வெள்ளிக்கிழமை கேள்விகள்! இந்திய அரசியல்!

சேகர் குப்தா மாதிரிக் காங்கிரசுக்கு ஆதரவாகக் கூவியே பழக்கப்பட்ட சீனியர் பத்திரிகையாளர்கள் கூட சமீப காலங்களில் உள்நாட்டு அரசியல் செய்திகளைப் பேசுவதற்கு தயங்குகிறார்கள். ஏனாம்? போட்டியே இல்லாமல் பிஜேபி அரசியல் செய்துவருவதை பற்றிப் பேச என்ன இருக்கிறது? இது அவர்கள் இன்னமும் ஆதரித்து வருகிற காங்கிரஸ் கட்சியின் நிலைமை வெளியே சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை என்பதன் அடையாளமா? ஒரு குடும்பம், அதிலும் ஒரே நபரை அண்டிப்பிழைக்க வேண்டிய நிலையில்   இருக்கிற காங்கிரசின் பரிதாபத்துக்கு இன்னும் எத்தனைநாளைக்குத் தான் மோடி, பிஜேபி, இந்துத்வா என்றே சாக்குபோக்குச் சொல்லிக் கொண்டு காலந்தள்ள  முடியும்? அதற்குப் பேசாமலேயே இருந்து விடுவது சௌகரியம் இல்லையா?     

 
     
இந்த 19 நிமிட வீடியோவில் கூட சேகர் குப்தா இந்திய அரசியலில் நரேந்திர மோடி, பிஜேபியைத் தாண்டிய பார்வை என்று சொல்லிக் கொண்டாலும் நரேந்திர மோடி, இரு பெரும் சக்திகளையும் தாண்டி தாக்குப் பிடித்து வரும் சில மாநிலக் கட்சிகளைப் பற்றித்தான் பேசுகிறார். கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள்! 2024 நாடாளுமன்றத்தேர்தல்களிலும் கூட மோடியும் பிஜேபியும் தான் இப்போதிருப்பதைவிட வளர்ந்து மிகப்பெரும் சக்தியாக இருப்பார்கள் என்கிற தயக்கத்தில் சேகர் குப்தா தன்னுடைய ஊகம், ஆராய்ச்சியாக சில விஷயங்களைப் பேசுகிறார், ஆனால் உறுதியாக எதையாவது உருப்படியாகச் சொல்ல முடிந்ததா? நீங்கள்தான் பார்த்துச்  சொல்ல வேண்டும்!


பிஜேபி முதலில் காந்தி காட்டிய உண்மைவழியில் நடக்கட்டும் அதன்பின் மகாத்மா காந்தி குறித்துப்பேசட்டும் என்று பப்பி பிரியங்கா வாதரா விமரிசித்திருப்பது குறித்து இந்து தமிழ் திசை நாளிதழ் கருத்துக் கேட்டிருக்கிறது! ஓரினினல் காந்திக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் தங்கள் பெயருடன் காந்தி பெயரை ஒட்டுப்போட்டு அலைந்து கொண்டு இருக்கிற இந்தக்கூட்டம் எப்போது அதை நிறுத்திக் கொள்ளப் போகிறதாம்? #டூப்ளிகேட்காந்தி களுக்கு இப்படிச் சொல்ல என்ன உரிமை இருக்கிறது என்று கொஞ்சம்  கேட்க மாட்டீர்களோ?

அதே இந்து தமிழ்திசை வணிகவீதியில் வங்கித்துறையின் பிடியில் பொருளாதாரம் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் ஒரு ஆடிட்டர் ஜி கார்த்திகேயன்! தலைகீழாகப் பார்த்து தவறாகவே எந்த ஒரு விஷயத்தையும் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ள உதவுகிற ஒரு வினோதமான லாஜிக்!

மீண்டும் சந்திப்போம்.  

  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!