சீனத்தரத்துக்குக் குறைந்ததல்ல நம்மூர் காங்கிரஸ், கழகங்களின் தரம்!

இந்தியாவுக்கு சீனா சமீபத்தில் சுமார்  1,70,000 PPE எனப்படும் தற்காப்பு உடைகளை வழங்கியது. இந்த உடைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரொனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட இருந்த நிலையில் இவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன FDA/CE தரச்சான்றிதழ் பெறாத இந்தத் தற்காப்பு உடைகள் இந்தியாவில் சோதனை செய்யப்படும். இதன்படி குவாலியிரில் அமைந்துள்ள (DRDO) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனையில் 1,70,000 உடைகளில் சுமார் 50,000 உடைகள் தோல்வி அடைந்துள்ளன. மேலும்,இதை தவிர தனித்தனியாக இரண்டு சிறிய தொகுதிகளாக வந்த 40,000 உடைகளும தரச்சோதனையில் தோல்வி அடைந்துள்ளன.


பிரம்ம  செலானி சொல்வது உண்மையென்றால் தலையில் அடித்துக் கொள்வதைத்தவிர வேறுவழி இருக்கிறதா என்ன?!!
 

நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வரும் நிலையில் அவசர நிலை காரணமாக சுமார் 10லட்சம் தற்காப்பு உடைகள் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாங்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்களை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். மே முதல் வாரத்தில் நாம் இந்த உடைகளை நம் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் கூறினர். மத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது 20லட்சம் பாதுகாப்பு உடைகள் இருந்தால் நம்மால் நிலைமையை சமாளிக்க முடியும் என்கின்றனர்.நமது நாட்டில் DRDO தயாரித்துள்ள உடைகள் ஒரு நாளைக்கு சுமார் 30,000 என்ற எண்ணிக்கையில் தயாரிக்கும் நிலையை எட்டி உள்ளது என்று இந்தத்தளத்தில் தகவல் சொல்கிறார்கள். தைவான் நாட்டு விஞ்ஞானிகள் பாதுகாப்பு கவசங்களை கிருமிகளை சுத்தம் செய்து மறுபடி மறுபடி பயன்படுத்தும் உத்தியைக் கண்டுபிடித்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

DRDO விஞ்ஞானிகள் சுமார் 5 அடுக்குகளை கொண்ட N99 முக கவசத்தை தயாரித்துள்ளனர், இதில் 2 அடுக்கு நானோ வலைகளை கொண்டது. இது சுமார் 99% பாதுகாப்பு அளிக்கும் என DRDO விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் விலை 70ருபாய் ஆகும்.


வழக்கமான N95 முக கவசங்கள் 95% பாதுகாப்பை வழங்குகின்றன, ஆனால் இவை பன்மடங்கு அதிக விலைக்கு (300 ருபாயக்கும் அதிகம்) விற்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இங்கே தமிழகத்துக்கு இசுடாலின் அங்கே CONகிரசுக்கு ராகுல் காண்டி என இரு அதிமேதாவிகள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்கே புரியாமல் அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் எதையாவது உளறிக் கொண்டே இருப்பதில் எரிச்சலானாரோ என்னவோ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளுத்து வாங்க ஆரம்பித்திருக்கிறார். ராகுல் காண்டி உளறிக்கொட்டியதை வீடியோவாக எடுத்துப் போட எனக்கும் ஆசைதான்! ஆனால் ப்ளாக்கர் ஒத்துழைக்க மறுக்கிறது;  

ரங்கராஜ் பாண்டே  தன்னுடைய பங்குக்கு ராகுல் காண்டிதான் அடுத்த மன்மோகன்சிங் என்று ஒரு விசித்திரமான தலைப்பு வைத்து,சாணக்யா தளத்தில் நேயர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதில் இசுடாலின், பப்பு இருவரையும் கலந்துகட்டி லந்தடிக்கிறமாதிரி சில பதில்களைக் கேட்க முடிந்தது. நேரலையில் சுட்டி இங்கே 

மீண்டும் சந்திப்போம். 

2 comments:

  1. N 95 மாஸ்க் 400, 500 என்று விற்கிறார்கள். ஐந்து ரூபாய் பெறுமானமுள்ள யூஸ் அண்ட் த்ரோ மாஸ்க் கிடைப்பதே இல்லை. கிடைத்தாலும் இருபது ரூபாய், முப்பது ரூபாய்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்!

      மிகநெருக்கடியான நிலையில் இப்படிக்கு கொள்ளை விலைக்கு விற்பது புதிதா என்ன? சீனா இந்த நெருக்கடியான நேரத்திலும், மாஸ்க் உள்ளிட்ட பொருட்களைத் தரமே இல்லாமல் தயாரித்து உலகமெங்கும் விற்பனை செய்து காசுபார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்கிறவர்களும் கூட 70% சீன மூலப்பொருட்களையே நம்பியிருக்கிறார்கள் என்பது தான் கவலையளிக்கிற செய்தி.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!