கேள்விகள் இல்லாமல் இந்த உலகத்தில் எதுவுமே இருந்தது இல்லை என்பது தெரிந்ததுதான்! ஆனால் பதிவுகளிலும், அரசியலிலும் மட்டும் தான் கேள்விகள் கேட்பதையே வெறுக்கும் போக்கு இன்னமும் நீடிக்கிறதோ?
தோல்விகள் ஒருபக்கமிருக்கட்டும்! அதற்கு என்ன காரணம் சொல்வது யார் மீது பழிபோடுவது என்பதில் நாளை ரிசல்ட் வருவதற்கு முன்னாலேயே சரத் பவாரின் NCPக்கும் காங்கிரசுக்கும் நேற்றைக்கே வார்த்தைப்போர் ஆரம்பித்துவிட்டது. நேற்றைக்கு சரத் பவார்கட்சியின் ராஜ்யசபா எம்பி மஜீத் மேமன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவோ பிரியங்காவோ தேர்தல் பிரசாரத்துக்கு வரவே இல்லை. ராகுல் காண்டி வந்தார் என்றாலும் மாநிலத்தில் காங்கிரஸ்கட்சிப் பிரபலங்கள் எவரும் கூட வரவில்லை. சரத் பவார் மட்டுமே இந்தத் தேர்தலில் மிக்க கடுமையாக உழைத்தார். NCP மட்டுமே தனித்துப் போட்டியிட முடியாது என்பதாலேயே காங்கிரசோடு கூட்டு சேரவேண்டியதாக இருந்தது என்று உண்மை நிலவரத்தைப் போட்டு உடைத்து விட்டார்.
எல்லோரும் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் ஒரே ஒரு கருத்துக் கணிப்பு மட்டும் ஹரியானா ரிசல்ட் வேறுமாதிரி இருக்கும் என்று செல்கிறதாம்!
According to the India Today-Axis My India exit poll, there is a tight race between the ruling Bharatiya Janata Party (BJP) and the Indian National Congress.The poll predicts BJP winning 32-44 seats and the Congress winning 30-42 seats. Both parties, with these numbers, would fall just short of the majority mark of 46. Haryana has a total of 90 Assembly seats. இன்னும் 24-30 மணிநேரத்தில் வாக்கு எண்ணிக்கையின் போக்கில் இது சரிதானா இல்லையா என்பது தெரிந்து விடும் என்பதால், பொறுத்திருந்து பார்த்து விடலாம்!
உண்மையை சகித்துக் கொள்ள முடியாத ஒரு கும்பல் தான் சோனியா காங்கிரஸ் என்பது மேமன் சொன்னதை சகித்துக் கொள்ள முடியாத மாநிலக் காங்கிரஸ் தலைவர் ராஜன் போன்சாலே பதிலுக்குப் பொங்கியதில் வெளிப்பட்டதாம்!
Memon’s remarks evoked a sharp response from the Congress, with the party’s state general secretary Rajan Bhonsale saying, “You do not really need an enemy when you have an ally such as the NCP,” he said.Taking a further dig at the NCP, Bhonsale asked, “With the exception of Sharad Pawar, you did not see any other NCP leader campaign across the state. Despite facing health issues, an 80-year-old man had to travel across the state to hold public meetings.” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. அவர் கூட சரத் பவார் கடுமையாகத் தேர்தல் பிரசாரம் செய்ததை மறுக்கவில்லை.
NCP தலைவர்கள் இப்படிச் சொல்லிப் பஞ்சாயத்தை முடித்து விட்டார்கள். உண்மையைச் சொன்னால் கூட அதையே அக்கப்போர் என்று மாற்றி விடுவது டூப்ளிகேட் காண்டிகள் யோக்கியதை! வேறெப்படிச் சொல்வது?
அமலாக்கத்துறை விசாரணைக்கைதியாக கர்நாடகாவின் காங்கிரஸ் பணமுதலை DK சிவகுமார் திஹார் சிறையில் இருக்கிறார். சோனியா நேற்றைக்கு அவரை திஹார் சிறைக்கே சென்று சந்தித்தார் என்பது சேனல்களில் ஒரு நிமிடச் செய்தியாகக் குறுகிப்போயிருப்பதே, சோனியாG காங்கிரசுக்கு இனி எதிர்காலம் இல்லை என்பதை ஒரு கோடி காட்டுவதாக இருக்கிறது. திரும்பவும் ஆட்சிக்கு வந்துவிடுவார் என்பதாலேயே எமெர்ஜென்சி தவறுகளுக்குப் பின்னால் கூட அதிகார வர்க்கத்தின் ஒருபகுதி இந்திராவுக்கு ஆதரவாக நிறைய உள்ளடிவேலைகளைச் செய்து வந்தது. 1980 இல் மறுபடி இந்திரா ஜெயித்துவந்தார்! 1984 இல் அவருடைய மரணத்துக்குப் பின்னாலும் கூட அதே அதிகாரவர்க்கம் ராஜீவ் காண்டி காலத்திலும், ஏன், மிகச் சமீப காலம் வரையிலும் கூட காங்கிரசுக்கு விசுவாசியாகவே இருந்து வந்தது.
அப்படி காங்கிரஸ் விசுவாசிகளாக இருந்தவர்கள், இப்போது முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் போல்! நடப்பவை எல்லாம் அப்படித்தான் என்பதை உறுதி செய்வதுபோலத் தான் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அரசியல்வாதிகள் மட்டும் தான் மாறுவார்களா? அதிகாரிகளும் நீதிமான்களும் மாறமாட்டார்களா?
செய்திகளின் வேரைப்பிடித்து ஏன் எப்படி என்று கேள்வி எழுப்பித் தெரிந்துகொள்ள வேண்டிய சங்கதி இது.
அரசியலுக்குத் தொடர்பிருக்கிறதோ இல்லையோ, கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவாக இங்கே
அரசியலுக்குத் தொடர்பிருக்கிறதோ இல்லையோ, கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவாக இங்கே
மீண்டும் சந்திப்போம்.
காங்கு அழிவது நல்லது. ஆனால் என்னிடம் உள்ள ஒரு கேள்வி என்னவென்றால் எதிர்க்கட்சி என்பது இப்போது இல்லை. எந்த சட்டத்தையும் எளிதாக நிறைவேற்ற அனைத்து வாய்ப்புகளும் பாஜக விற்கு உள்ளது. இவர்கள் இன்னமும் இங்கே செய்ய வேண்டியது நிறைய உள்ளது. ஏன் செய்வதில்லை. என்ன காரணம்?
ReplyDeleteகாரணம் தெரிந்ததுதானே ஜோதிஜி! முந்தைய பதினைந்து ஆண்டுகளில் ஆளும் கட்சிக்கு ராஜ்யசபாவில் தனிப்பெரும்பான்மை இருந்ததில்லை என்பதாலேயே, இஷ்டப்படி எதையும் செய்ய முடிந்ததில்லை. 2019 தேர்தலுக்குப் பிறகு அமித் ஷா கையாண்ட floor management அப்படி பெரும்பான்மை இல்லாத நிலையிலும் கூட ஆர்டிகிள் 370, முத்தலாக் தடைச் சட்டம் முதலானவைகளை ராஜ்யசபாவில் மூன்றில் இருபங்கு ஆதரவுக்கும் கொஞ்சம் கூடுதலான ஆதரவுடன் நிறைவேற்ற உதவியாக இருந்தது. 2020 வாக்கில் இன்னும் சில மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு ராஜ்யசபாவில் பிஜேபிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கிற நிலைமை வரும்.
Deleteஅடுத்ததாக, அடிக்கடி நீதிமன்றங்கள் மாமியார் மனோபாவத்துடன் தங்களுடைய அதிகாரத்தைக் காட்டிக் கொள்ள முனைவதில் எழும் பிரச்சினைகள். வாக்குச்சீட்டின் அடிப்படையிலான ஜனநாயகம் என்பது மிக வினோதமான சர்க்கஸ்!