Showing posts with label கழகம் காங்கிரஸ் குழப்பம். Show all posts
Showing posts with label கழகம் காங்கிரஸ் குழப்பம். Show all posts

சீனத்தரத்துக்குக் குறைந்ததல்ல நம்மூர் காங்கிரஸ், கழகங்களின் தரம்!

இந்தியாவுக்கு சீனா சமீபத்தில் சுமார்  1,70,000 PPE எனப்படும் தற்காப்பு உடைகளை வழங்கியது. இந்த உடைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரொனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட இருந்த நிலையில் இவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன FDA/CE தரச்சான்றிதழ் பெறாத இந்தத் தற்காப்பு உடைகள் இந்தியாவில் சோதனை செய்யப்படும். இதன்படி குவாலியிரில் அமைந்துள்ள (DRDO) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனையில் 1,70,000 உடைகளில் சுமார் 50,000 உடைகள் தோல்வி அடைந்துள்ளன. மேலும்,இதை தவிர தனித்தனியாக இரண்டு சிறிய தொகுதிகளாக வந்த 40,000 உடைகளும தரச்சோதனையில் தோல்வி அடைந்துள்ளன.


பிரம்ம  செலானி சொல்வது உண்மையென்றால் தலையில் அடித்துக் கொள்வதைத்தவிர வேறுவழி இருக்கிறதா என்ன?!!
 

நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வரும் நிலையில் அவசர நிலை காரணமாக சுமார் 10லட்சம் தற்காப்பு உடைகள் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாங்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்களை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். மே முதல் வாரத்தில் நாம் இந்த உடைகளை நம் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் கூறினர். மத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது 20லட்சம் பாதுகாப்பு உடைகள் இருந்தால் நம்மால் நிலைமையை சமாளிக்க முடியும் என்கின்றனர்.நமது நாட்டில் DRDO தயாரித்துள்ள உடைகள் ஒரு நாளைக்கு சுமார் 30,000 என்ற எண்ணிக்கையில் தயாரிக்கும் நிலையை எட்டி உள்ளது என்று இந்தத்தளத்தில் தகவல் சொல்கிறார்கள். தைவான் நாட்டு விஞ்ஞானிகள் பாதுகாப்பு கவசங்களை கிருமிகளை சுத்தம் செய்து மறுபடி மறுபடி பயன்படுத்தும் உத்தியைக் கண்டுபிடித்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

DRDO விஞ்ஞானிகள் சுமார் 5 அடுக்குகளை கொண்ட N99 முக கவசத்தை தயாரித்துள்ளனர், இதில் 2 அடுக்கு நானோ வலைகளை கொண்டது. இது சுமார் 99% பாதுகாப்பு அளிக்கும் என DRDO விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் விலை 70ருபாய் ஆகும்.


வழக்கமான N95 முக கவசங்கள் 95% பாதுகாப்பை வழங்குகின்றன, ஆனால் இவை பன்மடங்கு அதிக விலைக்கு (300 ருபாயக்கும் அதிகம்) விற்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இங்கே தமிழகத்துக்கு இசுடாலின் அங்கே CONகிரசுக்கு ராகுல் காண்டி என இரு அதிமேதாவிகள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்கே புரியாமல் அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் எதையாவது உளறிக் கொண்டே இருப்பதில் எரிச்சலானாரோ என்னவோ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளுத்து வாங்க ஆரம்பித்திருக்கிறார். ராகுல் காண்டி உளறிக்கொட்டியதை வீடியோவாக எடுத்துப் போட எனக்கும் ஆசைதான்! ஆனால் ப்ளாக்கர் ஒத்துழைக்க மறுக்கிறது;  

ரங்கராஜ் பாண்டே  தன்னுடைய பங்குக்கு ராகுல் காண்டிதான் அடுத்த மன்மோகன்சிங் என்று ஒரு விசித்திரமான தலைப்பு வைத்து,சாணக்யா தளத்தில் நேயர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதில் இசுடாலின், பப்பு இருவரையும் கலந்துகட்டி லந்தடிக்கிறமாதிரி சில பதில்களைக் கேட்க முடிந்தது. நேரலையில் சுட்டி இங்கே 

மீண்டும் சந்திப்போம். 

காங்கிரசும் வரலாறும்! Headless Chicken Syndrome!

இப்போது காங்கிரசுக்கு போதாதகாலம் என்றால் ராகுல் காண்டி ஒருவரே அதற்கு முழுமுதல் காரணம் என்ற அளவுக்கு நிலைமை அவ்வளவு கேவலமாகப் போய்க்கொண்டிருக்கிறது. 1998 முதல் 2013 வரை டில்லியை தொடர்ச்சியாக மூன்று முறை ஜெயித்த காலம் போய், இருந்தார்கள் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் தோல்வி என்பதையும் தாண்டி மூன்றே  மூன்று தொகுதிகளில் மட்டும் டெபாசிட் கிடைக்கிற அளவுக்குக் கீழேபோய்விட்டது. டில்லி காங்கிரசுக்குப் பொறுப்பாளராக இருந்த P C சாக்கோ, ஆம் ஆத்மி கட்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார்; எங்களுக்கு யார் இருக்கிறார்கள் என்று தேம்பியது சிலநாட்களுக்கு முன்புதான்!

  
மான்டெக் சிங் அலுவாலியா! IMF இல் பணியாற்றி வந்தவர், அதை ராஜினாமா செய்துவிட்டு  2004 இல் ஐமுகூ அரசின் அழைப்பை ஏற்று பிளானிங் கமிஷன் துணைத் தலைவராக இருந்தவர். அன்றைக்கு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். இருநாட்களுக்கு முன் ஒரு அதிர்ச்சி தரும் தகவலைச் சொன்னார் 2013 இல் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றை மிஞ்சுகிற மாதிரி ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட எம்பிக்களைப் பாதுகாப்பதாக அந்த அவசரச்சட்டம் இருந்தது. அன்றைக்கு எம்பியாகவும் காங்கிரசின் இளவரசராகவும் வலம்வந்துகொண்டிருந்த ராகுல் காண்டி அந்த அவசரச் சட்டத்தை முட்டாள்தனமானது, கிழித்தெறிந்து தூர எறிந்துவிடவேண்டியது என்று பேசியதை மேலே வீடியோவில் பார்த்தீர்கள் இல்லையா? செய்தியாகப் படிக்க இங்கே.  

மான்டெக் அலுவாலியா இப்போது சொல்கிற தகவல் இதுதான்: ராகுல் காண்டி இப்படி அரசை அவமதித்த பிறகு தான் பதவியில் நீடிக்க வேண்டுமா? ராஜினாமா செய்து விடலாமா என்று தன்னிடம் ஆலோசனை கேட்டதாக! ஆனால் இந்த விவகாரம் வெடித்தபோதே நாடாளுமன்றத்தில் பிஜேபியின் அருண் ஜெயிட்லி பிரதமர் இந்த அவமதிப்புக்கு ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னதைப்பற்றி மன்மோகன் சிங் அலட்டிக்கொண்ட மாதிரித் தெரியவில்லை! பழைய விவகாரம் தான்! காங்கிரசுக்கு இப்போது குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரசுக்கு பழைய சங்கதிகள் வரலாறு என்றாலே ஏகத்துக்கும் அலெர்ஜி என்பதை இந்தப்பக்கங்களில் பலமுறை பார்த்து வந்திருக்கிறோம்! ராகுல் காண்டிக்கும்  நேற்று நடந்த வரலாறு கூடத் தெரியாது என்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருப்பது காங்கிரசின் நிகழ்கால சோகம், தலைவிதி!

ராகுல் காண்டிக்கு, அவர் ட்வீட்டிய செய்தியில் இருந்த முட்டாள்தனத்தை, பெண்களுக்கு அவமதிப்பைச் செய்து டில்லி உயர்நீதி மன்றத்தில் வாதிட்டதும் 2010 இல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்தான் என்பதை பிஜேபியின் MP மீனாட்சி லேகி வந்துதான் ஞாபகப் படுத்த வேண்டியிருக்கிறது! ராணுவத்தில் பெண்களுக்கும் நிரந்தர கமிஷன் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததில், பெண் அதிகாரிகளுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் மீனாட்சி லேகி என்பது இந்தச் செய்தியின் கூடுதல் விசேஷம்! ராகுல் காண்டிக்கு என்னவிவரம் என்று தெரிந்துகொள்ளாமலேயே உளறுவதென்பது தொடர்கதையாக இருப்பது காங்கிரசின் சாபக்கேடு! அந்த ராஜா காது கழுதைக்காதுதான்! அதை ஒப்புக் கொள்கிற தைரியம், ஒதுக்கிவைக்கிற சாமர்த்தியம் காங்கிரஸ்காரர்களுக்கு இல்லை! காணாமலே போய் விடுவதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

    
சேகர் குப்தா, கழுத்து திருகப்பட்ட கோழிக்குஞ்சு சுற்றிச் சுற்றி தடுமாறுவது போல, காணாமல் போவதற்கு முன் காங்கிரஸ் கட்சியும் தடுமாறிக் கொண்டிருப்பது பற்றி இந்த 22 நிமிட வீடியோவில் கொஞ்சம் பேசுகிறார். காரணம் காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் வெடித்துவரும் மோதல்கள்! மத்தியப் பிரதேசத்தில் கமல் நாத்துக்கும் ஜ்யோதிராதித்ய சிந்தியாவுக்கும்  மஹாராஷ்டிராவில் மிலிந்த் தியோராவுக்கும் அஜய் மாக்கனுக்கும், ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் என ஒவ்வொரு மாநிலத்திலும் உரசல்கள் பெரிதாகிக் கொண்டே வருகின்றன. உட்கட்சிப் பிரச்சினையாக, அதாவது  உட்கட்சி ஜனநாயகத்தில் இயல்பாக எழுகிற கருத்துவித்தியாசங்களின் வெளிப்பாடு என்று இதைச் சொல்ல முடியுமா? அல்லது கட்சி, ஒரு உறுதியான தலைமையின் கீழ் ஒன்றுபட்டு நிற்பதற்கு பதிலாக, அப்படி ஒரு தலைமை இப்போது இல்லை என்பதால் உடைந்து உருக்குலைந்துபோவதன் அடையாளமா?

காங்கிரசில் உட்கட்சி ஜனநாயகம் என்பது இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயம்! அப்படியானால்? காங்கிரசும்  ஒரு கழுத்து திருகப்பட்ட கோழிதானா?  

மீண்டும் சந்திப்போம். 

கழுதை தேஞ்சா கட்டெறும்பு! அப்ப கட்டெறும்பு தேஞ்சா சித்தெறும்பா?

தலைப்பே சொல்கிற மாதிரி, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை சிற்றெறும்பாகக் கூட இல்லை, கரையான் மாதிரிக் கன்னுக்குத் தெரியாத அளவுக்கு கரைந்து போய்க் கொண்டிருக்கிறதோ? இங்கே தமிழ் ஊடகங்களில் இதுவரை காங்கிரசின் பரிதாப நிலையை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை என்பது காங்கிரசுக்காக இல்லை, திமுக முகம்  சுளிக்குமே என்பதற்காகத் தான் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? ஆனால் திமுக முகம் சுளிக்கும் என்பதைக் கூடப்  பொருட்படுத்தாமல் உதிரிகளுக்கு திமுக கொடுத்த 40 கோடி ரூபாய் நன்கொடை விவகாரம் சேனல்களில் சூடான விவாதமாக ஓடிக் கொண்டு இருப்பது ஊடக வினோதம்! அல்லது திமுக வினோதம்! 



கூட்டணிக்கு வர திமுக பணம் கொடுத்ததா? என்ற தலைப்பே News 18 தமிழ்நாடு சேனலில் அதுவும் குணசேகரன் நெறியாளர் என்ற விஷயத்தையும் மீறிப்பார்க்க வைத்தது. இந்த விவகாரத்தில், விவாதத்தில் அதிகமாகக்  காயப்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்பதும், திமுக விரும்பியதும்    அதைத்தானோ? இப்படி ஒரு சந்தேகமும் கூட எனக்கு எழுகிறது. வீடியோ 46 நிமிடம்! விவாதத்தின் இறுதியில் எழுத்தாளர் மாலன் எனக்குப் பிடித்த சப்ஜெக்டான தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றியும் பேசினார் என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்!


கமல் காசர்!  இவர்  தமிழக அரசியலின் லேட்டஸ்ட் ஜோக்கர்! சீட்டு விளையாட்டில் வேண்டுமானால் ஜோக்கரை எல்லா காம்பினேஷன்களிலும் சேர்த்துக்கொள்வார்கள்! அரசியலில் யாருமே சேர்த்துக்கொள்ள விரும்பாத ஜோக்கர் ஒருவர் உண்டென்றால்  அது கமல் காசர் தான்! லயோலா கல்லூரி விஸ்காம் துறை ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் போகிற போக்கில் கரைவேட்டியைக் கோர்த்துப்பேசி விட்டுப் போய்விட்டார். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்கமுடியாது என்று சொல்லியே பதில் சொல்லிக் கொண்டிருக்கிற தமிழக அரசியல் வினோதம் இந்த வீடியோ 38 நிமிட நான் ஸ்டாப் காமெடி.


காந்தி ஜெயந்தியை ஒட்டி நடந்த தொலைக்காட்சி விவாதங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி எழுதிய ஒரு நீண்ட கட்டுரையை முன்வைத்து நடந்த இந்த விவாதம் தான் உலகிலேயே முதல்முறையாக என்ற அடைமொழி, கூவலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்! திராவிடங்களின் பரப்புரைகளுக்கு மட்டுமே முதலிடம் கொடுத்துவருகிற சேனல்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இப்படி ஒரு மையமான இடம் கொடுக்கின்றன என்றால், அது கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்திருக்கிற சோதனை, போதாதகாலம் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. வீடியோ 52 நிமிடம்.

அதெல்லாம் சரி! விவகாரமான ஒரு தலைப்பை வைத்துவிட்டு எதற்காக இதையெல்லாம் படமாகக் காட்டுகிறாய் என்று கேட்க நினைக்கிறீர்களா? நீங்களும் என் தோழரே!


தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சமஉ  அல்லது எம்பியின் வேலை என்ன? எந்த அவைக்குஜனநாயக த்தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அந்த அவை கூட்டப்படும் நேரத்தில், அங்கே இருந்து தன்னுடைய தொகுதியை represent செய்யவேண்டும் என்பதெல்லாம் காங்கிரஸ் நடைமுறைகளில் காற்றில் பறக்க விடப்பட்ட விஷயங்கள்! ஆனால் உத்தரப்பிரதேசத்தில் ரே பரேலி நாடாளுமன்றத்துக்குட்பட்ட சதர் தொகுதி சமஉ அதிதி சிங் காங்கிரஸ் கலாசாரத்தைப் பின்பற்றாமல்  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  உபி சட்டமன்றத்தின் இருநாள் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்! யோகி ஆதித்ய நாத்துக்கு  நன்றி தெரிவித்துப் பேசியிருக்கிறார். எல்லாவற்றையும் விட ப்ரியங்கா வாத்ரா நடத்தும் பாத யாத்திரையைப் புறக்கணித்துவிட்டு, சட்டசபைக் கூட்டத்தில்  கலந்து கொண்டிருக்கிறார் என்பதில் இதற்கு  முன்பே கூட  ப்ரியங்கா வாத்ரா நடத்திய பேரணி அல்லது யாத்ராவைப் புறக்கணித்திருக்கிறார் என்பதுதான் விசேஷம்! ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டதை ஆதரித்திருக்கிறார்!   காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் கட்சி மூன்றும் இந்தச் சிறப்புக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்திருந்ததை மீறி இருக்கிறார் என்பதில் காங்கிரஸ் கட்சி தலை(மை)யற்ற முண்டமாகத் தான் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறது என்கிற சிதம்பர ரகசியம் வெளிப்பட்டிருக்கிறது. இப்போது தலைப்போடு இந்தச் செய்தி பொருந்துகிறதா இல்லையா?

மீண்டும் சந்திப்போம்.  

இட்லி வடை பொங்கல்! #38 கழகம்! காங்கிரஸ்! = குழப்பம்!

முதலில் கர்நாடக அரசியல் அடுத்து காஷ்மீர் அரசியல் என்றே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதில் தமிழக அரசியலை சுத்தமாக மறந்துவிட்டாயா என்று நண்பர்கள் சிலருக்கு சந்தேகம் கேட்கத் தோன்றி, ஆனால் கேட்க மறந்துபோய் விட்டார்களோ?😄😁😉  


தமிழக அரசியலையோ, தமிழக அரசியல்வாதிகளுடைய கோமாளித்தனங்களையோ நான் மறந்துவிடவில்லை! ஆனால் கோமாளிகளுக்கு முக்கியத்துவமோ கவனமோ அளிப்பதை விடப்பல   முக்கியமான விஷயங்கள் பகிர்ந்து கொள்வதற்கு இருந்தன என்பது தான் உண்மையான காரணம். முதலில் மாநிலங்களவையில் வைகோ காஷ்மீர் விஷயத்தில் பேசியது, தமிழக  காங்கிரஸ் புள்ளிகளுக்கு ரோஷம் வந்துவிட்டதாம்! என்ன பேசினார் என்ன உறுத்தல் என்பதை மேலே வீடியோவில் நினைவுபடுத்திக் கொள்ளலாம். கே எஸ் அழகிரி எங்கள் ஆதரவில் ஜெயித்துவிட்டு எங்களையே குறைசொல்லிப் பேசுவதா என்று காட்டமான ஒரு அறிக்கை விட, அப்புறம்  ஏனடா கேட்டுத்தொலைத்தோம் என்று காங்கிரஸ்காரனே நொந்துகொள்கிற அளவுக்கு வைகோவின் பதில் இருந்தது என்பது தமிழக அரசியலுக்கே உரித்தான உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் ரகக் காமெடி! வைகோ அப்படி என்ன பதில் சொன்னார்? என்பதை விட எங்கே ரத்தம் வந்தாலும் அதையே ஒரு விவாதத் தலைப்பாக்கி நம்மூர் சேனல்கள் அதிலேயே   கிளுகிளுப்பாகி விட மாட்டார்களா? 


சனிக்கிழமை எண்டெர்டெயின்மென்ட் தேடுகிறவர்களுக்கு இந்த 50 நிமிட தறுதலைத்தனமான விவாதம் கொஞ்சம் பொழுதுபோக்க மட்டும் உதவலாம்! அது போக திமுக கடந்த 7 ஆம் தேதி நடத்திய சிலைதிறப்பு விழா செய்திகளில் கனிமொழி ஓரங்கட்டப்பட்டது தான் கொஞ்சம் காமெடிப் பரிதாபம்! 


‘‘நினைவுநாளன்று அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் நடைபெற்றது. அதில் ஸ்டாலினுடன் கனிமொழியும் சேர்ந்து நடந்து வந்தார். அவரைத் தள்ளிக்கொண்டு ஸ்டாலின் பக்கத்தில் வர முயன்றிருக்கிறார் பெண் நிர்வாகி ஒருவர். ஒருகட்டத்தில் கனிமொழி டென்ஷனாகி, ‘நீங்கள் முன்னுக்கு வர, என்னைப் பின்னுக்குத் தள்ளாதீர்கள்’ என்று கடுப்பாகச் சொல்லி விட்டாராம்". என்கிறது ஜூனியர் விகடன் கழுகார் செய்தி   


காங்கிரசின் ஊதுகுழலாகவே இன்றைக்கும் செயல்பட்டு வரும் NDTV நிறுவனர்கள் பிரணாய் ராய் அவரது மனைவி ராதிகா ராய் இருவரும் மணி லாண்டரிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை, வழக்கைச் சந்தித்து வருகிற நேரத்தில் வெளி நாட்டுக்குப் பயணம் போகவிருந்தவர்களை மும்பை விமான நிலையத்தில் சிபிஐ தடுத்து நிறுத்தியிருக்கிறது. மீடியா சுதந்திரத்துக்கு ஆபத்து ஏன்று கூவியிருக்கிறார்கள். உலகத்தில் சக்திவாய்ந்த இந்திய அரசியல் பிரமுகர்கள் (வேற யாரு? சோனியாG தான்!) ஆதரவு இருந்தும் கூட இப்படியானதே என்று      நக்கல் செய்கிறது இந்த கார்டூன்! 


நானும் இன்றைய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஒரு தாற்காலிகத் தலைவர் பெயராவது அறிவிக்கப்பட்டு விடும் என்று பதிவை முடிக்காமல் இதுவரை செய்திகளை பார்த்துக் கொண்டு காத்திருந்தேன். காங்கிரசுக்கே உண்டான நாடகத் தனத்தில் காரியகமிட்டி ஒரு ஜனநாயக முடிவை எடுக்க வேண்டுமென்று சோனியாG யும் ராகுல் காண்டியும் recuse அதாவது ஒதுங்கி கொண்டார்களாம்! CWC என்ன முடிவெடுத்ததாம்? ரந்தீப் சுர்ஜீவாலா, காரியகமிட்டி ஒருமனதாக ராகுல் காண்டியே தலைவராக வேண்டுமென்று முடிவு செய்தார்கள் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். 

எந்தவொரு நாடகத்திலும் ஒரு காமெடியோ க்ளைமேக்ஸோ இழுத்துக் கொண்டேபோகாமல் நச்சென்று முடித்தால் தான், அது காமெடியாக அல்லது க்ளைமேக்சாக இருக்கும்!

முடிவெடுக்க முடியாமல் இப்படித் தள்ளிப்போட்டுக் கொண்டே போனால்   சோனியாG, ராகுல் காண்டிகளிடம் சிக்கிக் கொண்ட காங்கிரஸ் என்றாகிவிடும்!

மீண்டும் சந்திப்போம்.