நம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக!
மண்டேன்னா ஒண்ணு! #கொரோனா #காமெடி #அரசியல்
இன்று தமிழ்வருடப்பிறப்பு. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இறையருள் நம்மோடு எப்போதும் துணையிருப்பதாக.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினசரி வாசிக்கும் கொரோனா அறிவிப்புகள் வரவர செம காமெடியாக மாறிக் கொண்டிருக்கிறது. முழுப்பூசணிக்காயை மூடிமறைக்க இன்றைக்கு அவர் உபயோகித்திருக்கும் புதிய வார்த்தை #ஒரேதனித்தொற்று இப்படி சமாளிக்க முடியாத அரைகுறை தினசரி அறிக்கைகள் வாசிக்காமலேயே இருந்திருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
இங்கே தமிழகத்தில் மட்டும்தான் இப்படி கொண்டையை மறைக்கத்தெரியாத வடிவேலு காமெடி என்றில்லாமல் வேறுசில மாநிலங்களிலும் இதேகூத்துதான்! ஆனால் வேறுவேறு பெயர்கள் வைத்துச் சொல்கிற கொடுமையை மிக சிம்பிளாக ஒரே கார்டூனில் சொன்னதை PGurus தளத்தில் இன்றைக்குப் பார்த்தேன்.
நோய்த்தொற்றை எப்படிச் சமாளிக்கிறார்களோ, அது வேறு விஷயம்! உண்மையைச் சொல்வதனால் தங்களுக்கு வாக்குவங்கியில்பாதிப்பு வந்துவிடக்கூடாதே என்ற கவலை ஒவ்வொருவரையும் ஆட்டிப் படைப்பதை இதைவிட சிறப்பாகச் சொல்லியிருக்க முடியாது என்பது ஒருபுறம்! என்னதான் மறைக்கப் பார்த்தாலும் உண்மைநிலவரம் ஏதோவொரு வகையில் அம்பலப்பட்டுக் கொண்டே வருகிறது. அப்புறம் எதற்காக இதுமாதிரிச் செய்தியாளர் சந்திப்பு, அது இது என்று நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்க வேண்டும்? இன்று தமிழக அரசின் அறிவிப்புக்களில் lockdown என்கிற சுய ஊரடங்கை இந்தமாதம் 30 ஆம் தேதிவரை நீட்டித்திருப்பது ஒன்றே உருப்படியானது. ஆனால் அதுவரைக்கும் பீலா ராஜேஷ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுவார்த்தையைக் கண்டுபிடித்துச் சொல்வதைப் பார்த்துக் கொண்டு இருக்கவேண்டுமே என்பது தமிழ்நாட்டின் தலையெழுத்து! கழகங்கள் இல்லாத தமிழகம் என்றானால் விடிவுகாலமும் பிறக்கும். பிறந்திருக்கிற தமிழ்ப்புத்தாண்டில் அதற்கான வலுவான அடித்தளம் அமைய இறையருளை வேண்டிப் பிரார்த்தனை செய்வோம்!
சமீபகாலங்களில் எந்த தமிழக சேனல் விவாதங்களையும் பார்ப்பதில்லை என்பதிலேயே நிறைய விஷயங்களைத் தேடிப்படிக்கவும், புத்தகங்கள் வாசிக்கவும், Money Heist வெப் சீரீஸின் 4 பாகங்களை பார்க்கவும் போதுமான அவகாசம் கிடைத்தது என்றால் நம்புவீர்களா? அப்படிப் பார்க்க மு டிந்ததில் டேனியல் டிமார்டினோ பூத் என்கிற பொருளாதார வல்லுனரின் 93நிமிட நேர்காணலும் ஒன்று. மேலே அதன் சுருக்கப்பட்ட 6 நிமிட வடிவம். முழு நேர்காணலையும பார்க்க About Danielle: As Founder & CEO of Quill Intelligence, DiMartino Booth set out to launch a #ResearchRevolution, redefining how markets intelligence is conceived and delivered. To build QI, she brought together a core team of investing veterans to analyze the trends and provide critical analysis on what is driving the markets – both in the United States and globally. A global thought leader on monetary policy, economics and finance, DiMartino Booth founded Quill Intelligence in 2018. She is the author of FED UP: An Insider’s Take on Why the Federal Reserve is Bad for America (Portfolio, Feb 2017), has a column on Bloomberg View, is a business speaker, and a commentator frequently featured on CNBC, Bloomberg, Fox News, Fox Business News, BNN Bloomberg, Yahoo Finance and other major media outlets என்று யூட்யூப் தளத்தில் ஒரு சிறு அறிமுகம் கிடைக்கிறது.
கொரோனா வைரசை சீனா தொடுத்த யுத்தமாகவே இவர் கருதுகிறார், காரணகாரியங்களோடு விளக்குகிறார். நேரமிருந்தால் என்ன சொல்கிறார் என்பதைக் காதுகொடுத்துக் கேளுங்களேன்! எத்தனை நாளைக்குத்தான் உள்ளூர் ஊடகச்சொத்தைகளையே பார்த்துக் கொண்டிருப்பதாம்?
மீண்டும் சந்திப்போம். இன்னொரு முறையும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளுடன்.
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!
அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
ReplyDeleteபுத்தொளி பிறக்கட்டும்..
புவியெங்கும் வாழட்டும்...
வணக்கம் துரை செல்வராஜூ சார்!
Deleteஅன்புக்கு நன்றி. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளுடன்.
இனிய தபிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அடுத்து வரும் மாதங்கள் ஆபத்தின்றி கழிந்திட அன்னை அருள் புரிய வேண்டும்.
ReplyDeleteவணக்கம் ஸ்ரீராம்!
Deleteவாழ்த்துக்கு நன்றி . அன்னை பராசக்தி எல்லோரையும் காத்தருள வேணும் என்கிற பிரார்த்தனையோடு
கொரோனா கொடுமையானது தான்
ReplyDeleteஎல்லோரும் பாதுகாப்பாக இருப்போம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
நன்றி. உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!
Delete