Showing posts with label தேர்தல் சீர்திருத்தங்கள். Show all posts
Showing posts with label தேர்தல் சீர்திருத்தங்கள். Show all posts

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் மஹா இழுபறி!

மஹாராஷ்டிரா அரசியலில் நேற்றே சில ருசிகரமான திருப்பங்கள் தொடங்கி விட்டன. 105 MLAக்களுடன் தனிப் பெரும் கட்சியாக பிஜேபி இருந்தாலும் ஆளுநர் அழைப்புக்கு தங்களிடம் பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான எண்ணிக்கை இல்லை என்பதால் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று ஒதுங்கிக் கொண்டு விட்டது.


வீடியோ 13 நிமிடம். பிஜேபிக்கு அடுத்து அதிக MLAக்கள் (56) உள்ள கட்சியாக சிவசேனா இருப்பதனால், அதற்கு இன்றிரவு 7.30 மணிவரை ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநர் அவகாசம் கொடுத்திருக்கிறார். அதற்கு வசதியாக மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா அமைச்சர் அரவிந்த் சாவந்த், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அறிவித்து, செய்தும்  விட்டார். 


புலிவால் பிடித்த நாயர் கதையாக சிவசேனா தன்னுடைய வறட்டு வீம்பில் தானே சிக்கிக் கொண்ட மாதிரி நிலைமை இப்போது ஆகிவிட்டது. சரத் பவார் விரித்த கண்ணியில் சிக்கிக் கொண்டு, எப்படியாவது முதல்வர் நாற்காலியைப் பிடித்தே ஆகவேண்டும் என்ற வெறியில், தன்னுடைய அரசியல் தற்கொலையைச் செய்து கொள்வதில் இன்னமும் விடாப்பிடியாக இருக்கிறது. ஆனாலும் என்ன சாதிக்கப் போகிறார்கள்?


இன்னொரு குமாரசாமியாக சிவசேனா மாறி விடுவதைத் தவிர ஒரு அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முடியாது என்பதே பொதுவான பார்வை. உத்தவ் தாக்கரே இத்தனை பிடிவாதமாக நிற்பதற்கு  பிரசாந்த் கிஷோர் மாதிரி சில புதிய ஆலோசகர்கள் தான் காரணம் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். என்ன சொல்கிறது, பாருங்கள்.  
Sena insiders say a major reason behind Thackeray’s aggression is his set of advisors, who include political strategist Prashant Kishor. “The new set of advisors has convinced Uddhavji that the post-poll situation is favourable for Sena and it can be exploited to get what the party wants. That isதெரிகிறது  why, he is insisting that the chief ministership should be shared by the allies,” said another key party leader. “They have convinced him that the party will get benefit even if it forms the government with NCP. It will help the Sena leadership end the dominance of BJP that Thackeray faces in the alliance,” 


வாரிசைக் களமிறக்கியதிலேயே சிவசேனா தலைவர் எண்ணம் என்ன,  என்ன செய்யப்போகிறார் என்பது தெரிந்தது. ஆனாலும் அவருடைய நினைப்பு பலிக்குமா என்பதில் சிவசேனாக்காரர்களுக்கே நம்பிக்கை இல்லாத மாதிரித்தான் தோன்றுகிறது.  


Why TN Seshan Was the Greatest Ringmaster of the Great Indian Electoral Circus என்று தலைப்பிட்டுச் சொல்வதிலேயே T N சேஷன் என்கிற IAS அதிகாரி தேர்தல் ஆணையராக இருந்த நேரத்தில் இந்திரா காண்டி உள்ளிட்ட அரசியல்வியாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அரசியல்கட்சிகளோ அரசோ தேர்தல் சீர்திருத்தங்களுக்குத் தயாராக இல்லாவிட்டால் தான் என்ன? இருக்கிற சட்டங்களை வைத்தே என்ன செய்ய முடியும் என்று காண்பித்தவர் TN சேஷன். நேற்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். ஒரு நல்ல மனிதர், நேர்மையானவரும் திறமையானவரும் கூட. என்னுடைய சிரம்தாழ்த்தி அஞ்சலி செய்கிறேன்.

T.N. சேஷன்..
சிஸ்டம் சரியில்லை என்கிற ஆதங்கம் + கோபம் நிறைந்த நம்முடைய குரல்கள் பரவலாக கேட்கும் நிலையில்...நாம் பார்க்கவும் , உணர்ந்து கொள்ளவும் மறுக்கும் ஸிஸ்டத்தின் வலிமையை உணர்த்தும் உருவம் தான் .. சேஷன் !
தனிமனிதராக ..தன்னுடைய அதிகார எல்லைகோட்டை தாண்டாமல் ..தன்னுடைய பதவிக்கான கடமையை சரி வர செய்ததன் மூலம் .இந்திய தேர்தல்களில் நீக்கமற நிறைந்திருந்த ஆகப்பெரும் ரவுடியிசத்திற்கும் , விதிமீறல்களுக்கும் கடிவாளமிட்டு..ஜனநாயகத்தை அதற்குரிய பாதையில் திருப்ப முடியும் என்று நிரூபித்தவர் சேஷன் !
அரசியலமைப்பு சட்டமும், நாம் சிஸ்டம் என்று குறிப்பிடுகிற அரசு இயந்திரத்தின் செயல்பாட்டு விதிமுறைகளும் தெளிவாக இருக்கின்றன.
''நேர்மையான தனி மனிதர்கள்''.... அரசு துறையின் அல்லது அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரியாகத் தான் இருக்கவேண்டும் என்பதல்ல ! அதிகாரப் படிநிலையில் கடைக்கோடி நிலையில் இருக்கும் ஒரு பியூன் கூட ...அந்த அலுவலகம் அல்லது துறையின் நேர்மையான செயல்பாட்டுக்கு உத்திரவாதம் அளிக்க இயலும் !
தவறுகளும், விதிமீறல்களும் , ஊழல்களும் நடக்காமல்...அரசியல் / அதிகார/ ரவுடியிச அழுத்தங்களுக்கு பணிந்து போகாமல் ..தன் அளவில் கடமையை சரிவர செய்யும் தனி மனிதர்களால் தான்...
அனைத்து இருட்டடிப்பு , அதிகார துஷ்ப்ரயோகங்களையும் தாண்டி..
தவறுகள் வெளிப்படுகின்றன.
சிஸ்டம் என்பது அரசு இயந்திரம் மட்டுமல்ல. ஜனநாயகத் தூண்களில் ஒன்றான ஊடகங்களுக்கும் கூட பொருந்தும். அதிலிருக்கும் ஓரிரண்டு தனிநபர்களின் துணிச்சல் ..அவர்களின் மீதான அழுத்தம், கணக்கு முடக்கம், இருட்டடிப்பு, கொலை மிரட்டல்கள் ஆகியவற்றை தாண்டி .. பல தவறுகளை மக்கள் பார்வைக்கு வெளிகொண்டுவருகிறது என்பது சமீபத்திய 'தமிழக' உதாரணம்.
பிரச்சினை என்னவெனில்...மக்கள்..இத்தகைய தனி நபர்களை..பாதுகாப்பதும் இல்லை. பாராட்டுவதும் இல்லை. கண்டுகொள்வதும் இல்லை. மாறாக.. பிழைக்கத்தெரியாதவர் என்று எள்ளிநகையாடும் மக்கள் தான் அதிகம்.
இங்கு மாறவேண்டியது மக்கள். சிஸ்டம் அல்ல.
சேஷன் ..ஒரு தனிமனிதராக ..சிஸ்டம் குறித்தும், சிஸ்டம் சிறப்பாக இயங்குவதற்கு தேவைப்படும் தனிமனித நேர்மை குறித்தும் இதை தான் உணர்த்தினார்!

அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.   

 ............        

கொறிக்கக் கொஞ்சம் சுவாரசியமான சங்கதிகள்!

இன்னும் சிலநாட்களுக்கு சீன அதிபரின் மாமல்லபுரம் விஜயம் மட்டும் தான் இங்கே பரபரப்புச் செய்தியாக இருக்கும் என்பதில் நம்மூர் அச்சு ஊடகங்கள், சேனல்களின் அசட்டுத் தனம் நிறையவே வெளிப்படும் என்பதால் கொஞ்சம் அந்த அசடுகளின் விஷயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வேறு சுவாரசியமான  சங்கதிகளைப் பார்க்கலாமா? 



அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது தகுதி நீக்கம் (impeachement) செய்யும் முயற்சிகளை  ஜனநாயகக் கட்சி தொடங்கி இருப்பதில், ஒத்துழைக்கப்போவதில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். ஆனால் அமெரிக்க நாடாளுமன்ற அமைப்புகளில் ஒன்றான காங்கிரசில் டெமாக்ரட் கட்சிக்கு, அதிக வாக்குகள் இருக்கிறதே! இந்த 11 நிமிட வீடியோ, ஜனநாயகம் எப்படி எப்படியெல்லாம் ஹைஜாக் செய்யப்படலாம் என்பதற்கான க்ளூ இருக்கிறது. செய்தி ஊடகம் CNN -டொனால்ட் ட்ரம்ப் இருதரப்புக்குமான முட்டல் மோதல், 2016 தேர்தல் காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. சொல்லப்போனால் Fox News தவிர (இன்றைக்கு அவர்களும் ஆதரிப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள்)   மற்ற  அமெரிக்க ஊடகங்கள் எல்லாமே  ட்ரம்ப்புக்கு எதிராகத்தான் இருந்தன. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ஜெயிப்பதற்கு என்னென்ன உள்ளடி வேலைகள் பின்னணியில் இருந்தன என்பதை  இந்தப் பதிவில் சொல்லியிருந்ததற்கு நண்பர் பந்து எழுதிய கமென்ட் கொஞ்சம் நினைவு படுத்திக்கொள்ளவேண்டிய சுவாரசியம்!  



இன்றைய தேதியில் உலகிலேயே மனிதனுக்கு அழிவை தரக்கூடிய நிறுவனங்களில் முதன்மையானது Facebook என உறுதியாக நம்புகிறேன். நாம் பார்க்கும் ஒவ்வொரு வீடியோவும், அதில் உள்ள ஒரு சுட்டியை அழுத்தும் செயலும், சிறியதாக உள்ள ஒரு படத்தை பெரியதாக நாம் அதன் மேல் செய்யும் க்ளிக்கும், Facebook இனால் சேமிக்கப் படுகின்றன. இதை வைத்து நம் profile build செய்யப்படுகிறது. அதன்மூலம் நாம் எப்படிப்பட்டவர் என்ற பிம்பம் அவர்களுக்கு தெளிவாகிறது.

உதாரணத்துக்கு, நான் அமெரிக்காவில் வாழும் இந்தியன். நான் க்ளிக் செய்து படிக்கும் பலவும் இந்தியா தொடர்பான செய்திகள். நண்பர்கள் பலரும் இந்தியாவில் வாழ்பவர்கள். இப்போது ட்ரம்ப் தேர்தலுக்கு என் வாக்கும் தேவை என்றால் ட்ரம்ப் இந்தியா பற்றி சொன்ன நல்ல விஷயங்கள் / இந்தியா உடன் வர்த்தகம் வளர்ப்பது பற்றி ட்ரம்ப் சொன்னது / பாகிஸ்தானுக்கு எதிராக சொன்னது / போன்ற நியூஸ் என் facebook பக்கத்தில் தோன்ற ஆரம்பிக்கும். மறுபடி மறுபடி அதை பார்க்கும்போது, ட்ரம்ப் இந்தியருக்கு நெருக்கமானவர் என்ற பிம்பம் கட்டமைக்கப் படும். இதில் உள்ள நியூஸ் பெரும்பாலும் பொய்யாக இருக்காது. என்ன. ட்ரம்ப் இந்தியாவுக்கு எதிராக சொன்னது என் facebook பக்கத்தில் தோன்றாது!

data scienceக்கு பல நல்ல பலன்கள் உள்ளன. அது ஒரு கருவி மட்டுமே. அதை எதற்கு உபயோகப் படுத்துகிறோமோ அதன் படி பலனும்!
அதற்குமுன் Ukraine dishonesty blitz: Trump made 66 false claims last week என்றதலைப்பிட்டு ஒரு செய்திக்கட்டுரையில் Trump's total was up from the week prior, when he made 59 false claims. He is now averaging 60 false claims per week for the 13 weeks we have checked at CNN.என்று விரிவாகப் பட்டியலிட்டிருப்பதை நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்! 
டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரசாரங்களில் உள்ள ஜோ பிடன் மீதான பொய்யான தகவல்களை நீக்க முகநூல் நிர்வாகம் மறுத்து விட்டது என்பதுதான் டொனால்ட் ட்ரம்ப்பை மிஞ்சிய சுவாரசியம்!  “Our approach is grounded in Facebook's fundamental belief in free expression, respect for the democratic process, and the belief that, in mature democracies with a free press, political speech is already arguably the most scrutinized speech there is,” wrote Katie Harbath, Facebook’s public policy director for global elections, in a letter to the Biden campaign. “Thus, when a politician speaks or makes an ad, we do not send it to third party fact checkers.”  இது முகநூல் தரப்பு வியாக்கியானம்! முழுச்செய்தியும் இங்கே 

சுருக்கமாக, இது அமெரிக்கத் தேர்தல் முறைகளில் உள்ள குறைபாடுகளை, அதிபர் முறையில் ஒரே நபரிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்திருப்பதில், தகுதியில்லாத ஒருவர் பதவிக்கு வந்துவிட்டால், கடிவாளம் போடுவது எவ்வளவு கடினம் என்பதைக் காட்டுவதாக மட்டுமே பார்க்க முடிகிறது. அமெரிக்க ஜனநாயகம் இன்னும் முதிர்ச்சி பெற வேண்டுமானால் தேர்தல்முறைகளில் மாற்றங்கள் தேவைதான்!
தேர்தல் ஜனநாயகம் என்பதே இன்னமும் முழுமைபெறாத பரிசோதனை முயற்சிதான்! மிகச் சமீபத்தியதுதான்! என்பதில் தேர்தல் பாதை திருடர்கள் பாதை என்று எக்ஸ்ட்ரீம் நிலைக்குப் போக்கவேண்டியதில்லை! அதேநேரம் இது உண்மையிலேயே ஜனங்களுடைய கருத்தை அப்படியே எதிரொலிக்கிற ஆகச் சிறந்த ஆட்சிமுறை என்று தூக்கிவைத்துக் கொண்டாடவேண்டிய அளவிலும் இல்லை. 

இங்கே எழுப்பிய கேள்வி இன்னமும் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறதே! 

மீண்டும் சந்திப்போம். 

கழுதை தேஞ்சா கட்டெறும்பு! அப்ப கட்டெறும்பு தேஞ்சா சித்தெறும்பா?

தலைப்பே சொல்கிற மாதிரி, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை சிற்றெறும்பாகக் கூட இல்லை, கரையான் மாதிரிக் கன்னுக்குத் தெரியாத அளவுக்கு கரைந்து போய்க் கொண்டிருக்கிறதோ? இங்கே தமிழ் ஊடகங்களில் இதுவரை காங்கிரசின் பரிதாப நிலையை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை என்பது காங்கிரசுக்காக இல்லை, திமுக முகம்  சுளிக்குமே என்பதற்காகத் தான் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? ஆனால் திமுக முகம் சுளிக்கும் என்பதைக் கூடப்  பொருட்படுத்தாமல் உதிரிகளுக்கு திமுக கொடுத்த 40 கோடி ரூபாய் நன்கொடை விவகாரம் சேனல்களில் சூடான விவாதமாக ஓடிக் கொண்டு இருப்பது ஊடக வினோதம்! அல்லது திமுக வினோதம்! 



கூட்டணிக்கு வர திமுக பணம் கொடுத்ததா? என்ற தலைப்பே News 18 தமிழ்நாடு சேனலில் அதுவும் குணசேகரன் நெறியாளர் என்ற விஷயத்தையும் மீறிப்பார்க்க வைத்தது. இந்த விவகாரத்தில், விவாதத்தில் அதிகமாகக்  காயப்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்பதும், திமுக விரும்பியதும்    அதைத்தானோ? இப்படி ஒரு சந்தேகமும் கூட எனக்கு எழுகிறது. வீடியோ 46 நிமிடம்! விவாதத்தின் இறுதியில் எழுத்தாளர் மாலன் எனக்குப் பிடித்த சப்ஜெக்டான தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றியும் பேசினார் என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்!


கமல் காசர்!  இவர்  தமிழக அரசியலின் லேட்டஸ்ட் ஜோக்கர்! சீட்டு விளையாட்டில் வேண்டுமானால் ஜோக்கரை எல்லா காம்பினேஷன்களிலும் சேர்த்துக்கொள்வார்கள்! அரசியலில் யாருமே சேர்த்துக்கொள்ள விரும்பாத ஜோக்கர் ஒருவர் உண்டென்றால்  அது கமல் காசர் தான்! லயோலா கல்லூரி விஸ்காம் துறை ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் போகிற போக்கில் கரைவேட்டியைக் கோர்த்துப்பேசி விட்டுப் போய்விட்டார். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்கமுடியாது என்று சொல்லியே பதில் சொல்லிக் கொண்டிருக்கிற தமிழக அரசியல் வினோதம் இந்த வீடியோ 38 நிமிட நான் ஸ்டாப் காமெடி.


காந்தி ஜெயந்தியை ஒட்டி நடந்த தொலைக்காட்சி விவாதங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி எழுதிய ஒரு நீண்ட கட்டுரையை முன்வைத்து நடந்த இந்த விவாதம் தான் உலகிலேயே முதல்முறையாக என்ற அடைமொழி, கூவலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்! திராவிடங்களின் பரப்புரைகளுக்கு மட்டுமே முதலிடம் கொடுத்துவருகிற சேனல்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இப்படி ஒரு மையமான இடம் கொடுக்கின்றன என்றால், அது கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்திருக்கிற சோதனை, போதாதகாலம் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. வீடியோ 52 நிமிடம்.

அதெல்லாம் சரி! விவகாரமான ஒரு தலைப்பை வைத்துவிட்டு எதற்காக இதையெல்லாம் படமாகக் காட்டுகிறாய் என்று கேட்க நினைக்கிறீர்களா? நீங்களும் என் தோழரே!


தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சமஉ  அல்லது எம்பியின் வேலை என்ன? எந்த அவைக்குஜனநாயக த்தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அந்த அவை கூட்டப்படும் நேரத்தில், அங்கே இருந்து தன்னுடைய தொகுதியை represent செய்யவேண்டும் என்பதெல்லாம் காங்கிரஸ் நடைமுறைகளில் காற்றில் பறக்க விடப்பட்ட விஷயங்கள்! ஆனால் உத்தரப்பிரதேசத்தில் ரே பரேலி நாடாளுமன்றத்துக்குட்பட்ட சதர் தொகுதி சமஉ அதிதி சிங் காங்கிரஸ் கலாசாரத்தைப் பின்பற்றாமல்  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  உபி சட்டமன்றத்தின் இருநாள் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்! யோகி ஆதித்ய நாத்துக்கு  நன்றி தெரிவித்துப் பேசியிருக்கிறார். எல்லாவற்றையும் விட ப்ரியங்கா வாத்ரா நடத்தும் பாத யாத்திரையைப் புறக்கணித்துவிட்டு, சட்டசபைக் கூட்டத்தில்  கலந்து கொண்டிருக்கிறார் என்பதில் இதற்கு  முன்பே கூட  ப்ரியங்கா வாத்ரா நடத்திய பேரணி அல்லது யாத்ராவைப் புறக்கணித்திருக்கிறார் என்பதுதான் விசேஷம்! ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டதை ஆதரித்திருக்கிறார்!   காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் கட்சி மூன்றும் இந்தச் சிறப்புக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்திருந்ததை மீறி இருக்கிறார் என்பதில் காங்கிரஸ் கட்சி தலை(மை)யற்ற முண்டமாகத் தான் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறது என்கிற சிதம்பர ரகசியம் வெளிப்பட்டிருக்கிறது. இப்போது தலைப்போடு இந்தச் செய்தி பொருந்துகிறதா இல்லையா?

மீண்டும் சந்திப்போம்.  

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்! குறட்டை விட்டோரெல்லாம்....?



இன்றைய ஜூனியர் விகடனில், வைகோவை ஒரு மாற்று அரசியல் சக்தியாக அடையாளம்காட்டி, தமிழருவி மணியன் நடத்திய ஒரு கூட்டத்தைப் பற்றிய செய்திக்கட்டுரை வெளியாகி இருக்கிறது.மாற்று அரசியல் தீர்வாக வைகோ தமிழக முதல்வராவது ஒன்று தான் வழி என்று தமிழருவி மணியன் முழங்கியிருக்கிறார். கூட்டத்தில், மதிமுக தவிர இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும்  கலந்து கொண்டிருக்கிறார்கள்

ஜெயலலிதாவிடம் கெஞ்சிப் பார்த்து கேட்ட சீட் கிடைக்கவில்லை என்றதும் விசயகாந்திடம் ஓடிப்போய்  மூன்றாவது அணி அமைக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பி  தமிழருவி மணியன் எந்த தைரியத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தினார், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு ஒப்புக் கொண்டனவா என்பது கூட கட்டுரையாளருக்குத் தெரியவில்லை. ஏற்கெனெவே மதிமுகவிடம் கூட்டணி வைத்திருந்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்பதும் மார்க்சிஸ்டுகளின் அரசியல் கணக்கே வேறு என்பதும் கட்டுரையாளருக்குக் கொஞ்சமும் தெரியவில்லை. போகட்டும்!

வைகோ மீது ஒரு தனிமனிதராக, ஒருதிறமையான நாடாளுமன்றவாதியாக, எனக்கு மட்டுமல்ல, இங்கே நிறையப்பேருக்கு  மரியாதையும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால், ஒரு இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்துவதில் வைகோவுக்கு சாமர்த்தியமில்லை! குறிப்பாக தனக்கு அடுத்த படியாக ஒரு நம்பிக்கையான ஆதரவாளர்களை இரண்டாவது மட்டத் தலைவர்களாக உருவாக்குவதில் கூட வெற்றி பெற முடியாதவர் அவர்.. அதுவும் கருணாநிதி விரிக்கும் வலைக்குள் சிக்குகிறவர்களாகவே அவரைச் சுற்றி ள்ளவர்கள் இருப்பது வைகோவின் தலைமை எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு அடையாளம்.

ஆளை மாற்றினால் அரசியல் சூழலும் மாறிவிடுமா? தனி ஒரு நபரால் இத்தனை சீரழிவையும் மாற்றி விட முடியுமா?தமிழருவி மணியன் சொல்கிற தீர்வு உண்மையிலேயே, சரியான தீர்வு தானா? நடைமுறை சாத்தியம் தானா? முதலில் அந்த செய்திக் கட்டுரையைப் படித்து விடுவோம்.

''கருணாநிதி, ஜெயலலிதாவை விட்டால் வழியே இல்லையா?

தகதகக்கும் தமிழருவி மணியன்


மிழக அரசியல் வெளியில் தமிழருவி மணியனால் புதிய காற்றழுத்தம் ஒன்று உருவாகி இருக்கிறது. 'மாற்று அரசியல்’ எனும் மேடையில் வேறு பட்ட அரசியல் தலைவர்கள் சிலரை ஒருசேர நிறுத்தி நெடிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறார்!

தமிழருவி மணியனின் 'காந்திய மக்கள் இயக்கம்’ கடந்த 7-ம் தேதியன்று தனது இரண்டாவது ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கிறது. இதை முன்னிட்டு திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம். மேடையில்... ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை அழைத்து வந்து மணியன் அமர்த்த, மக்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் ப்ளஸ் ஆச்சரியங்கள். '

'இது காந்தியச் சிந்தனைகளை விளக்குவதற்கான மேடை மட்டும் அல்ல. இது ஒரு போராட்டக் களம். நம்மை ஆள வேண்டியோரைத் தேர்ந்தெடுப்பது மட்டும் அல்ல ஜனநாயகம். அவர்கள் தவறிழைக்கும் போது அதை எதிர்த்துப் போராடுவதும்தான் ஜனநாயகம்...'' என்று ஒரு பொறியைப் பற்றவைத்து விட்டு அமர்ந்தார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெரியவர் லட்சுமிகாந்தன் பாரதி.

'இன உணர்வாளர்’ என்ற முறையில் இந்தக் கூட்டத்துக்கு  அழைக்கப்பட்டு இருந்தார் இயக்கு நர் தங்கர்பச்சான். ''தயவுசெஞ்சு என்னோட பேச்சுக்கு யாரும் கை தட்டாதீங்க. கை தட்டி, விசிலடிச்சே நாசமாப் போயிட்டிருக்கோம் நாம...'' என்று ஆவேசப்பட்டவர், ''இந்த மேடையில் அச்சப்படாமல் பேசலாம். காரணம், இங்கு அமர்ந்திருப்பவர்கள் நேர்மையானவர்களே தவிர, அரசியல் பிழைப்புவாதிகள் அல்ல. சுதந்திரத்துக்கு பின் 50 ஆண்டு காலமாக ஒரே குடும்பம் நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறது. இதை ஜனநாயகம் என்கிறோம். மக்களாட்சி என்கிறோம். கேடு கெட்ட விஷயம் இதுதான். ஓட்டுப் போடுற மக்கள் பிச்சைக்கார மனநிலையில் இருப்பதுதான் அரசியலைப் பிழைப்புக்குப் பயன்படுத்தும் பேர் வழிகளுக்கு வசதி யாகிவிட்டது. கொடுக்கின்ற இலவசத்தை வாங்கி இனி அவன் மூஞ்சியிலே விட்டெறியுங்கள். அதன் பிறகு கதை வேறு விதத்தில் பயணிக்கும்'' என்றார் குரல் உயர்த்தி.

மைக்கைப் பற்றிய தமிழருவி மணியன் ரௌத் திரமும், ஆதங்கமும் ஒரு சேர வீசிய பேச்சு தமிழக அரசியல் மேடைகளுக்கு விதிவிலக்கு.

''இந்த நிகழ்ச்சியை 'மூன்றாவது அணி’ அமைப்புக்கான வேலை என்று சிலர் மிகத்தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்கள். இல்லை... இது, 'மாற்று அரசியல்’ அமைவுக்கான தளம். மேடையில் இருக்கும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இன்னும் எத்தனை நாட்கள்தான் கருணாநிதிக்குப் பின்னும், ஜெயலலிதாவுக்குப்  பின்னும் மறைந்தே அரசியலை நடத்துவது? தேர்தல் முடியும் வரை உங்களைப் பயன் படுத்திவிட்டு, பிறகு தூக்கி எறியப்படும் நிலை எத்தனை நாளைக்கு வேண்டும்? எங்களுக்குத் தேவை ஊழலின் நிழல் படாத அரசியல். 

நேர்மையான அரசியலைத் தேடி நான் அறிவாலயமா செல்ல முடியும்?
போயஸ் தோட்டம்தான் செல்ல முடியுமா? 

ஊழலைப் பொதுப்புத்தி ஆக்கிவிட்டார் கருணாநிதி. அரசு அதிகாரிகளை சசிகலா கூட்டம் ஆட்டுவித்தபோது ஆத்திரப்படாத ஜெயலலிதா, பொதுப் பணத்தை அந்த மன்னார்குடி குடும்பம் வாரிச் சுருட்டியபோது ஆத்திரப் படாத ஜெயலலிதா, எப்போது ஆத்திரப்பட்டார்? பெங்களூருவில் இருந்தபடி தனக்கு எதிராக அவர்கள் சதியாலோசனை நடத்துகிறார்கள் என்று தெரிந்ததும்தானே? இந்த ஜெயலலிதாவிடம் எப்படிப் பொது நலனை எதிர்பார்க்க முடியும்? 

காங்கிரஸும் ஊழலுக்கு விதிவிலக்கு இல்லை. அதனால் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு பொது நலனுக்காக உருகும் நீங்கள் கைகோக்க வேண்டும். நீங்கள் மாற்று அரசியலைக் காண்பித்தால், மக்கள் உங்களை விரும்புவார்கள். அதில் எனக்குத் தெரிந்த மாற்று வழி, வைகோ முதல்வர் ஆவதுதான். அதற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மாற்றத்தை உருவாக்க நாங்கள் தயார். மற்றபடி உங்கள் விருப்பம்'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

எதிர்பார்ப்புகளுக்கிடையில் தன் உரையைத் துவங்கிய வைகோ, ''தமிழகம் கட்டுக்கடங்காத பிரச்னைகளை சந்தித்துக்கொண்டு இருக்கும் வேளை யில் இப்படி ஒரு தளத்தில் கூடியிருக்கிறோம். தமிழருவி... நீங்கள் உங்கள் விருப்பத்தை வெளியிட் டிருக்கிறீர்கள். தியாக இயக்கமாம் ம.தி.மு.க. தேர்தல் அரசியலில் இயங்குவதுதான். நாங்கள் சில கால கட்டங்களில் சிலரோடு கூட்டணி வைத்திருந் தோம் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் என்றுமே தமிழர்நலன் என்ற கொள்கையை விட்டுக்கொடுத்ததும் இல்லை, சுயமரியாதைக்குப் பங்கம் வரும்போது பொறுத்துக்கொண்டதும் இல்லை. அதனால் பதவி, அதிகாரம் இதை எல்லாம் நாங்கள் என்றுமே எதிர்பார்த்ததும் இல்லை. நாங்கள் அண்ணாவின் வார்ப்புகள். விஷச் சூழலில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் கனன்று கொண்டேதான் இருக்கிறது. எரிமலை, அறிவித்துவிட்டு வெடிப்பது இல்லை, புயல் சொல்லிக்கொண்டு அடிப்பது இல்லை. அது போல் மக்கள் புரட்சி வரும்... கூடவே மாற்றமும் வரும்'' என்று ஒரு புள்ளி வைத்தார்.


விடை தெரியாத கேள்வியோடு கூட்டம் விடை பெற்றது!

(கட்டுரையாளர் ஒரே ஒரு உண்மையைத் தன்னையறியாமலேயே சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை தான்!) 
 (அதிமுக நாடாளுமன்றத் தேர்தல்களில் மதிமுகவை அரவணைத்துக் கொள்ள தயாராகிவிட்டதாகவே இப்போதைய செய்திகள் சொல்கின்றன).


-------------------------------------------------------------------------------------------------------------

இங்கே அரசியல், நிர்வாகம் நீதித்துறை, ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்கள் என்று எல்லாமே சீரழிக்கப்பட்டு விட்ட நிலையில் மாற்றம் என்பது ஒரு கட்சியை அகற்றி விட்டு இன்னொரு கட்சியைக் கொண்டுவருவதாலோ வராது.

ஒரு நபரைக் குற்றம் சொல்லி அகற்றி விட்டு, வேறொரு நபரை மாற்றுவதால் மட்டுமே இங்கே கோளாறுகளுக்குத் தீர்வாகி விடாது.

மூன்றாவது அணி, மாற்று அணி என்பதெல்லாம் இன்றைய நிலையில் வெறும் கற்பனை தான். தானே உச்சாணிக் கொம்பில்  தலைமை ஏற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மட்டுமே நிறைந்த சூழலில் இவர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

அப்படியானால் தீர்வே இல்லையா? வேறு வழியே இல்லையா?

நிச்சயமாக இருக்கிறது. கொஞ்சம் பொறுமை வேண்டும். விழிப்புடன், ஒருங்கிணைந்து செயல்படும் சக்தியாக மக்களுடைய குரலை எதிரொலிக்கும் இயக்கமாக உருமாற்றம் காண்பதற்கு---

முதலில் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தவேண்டும்! இப்போதிருக்கும் வெஸ்ட்மினிஸ்டர்  முறையிலான ஜெயித்தவனே எல்லாற்றையும் சுருட்டிக் கொண்டு போக அனுமதிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் அது வாங்கும் வாக்குகளின் சதவீதத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் என்று தேர்தல் முறை மாற்றப்படவேண்டும்.

ஆபீஸ் பையன் உத்தியோகத்துக்குக் கூட குறைந்தபட்சக் கல்வித்தகுதி கேட்கிற தேசம் அரசியல் வாதிக்குத் தகுதி கேட்கக் கூடாதா? அரசியலில் இறங்குவதற்குக் குறைந்தபட்ச வயது இருக்கிற மாதிரியே, குறைந்தபட்சக் கல்வித் தகுதி தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள்  இயற்றுகிற அதிகாரம் படைத்த சட்ட மன்றம், நாடாளுமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களுக்கு, நம்முடைய அரசியல் சாசன, சட்டம் இயற்றும் முறைகளைப் பற்றிய அடிப்படை ஞானம் இருக்க வேண்டும். அதில் ஒரு பட்டயப்படிப்பாவது பெற்றிருக்க வேண்டும்!

குறைந்த பட்ச வயது இருப்பது போலவே போட்டியிட அதிகபட்ச வயது வரம்பும் வேண்டும். அறுபது வயது என்று வைத்துக் கொள்ளலாம். சரியான உடல் நலம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அறுபத்தைந்து வயது வரை வேண்டுமானால் தளர்த்திக் கொள்ளலாம்.

கேபினெட் அமைச்சர், முதல்வர், பிரதமர்  ஜனாதிபதி பதவிகளுக்கு,ஒரே நபர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்கத் தடை வேண்டும்.

மாநில அரசுகளைக் கலைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பது போலவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படாத மாநில அரசுகளைக் கலைப்பதற்குப் பரிந்துரை செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.அரசியல் சாசனத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பை, மக்களுடைய பிரதிநிதிகள்  பொறுப்பேற்கத் தயாராகவும் தகுதியுள்ளவர்களாகவும் ஆகிற வரை உச்சநீதி மன்றமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்னும் கொம்ஞ்சம் விரிவாகவே பேசலாம்! இதெல்லாம் நடைமுறைக்கு வருகிற சாத்தியம் உண்டா என்று சந்தேகம் எழுகிறதா? தூக்கத்தில் கனவு காண்பது மட்டுமே பிழைப்பு என்றிருப்பவர்களுக்கு எதுவுமே சாத்தியமில்லை.

மாற்றங்களை வேண்டு
ம் மக்கள் குரல் உரத்து ஒலிக்கும் நாளில், எல்லாம் நிறைவேறும்.