காங்கிரஸ் போன்ற விஷ விருட்சங்களை வளரவிடப் போகிறோமா?

முந்தைய பதிவில் நண்பர் நெல்லைத் தமிழன் பின்னூட்டத்தில் எழுப்பிய சந்தேகம்  வெள்ளிக் கிழமைக் கேள்வியாக காங்கிரஸ் விஷவிருட்சத்தை மறுபடியும் வளரவிடப் போகிறோமா என்பதாகத்தான் இருக்கும்! 2018 இன் கடைசியில் நடந்த மூன்று மாநிலத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றவுடன் கூட காங்கிரஸ் மறுபடியும் தழைக்க ஆரம்பித்து விட்டது என்று தான் கோட்டை கட்டினார்கள். ஆனால் அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அந்த கனவுக் கோட்டை தரைமட்டமாக்கப் பட்டது.
  

சேகர் குப்தாவுக்கும் கூட முதலில் அந்தமயக்கம் இருக்கத் தான் செய்தது என்பது நேற்றைக்கு The Print தளத்தில் ஜ்யோதி மல்ஹோத்ராவுடன் சேர்ந்து நடத்திய கேள்வி பதில் நிகழ்ச்சியில் தெரிந்தது. ஆனால் இந்த 15 நிமிட வீடியோவில் நூலிழையில் தோற்றிருந்தாலுமே அதுகூடத் தோல்விதான் என்று காங்கிரஸ் கற்றுக் கொள்ளவேண்டியவைகளாக சில விஷயங்களைச் சொல்கிறார். ஆனால் காங்கிரசின் ஆகப் பெரும் பரிதாபமே கற்றுக்கொள்ளத் தெரியாத  ஒரு தற்குறிக் குடும்பத்தை மட்டுமே நம்பியிருப்பதுதான்! சோனியா மற்றும் வாரிசுகளை உதறிவிட்டுத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளத் தெரியாத துதிபாடிகளின் கூட்டம் இருந்தால் என்ன? அழிந்தால் என்ன? 

துதிபாடிகளுக்கு ஒரு தெளிவான உள்நோக்கம் இருக்கிறது! உதாரணமாக என்னதான் பானாசீனா போன்ற ஆல் இன் ஆல் அழகு ராஜாக்களுக்கு, காங்கிரசுக்குத் தலைமையேற்க வேண்டும் என்கிற பேராசை இருந்தாலும், செட்டிநாட்டு வாரிசு என்கிற இமேஜை மட்டும் வைத்து சொந்த ஊரில்கூட  வாக்குகளை வாங்க முடியாது! அதேபோல  சோனியா மற்றும் வாரிசுகளுக்கு        புத்தி இல்லை என்றாலும் நேரு, இந்திராவின் வாரிசுகள் என்கிற ப்ராண்ட் மட்டும் இருக்கிறது என்பதால் பரஸ்பரத் தேவை இருக்கிறது என்பது வரை சரி! அது சோனியா காங்கிரசுடைய பிரச்சினை மட்டும்தான்! அதை இந்த தேசமும் சேர்ந்து ஏன் சுமக்க வேண்டும் என்பதற்கு நியாயமான காரணம் எதையாவது சொல்ல முடிகிறதா? 


இந்த 4 நிமிட வீடியோவில் நேற்றைய தேர்தல் முடிவுகளின் கவனிக்கப் பட வேண்டிய விஷயங்களாகக் கொஞ்சம்! இதை மட்டும் வைத்து எந்தவொரு முன்முடிவுக்கும் வந்துவிட முடியாதுதான்!ஆனால்  அங்குமிங்குமாக இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து  பெரும்பாலான ஊடகங்களும் நாமும் அந்த மாதிரித்தான் ஒரு கற்பனையை வளர்த்துக் கொள்கிறோம்!

The results of the Maharashtra and Haryana assembly elections should not enthuse the BJP leadership much. The results are not as encouraging as the BJP would have wanted them to be. In Maharashtra, the BJP-Shiv Sena will form the government. The combo has crossed the majority mark, though with a reduced tally since 2014. In Haryana, the BJP had aimed at more than 75 of 90 seats. It struggled to even reach the majority mark of 46. The results should be seen as a tragedy for the opposition. In both states, their performance could have been much better, had they gone in with hope and preparation. This was a classic case of an opposition resigned to defeat even before the election. Now it can only regret a lost opportunity. இப்படி ஒரு கற்பனைக் கோட்டையை NDTV தளத்தில் எழுதியிருப்பவர் ஆம் ஆத்மி கட்சியின் அசுதோஷ் 

மராத்தா மக்களுக்குத் தனி  இட ஒதுக்கீடு என்கிற வலுவான கோரிக்கை போராட்டமாக வெடிக்கலாம் என்பதையும் முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் கடந்த மாதிரி, ஹரியானாவில் ஜாட் மக்கள் வாக்குகள் சென்ற முறை பிளவு பட்ட மாதிரி இந்தமுறை ஆகவில்லை என்பதால் காங்கிரஸ் இம்முறை கொஞ்சம் அதிக சீட் வாங்கியிருக்கிறது என்றொரு காரணத்தை TOI நாளிதழ் சொல்லியிருக்கிறது. ஆனால் பிஜேபி இந்தத் தேர்தலில் 3% அதிக வாக்குகளை வாங்கியிருக்கிறது என்பது Westminster தேர்தல்முறையின் அதீத விசித்திரம் என்பதைக் கவனிக்க மறந்து விடுகிறோம்!

      
இந்த 11 நிமிட வீடியோவில் ரிஷப குலாடி வேறொரு கோணத்தில், ஹரியானாவில் பிஜேபிக்கு ஏற்பட்டிருக்கிற பின்னடைவுக்கான காரணத்தைச் சொல்கிறார். நரேந்திர மோடி என்கிற ஒற்றை மனிதரின் மீதான நம்பிக்கை, அப்படியே இன்னமும் பிஜேபி கட்சியின் மீதான நம்பிக்கையாக மாறி விடவில்லை என்கிறார். பிஜேபிக்கு எதையும் taken for granted என்று எடுத்துக் கொள்ளாமல் கடுமையாக உழைக்கிற, கொள்கை, சித்தாந்தப்பிடிப்புள்ள    ஒரு கட்டுக்கோப்பான ஸ்தாபன அமைப்பு இருக்கிறது! அதையும் மீறி இப்படி தேர்தல் முடிவுகள் அவ்வப்போது வருமானால், அப்படி எதுவுமே இல்லாத  காங்கிரஸ் மாதிரியான  உதிரிகளுக்கு எதிர்காலம் இருக்கிறதென்றா அர்த்தம்? இதுமாதிரி உதிரி நச்சுக் களைகளை விஷவிருட்சமாக வளர விட்டுவிடுவோமா?  

கொஞ்சம் யோசித்துத்தான் பதில் சொல்லுங்களேன்! அதற்காகத் தானே எழுதிவிட்டுக் காத்திருக்கிறேன்!

மீண்டும் சந்திப்போம்.   

4 comments:

  1. நான் சொன்னால் நீங்க வருத்தப் படுறீங்க. இப்ப நீங்களே எழுதிட்டீங்க. மோடி அரசின் செயல்பாடுகளில் உள்ள பலமும் பலவீனமும் அவரே தான். உங்களுக்கு போகப் போக தெரியும் புரியும். கட்சி இப்படி இருக்கக்கூடாது. இருந்தால் பெருத்த பின்னடைவு தான் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      பிஜேபி அல்லது RSS அபிமானியாக இல்லாத நிலையில், இதில் நான் வருத்தப் படுவதற்கென்ன இருக்கிறது? தவிர ஒரு கட்சி எப்படி இருக்கவேண்டும் அல்லது கூடாது என்று சொல்வதற்கும் நான் யார் என்ற இந்த இருபுள்ளிகளில் நின்று என்னுடைய பார்வையில் அரசியலைக் கொஞ்சம் விமரிசனம் செய்கிறேன்!

      பிஜேபி மீது RSSக்கு இருக்கும் உறுதியான பிடிமானம் பரவலாக வெளியே தெரிந்ததுதான்! பிஜேபியைத் திசை மாறிவிடாமல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தான் எனக்குப் படுகிறது. 2024 தேர்தலுக்குப் பிறகு தன்னை நம்பியிருக்கவேண்டாம் என்று நரேந்திர மோடியே வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். பிஜேபிக்கு இருக்கிற ஸ்தாபனக் கட்டுமானம் போல இங்கே முந்தைய நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே இருந்தது என்பது ஒரு முன்னாள் மார்க்சிஸ்ட்டாக எனக்கு நன்றாகவே தெரிந்த விஷயம்.

      ஆனால் எப்பேர்ப்பட்ட ஸ்தாபன வலிமையையும் மீறிய ஒன்றாக இந்திய அரசியல்களம் பல்வேறு திசைகளில் இழுக்கப் படுவதாக நான் சொன்னதை சரியாகப் புரியவைக்க முடியவில்லையோ?

      Delete
    2. நான் பாஜக கட்சி செய்ய வேண்டியது என்று கருதுபவை.

      1. தடையற்ற இணையம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். இப்போது கம்பி இல்லாமல், போஸ்ட் இல்லாமல் பல நவீன தொழில் நுட்பங்கள் வந்து விட்டது. மாநில வாரியாக தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும். கொடுக்க முடியும்.

      2. அரசு சார்ந்த எந்த டெண்டராக இருந்தாலும் இந்தியா முழுக்க எவர் வேண்டுமானாலும் (இந்தியக் குடிமகன்கள்) கலந்து கொள்ள முடியும். இணையத்தின் வாயிலாக உருவாகப்பட்டாத டெண்டர்கள் செல்லாது. வெளிப்படைத்தன்மை உருவாகும். அதிகாரிகள், அரசியல்வாதிகளின் முழுமையான கொட்டம் அடக்கப்படும். பாதிப் பேர்கள் செத்து விடுவார்கள். மீதிப் பேர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி விடுவார்கள்.

      3. 10 000 க்கும் மேற்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளும் அட்டை வழியாக இணையம் வழியாகத்தான் பொருட்கள் வாங்க முடியும். விற்க முடியும் என்ற நிலை வர வேண்டும். ஒரு லட்சம் வரைக்கும் வங்கிக் கட்டணம் எதுவும் இருக்கக்கூடாது. இதற்கு தனியார் வங்கி கட்டணம் நிர்ணயம் செய்தால் அதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கள்ளப்பணம் உபரி பணம் பிரச்சனை பாதி முடிவுக்கு வந்து விடும்.

      4. வருமான வரி என்பதனை வேறு விதமாக மாற்ற வேண்டும். பரிவர்த்தனைகள், வங்கிக் கணக்கு, பான் கணக்கு, ஆதார் எண் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக மாற்றி ஆண்டு பரிவர்த்தனை அடிப்படையில் குறிப்பிட்ட சதவிகிதம் என்கிற நிலைக்கு கொண்டு வரலாம். இதில் மேலும் மேலும் மக்களின் வரிச்சுமைகளை அறவே நீக்க வேண்டும். தணிக்கைத்துறையாளர்கள் கொட்டம் அடக்கப்படும்.

      5. நீதித்துறையை மீளாய்வு கட்டாயம் செய்தே ஆக வேண்டும்.

      6. தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை கை வைக்கக்கூடாது. அது அவர்களின் விருப்பம். சேர்பவர்களின் விருப்பம். ஆனால் ஒரு ரூபாய் கூட பணமாக கட்டக்கூடாது. கட்டாயம் இணையம் வழியே தான் பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும். அதனைப் பொறுத்து தீர்மானம் செய்ய முடியும்.

      7. அறக்கட்டளை தொடர்பான சட்டங்கள் அனைத்தையும் குப்பையில் தூக்கிப் போட வேண்டும். என்ன வேண்டுமானாலும் செய்து கொள். இது தான் வரிவிகிதம். லாபம் இல்லாத செயல்பாடுகள் நிர்வாகம் என்றால் அதன் வெளிப்படைத்தன்மை பொறுத்து அதற்குத் தனியாக வரி இல்லாமல் செய்ய வேண்டும்.

      8. பாராளுமன்றத்தில் 22 மொழிகளில் உரையாடல் நடக்க வேண்டும். அந்தந்த மாநில மொழிகளை அங்கீகாரம் செய்தல் வேண்டும்.

      9. கடைசியாக ஆதார் மூலம் ஒவ்வொருவரும் வாக்குச்சீட்டு (அட்டை) பெற்று இருக்க வேண்டும். அவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் அந்த ஊரில் இருந்தபடியே அந்த அட்டை மூலம் குறிப்பிட்ட தொகுதிக்கு ஓட்டுப் போட வசதி உருவாக்க வேண்டும். நவீன தொழில் நுட்பத்தில் இது சாத்தியமே. ஓட்டுப் போடதவர்களுக்கு அரசு சலுகை ரத்து செய்யப்பட வேண்டும்.
      10 கடைசியாக 11 12 வகுப்பில் கட்டாயம் என்சிசி போன்ற ராணுவ அடிப்படைப் பயிற்சி சார்ந்த விசயங்கள் செய்யப்பட வேண்டும். நீக்கு போக்கு என்பது இல்லாமல் குறிப்பாக பெண்கள் தற்காப்பு போன்ற விசயங்களில் உடல் ஆரோக்கிய விசயங்களில் உருப்படியாக கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் மாநில கல்வித் திட்டங்களை மத்திய அரசாங்கம் தடையிடக்கூடாது. ஆனால் அது பொது விவாதத்திற்குப் பிறகு அனுமதிக்க வேண்டும்.

      இதெல்லாம் என் வாழ்நாளுக்குள் நடக்க வாய்ப்பு உள்ளதா?

      Delete
    3. ஜோதிஜி!

      உங்களுடைய wish list கொஞ்சம் பெரிதுதான்! அவைகளை பிஜேபி செய்யுமா அல்லது வேறு எவராவது வந்து செய்வார்களா என்பதை ஆரூடம் சொல்ல முடியாதுதான்! ஆனால் இந்த தேசத்தின் இளைஞர்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. இன்றைக்கு அரசியல் என்றாலே காறித்துப்பிவிட்டு ஒதுங்கிப் போகிறவர்கள், ஒருநாள் தங்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு மாற்றங்களைச் சாதிப்பார்கள் என்பது என்னுடைய கனவாகவும் உள்ளூர நம்பிக்கையாகவும் இருக்கிறது

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!