இன்னும் சிலநாட்களுக்கு சீன அதிபரின் மாமல்லபுரம் விஜயம் மட்டும் தான் இங்கே பரபரப்புச் செய்தியாக இருக்கும் என்பதில் நம்மூர் அச்சு ஊடகங்கள், சேனல்களின் அசட்டுத் தனம் நிறையவே வெளிப்படும் என்பதால் கொஞ்சம் அந்த அசடுகளின் விஷயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வேறு சுவாரசியமான சங்கதிகளைப் பார்க்கலாமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது தகுதி நீக்கம் (impeachement) செய்யும் முயற்சிகளை ஜனநாயகக் கட்சி தொடங்கி இருப்பதில், ஒத்துழைக்கப்போவதில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். ஆனால் அமெரிக்க நாடாளுமன்ற அமைப்புகளில் ஒன்றான காங்கிரசில் டெமாக்ரட் கட்சிக்கு, அதிக வாக்குகள் இருக்கிறதே! இந்த 11 நிமிட வீடியோ, ஜனநாயகம் எப்படி எப்படியெல்லாம் ஹைஜாக் செய்யப்படலாம் என்பதற்கான க்ளூ இருக்கிறது. செய்தி ஊடகம் CNN -டொனால்ட் ட்ரம்ப் இருதரப்புக்குமான முட்டல் மோதல், 2016 தேர்தல் காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. சொல்லப்போனால் Fox News தவிர (இன்றைக்கு அவர்களும் ஆதரிப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள்) மற்ற அமெரிக்க ஊடகங்கள் எல்லாமே ட்ரம்ப்புக்கு எதிராகத்தான் இருந்தன. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ஜெயிப்பதற்கு என்னென்ன உள்ளடி வேலைகள் பின்னணியில் இருந்தன என்பதை இந்தப் பதிவில் சொல்லியிருந்ததற்கு நண்பர் பந்து எழுதிய கமென்ட் கொஞ்சம் நினைவு படுத்திக்கொள்ளவேண்டிய சுவாரசியம்!
சுருக்கமாக, இது அமெரிக்கத் தேர்தல் முறைகளில் உள்ள குறைபாடுகளை, அதிபர் முறையில் ஒரே நபரிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்திருப்பதில், தகுதியில்லாத ஒருவர் பதவிக்கு வந்துவிட்டால், கடிவாளம் போடுவது எவ்வளவு கடினம் என்பதைக் காட்டுவதாக மட்டுமே பார்க்க முடிகிறது. அமெரிக்க ஜனநாயகம் இன்னும் முதிர்ச்சி பெற வேண்டுமானால் தேர்தல்முறைகளில் மாற்றங்கள் தேவைதான்!
bandhuSeptember 11, 2019 at 8:08 PM
இன்றைய தேதியில் உலகிலேயே மனிதனுக்கு அழிவை தரக்கூடிய நிறுவனங்களில் முதன்மையானது Facebook என உறுதியாக நம்புகிறேன். நாம் பார்க்கும் ஒவ்வொரு வீடியோவும், அதில் உள்ள ஒரு சுட்டியை அழுத்தும் செயலும், சிறியதாக உள்ள ஒரு படத்தை பெரியதாக நாம் அதன் மேல் செய்யும் க்ளிக்கும், Facebook இனால் சேமிக்கப் படுகின்றன. இதை வைத்து நம் profile build செய்யப்படுகிறது. அதன்மூலம் நாம் எப்படிப்பட்டவர் என்ற பிம்பம் அவர்களுக்கு தெளிவாகிறது.
உதாரணத்துக்கு, நான் அமெரிக்காவில் வாழும் இந்தியன். நான் க்ளிக் செய்து படிக்கும் பலவும் இந்தியா தொடர்பான செய்திகள். நண்பர்கள் பலரும் இந்தியாவில் வாழ்பவர்கள். இப்போது ட்ரம்ப் தேர்தலுக்கு என் வாக்கும் தேவை என்றால் ட்ரம்ப் இந்தியா பற்றி சொன்ன நல்ல விஷயங்கள் / இந்தியா உடன் வர்த்தகம் வளர்ப்பது பற்றி ட்ரம்ப் சொன்னது / பாகிஸ்தானுக்கு எதிராக சொன்னது / போன்ற நியூஸ் என் facebook பக்கத்தில் தோன்ற ஆரம்பிக்கும். மறுபடி மறுபடி அதை பார்க்கும்போது, ட்ரம்ப் இந்தியருக்கு நெருக்கமானவர் என்ற பிம்பம் கட்டமைக்கப் படும். இதில் உள்ள நியூஸ் பெரும்பாலும் பொய்யாக இருக்காது. என்ன. ட்ரம்ப் இந்தியாவுக்கு எதிராக சொன்னது என் facebook பக்கத்தில் தோன்றாது!
data scienceக்கு பல நல்ல பலன்கள் உள்ளன. அது ஒரு கருவி மட்டுமே. அதை எதற்கு உபயோகப் படுத்துகிறோமோ அதன் படி பலனும்!

அதற்குமுன் Ukraine dishonesty blitz: Trump made 66 false claims last week என்றதலைப்பிட்டு ஒரு செய்திக்கட்டுரையில் Trump's total was up from the week prior, when he made 59 false claims. He is now averaging 60 false claims per week for the 13 weeks we have checked at CNN.என்று விரிவாகப் பட்டியலிட்டிருப்பதை நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்!
டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரசாரங்களில் உள்ள ஜோ பிடன் மீதான பொய்யான தகவல்களை நீக்க முகநூல் நிர்வாகம் மறுத்து விட்டது என்பதுதான் டொனால்ட் ட்ரம்ப்பை மிஞ்சிய சுவாரசியம்! “Our approach is grounded in Facebook's fundamental belief in free expression, respect for the democratic process, and the belief that, in mature democracies with a free press, political speech is already arguably the most scrutinized speech there is,” wrote Katie Harbath, Facebook’s public policy director for global elections, in a letter to the Biden campaign. “Thus, when a politician speaks or makes an ad, we do not send it to third party fact checkers.” இது முகநூல் தரப்பு வியாக்கியானம்! முழுச்செய்தியும் இங்கே
சுருக்கமாக, இது அமெரிக்கத் தேர்தல் முறைகளில் உள்ள குறைபாடுகளை, அதிபர் முறையில் ஒரே நபரிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்திருப்பதில், தகுதியில்லாத ஒருவர் பதவிக்கு வந்துவிட்டால், கடிவாளம் போடுவது எவ்வளவு கடினம் என்பதைக் காட்டுவதாக மட்டுமே பார்க்க முடிகிறது. அமெரிக்க ஜனநாயகம் இன்னும் முதிர்ச்சி பெற வேண்டுமானால் தேர்தல்முறைகளில் மாற்றங்கள் தேவைதான்!
தேர்தல் ஜனநாயகம் என்பதே இன்னமும் முழுமைபெறாத பரிசோதனை முயற்சிதான்! மிகச் சமீபத்தியதுதான்! என்பதில் தேர்தல் பாதை திருடர்கள் பாதை என்று எக்ஸ்ட்ரீம் நிலைக்குப் போக்கவேண்டியதில்லை! அதேநேரம் இது உண்மையிலேயே ஜனங்களுடைய கருத்தை அப்படியே எதிரொலிக்கிற ஆகச் சிறந்த ஆட்சிமுறை என்று தூக்கிவைத்துக் கொண்டாடவேண்டிய அளவிலும் இல்லை.
இங்கே எழுப்பிய கேள்வி இன்னமும் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறதே!
மீண்டும் சந்திப்போம்.
இங்கே எழுப்பிய கேள்வி இன்னமும் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறதே!
மீண்டும் சந்திப்போம்.