இந்தோ சீனி பாய் பாய்! இந்தமுறை கூவுவது சீனர்களாம்!

1950களில் இந்தோ சீனி பாய் பாய் என்ற முழக்கங்களை காங்கிரஸ்காரர்கள் எழுப்பிக்கொண்டு  இருந்த கதை இன்றைய தலைமுறை அறிந்திருக்க நியாயமில்லை. இந்தியாவும் சீனாவும் பஞ்சசீலக் கொள்கை என்ற ஒரு மாயஉலகில் ஒப்பந்தம் செய்துகொண்டபோது எழுந்த கோஷம் அது. 1962 இல் இந்திய சீனப்போருக்குப் பிறகு அந்த கோஷம் என்ன ஆனது என்பது அந்த நாளைய CONகிரஸ் ஆசாமிகளுக்கே நினைவிருக்காது. எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தோசீனி பாய்பாய் கோஷம் கடந்தவாரம் மறுபடி சீனத்தரப்பிலிருந்து வெகுவாகத் தம்பட்டம் அடிக்கப் பட்டிருக்கிறது என்பது காலமும் கொரோனா வைரசும் ஏற்படுத்தித் தந்திருக்கிற விசித்திரம்! இங்கே ஹிந்து நாளிதழுக்கும் செலெக்டிவாக வேறுசில ஊடகங்களுக்கும் இந்திய-சீன் உறவு: எழுபது ஆண்டுகள் என்று முழுப்பக்க விளம்பரங்கள் சீன தூதரகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டதைக்கூட  கவனித்திருக்க மாட்டோம் தானே! 


இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்துங் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவத் துறையினருக்காக தீபம் ஏற்றினாராம்!  உள்ளூர் கம்யூனிஸ்டுகள், பிரதமர் சென்ற 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு தீபம் ஏற்றச்சொன்னதை 
நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களுடைய ஆதர்ச சீன தேசத்து தூதர் தீபமேற்றிக் கொண்டிருந்தது தெரியுமோ என்னவோ? அது போகட்டும்! திடீரென்று சீனாவுக்கு இந்தியா மீது எப்போதுமில்லாமல் இப்போது திடீர்க்கரிசனம் வருவானேன்? சீனர்கள் குடுமியும் காரணம், ஆதாயமில்லாமல் சும்மா ஆடுவதில்லை என்பது தெரியுமில்லையா?  

More than India, it was China which celebrated seventy years of Indo-China relations last week. Many newspapers carried an editorial written by the Chinese Ambassador to India on the event, but none from the Indian leadership. There were tweets from the Chinese ambassador and government on the growing relationship with mentions of telephonic contacts between the two foreign ministers.

The editorials praised the proximity between the leaders of the two countries and invariably had a paragraph on the two nations battling Covid-19 (Coronavirus) together. No formal event was organized on account of social distancing norms. The Chinese Ambassador also participated in the national Lighting of the Candle event on the weekend and tweeted, ‘we are standing together through thick and thin.’ என்றுஆரம்பிக்கும் கொல்கத்தா ஸ்டேட்ஸ்மன் நாளிதழ் செய்திக்கட்டுரை சீனர்களுடைய திடீர்க் கரிசனம், புகழ்ச்சிக்கான காரணங்களை மேலும் அடுக்குகிறது. அதுமட்டுமா? கடந்த மாதம் பாகிஸ்தான் சீனாவிடம் காஷ்மீர் பிரச்சினையை ஐநா பாதுகாப்புசபையில் எழுப்புமாறு விடுத்த கோரிக்கைக்கு சீனா செவி சாய்க்கவில்லை. அதுவும் தவிர கடந்த சிலமாதங்களாகவே சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைகிற வாடிக்கைகூட இல்லையாம்! 

கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவுடன் எல்லாவகையிலும் ஒத்துழைக்கத்தயார் என்றும் உருகி இருக்கிறார்கள்! சீன அரசின் கண்ணசைப்பில் அலிபாபா  பவுண்டேஷன் முகக்கவசம். டெஸ்ட் கிட்  முதலான நிவாரணப் பொருட்களை டில்லிக்கு அனுப்பியிருக்கிறது. Tik Tok நிறுவனம் நூறு கோடி ரூபாய்களை நிவாரணநிதிக்கு அளித்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனா உண்மையை மறைத்த்து, பெரும்பாலான நாடுகளில் கடும் அதிருப்தியை, கோபத்தை ஏற்படுத்தி இருப்பதைச் சமளித்தாக வேண்டிய நிலையில் இருப்பதே, சீனாவின் இந்த திடீர்க்கரிசனம், புகழ்ச்சி, உதவி என்பதற்கான காரணம்.

பிரிட்டன், அமெரிக்கா இரண்டு நாடுகளிலும் வைரஸ் தொற்றுக்காக சீனாவிடமிருந்து இழப்பீடு பெறவேண்டும் என்ற குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் பலவும் #ChinaMustPay என்ற கருத்து வலுவாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் விவகாரம் சீனாவை அவ்வளவு எளிதாகத்தப்பிக்க விட்டுவிடாது என்றே நிலவரம் முற்றிவருவதாக செய்திகள் சொல்கின்றன.

ஸ்டேட்ஸ்மன் நாளிதழ் செய்திக்கட்டுரையை விரிவாக எழுதியிருப்பவர் ஹர்ஷாகாகர். இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்.மேலேயே சுட்டி இருக்கிறது. வாசித்துப் பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம். 

 



     

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!