கிறது.
கொரோனா வைரசை சீனா தொடுத்த யுத்தமாகவே இவர் கருதுகிறார், காரணகாரியங்களோடு விளக்குகிறார். நேரமிருந்தால் என்ன சொல்கிறார் என்பதைக் காதுகொடுத்துக் கேளுங்களேன்! எத்தனை நாளைக்குத்தான் உள்ளூர் ஊடகச்சொத்தைகளையே பார்த்துக் கொண்டிருப்பதாம்?
மீண்டும் சந்திப்போம். இன்னொரு முறையும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளுடன்.
தயாநிதி மாறன் பேசக்கூட வேண்டாம்! மனிதர் சும்மா வந்தாலே போதும், சிரிக்கத் தயாராகிவிடலாம்! அப்படி ஒரு ராசியான உடல்மொழி! பேசவும் ஆரம்பித்தார் என்றால் கேட்கவும் வேண்டுமா? கருணாநிதி ஈறு பேன் தோசை ரஜனி விஜய் LIC என்று வரிசையாக கலந்து கட்டி காமெடி செய்வதற்காகவே மக்களவைக்குப் போயிருக்கிறார் போல!
அந்தநாட்களில் தெருக்கூத்து நாடகங்களில் கோமாளி வேடம் போடுகிறவர் அடிக்கிற கூத்து பிரதான கவனம் பெறும்! ஆனால் தயாநிதி மாறன் அடிக்கிற கூத்து எவரையும் இம்ப்ரெஸ் செய்த மாதிரித் தெரியவில்லை!
சலீம்! ரங்கராஜ் பாண்டே வெளியேற்றப்பட்ட பிறகு அந்த இடத்துக்கு வந்தவர், அந்தநாளைய தினத்தந்தி பாணியிலேயே செய்திகளைச் சொல்வது, வாசிப்பது #ஊடகக்காமெடி என்றே சொல்லிவிடலாம்!
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள், எக்சிட் கணிப்புகள் எல்லாமே மறுபடி ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொன்னாலும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உள்ளூர ஒரு உதறல் இருந்து கொண்டே தான் இருக்கும் போல! PGurus தளத்தில் ரிசல்ட் வேறுமாதிரிவந்துவிட்டால் அரவிந்த் கேஜ்ரிவால் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது பழியைப்போடத் தயாராக இருப்பதைக் கேலியாகப் படம் வரைந்து விளக்குகிறார்கள். #என்னத்தசொல்ல
ரங்கராஜ் பாண்டே! கடந்த ஓராண்டில் சமூகவலைதளங்களில் தன்னுடைய இருப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டே போகிறார். இதர யூட்யூப் சேனல்களுமே அவரைத் தேடிப்போய் நேர்காணல் செய்து வெளியிடுவதும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. இங்கே நடிகர் விஜய் உள்ளிட்டு பல இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது இங்கே தமிழக ஊடகங்களால் மிகவும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. அதைக்குறித்து ரங்கராஜ் பாண்டே ஒரு தெளிவான பார்வையை முன்வைக்கிறார். எல்லா விஷயங்களுக்கும் சாயம்பூசுகிற வேலையை ஊடகங்கள் செய்துவருவதை ஒரு ஊடகக்காரராக இருந்து கொண்டே சொல்வது அவருடைய பலம்! அந்த பலத்தை தருவது எது? எதையும் சொல்கிற விதத்தில் சொல்வதுதான் என்பது தெரிகிறதா?
இன்றைக்கு காலையில் பார்த்த முதல் காமெடிச் செய்தி, நாளை திமுக நடத்துவதாக இருந்த மொழிப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக! வேடிக்கைதான்! அதென்ன தற்காலிகமாக ஜகா வாங்குவது என்று திமுகவின் இசுடாலினிடம் யாரும் கேட்காமலேயே அவரே விளக்கமும் சொன்னார் என்கிறது செய்தி!
தமிழக ஆளுநர் உறுதி அளித்தாராம்! அதைக் கேட்டுக் கொண்டு திமுக தலீவர் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்தாராம் என்பது காதில் பூ சுற்றுகிற வழக்கமான திராவிடப்பம்மாத்து தான்! கீழே சுபவீ எப்படி பூ சுற்றுகிறார் என்பதை ஒரு 23 நிமிட வீடியோவாக
இது 1965 இல்லை. அந்தநாட்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை என்னமோ தாங்களேதான் உருவாக்கி, வழி நடத்தி 1967 இல் தமிழ்நாட்டில் ஆட்சியையும் பிடித்ததாக நினைத்துக் கொண்டிருந்தால், அதைவிட காமெடி வேறொன்று இருக்க முடியாது!1967 இல் நடந்தது ஒரு விபத்து மட்டும் தான்! அந்த சிறுவிபத்தைக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் காங்கிரஸ் 52 வருடங்களாக கோட்டைவிட்டுக் கொண்டிருப்பது காங்கிரசின் பலவீனமே தவிர திமுகவின் பலத்தால் அல்ல!
ஹிந்தி தேவையா? இல்லையா? இதை யார் முடிவு செய்வது? இந்த 18 நிமிட விவாதம் மூன்று மாதப் பழசுதான்! ரங்கராஜ் பாண்டேவிடம் Behindwoods கற்றுக்குட்டி கேபிரியல் தேவதாஸ் விவாதிக்கிறார் அல்லது கேள்வி கேட்கிறார், இப்படியெல்லாம் சொல்ல ஆசைதான்! வீடியோவுக்கு அவர்களாகவே தலைப்பு வைத்துக் கொண்ட மாதிரி காரசாரமான விவாதம் எங்கே என்று என்னிடம் கேட்கவேண்டாம்!😎🙏
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! ஆரம்பநாட்களில் இவர் போன்ற அதிமுக ஆசாமிகளை நான் அவ்வளவாக சட்டை செய்ததுமில்லை, பதிவுகளில் பேசுபொருளாக எடுத்துக் கொண்டு எழுதியதுமில்லை! ஆனால் எல்லோருக்கும் ஒரு காலம் வரும் இல்லையா! இது ராஜேந்திர பாலாஜியின் காலம் போல! திருச்சி வேலுசாமி போன்ற காங்கிரஸ்காரரை இங்கே நன்றாக வெளுத்து வாங்குகிறார்! கொஞ்ச காலத்துக்கு முன் திமுக பெருந்தலைகள் மாட்டிக் கொண்டார்கள்! வீடியோ 15 நிமிடம்!
Kiran ji, a few things. This press conference was dedicated to Cabinet decisions. I began by saying that I was there in my capacity as Chair of the GoM which has dealt with the matter.
E-cigarettes banned, says Finance Minister Nirmala Sitharaman - Shd this not come from Min of Health? How about banning gutka too? How about MoF announcing some fiscal measures to revive economy? https://ndtv.com/india-news/e-cigarettes-banned-says-finance-minister-nirmala-sitharaman-2103016…
9:08 AM · Sep 19, 2019
ட்வீட்டர் அக்கப்போர்களில் இது கொஞ்சம் ஆக்கபூர்வமான அக்கப்போர் என்று நான் சொன்னால் நம்புவீர்களா? Biocon நிறுவனத்தின் கிரண் மஜும்தார் ஷா எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளைத் தடை செய்வதாக சமீபத்தில் நிதியமைச்சர் நிருபர்கள் கூட்டத்தில் அறிவித்ததைக் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்! இது ஹெல்த் மினிஸ்டர் சொல்லியிருக்க வேண்டிய விஷயமில்லையோ? இது அம்மணியுடைய கேள்வி! இது அடுத்தது: குட்காவையும் தடைசெய்திருக்க வேண்டாமோ? பொருளாதாரத்தை புத்துயிரூட்ட நிதியமைச்சகம் என்ன அறிவிக்கப்போகிறது? இதுதான் மெயின் கேள்வி! அதற்கு 2 துணைக்கேள்விகள் வேறு! அதற்கு நிர்மலா சீதாராமன் மூன்று ட்வீட்டுகளில் பதில் சொன்னார்.
, the I&B Minister, when required. Health Secretary was also with me, explaining details. These are protocols, as you know, which govt press conferences follow. 2/3
As Finance Minister — you might’ve observed — I’ve been working on and regularly speaking about measures we’ve been taking on matters of the economy. 3/3